Tuesday, 10 December 2013

தி நோட்புக் (The notebook- 2004) – திரைவிமர்சனம்



சௌத் கலிபோர்னியால “சீபெர்க்”ன்னு ஒரு தீவு. அங்க ஒரு கார்னிவல் நடக்குது, அதாவது, நம்ம ஊரு பொருட்காட்சி மாதிரி ஒரே கொண்டாட்டம். அங்க வச்சி தான் நம்ம ஹீரோ நோவா ஹீரோயின் ஆலிய பாக்குறான். வழக்கமா நம்ம ஊர் சினிமால வர்ற மாதிரி, அவள பாத்ததும் அவ மேல பைத்தியம் ஆகிடுறான். அப்புறமா அவ பின்னாடியே சுத்தி, கொஞ்சம் கொஞ்சமா அவள வழிக்கு கொண்டு வந்து, அவள காதலிக்க வச்சு, கதை அப்படியே ஜாலியா போகுது.

கட், கட், கட். இதெல்லாம் ஆலியோட பதினேழு வயசுல நடந்த சம்பவம். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா, எல்லாம் நம்ம ஊர் பார்முலா தான். நோவா ரொம்ப ஏழை, ஆலி பெரிய பணக்கார குடும்ப பொண்ணு. எஸ். நீங்க நினைக்குறது சரிதான், இந்த ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வுனால ஆலியும் நோவாவும் பிரிஞ்சுடுறாங்க. இல்லல, ஆலியோட அம்மாவால பிரிக்கப்படுறாங்க.

ஆலி மேற்படிப்பு படிக்க போய்டுறா. நோவா ஆர்மில சேர்ந்துடுறான்.

சரி, இது கதை. இதுல நான் ரசிச்ச விசயங்கள சொல்ல வேணாமா?

இந்த படத்துல ஆலி, நோவாவுக்குள்ள வர்றது முதல் காதல். அந்த முதல் காதலுக்கு மரணிக்கும் மரியாதை குடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஹஹா புரியலையா, அப்போ படத்த பாருங்க.

அப்புறம், ஆலிய பாத்த உடனே ஆஆஆ-னு வாயத் தொறக்குற நோவா, கடைசி வர மூடவே இல்லன்னு தான் சொல்லணும்.

ஆளே இல்லாத ரோட்டுல ஆலி கூட நடந்து போற நோவா, திடீர்னு நடு ரோட்டுல படுத்துகிட்டு அவளையும் படுக்க சொல்றான், இவன் என்ன பைத்தியமான்னு சிரிச்சுகிட்டே பக்கத்துல படுத்துகிட்டு, இப்போ வண்டி வந்தா, நாம என்னாவோம்ன்னு கேக்குறா. அவன் கூலா செத்து போவோம்னு சொல்லிட்டே பேசாம ரிலாக்ஸ் பண்ணுன்னு அவன் பாட்டுக்கு கண்ண மூடிட்டு படுத்துருக்கான்.

அந்த சீன பாக்குறப்போ எதோ சின்ன புள்ளைங்க விளையாடுற விளையாட்டு மாதிரியே இருக்கு. லூசு தனமா என்னவோ பண்றானேன்னு நினைச்சுகிட்டே அவளும் லூசு தனமா சிரிக்குறது இருக்கே, கவிதை கவிதை. ஆனா திடீர்னு வேகமா வர்ற கார பாத்து வீல்ன்னு அலறிட்டே ஓடி தப்பிச்சு, ஹஹஹஹஹா... பேய்த்தனமா சிரிக்குறா. ஆத்தீ.... நான் பயந்தே போயிட்டேன். ஆனா ரொம்ப ரொம்ப அந்த சீன ரசிச்சு ரசிச்சு பாக்கலாம்.

அப்புறம், நோவாவோட அப்பா கேரக்டர். நமக்கு ஒரு அப்பா இருந்தா இப்படி தான் இருக்கணும்னு வயசு பசங்கள ஏங்க வச்சிடுறார். அவரோட அன்பு, கனிவு, பையன் மேல காட்டுற பாசம் எல்லாமே அவ்வளவு ரசிக்கும் படியா இருக்கு. பையனோட காதலி அவன விட்டுட்டு போய்ட்டானாலும் அவன் ஆசை பட்ட விசயத்த அடைய வீட்டை வித்து காசு குடுக்குறார். அந்த நேரம் அப்பாவும் பையனும் ரொம்ப அழகா இருந்த மாதிரி எனக்கு தோணிச்சு. கொஞ்சம் கண்ணு வச்சிட்டேன்.

இந்த படத்தோட ஆரம்பமே, சுயநினைவு எல்லாம் மறந்து போன ஒரு வயசான பாட்டிக்கு, ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்ல (முதியோர் விடுதி) வச்சு, ஒரு பெரியவர் ஒரு நோட் புக்கல இருக்குற ஒரு கதைய வாசிச்சு காட்டுற நிகழ்ச்சியா தான் வருது. அவர் தான் மெனக்கெட்டு அந்த பாட்டிக்கு இந்த லவ் ஸ்டோரிய சொல்றார்.

ஹலோ மக்களே....

ஏதாவது படத்த பாத்து நானும் விமர்சனம் பண்ணலாம்னு தான் பாக்குறேன், ஆனாலும் அதென்னவோ அப்படியே முழு கதையையும் உளறி கொட்டிடுறேன். அது என் தப்பு இல்லீங்க, அப்படியே எவ்வளவு ட்ரை பண்ணினாலும் இப்படி தான் உளற வருது. அப்புறம், இந்த படம் எல்லாம் வந்து பத்து வருஷம் ஆகிடுச்சு. படம் வசூல் சாதனை பண்ணிச்சா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா இப்போ இத எல்லாரும் மறந்துருப்பாங்க. ஒரு அதர பழசான ஒரு படத்த நான் இப்போ ஏன் நோண்டி துருவி எழுதியிருக்கேன்னா, நான் இப்போ தானே இந்த படத்த பாத்தேன். அவ்வ்வ்வ்.....

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சது ஹீரோயினோட சிரிச்ச முகம். எப்போ பாத்தாலும் சிரிச்சுட்டே, எதையும் சீரியஸா எடுக்காம, அதெப்படி ஒரு பொண்ணால இருக்க முடியும்னு தெரியல. காதல வெளிப்படுத்துற விதமாகட்டும், அழுறதாகட்டும், அதுலயும் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க.

அந்த ஹீரோயின் தான் ரொம்ப வயசாகி, தலை எல்லாம் பஞ்சு பஞ்சா வெள்ளையா, எல்லாத்தையும் மறந்துட்டு, சீரியஸா மூஞ்ச வச்சுகிட்டு, பம்ப்ளிமாஸ் மாதிரி குண்டா இருக்காங்கன்னு சொல்றப்போ அத ஏத்துக்கவும், டைஜஸ்ட் பண்ணவும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.

எல்லாத்துக்கும் முக்கியமா இன்னொரு கதாபாத்திரம் கூட இந்த படத்துல உண்டு. அது தான் ஆலிக்கு நோவா வாங்கி குடுக்குறதா சொன்ன வீடு. ஆலி அவன விட்டுட்டு போயிட்டாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு தனியாளா அந்த வீட்டை புதுசா கட்டி முடிக்குறான்.

இந்த படத்துல எனக்கு பிடிக்காத ஒரு விசயமும் இருக்கு. ஆலியோட முதல் காதலாவது சில பல சம்பவங்கள்ல அடுக்கடுக்கா ஆரம்பிச்சு அழகா பூக்குது. ஆனா அவளோட ரெண்டாவது காதல் பட்டுன்னு வந்துடுது. அவனை பாத்த உடனே இவ மயங்கிடுறா, அவன் ப்ரோபோஸ் பண்ணின உடனே சந்தோசமா சிரிச்சுகிட்டே படக்குன்னு ஓகே சொல்லிடுறா. அவங்களோட அந்த காதல் விரிவா சொல்லாததாலோ என்னவோ எனக்கு மனசுல ஒட்டவே இல்ல.

ஏழு வருஷம் கழிச்சு, பழைய காதலன் கட்டின வீட்டை வச்சு அவன அடையாளம் கண்டுகிட்டு இரண்டு நாள் அவன் கூட வாழ்ந்து, தன்னோட பழைய காதலை புதுபிச்சுகிட்ட அவ, தனக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லி அவன் கிட்ட இருந்து விலகி ஓடி வந்து ரெண்டாவது காதலன்கிட்ட ஐ லவ் யூ டூன்னு சொல்றா.

“And they happily lived for ever”-னு பெரியவர் கதைய முடிக்கவும் who-ன்னு நியாபகப்படுத்திகிட்டே பாட்டியும் (ஆலி) சேர்ந்து நெகிழ்ந்து போறாங்க. அவரோட காதல புரிஞ்சுகிட்டு நான் மறுபடியும் உங்கள மறந்து போனா என்ன பண்ணுவீங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு அவர், எப்பவும் நான் உன்னை பின் தொடர்வேன்னு அவங்க கூடவே தூங்கிடுறார்.

காலைல அந்த லவ் பேர்ட்ஸ் ரெண்டும் சந்தோசமா தனி உலகத்துக்கு பறந்து போய்டுது.

அப்புறம் இன்னொரு விஷயம், இந்த படம் முழுக்க ஆளாளுக்கு கிஸ் பண்ணிட்டே இருக்காங்க. இவங்களுக்கு வாயே வலிக்காதான்னு நான் கூட கொஞ்சம் கவலையோட தான் பாத்தேன். இது ஒரு ஏ சர்டிபைட் படம். அதனால அங்கங்க மசாலாக்கள் இருக்க தான் செய்யும். அதுக்காக கட்டய எடுத்துட்டு என்னைய அடிக்க வராதீங்க, மீ எஸ்கேப்.


.

12 comments:

  1. இந்த படம் என்னுடைய ஆல் டைம் பேவரெட் மூவி. ஆங்கில படம் பார்க்க விரும்புவர்களுக்கு இதைதான் முதலில் ரெகமெண்ட் பண்ணுவேன்

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் என்னோட பிரெண்ட் பாருன்னு சொன்னதால பாத்தேன். எனக்கும் பிடிச்சிருக்கு

      Delete
  2. ரசிக்க வைக்கும் விமர்சனம் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா ரசிச்சதுக்கு :)

      Delete
  3. வணக்கம்

    விமர்சனம் அருமை வாழ்த்துக்கள்

    தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி மேலும் அறிய.
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா, கண்டிப்பா பாக்குறேன். தெரிஞ்சவங்கள கலந்துக்கவும் சொல்றேன்

      Delete
  4. ஆ ஆ ஹா... காயு படத்தின் அழகைவிட அதன் விமர்சன அழகு மிளிர்கிறது... கொஞ்சும் குழந்தைமொழியில்....இதோ இதோ வருது கட்ட...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, உங்க கமன்ட்டுக்கு

      Delete
  5. English aaaaaa......

    namelam only action movie thaan.....intha English love ellam remmmba poor......(poruma illa) .....

    hahaha.....ninga sollrappa ithu comedy movie maathiri irukkuuuuuuu..ooo

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்ல முடியாது அண்ணா, அங்க ரொம்ப ரொம்ப நல்ல படங்கள் இருக்கு. கண்டிப்பா பாருங்க

      Delete
  6. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

    ReplyDelete
  7. நானும் இந்தப்படத்த டவுன்லோடி ஒருவருஷமா வச்சிருக்கேன் அக்கா ! எவ்ளோ பேர் சொன்னாங்க . ஒரு 20 டைம் பாக்கலாம்னு ப்ளே பன்னிட்டு , ஏதாச்சும் வேலையா போயிடுவேன் . எப்படியாச்சும் இன்னைக்கு நைட்தான் பாக்கனும் .

    ReplyDelete