Thursday, 5 December 2013

இணையத்தில் பெண்கள் நிலை...



ஒரு விதை இருக்கு, அது அவ்வளவு ஈசியாவா முளைக்குது?

இல்லல

தூங்கிட்டு இருக்குற அது, கடினமான தோல துளைசுட்டு, தன் மேல மூடி இருக்குற மண்ணை தாண்டி கஷ்ட்டப்பட்டு தானே முளைக்குது. ஹைய்யோ, இவ்வளவு பெரிய ஓடு இருக்கே, கஷ்ட்டமா இருக்கே, நம்மள சுத்தி மண்ணு இருக்கே, இப்படி போட்டு நம்மள அழுத்துதேன்னு நினைக்காம, தன்னை மறைக்கும் ஓடுகிட்டையும், அழுத்துற மண்ணுகிட்டையும் இருந்து, தனக்கு தேவையான உந்து சக்திய கிரகிச்சு, போராடி வெளில வந்துடுது.

முதல்ல அதுகெல்லாம் ஒரு கைத்தட்டு....

நாம மட்டும் ஏன் எந்த கஷ்டமே இல்லாம முன்னேறணும்ன்னு நினைக்கணும்? அது சுயநலமில்லையா?

நமக்கு கஷ்ட்டம் வர வர சோர்ந்து போகாம, அதையே ஒரு பாடமா எடுத்து, அதுல இருந்து நல்ல விசயங்கள கிரகிச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுற முயற்சி இருக்கே, அது கண்டிப்பா நல்ல பலன தரும்ங்க....

சரி, சரி, இப்போ நான் ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு, வந்த சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன்.

குட் மார்னிங்...

இணையத்தில் பெண்கள் – அப்படின்னு எழுதணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அப்படி நாம எழுதினா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்களோன்னும் தோணிச்சு. சரி, அத எல்லாம் நமக்கெதுக்கு. நாம வந்த வேலைய கவனிப்போம்.

நான் இந்த பேஸ் புக்-ல 2010-ல இருந்து இருக்கேன். அதாவது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேலா இருக்கேன். இங்க பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா, இல்லையான்னு எல்லாம் அப்போ எனக்கு தெரியாது. எதோ விளையாட்டு தனமா உள்ள வந்தாச்சு.

ஆனாலும் நான் என்னோட போட்டோவ போடல, நெட்டுல இருந்து சுட்ட ரெண்டு கண்ணுங்க தான் என்னோட ப்ரோபைல் படம். கொஞ்ச நாள் போக போக, எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் அவங்க போட்டோவ வைக்க ஆரம்பிச்சாங்க, நான் கூட முக்கால்வாசி என் முகம் தெரியுற அளவு போட்டோ எல்லாம் வச்சேன். ஆனா எதோ ஒரு உள்ளுணர்வு, இது வேணாம்னு தடுத்துச்சு. அப்போ இருந்து, அத எல்லாம் சுத்தமா டெலிட் பண்ணிட்டு, இப்போ எனக்குன்னு ஒரு சின்ன அடையாளம், என்னை நல்லா தெரிஞ்சவங்க, புரிஞ்சவங்க நட்பு மட்டும் போதும்னு முடிவெடுத்துட்டு இன்னும் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கேன்.

இத்தன வருசத்துல, நான் புரிஞ்சுகிட்ட விசயத்த தாரளமா இங்க சொல்லலாம் தானே. அதனால தான் இந்த பேஸ் புக்ல பெண்களோட நிலைமை எப்படி இருக்குன்னு கொஞ்சமா யோசிச்சு பாத்தேன்.

ஒரு வகைல பாத்தா, இந்த பேஸ் புக், ரிலாக்ஸ் பண்றதுக்கு நல்ல ஒரு தளம். நம்மோட கருத்துக்கு ஒத்துபோறவங்க, கலகலப்பா பேசுறவங்க, ஒரு நல்ல நட்பு, இப்படி எல்லாமே இங்கயும் இருக்க தான் செய்யுது. குடும்ப பிரச்சனை, வீட்டு வேலை, வெளில ஆபிஸ் டென்சன், அது இதுன்னு ஏகப்பட்ட மெண்டல் பிரஸரோட இருக்குற பெண்களுக்கு பிரெண்ட்ஸ் கூட பேசி ரிலாக்ஸ் பண்ண இந்த பேஸ் புக் ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுது.

அது மட்டுமில்லாம, தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடி குடுத்து, அவங்களுக்கு கண்டிப்பா ஒரு தன்னம்பிக்கையும் குடுக்குது. எல்லாருக்கும் எவ்வளவோ திறமைகள் இருக்கும். அத எல்லாம் வெளிபடுத்த கூட முடியாம எத்தனையோ பேர் மனசளவுல ஒடுங்கி, தன்னோட சுயத்தையே தொலைச்சுட்டு இருக்காங்க. இந்த இன்டர்நெட் அவங்க பிரெண்ட்ஸ் மத்தியில அவங்களுக்குனு ஒண்ணு ரெண்டு கைதட்டையாவது வாங்கி குடுத்து அவங்கள சந்தோசப்படுத்துது. அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கைய விதைக்குது.

என்னை பொறுத்தவரை சந்தோசம்னா எது தெரியுமா?

நான் யூ.ஜி படிச்ச காலேஜ்ல எந்த பிரச்சனைனாலும் என்னை தான் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிரின்சிபால் ரூமுக்கு அனுப்புவாங்க. ஏன்னா பிரின்சிபால் கிட்ட அவ்வளவு ஈசியா தப்பிச்சுட முடியாது, திட்டு திட்டுன்னு திட்டி தீத்துடுவாங்க. அப்படி நான் உள்ள போனா, அங்க உள்ளவங்க கிட்ட என்னை பத்தி என்ன சொல்லுவாங்க தெரியுமா?

ஒண்ணாம் நம்பர் கே.டி, உடம்பு முழுக்க திமிரு, கொழுப்புக்கு பஞ்சமே இல்ல, ஆனா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுன்னு அப்படின்னு தான் இன்ட்ரோவே குடுப்பாங்க. அந்த நிமிஷம், நிஜமாவே ஒரு சந்தோசம் இருக்கும்.

நம்மோட கருத்த துணிஞ்சி சொல்றதும், நேர்மையா இருக்குறதும், போராடுற தைரியமும் இருந்தாலே மனசு சந்தோசம் ஆகிடுங்க.


அப்படி தான், இந்த பேஸ் புக்லயும் நிறைய பேர், ஒரு சந்தோசத்துக்காக வராங்க. இதுல சந்தோசம்குறது கண்டிப்பா அவங்க அவங்க வகுத்து வச்சிருக்குற வரைமுறைக்கு ஏற்ப மாறுபடுது. அவங்க ஆணோ பெண்ணோ, அவங்களோட சந்தோசத்தின் வரைமுறைல தான் சில நேரம் பிரச்சனையே ஆரம்பிக்குது.


என்னது, பிரச்சனையா? அதென்ன பிரச்சனை அப்படின்னு பதறுரவங்க, அப்படியே ஒரு நாற்காலிய போட்டு இப்படி உக்காருங்க.

பிரச்சனையே இல்லாத இடம்ன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க, அந்த பிரச்சனைல நம்மோட பங்கு என்னங்குறது தான் இப்போ பிரச்சனையே....

ஆரம்ப காலங்கள்ல அன்பை பரிமாறிக்குறது, திறமைகளை ஊக்குவிக்குறது, அப்படின்னு நட்பு வட்டத்துக்குள்ள நல்லா தான் போயிட்டு இருக்கும். அதுவே அந்த கூட்டத்துக்குள்ள ஒரு குள்ள நரி நுழைஞ்சிடுச்சுன்னு வைங்க, அப்புறம் நடக்குறத கொஞ்சம் நினச்சு பாருங்க....

ஒரு ஆண் ஒரு போட்டோ போட்டா அது அந்த அளவு கவனிக்கப்படுறது இல்ல... அவங்க போட்டோ கீழ வர்ற கமண்ட்ஸ் நிறைய இருந்துச்சுனா, அவங்க பிரெண்ட்ஸ் அவங்கள நல்லா கலாய்ச்சு வச்சிருப்பாங்க. அதுவே ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சுனா என்ன என்ன கமண்ட்ஸ் எல்லாம் வருதுன்னு பாத்துட்டு தானே இருக்கீங்க. நல்லா தெரிஞ்ச நட்பு வட்டங்களா இருந்தா அங்க பிரச்சனை குறைவு. அதுவே நட்பு வட்டத்த தாண்டும் போது? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இவ்வளவு ஏன், நான் என்னோட ப்ரோபைல்ல அட்வர்டைஸ்ல வர்ற சின்ன கொழந்தைங்க போட்டோ தான் வைக்குறேன், அங்க வந்தே செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, ஐ லைக் யூன்னு கமன்ட் போடுறாங்க, இந்த படத்த வச்சிருக்குறது ஒரு பொண்ணு, அது அந்த பொண்ண காயப்படுத்தும்ன்னு ஒரு இங்கிதம் கூட தெரியாம. நான் அந்த மாதிரி யாராவது கமன்ட் போட்டா, கமன்ட் டெலிட் பண்ணிட்டு, சம்மந்த பட்ட ஆளையும் பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கேன். இதுக்கெல்லாம் டென்சன் ஆகி, வீணா ஏன் நம்மோட எனர்ஜி வேஸ்ட் பண்ணனும்னு.

ஏன், அப்படினா, பொண்ணுங்களுக்கு சுதந்திரம் இல்லையா, இங்லாந்துல போட்டோ போடலையா, அமெரிக்காவுல போடலையான்னு சண்டைக்கு வந்துடாதீங்க, அவங்க எல்லாம் போட்டோ போடுறாங்க, அதே நேரம், அதுக்கு வர்ற கமன்ட் என்னவா இருந்தாலும் எதுவா இருந்தாலும் அத ஒரு காம்ப்ளிமென்ட்டா தான் எடுத்துட்டு சந்தோசமா போறாங்க.

சினிமா துறை சார்ந்தவங்களுக்கு கண்டிப்பா ஒரு விளம்பரம் தேவைப்படுது, அதுவும், அவங்க அழகியல் சம்மந்தமா ஒரு விளம்பரம் தேவைப்படுது. அப்படி பட்ட சூழ்நிலைல அவங்க இந்த மாதிரி பிரச்சனைகள ஈசியா எடுத்துட்டு அதுல இருந்து கடந்து போய்டுறாங்க. இல்லனா, இத பத்தி நினைச்சுகிட்டே வருத்தபட்டுகிட்டே இருந்தா அடுத்து அவங்களால பீல்ட்ல நிம்மதியா நிலைக்க முடியாது.

அதுவே நம்ம நாட்டுல சினிமா, மாடலிங் தவிர்த்து மற்ற துறைகள்ல இருக்குற பிரபலங்கள் கூட அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் போது தடுமாறி தானே போறாங்க.

ஒண்ணு, நம்மள பத்தி யார் என்ன சொன்னாலும் அத கண்டுக்காம கடந்து 

போக தெரியணும், இல்ல அத காம்ப்ளிமென்ட்டா எடுத்துட்டு சந்தோசப்பட தெரியணும். ரெண்டுமே இல்லையா, நம்மோட திறமைகள வெளிப்படுத்தி நம்மளை இங்க, இந்த தளத்துல ப்ரூவ் பண்ணணும். இவங்க இப்படி தான்ன்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி பாருங்க, நம்மோட புகைப்பட இமேஜ் ஒண்ணுமே இல்லன்னு தோணும்.

ஏன், ஏன், ஏன், இந்த ஆம்பளைங்க திருந்தினா என்ன, அவங்க பண்ற தப்புக்கு நாங்க ஏன் ஏன் போட்டோ போட கூடாதுன்னு கேள்வி கேட்டு கொந்தளிக்குறதுக்கு முன்னாடி நாம ஒரு விசயத்த பத்தி நல்லா யோசிக்கணும். இந்த பேஸ் புக் ஒண்ணும் நாம கண்டுபிடிச்ச விஷயம் கிடையாது. அவங்கள பொறுத்தவரை இதெல்லாம் ஒரு தப்பே கிடையாது. நம்மோட கலாச்சாரம் இங்க கட்டி காக்கப்படணும்னா கண்டிப்பா நாம தான் கட்டி காக்கணும். அது எந்த மாதிரின்னு தேவைப்படுற ஒவ்வொருத்தரும் தான் முடிவு பண்ணனும். கண்டிப்பா சமூகம் மாற வேண்டியது தான், அதுக்கு கொஞ்சம் பொறுமையா தான் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும்.

அதுவரைக்கும்,

நம்ம பேரை கேட்ட உடனே, அடடே, அவங்களா? அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களே அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்களா, ரொம்ப நல்லவங்க அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்க பயங்கர திறமைசாலி அப்படீங்குற இமேஜ் வேணுமா? இதுல எந்த இமேஜுமே தப்பில்ல தான், யார் யாருக்கு எது வேணுமோ, இல்ல, எதெல்லாம் வேணுமோ, அதுக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க பாதைல போக வேண்டியது தான்...

அப்புறம், சபாஷ், நல்லா கேட்டுக்கோங்க பெண்மணிகளா, நீங்க முதல்ல ஒழுங்கா வீட்டுக்குள்ள இருங்க, தேவையில்லாம வெளில வரது தான் பிரச்சனையே அப்படின்னு மீசைய முறுக்கிக்குற ஆம்பளைங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன்...

நீங்க ஆம்பளைங்க, நீங்களும் போட்டோ போடுறீங்க, உங்க போட்டோவ கண்ட கண்ட சைட்ஸ்ல போட்டு எந்த பொண்ணும் ஆனந்தம் அடஞ்சுக்குரதில்ல, அப்படினா, அழுக்கு முழுக்க முழுக்க எங்க இருக்குன்னு யோசிங்க.... உங்கள எல்லாம் நீங்க எப்பவும் சுத்த படுத்திக்க விரும்பவே மாட்டீங்க, அப்படி தானே, நல்லது, அப்படியே இருங்க.... 

இந்த சமூகத்த மாத்தணும்னா கூட பொண்ணுங்க தாங்க நினைக்கணும். அது எப்படின்னு அப்புறமா சொல்றேன்.

இப்போ நான் என்னோட பாதைல போறேன்.

ஹஹா அப்புறமா வரேன்....

31 comments:

  1. Gud msg to both male and female !! Happy day G.D

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்

      Delete
  2. தெளிவாகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் சொல்லி இருக்கிறீங்க..பாராட்டுக்கள். இப்படி தெளிவா எல்லாப் பெண்களும் இருந்துட்டால் பிரச்சனையே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. ஆமா, தெளிவு பெண்களுக்கு தான் வரணும்னு தான் எல்லாருமே நினைக்குறாங்க, அவங்க நிலை என்னன்னு யாருமே யோசிச்சு பாக்குறதும் இல்ல, உணருறதும் இல்ல , மொத்தத்துல ஒரு அருவருக்குற சமூகத்த உருவாக்கி அதுக்குள்ள இருக்குறதால ஆண்களால, அத அருவருப்புன்னே தெரிஞ்சுக்க முடியல... பாவம் ஆண்கள்

      Delete
  3. ....valthukkal !

    intha samugatha maatha porathukkuuu......
    (enakku anthalavukku thairiyam illinga )....

    naama correct a irunthale pothumnnu mattum ninaikkiravan naan :(

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அப்படி எல்லாரும் நினைச்சுட்டா பிரச்சனையே இல்லையே

      Delete
  4. ஆழ்ந்த கல்வி மாற்றம் செய்யும்... செய்ய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா அண்ணா, அதுக்கெல்லாம் கொஞ்சம் காலம் ஆகும், பொறுமையா தான் ஹாண்டில் பண்ணனும்

      Delete
  5. இணையம் என்பது மாயப் பிம்பம், அதுவும் சமூக ஊடகங்கள் இருமுனைக் கத்தி போல, முகநூல் போன்ற தளங்கள் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் நட்பு பாராட்டும் தளம், சிலர் அதனை விரிவுபடுத்திக் கொண்டு அறியாதோரை அனுமதிக்கும் போது சிக்கல் தான். வீட்டுக்குள்ளே ரோட்டில் போறவன் வரவனை எல்லாம் கூப்பிட்டு வச்சா என்னாவும், ஆபத்து தான். அது போலத் தான் இதுவும். தெரியாதவங்க கூட நட்பு பாராட்ட அளவளாவ ட்விட்டர் பாதுகாப்பானது, ஒரு திண்ணை போல, அதில் சுயவிவரங்களை பதியும் வாய்ப்புக் குறைவு. ஆணோ பெண்ணோ தம் சுயத்தை கண்டவருக்கும் திறந்து போடுவது ஆபத்தே.. ஆபத்தை எதிர்கொள்ள தைரியம் வேண்டும் அல்லது ஆபத்தை தடுக்க புத்தி வேண்டும் இரண்டும் இல்லை எனில் என்னாகும்?

    --- விவரணன் நீலவண்ணன். 

    ReplyDelete
    Replies
    1. ஆபத்தை எதிர்கொள்ள தைரியம் வேண்டும் அல்லது ஆபத்தை தடுக்க புத்தி வேண்டும் /// அதே தான்... இல்லனா அமைதியா இருக்கணும்

      Delete
  6. அலசலின் பார்வை விரிந்துள்ளது வார்த்தைகளில்.. எல்லைகள் மீறாத சொற்கள், ஏற்றம் தரும் பார்வைக்கு காட்சிகளாய்... இயல்பை இன்னும் இயல்பாக்காது இருப்பதால் தான் இவையனைத்தும் என்பதை என்றுணர்வோமோ? தனிமத செயல்களால் தோன்றும் விளைவுகளுக்கு பாலின முத்திரை குத்தும் பழக்கம் என்று மாறுமோ? ஒவ்வொரு மனிதனுக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றது.. அதை உணர்ந்து அதன் வழியில் அதை உணர்வதே ஆனந்த வாழ்விற்கு அடித்தளமாகும்...வாழ்க்கையின் வண்ணங்களை அறியும் வழி கண்டால் வானவில்லாய் விரியும்... விரிந்திருக்கவும் விழித்திருக்கவும் விதை விதைக்க பண்படுத்தும் பணியை பரிவோடும் மேற்கொள்ளும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்...

    எண்ணச் சிறகுகள் எல்லோரிலும் உணர பரவட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா...

      Delete
  7. வணக்கம்
    பதிவை மிக அருமையாக சிந்தித்து எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. நான் இந்த தலைப்பை என் வலைப்பூவில் போடுவதற்காக குறிப்பெடுத்து வைத்திருந்தேன்... நீங்கள் முந்திவிடீர்கள் !!!! இருப்பினும் நல்ல பதிவு..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா.... அவ்வ்வ்வ் நான் காலைல தான் திடீர்னு முடிவு பண்ணி எழுதினேன். இதுக்கு தான், எதையும் முடிவு பண்ணிட்டா உடனே செயல்படுத்திடணும்ன்னு சொல்றது

      Delete
  9. ellathukkum nammaloda kalacharam tan kaaranamnu na ninaikkuren akka. antha kalathula sonnathaiye innum nama fallow panikittu iruntha enna.. day today life marikittu irukku.. england and america parunga kalathukku erpa thangala mathikittathala nalla irukkuranga , nama alunga marathatunala tan ippadi ellam. ninga eluthiya intha pathivu fb ku mattum ella pala visayangala yosikka vechathu. eppadi eduthalum penkalukkutan pirachanaikal athikama irukku.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் மகேஷ்.... தேங்க்ஸ்

      Delete
  10. ம்ம் நல்லா எழுதிருக்கிங்க...இது போல தைரியம் உள்ள பெண்கள் நிறைய இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக தங்களது படங்களை போடவே செய்கிறார்கள். ஒரு சிலருக்கு எந்த பிரச்சனைகளும் வருவதில்லை. இணையத்தில் தங்களது கருத்தை சொல்லும்போது எதிர்பாராத விதமாக சில கருத்துவேறுபாடுகள் தோன்றி , வன்மம் நிறைந்த சில ஆண்களுக்கு கருத்து சொன்னவர் மீது பழி வாங்கும் எண்ணம் வந்தால் சம்பந்தப் பட்ட பெண்கள் படங்களை என்னவெல்லாமோ செய்து அவர்கள் பார்க்காத தளங்களில் பதிவிட்டால்...அது எப்போதோ ஒரு தருணத்தில் தானே பார்க்க நேர்ந்தால் அந்த மன வேதனையை நினைத்துப் பார்க்கவே முடியாமல் போய் விடும். இப்படித்தான் எனது facebook பக்கத்தில் நான் மிகமும் மதிக்கும், என் அக்கா போல் இருக்கும் ஒரு நடிகையின் படத்தை யாரோ ஒரு பரதேசியின் விருப்பக் குறி activity யின் மூலம் பார்க்க நேர்ந்தது. கோபம் தான் வந்தது... photo வுல என்னங்க இருக்கு... நாம சொல்ற கறுத்த வச்சே நம்மள பத்தி தெரிஞ்சிட்டு போகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான் அண்ணா, இது உங்க கருத்து, ஒவ்வொருத்தருக்கும் எண்ண சுதந்திரம் இருக்கு தானே

      Delete
  11. //இவ்வளவு ஏன், நான் என்னோட ப்ரோபைல்ல அட்வர்டைஸ்ல வர்ற சின்ன கொழந்தைங்க போட்டோ தான் வைக்குறேன், அங்க வந்தே செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, ஐ லைக் யூன்னு கமன்ட் போடுறாங்க, இந்த படத்த வச்சிருக்குறது ஒரு பொண்ணு, அது அந்த பொண்ண காயப்படுத்தும்ன்னு ஒரு இங்கிதம் கூட தெரியாம. நான் அந்த மாதிரி யாராவது கமன்ட் போட்டா, கமன்ட் டெலிட் பண்ணிட்டு, சம்மந்த பட்ட ஆளையும் பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கேன்.// இது மாதிரி பண்ணுங்க... எந்த தயவு தாட்சண்யமும் இல்லாம...யாரா இருந்தாலும். ஆரம்பத்துல நாம கண்டுக்காம போயிட்டோம்னா அது எப்போவா இருந்தாலும் நமக்கு தலைவலிதான்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி பண்ணுங்கன்னு அறிவுரை சொல்றதுல தான் பலருக்கும் கடுப்பு வரும். சரி தப்புன்னு மனசுக்கு தோணுறத சொல்றது வேற, இப்படி செய்ங்க, அப்படி செய்ங்கன்னு கட்டளை இடுறது வேற.... /// எந்த தயவு தாட்சண்யமும் இல்லாம...யாரா இருந்தாலும். ஆரம்பத்துல நாம கண்டுக்காம போயிட்டோம்னா அது எப்போவா இருந்தாலும் நமக்கு தலைவலிதான்./// இது உங்களுடைய கருத்து, வரவேற்கலாம், அதே நேரம் "இது மாதிரி பண்ணுங்க.." ன்னு சொல்றது அடுத்தவங்க உரிமைல தலையிடுறது, சரி தானே

      Delete
    2. //ஒவ்வொருத்தருக்கும் எண்ண சுதந்திரம் இருக்கு தானே// தாராளமா... யாரோட கருத்துலயும் யாரும் தலையிட முடியாது.

      //இந்த மாதிரி பண்ணுங்கன்னு அறிவுரை சொல்றதுல தான் பலருக்கும் கடுப்பு வரும். சரி தப்புன்னு மனசுக்கு தோணுறத சொல்றது வேற, இப்படி செய்ங்க, அப்படி செய்ங்கன்னு கட்டளை இடுறது வேற.இந்த மாதிரி பண்ணுங்கன்னு அறிவுரை சொல்றதுல தான் பலருக்கும் கடுப்பு வரும். சரி தப்புன்னு மனசுக்கு தோணுறத சொல்றது வேற, இப்படி செய்ங்க, அப்படி செய்ங்கன்னு கட்டளை இடுறது வேற.// கண்டிப்பா இது கட்டளை இல்லை. facebook எனும் இந்த பொது தளத்தில் இப்படி செய்யுங்கள் என்பது ஒரு தீர்வா இருக்கும்னு தனக்கு பட்டதை சொல்லும் விஷயம் தான். இங்கே ஒரு ஷேரிங் தானே... அதை எடுத்துக் கொள்பவர்கள் கட்டளை என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நாம் விலகி நிற்பதே நல்லது. உங்களின் கருத்தும் வரவேற்க்கத்தக்கது தான்.

      Delete
    3. அது தான் தீர்வு அப்படிங்குறதும் சொல்றவங்க எடுத்துக்குற முடிவு தான். இங்க தீர்வுங்குறது சொல்றவங்க எடுக்குற முடிவா இருக்க கூடாது, சம்மந்த பட்டவங்க எடுக்குற முடிவா தான் இருக்கணும்,

      Delete
  12. அதென்னமோ தெரியல இந்த "பெண்ணீய" கட்டுரைகள் படிச்சாலே ஒரு வெறுப்பு வந்திடுது.. அது எனக்கு பிடிச்ச தங்கைகள் எழுதினா கூட.. (என்னவோ ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒடுக்குபவர்கள் போலவும், பெண்கள் இன்னமும் அடிமைப்பட்டு சமையல் கட்டில் இருப்பவர்கள் போலவும்..)

    உண்மையில் நான் பார்த்த பல ஆண்கள் திருமணத்துக்கு பிறகு சுயமா ஒரு கருத்து சொல்ல கூட பயப்படறாங்க.. பெண்கள் தான் தைரியமா எல்லா இடத்திலையும் பேசுறாங்க.. இதப் பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். ஆனா அதோட வீரியம் தெரியாம மாத்தி மாத்தி அடிச்சுக்குரவங்கள பாக்கவே சகிப்பு தன்மை வேணும். வீட்டை விட்டு வெளில வர்ற பெண்கள் அதிகம் ஆகிட்டாங்க தான், ஆனா இன்னமும் அவங்கள கேலி பொருளா பாக்குறவங்க இருக்க தானே செய்றாங்க. இது அவங்களுக்கான பதிவு.

      Delete
  13. கொஞ்சம் சூடான பதிவு தான் !!! இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்க !!
    http://vijayandurai.blogspot.com/2013/07/facebooksharingandproblems.html
    எச்சசரிக்கை: பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ், கண்டிப்பா பாக்குறேன்

      Delete
  14. //பிரச்சனையே இல்லாத இடம்ன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க, அந்த பிரச்சனைல நம்மோட பங்கு என்னங்குறது தான் இப்போ பிரச்சனையே//

    சூப்பர் ங்க !!

    //அவங்கள பொறுத்தவரை இதெல்லாம் ஒரு தப்பே கிடையாது. நம்மோட கலாச்சாரம் இங்க கட்டி காக்கப்படணும்னா கண்டிப்பா நாம தான் கட்டி காக்கணும். அது எந்த மாதிரின்னு தேவைப்படுற ஒவ்வொருத்தரும் தான் முடிவு பண்ணனும். கண்டிப்பா சமூகம் மாற வேண்டியது தான், அதுக்கு கொஞ்சம் பொறுமையா தான் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும்.
    // 100 % கரெக்ட் !! மாற்றம் வரும் வரைக்கும் மாறாத சமூகத்தில் தான் வாழ வேண்டும் வேற வழி இல்லை !

    ReplyDelete
  15. சூப்பர் மா ஆழ்ந்த சுய சோதனைக்கு உட்பட்டு எழுதி இருக்க...இந்த வயசுல நல்ல முதிர்ச்சி வாய்ந்த பதிவு!!!இணைய மாற்றம் என்பது நம்ம எல்லோருடைய பங்கெடுப்பும் இருந்தா தான் சாத்தியம்...இதுல ஆண் , பெண் வேறுபாடு எல்லாம் தேவையில்ல...அதே நேரத்துல உன்னை போல இந்த விசயங்கள் நமக்கு தேவையா னு ஒன்ன பண்றதுக்கு முன்னாடி சுய பரிசோதனை செய்றது அவசியம்...வாழ்த்துக்கள் மா :)

    ReplyDelete