Saturday 5 January 2019

பெண்ணியத்துக்கு அளவு கோல் இருக்கா?



மதத்தை கடந்து வராத வரைக்கும் என்ன தான் பெண்கள் முற்போக்கு பேசி திரிஞ்சாலும் வீண் தான். எந்த மதமும் பெண்களுக்கு துணையா நிக்குறது இல்ல. மாறா அவள தெய்வமாக்கி, தியாகியாக்கி, புனிதமாக்கி காலடியில கிடக்க வைக்குது.

ஜாதி இன்னும் வெறி கொண்டு அவள் உணர்வுகள, உரிமைகள தட்டிப்பறிக்குது. கவுரவ கொலையும் பண்ணுது. 

ஆனா இந்த பெண் அடிமைத்தனமும் பெண்ணியமும் ஒரே அளவுகோலோட எல்லா பெண்களுக்கும் இருக்குதா?

மதங்கள் ஜாதிகள் அடுத்து பெண்களோட அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணியா இருக்குறது சொத்துக்கள். சொத்துள்ள எந்த பெண்ணும் அந்த சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் அடிமையாகி போறா. சுய முடிவுகள் எடுக்க முடியாதபடி அவள முதலாளித்துவ வர்க்கம் சொத்துக்காக அடிமைப்படுத்துது.

ஆக, மதங்களை கடக்குறது மட்டுமில்லாம பொருளாதார விடுதலையும் ஒரு பெண் அடையணும். இங்கயும் பொருளாதார விடுதலைங்குற வார்த்தையோட அளவுகோல் பெண்ணுக்கு பெண் மாறுபடுது.

சொத்துள்ள பெண் தன்னோட பொருளாதார விடுதலையா பெரிய பெரிய கார்பரேட் கம்பனிகள்லயும், அரசாங்க அலுவலகங்கள்லயும், தனியார் நிறுவனக்கள்லயும் உடல்வலி இல்லாத வேலையையே கவுரவமிக்க வேலையா எண்ணுறா. அதனால அவளால மனசளவுல திருப்தி அடைய முடியல. இதுவே உழைக்கும் வர்க்கத்த சார்ந்த பெண் ரொம்ப சுலபமா தனக்கான பொருளாதார தேவையை உடல் உழைப்பு மூலமா தீர்த்துக்குறா. அவளுக்கு கவுரவம் ஒரு பொருட்டல்ல, தன்னோட சுய மரியாதை மட்டுமே அவளோட இலக்கு.

என் உடல் என் உரிமைங்குற முழக்கம் சொத்துடமை பெண்களோட கண்ணோட்டத்துலயும் உழைக்கும் பெண்களோட கண்ணோட்டத்துலயும் மாறுபடுது. தன்னோட பொருளாதார தேவைக்காக ஒரு ஆணை சார்ந்திருக்கும் சொத்துடைய பெண் தன்னோட வசதி வாய்ப்புக்காக ஒருத்தனோட வாழ்ந்துகிட்டு என் உடல் என் உரிமைங்குற முழக்கத்த பிற ஆண்களோட உறவு வச்சுக்குறது மூலம் நிறைவேத்திக்க நினைக்குறா.

தனக்கான சொத்தை தைரியமா கேட்டு வாங்குற தைரியம் அவளுக்கு இருக்காது. மாறா, தன் மேலான சுய அனுதாபத்தையும் கழிவிரக்கத்தையும் ஆயுதமா பயன்படுத்த நினைப்பா. அப்படியே ஒரு உறவு முறிவை சுலபமா கையாண்டு மீண்டு வரது சொற்பமான பேர் தான்.

இதுவே உழைக்கும் பெண் உறவு முறிவை சுலபமா கடப்பா. என் உடல் என் உரிமைங்குற முழக்கம் அவளை பொருத்தவரைக்கும் சேர்ந்து வாழ இயலாதவனை தூக்கி எறிஞ்சுகிட்டு மனசுக்கு பிடிச்சவனோட அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்தல். அவளுக்கு யாரையும் அண்டிப்பிழைக்க அவசியம் இருக்காது.

இங்க பெரும்பான்மையான சமூகம் உழைக்கும் வர்க்கம் தான். ஆக, அடுத்து பெண்கள் நகர வேண்டியது அரசியல்.

இதுவும் சொகுசு அடிமைத்தன வாழ்க்கை பழகிப்போன சொத்துடைய பெண் வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராட தயங்கவே செய்வா. அதுவே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண் சுலபமா வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராடுவா.

என்னதான் சொத்துடைய சமூகப்பெண் உரிமைக்காக போராட தயங்கிவான்னு சொன்னாலும் படிச்சி, சமூக அறிவு பெற்று பல்வேறு மக்கள பாக்குற வாய்ப்பு அவங்களுக்கு இருக்கு. உழைக்கும் வர்க்கத்தோட பெண்கள் பிரச்சனை பெருசா, சொத்துடைய பெண்கள் பிரச்சனை பெருசான்னு அலச வேண்டியது வரும். அதனால போராட்டத்துக்கு வர்ற சொத்துடைய பெண்ணுக்கு முன்னால ஏகப்பட்ட சவால்கள் காத்துக்கிட்டு இருக்கும்.

அவங்க முன்னாடி பொதுவா எல்லா பெண்களோட பிரச்சனையையும் எடுத்து போராடுறதா, இல்ல தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட பிரச்சனை மட்டுமே பெண்கள் பிரச்சனைனு நம்பிட்டு இருக்குறதாங்குற கேள்வி முன்னால நிக்கும்.

தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட நலன் மட்டுமே பெருசுன்னு நினைக்குற பெண்கள் இந்த போராட்டத்துல தடுமாறுறாங்க. பெரும்பான்மையான பெண்களுக்கு என்ன பிரச்சனைனு யோசிக்குறவங்க சரியான இடத்த நோக்கி நகருறாங்க.

இப்படி, இந்த சவால்கள எதிர்கொள்ளாம பெண்ணுரிமைனு ஒண்ண தீர்க்கமா கண்டறிய முடியாது.

ஆக இங்க போராட்டம்ங்குறது மக்களோட மக்களா இணைந்து தான் செய்ய முடியும். பெண்ணுரிமை புரிஞ்சுக்க நாம எல்லா வர்க்கத்து பெண்களையும் புரிஞ்சுக்கணும்.

ஜாதி கடந்து, மதம் கடந்து, வர்க்கம் கடந்து, சுய சார்புள்ள அரசியல் படுத்தப்பட்ட பெண்ணே நமக்கு தேவை.

5 comments:

  1. அளவுகோல் அமைப்பது சற்று சிரமமானது. ஆங்காங்கே பல நிலைகளில் வேறுபட வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  2. சரியான புரிதல்...

    மாற்றம் வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. உண்மை. பெண்ணீயம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கிறது. இங்கு பெண்களுக்காகப் போராடுதல் விமன்ஸ்லிப், பெண்பாதுகாப்பு என்பவர்கள் கூடச் சரியாகப் புரிதல் இல்லாமல்தானே போராடுகிறார்கள்..

    கீதா

    ReplyDelete
  4. சரியான & வித்தியாசமான பார்வை.

    ReplyDelete
  5. வணக்கம். உங்களது பல பதிவுகளை நான் படித்திருக்கிறேன். மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete