Sunday, 4 October 2015

இவனென் கோட்டிக்காரன்




எங்கிருந்து ஆரம்பிப்பது?
எப்படி சொல்வது?

ஒரு பொழுதேனும் இவனென்னை
அழ விடாமல் வைத்திருக்கிறானா?

இல்லை இல்லையென்றுதான்
உரக்கக் கத்துவேன்...

அவ்வளவு பெரிய ராட்சசனா இவன்?

ஆமாம்.
கொடுங்கோலன்...
ரெண்டு பல் டிராகுலா...
சமீபத்திய டிமாண்டி இவன்...

பெருங்குரலெடுத்து அழும் அழுகையை
சிணுங்கல்களாக மாற்றிவிடும்
அகாயசூரன்...

வெக்கப்பட வைத்திருக்கிறானா
உன்னையென்றாள் தோழியொருத்தி...

வேண்டுமென்றால் பாருங்கள்
அவள் அலைபேசி எண் கேட்டு
வெக்கமில்லாமல் கெஞ்சுவான்...

சரி சரி, அதெல்லாம் இருக்கட்டும்.
மனசாட்சி துரோகியென்கிறது
என்னைப் பார்த்து...

ஏனாம்? என்னவாம்?

எத்தனை முறை சிரிக்க வைத்திருப்பான்...
எத்தனை முறை ரசிக்க வைத்திருப்பான்...
எத்தனை முறை நிம்மதியாய் உறங்க வைத்திருப்பான்...
இன்னும் எத்தனை எத்தனை எத்தனைகள்?

அதெல்லாம் எனக்குத் தெரியாது.
இவனென் கோட்டிக்காரன்...
நம்பினால் நம்புங்கள்...
நம்பாவிட்டால் எனக்கென்ன வந்தது?



.

3 comments:

  1. கோட்டிக்காரனும் சூப்பர்! அவரைப் பற்றிய வரிகளும் அழகு!

    ReplyDelete
  2. கோட்டிக்காரனும் சூப்பர்! அவரைப் பற்றிய வரிகளும் அழகு!

    ReplyDelete