வியாபாரப் பொருளே
இங்கு வியாபாரியாய்...
பகடை காயின்
முகங்கள் காட்டும்
சுவாரசிய புதிராய்...
உணர்வுகள் அறுந்து
விலையாகும் நேரம்
ஏளனிக்கும் இதயம்...
இரையாகும்
ஒவ்வொரு கணமும்
பசி தேடும்
அடுத்த வேளை மனமாய்...
மவுனங்கள் வீழ்ந்து கிடக்கையில்
வக்கிர மனங்களின்
வன்மங்கள் பேசும்...
மரிக்க இயலா அழிதல் தேடி
விளக்கில் வீழும் விட்டில்களாய்...
மீண்டும் மீண்டும்..!
விளக்கில் வீழும் விட்டில்களாய்...
மீண்டும் மீண்டும்..!
விலகிய மாராப்பே இவளின் ஊழியம்
ReplyDeleteவிலையான பின்னே இவளுக்கு ஊதியம்
வாலிபனுக்கும் வயோதிகனுக்கும் இவளே
அந்நொடி மட்டும் உலகம்
தன்னை காக்க தன்னையே எரிக்கும் சுடர்கள்
இச்சுடர் அணைய கோடி சிவத்தின் தவம் வேண்டும்
(சிவம்-அன்பு மனிடர்)
ம்ம்ம்ம்.... என்றும் மாறா சாபம் இது
Deleteஏதாவது ஒரு வார்த்தையை மாற்றி போட்டா ,இந்த அமைப்பும் சிறப்பும் இந்த கவிதையில் கிடைக்காது என்பது மாதிரி வார்த்தை தேர்வுகள்- நிபுணத்துவம் மிக்க பொற்கொல்லன் நகாசு வேலை செய்வது மாதிரி ... செய்ததால் இக் கவிதை ஒளிர்கிறது.
ReplyDeleteநன்றி அண்ணா தங்கள் விமர்சனத்திற்கு....
Delete