Saturday 25 November 2017

மனிதம் எப்போ மலரும்?







Pink படத்துல ஒரு காட்சி வரும்.

ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கினதாவும் சொல்லுவார் எதிர்தரப்பு வக்கீல். அதே மாதிரி அவர் கட்சிக்காரர்கிட்ட sexual relationship வச்சுக்க காசு வாங்கிட்டு, அவர தாக்கினார்ங்குறது குற்றசாட்டு.

அந்த குற்றசாட்டு உண்மை இல்லங்குறதால Falak துடிதுடிச்சு போவா. அதெல்லாம் பொய், நிஜமில்லன்னு அழுதுட்டே இருக்குறவ, ஒரு கட்டத்துல “ஆமா, நான் காசு வாங்கினேன், அதுக்கென்ன இப்ப? அதுக்காக அவன் கூட படுத்துட முடியுமா?”ன்னு கத்துவா.

அதோட அந்த குற்றசாட்டு ஒரு முடிவுக்கு வரும்.

அதே படத்துல குற்றவாளி ராஜ்வீர் பெண்கள குடிக்குறாங்க, அதனால அவங்க மோசமானவங்க, குடும்பத்து பொண்ணுங்க குடிக்க மாட்டாங்கன்னு சொல்லுவான். அவன் தங்கச்சி குடிக்குற போட்டோவ எடுத்து காட்டினதும் என் குடும்பத்த ஏன் அசிங்கப்படுத்துறீங்க, அது family party-ன்னு கதறுவான்.

சமீபத்திய தரமணி படத்துல ரெண்டு காட்சிகள் வரும்.

தன்னை மதிச்சு பாக்க வந்த ஆண்கிட்ட மனசுவிட்டு தன்னோட வேதனைகள பகிர்ந்துகிட்டு இருக்குற நேரம் பாத்து அவளோட புருஷன் உள்ள வந்துருவான். பதறிப்போய் அவன ஒழிச்சு வைப்பாங்க அந்தம்மா. ஆனாலும் புருஷன் கண்டுபுடிச்சிருவான். அவங்க character மேல பழி போட்டு தொடர்ந்து அவன் டார்ச்சர் பண்ண, ஒரு கட்டத்துல, “ஆமாடா, அவன் சூப்பரா பண்ணினான்”ன்னு சொல்வாங்க.

அதே மாதிரி தான் ஹீரோயின்கிட்ட அவளோட காதலன் சந்தேகப்பட்டு பழி போடுவான். அவளும் பொறுத்து பொறுத்து பாத்துட்டு “ஆமா. அப்படித்தான் பண்ணினேன்”ன்னு சொல்லுவா.

இதெல்லாம் படங்கள்ல வந்த சீன்ஸ். சம்மந்தப்பட்ட பெண்களை tension-னோட உச்சக்கட்டத்துக்கு கொண்டு போய் அவங்கள கதற வைக்குற சீன்ஸ். மத்தவங்கள குத்தம் சொல்லி சந்தோசப்படுற sadist மனோப்பான்மை இதுல வெளிப்படும். பதற்றமும் கோபமும் கண்ணீருமா இத அந்த பெண்கள் சொல்றப்ப நாம உச்சுக்கொட்டுறோம், பரிதாப்படுறோம், கண்ணீர் வடிக்குறோம்....

ஆனா நிஜத்துல ஒருத்தங்க மேல பழி போடுறப்ப, திரும்ப திரும்ப அவங்க character பத்தியே பேசுறப்ப, அசரம, கண்ணீர் விடாம, கதறாம, கோபப்படாம நக்கலா “ஆமாடே, அப்படித்தான். அப்படி ட்ரை பண்ணியும் ஒருத்தனும் வொர்த் இல்ல”ன்னு பதிலடி குடுத்தா, அப்போ என்ன பொம்பள இவன்னு நமக்கு சம்மந்தப்பட்ட பெண் மேல கோபம் வரும், தாக்குற எதிராளி ஹீரோவாகி போவான் அதானே. இதெல்லாம் ஒரு sadist மனப்பான்மை தவிர வேற என்ன?

நம்ம மனசு இந்த மாதிரியான வார்த்தைகளை கேட்டா ஒரு பொண்ணு அழணும், கண்ணீர் விடணும், ஆற்றாமைல நிலைகுலையணும்னே விரும்புது. அதுக்கு எதிரா ஒரு சம்பவம் நடந்தாலும் நம்மோட சாடிஸ்ட் மனோபாவம் அத ஒத்துக்குறதே இல்ல.

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

ஒரு பொண்ணை, எல்லா கெட்ட வார்த்தையாலும் திட்டி, என்கூட வந்து படுடின்னு கூப்ட்டு, இன்னும் டாஷ் டாஷ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா, ஒரு சராசரி பொண்ணு என்ன செய்வா? பதறி துடிச்சு, முடங்கி போவா, இல்ல தற்கொலை பண்ணிப்பா... அது தான் நம்மோட பண்பாடு, கலாச்சாரம்.

ஆனா ஒரு பெண்ணை கருத்தியல் ரீதியா எதிர்க்காம கெட்ட வார்த்தைகள் பேசி அடக்கலாம்னு ஒரு சிலர் முயற்சி பண்ணினப்ப அவங்க அதே வார்த்தைகள திருப்பி எதிராளிய நோக்கி வீச, ஒரு பெண் இப்படி எல்லாம் பேசலாமான்னு பதற ஆரம்பிச்சாங்க.

ஒரு பெண்ணை முடக்க இந்த ஆயுதத்த தானே ஆண்கள் கையில எடுக்குறாங்க. அதுவே, ஆமாடா, நான் அப்படித்தாண்டான்னு சொன்னதும் இல்லாம, நானும் பலபேர்கிட்ட try பண்ணி பாத்துட்டேன், ஆனா ஒருத்தனும் வொர்த் இல்லன்னு அவனோட ஆண்மை மேல ஒரு அடி குடுத்து பாருங்க, ஆடிப் போவாங்க.

அதுக்கு மேல அவங்களால என்ன குற்றம் சாட்ட முடியும். அப்புறம் அவங்க செய்றது முழுக்க புலம்பல்கள், கழிவிரக்கம், சுயபட்சாதாபம் தான். ஒரே வார்த்தைகள திரும்ப திரும்ப சொல்லி புலம்புவாங்க. என்ன செய்தாலும் அடங்க மாட்டேங்குறாளேன்னு எரிச்சல் படுவாங்க. அடுத்து எடுத்து தாக்க அவங்ககிட்ட ஆயுதமும் இருக்காது.

எல்லாம் சரிதான், இப்படி ஒருத்தன் எறியுற சாக்கடைய எதுக்கு நாமளும் எடுத்து வீசணும்? அது நமக்கு தானே அசிங்கம்னு இப்ப தோணலாம்.

பெண்ணியம் பேசுறவங்களும், அவன் ஆண், அவன் ஆயிரம் பேர் கூட போகலாம், ஆனா ஒரு பெண் எப்படி அப்படி நடந்துக்க முடியும்ன்னு பதறுறாங்க. வெறும் வாய் வார்த்தைகளுக்கே ஏன் இத்தனை பதட்டம்?

ஆனா எத்தனை நாள் மவுனமாவே இருந்துட முடியும்? அப்படியே மவுனமா இருந்துட்டா மட்டும் சும்மா விட்டுட போறாங்களா என்ன? நாம மவுனமா இருக்குறது தானே அவங்களுக்கு advantage?

இப்போ இதெல்லாம் நமக்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவா தான் தெரியும். ஆனா அடங்கி கிடந்த ஒவ்வொரு பெண்ணும் பேச ஆரம்பிச்சா, கொஞ்சம் கொஞ்சமா ஒரு சமத்துவம் மலரும். இதுக்காக யாராவது ஒருத்தங்க எங்கயோ ஒரு விதைய போட்டு தானே ஆகணும்....

உடனே அப்படி ஒவ்வொரு பொண்ணும் வேற ஒரு ஆண் கூட போய் தான் சமத்துவம் மலரணும்னா அப்படி ஒரு சமத்துவமே எங்களுக்கு வேணாம்னு பதறாதீங்க.

பெண்ணியவாதிகளின் அடிப்படை கோரிக்கையே, விரும்பியவனுடன் உறவு கொள்வதுன்னு நிறைய பேர் புரிஞ்சு வச்சிருக்காங்க. அது அப்படி இல்ல, எப்போ ஒரு ஆண் ஒரு பெண்ணை புரிஞ்சுக்குறானோ அப்பவே அந்த பெண்ணுக்கான தேடல் சரியான விகிதத்துல நிறைவேற ஆரம்பிச்சுடும். நீங்களே புடிச்சு தள்ளினாலும், நான் எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியும்னு அவ கெத்தோட வீறு நடை போடுவா.

இங்க எண்ணங்கள் தான் பிழை, பதறுதல் தான் பிழை. அவங்கவங்க வாழ்க்கைய தீர்மானிக்க வேண்டியது நாம இல்ல, அவங்கவங்க தான்னு புரிஞ்சாலே போதும், நமக்கு பதறல் வராது. யாரையும் தப்பா எண்ணவோ பாக்கவோ தோணாது. யாரும் யாருக்கும் துரோகங்கள் செய்ய தோணாது...

புரிதல்களோட உள்ள இணைகள் தோன்ற ஆரம்பிக்கும்....

அவ்வளவே....




3 comments:

  1. ரொம்ப சரியா சொன்னிங்க. கஷ்டபடுர என் எல்லா தோழிகளுக்கும் உங்க பதிவுகளை பகிரப்போகிரேன்.

    ReplyDelete
  2. மனிதத்தை இப்போது சிறிது சிறிதாக தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  3. சிறப்பான கட்டுரை...
    அருமையாச் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete