Wednesday, 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.



ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?



.

21 comments:

  1. வணக்கம்

    ஆகா...ஆகா.... அருமை... தொடர எனது வாழ்த்துக்கள்
    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ்... உங்க புது வலைப்பூ வ கண்டிப்பா பாக்குறேன் அண்ணா

      Delete
  2. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்றதான் நீங்கள் இந்த பொன்னான தகவல்களை புதன்கிழமை அள்ளி கொடுத்து இருக்கிறீர்களோ? tha.ma 1

    ReplyDelete
    Replies
    1. ஹஹா எனக்கே தெரியாம இப்படி எல்லாம் தகவல் அள்ளி குடுத்துருக்கேன்ன்னு நினைக்குறேன் அவ்வ்வ்வ்

      Delete
  3. இந்தாமா மின்னல் ஆப்பிள் ஜூஸ்... நல்லா தெம்பா குடிச்சுட்டு தகவல் சொல்லுங்க.... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... இடிக்கரையே தாயீ எப்பூடி...

    அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்பார்கள் அதுபோன்றே ஆழமான விசயத்தைக் கூட அசட்டலாய் சொல்லும் அன்புச்சகோதரி காயத்ரிக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்..

    அசத்திபுட்ட புள்ள

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.... ம்ம்ம்ம் வாழ்த்துக்கும் ஆப்பிள் ஜூசுக்கும் தேங்க்ஸ் அண்ணா

      Delete
  4. யாரங்கே... ஆப்பிள் ஜூஸ் வேண்டாம்... சூடா ஒரு டீ...! ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, டீயா? அப்போ சரி, எனக்கு ஆப்பிள் ஜூஸ், உங்களுக்கு டீ, சரியா... வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
    2. http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

      Delete
  5. //பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது // அவ்வ்வ்வவ்.. இவ்வளவு நாள் 'பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு" இல்லே நினைச்சுட்டு இருந்தேன்..

    ReplyDelete
    Replies
    1. பொண்ணு கிடைக்கலன்னு கல்யாணம் ஆன பசங்க மட்டும் தானே கவலைப்படணும், ஆனா பொன் அகில உலக தமிழக மக்களின் ஒட்டு மொத்த பிரியமாச்சே.... நான் சரியா தான் சொல்றேனா அவ்வவ்வ்வ்வ்

      Delete
  6. இன்று ஒரு தகவல்ன்னு சொல்லிட்டு ஏழு தகவல் போட்டதுக்கு கண்டனம்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அதான் ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்கன்னு கடைசியில சொல்லியிருக்கேனே...

      Delete
  7. இதை படிச்சி நானும் டயர்ட் ஆகிட்டேன்...

    தினத்தந்தில சில வருடத்திற்கு முன் தினம் ஒரு தகவல்னு தினமும் வரும். அது மாதிரின்னு எதிர் பார்த்தேன்...

    ReplyDelete
  8. ஆஹா.. ஹா..ஹா.. நல்ல வாசிப்பு.. ஆனால் எனக்கென்னவோ முதல் ஆறு தகவலுமே திங்கட்கிழமைக்கு சொன்னா மாதிரியே இருக்கு.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அப்படினா மீதி நாளுக்கு நீங்களே தகவல சொல்லிடுங்களேன்

      Delete
  9. வணக்கம் தோழி !
    சிறப்பான ஆக்கங்ககளை வெளியிட்டு வரும் தங்கள்
    தளத்தினை இன்று தான் நானும் அறிந்துகொண்டேன் .
    வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் நானும் முடிந்தவரைத்
    தொடர்ந்து வாசிக்கின்றேன் .மிக்க நன்றி தோழி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும் கருத்துக்கும் தேங்க்ஸ்

      Delete