Thursday, 2 January 2014

எங்க வீட்டு சக்தி...


ஜில்லுன்னு மார்கழி குளிர். காலைல எழவே நேரம் இல்ல. அப்படியே போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக்கலாம் போல இருந்துச்சு.

ஆனாலும் நேத்து ராத்திரி தூங்க வச்ச அணில்குட்டிய எழுப்பி ஆகாரம் குடுக்கணுமே... அவ்வ்வ்வ், இந்த நினைப்பு வந்த உடனே அடிச்சு புடிச்சு எழும்பி உக்காந்தாச்சு.

என்னது, அணில் குட்டியா, அத எல்லாம் நாம வளக்க கூடாது, அதோட, அத நம்மளால சரியா வளக்க முடியாதுன்னு சொல்றீங்களா? எனக்கும் அதே கவலை தான்...

ஆனாலும், நேத்து நியூ இயர், காலைல கீச் கீச்ன்னு ஒரு குட்டி சத்தம். அதுவும், வீடு மாறி வந்ததுல பொருள் எல்லாம் கன்னா பின்னான்னு போட்டு வச்சிருக்குற ரூம்ல இருந்து. என்னடா இதுன்னு போய் பாத்தா, பாவம் ஒரு குட்டி அணில் பிள்ளை சத்தம் போட்டுட்டு அதோட கூட்டுக்குள்ள சுருண்டு போய் இருக்கு.

அத அப்படியே விட்ருக்கலாம் தான், ஆனா ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு அணில் எங்க வீட்டு ஹால்ல துடிதுடிச்சு செத்து போச்சு. ஒருவேளை இது அந்த அணிலோட குட்டியா இருந்தா? இருந்தா என்ன, அதே குட்டிதான்னு முடிவுக்கு வந்த உடனே ஒரு பரபரப்பு தொத்திகிச்சு.

பாவம், அது அம்மா இறந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு, அப்போ ரெண்டு நாளா அது பசியோட எதுவுமே சாப்டாம தானே இருந்துருக்கும். அப்போதைக்கு கொஞ்சம் பசும்பால் எடுத்து ஒரு தட்டுல விட்டு அது முன்னாடி வச்சு பாத்தா, அது கடகடன்னு கொஞ்சம் பால குடிச்சுது.

அச்சோ செல்லம், எவ்வளவு பசில இருந்துருக்குன்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம். என்ன, வழக்கமா மாடில கொண்டு வச்சுடலாம், ஏதாவது அணில் வந்து தூக்கிட்டு போகும்னு முடிவு எடுத்தோம்.

அந்த முடிவு படி, தம்பி அத தூக்கிட்டு மாடி போயிருக்கான். இது அப்படியே அவன் கை மேல ஏறிகிச்சாம். ரொம்ப ட்ரை பண்ணி அது அம்மா கட்டி குடுத்த கூட்டுக்குள்ள விட பாத்ருக்கான். நோ யூஸ்.... அப்புறம் என்ன நினைச்சானோ, என் கிட்ட கொண்டு வந்து தந்துட்டான்.

எனக்கும் அத வளக்கலாமேன்னு ஒரு ஆச. நேத்துல இருந்து அது என் கிட்ட ரொம்ப ஒட்டிசிச்சு. மடியிலயே படுத்துக்குது. அப்புறம் கொஞ்ச நேரத்துல மறுபடியும் குடுகுடுன்னு ஊர்ந்துட்டே இருக்கு. இருக்குற எல்லா வேலையும் அப்படியே போட்டுட்டு அத மட்டும் தான் தனியா கவனிச்சுட்டு இருந்தேன்.

அப்புறம், ராத்திரி அத தூங்க வைக்குறதுக்குள்ள அவ்வளவு கஷ்டமா போச்சு. என்கிட்டயே தூங்க வச்சா ராத்திரி எப்படியும் அது காலின்னு தெரியும். தெரிஞ்சே அத காலி பண்ண முடியுமா? அதான் ரொம்ப கஷ்டப்பட்டு அதோட அம்மா செய்த கூட்டுக்குள்ள தூங்க வைக்க ட்ரை பண்ணினேன். ம்ஹும்... அது கேக்கவே இல்ல. அப்புறம் அத அது உள்ள விட்டு, மேல ஒரு பெட்ஷீட் எடுத்து போர்த்தி விட்டுட்டேன்.

அவ்வ்வ்வ், அது மேல இல்லங்க, அதோட கூடு வச்சிருந்த பெட்டி மேல. கொஞ்ச நேரம் மேல வர ட்ரை பண்ணிட்டு, முடியாம அதோட கூட்டுக்குள்ள போய் படுத்துசிச்சு. நானும் நிம்மதியா தூங்கிட்டேன்.

அப்புறம் காலைல அதுக்கு பால் குடுக்கணுமேன்னு மெதுவா போர்வைய விலக்கிட்டு மெதுவா எட்டி பாத்தா பக்கி கடிக்க வருது, அவ்வ்வ்வ்... அப்புறம், செல்லம் செல்லம்ன்னு சமாதானம் பண்ணினா யார் கிட்ட? கொஞ்ச நேரம் சீறிட்டு அப்புறமா தான் அதுவே யோசிச்சிருக்கும் போல, ஓடி வந்து கைல ஏறிடுச்சு.

நான் கூட ரொம்ப யோசிக்காம, தட்டுல பால விட்டு குடிக்க குடுத்தேன். அது குடிச்சதும், இனி கைல வச்சிருந்தா விடாதுன்னு டக்குன்னு அதோட கூட்டுக்குள்ள விட்டு மறுபடியும் போர்வையால மூடியாச்சு. ரொம்ப சமத்தா தூங்க போய்டுச்சு.

அவ்வளவு தாங்க, இப்போதைய நிலவரம். அடுத்து அது என்ன செய்யும்ன்னு அடுத்து பால் குடுக்கும் போது தான் தெரியும். அதனால, நானும் இப்போதைக்கு என்னோட வேலைய பாக்க போறேன்.

அச்சச்சோ, அதுக்கு பெயர் வச்ச விசயத்த சொல்ல மறந்துட்டேனே...

நான் பாட்டுக்கு எப்.பில குட் மார்னிங் ஸ்டேடஸ் போட்ருந்தேனா, அதுல நம்ம தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா வந்து அதுக்கு என்ன பெயர்ன்னு கேட்டார். அப்போ தான் பெயர் வைக்காத விசயமே உறைச்சது.

அதுமட்டுமில்லைங்க, பெயர் வைக்குற பொதுகுழுவ கூட்டலாம்ன்னா பொது குழு மெம்பர் நேத்து முழுக்க பிசி. அதனால தான் பொதுகுழு கூட்டி பெயர் வைக்க முடியாம போச்சு. அப்புறம் காலைலயே பொதுகுழுவ கூட்டி, இந்த அணில் பிள்ளை ஆணா பெண்ணான்னு தெரியாததால பொதுப்பெயரா “சக்தி” ன்னு பெயர் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு.

அதுக்குள்ள நம்ம பேஸ்புக் போராளிகள் எல்லாம் பொங்கிட்டங்க வேற பேர் வைங்கன்னு...

ஆனா நான் முடிவு பண்ணிட்டேன், வச்ச பேர் வச்சது தான்னு.

பெயர் சூட்டு விழா, அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு நடக்க போகுது. நீங்களும் அங்க இருந்தே எங்க சக்திய வாழ்த்துங்க....


நன்றி... வணக்கம்...



14 comments:

  1. என்னவொரு பாசம்...! மகிழ்ச்சி...

    பாராட்டுக்கள்... சக்திக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தேங்க்ஸ் அண்ணா

      Delete
  2. 'சக்தி' க்கு என்ன குறைச்சலாம்? நல்லா தானே இருக்கு.. என் விஷ்ஷையும் சக்திகிட்ட சொல்லிடுப்பா.
    நான் ஒரு காலத்துல ஒரு குருவியையும், பூனையையும் ஒரே வீட்டுல வச்சு வளர்த்தேன்.. கசின் பிரதர், அசின் சிஸ்டர் மாதிரி ரொம்ப காலம் பழகி வந்தாங்க.. ஆனா அந்த சோக கிளைமாக்ஸ் மட்டும் இங்கே சொல்ல முடியாது..!! :(

    ReplyDelete
    Replies
    1. ஏன்யா ஆவி... அந்த கிளைமாக்ஸ் வறுவல் தானே???

      Delete
    2. :( நீங்க க்ளைமாக்ஸ் சொல்லலைனா நான் பாட்டுக்கு பூனை குருவிய தின்னுடுச்சுன்னு நினச்சுட்டேன் அண்ணா, அப்படி இல்ல தானே :(

      Delete
  3. வணக்கம்

    தங்களின் பாசம் எனகு வியப்பாக உள்ளது... அருமை வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இதோட அம்மா, இறந்து போச்சு அண்ணா, அதனால தான் வளர்க்குறோம், இல்லனா டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டோம்

      Delete
  4. எளிய உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் தங்களின் மனிதநேயத்தை போற்றுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது வேற ஒண்ணுமில்ல, எங்க ஊர்ல இதெல்லாம் அதிகமா இருக்கும். அதோட தோட்டமும் எல்லாருக்கும் இருக்கும். அப்படி வர animals அடிபட்டாலோ இல்ல இந்த மாதிரி ஆதரவு இல்லாம இருந்தாலோ வளர்த்து விட்டுடுவோம், அவ்வளவு தான்

      Delete
  5. சக்தி அணில்பிள்ளை.... அழகான பெயர்...

    ஏதோ என்னால முடிஞ்சது.. அந்த குட்டிக்கு ஒரு பெயர் கெடச்சிருச்சு...

    படத்தில் அணில் அழகாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா...
      ஆமா அண்ணா, நீங்க தான் நியாபகப்படுத்துனீங்க, நிஜமாவே அந்த பெயர் எனக்கும் பிடிச்சிருக்கு.

      Delete
  6. Replies
    1. அண்ணா, ஆனா அது அம்மாகிட்ட இருந்து பிரிச்சா பாவம் தானே, இதோட அம்மா செத்து போச்சு. அதனால தான் நான் வளர்க்குறேன். எப்படியும் பெருசான உடனே வெளில விட்ருவோம்

      Delete
  7. santhosapatu, kanner vitu kadsiya peyar sootu vila padikeran.

    ReplyDelete