Thursday 27 March 2014

கதை நேரம் - கதையும் தத்துவமும்



ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் ப்ளாக் பக்கம் வந்துருக்கேன். அதனால முதல்ல உங்கள எல்லாம் நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் சுத்திக் காட்டலாம்னு நினைக்குறேன்... 

நாம இப்போ நின்னுட்டு இருக்குற காடு ஸ்ரீலங்கால இருக்கு. இங்க நாம வேடிக்கை பாத்துட்டே போகலாம் வாங்க.... 

அட, பயப்படாம வாங்க, நான் தான் கூட இருக்கேன்ல, ஒரு பயமும் இல்ல. இந்த சிங்கம், புலி, கரடி எல்லாம் என்னை கண்ட உடனே வாலை சுருட்டிட்டு பம்மிடும்.

இங்க, பெரிய பெரிய மரங்கள், தரையே பாக்க முடியாத வெயில், காலுக்கடியில சலசலத்து ஓடுற நீரோடை இப்படி எத்தனையோ இருந்தாலும் நாம இப்போ ஒரு விசித்திர ஜந்துவ தேடிப் போறோம்.

மான் அடிச்சு சாப்பிடுற புலி பாத்துருப்போம், ஏன், எலி புடிச்சி திங்குற காக்கா பாத்துருப்போம், பூச்சி புடிச்சி திங்குற செடி பாத்துருக்கீங்களா?

பாக்கலனா, நாம இப்போ அத தான் தேடி போயிட்டு இருக்கோம்...

அட, அங்க பாருங்க, ஒரு குரங்கு தண்ணி குடிச்சுட்டு இருக்கு. எதோ ஒரு செடில தண்ணி தேங்கி நிக்குது போல... பக்கத்துல போய் பாக்கலாம்.... எப்படியும் நாம பக்கத்துல போனா அந்த குரங்கு ஓடிடும்... 

குரங்கு போனா போகட்டும். நம்ம டார்ஜட் நாம தேடி வந்த ஜந்து தானே... இந்தா அந்த செடி பக்கத்துல நெருங்கிட்டோம்.

ஹை.... வித்யாசமா குடுவை மாதிரி இருக்குல... இது உள்ள மழைத் தண்ணி தேங்கி நிக்குது போல... அச்சோ, உள்ள ஒரு பல்லி இருக்கு பாருங்க... அவ்வ்வ்வ் பல்லி செத்து போச்சு...

இந்த பல்லிய கொன்னது யாருன்னு நினைக்குறீங்க, எல்லாம் இந்த செடி தான்... இதோட பெயர் தான் நெப்பன்தஸ்... இது ஒரு மாமிச உண்ணி. பொதுவா இத பிச்சர் பிளான்ட்ன்னு சொல்லுவாங்க.

இது ஒரு வகையான தேன் மாதிரி ஒரு திரவத்த சுரக்குது, அப்புறம் பூச்சிகள கவர்ந்திழுக்க வித்யாசமான ஸ்மெல் வேற வெளியிடுது. இத எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு பக்கத்துல வர்ற பூச்சிங்க, அதோட குடுவைக்குள்ள வழுக்கி விழுந்துடும்... அப்புறம் எங்க தப்பிக்குறது?

பாத்தீங்களாங்க, பிடிச்ச வாசம், பிடிச்ச சுவை இருக்குன்னு இந்த பூச்சிங்க நம்பி அத தேடி போனா, இந்த நெப்பன்தஸ் அத கொன்னு அதோட சத்துக்கள உறிஞ்சிடுது... இப்படி தாங்க சில மனுசங்க இருக்காங்க. இனிக்க இனிக்க பேசி, நைசா நம்மள அவங்க வலைல விழ வச்சு நம்மளால நிறைய பலன் அடஞ்சுட்டு, ப்ரோயோஜனம் இல்லன்னு ஆனா உடனே கழட்டி விட்ருவாங்க...

அதனால எப்பவுமே கொஞ்சம் எச்சரிக்கையா ஒரு எல்லை கோட்டுக்குள்ள நாம இருந்துகிட்டா எப்பவுமே பயம் இல்ல...

ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய உலகம் இது.... 

கதை கேட்டு திகில் வந்துச்சோ இல்லையோ, எனக்கு தத்துவம் சொல்லி திகில் வந்துடுச்சு.... அவ்வ்வ்வ், எதுக்கும் நான் நாளைக்கு வாரேன்...

12 comments:

  1. அட... பூச்சிய பார்க்கலாம்ன்னு கூட்டிப் போயிட்டு, சொல்ல வேண்டியதை நல்லாவேச் சொல்லிட்டீங்க... ரொம்ப திகிலாக இருக்கு...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அண்ணா... அவ்வ்வ்வ்

      Delete
  2. சொல்லவேண்டிய அரிய தகவலை
    சுவாரஸ்யமாகச் சொல்லிப்போனவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒருத்தர் தாண்ணே மேலும் தொடரவும்ன்னு சொல்லியிருக்கீங்க, கண்ணு வேர்க்குது

      Delete
  3. Replies
    1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  4. அட..நன்றாக இருக்கிறது பூச்சிக்கொல்லி செடி பற்றிய பதிவு !!!

    ReplyDelete
  5. என்னாது நாளைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் சொல்றது தாண்ணா.... பயப்படாதீங்க, அப்பப்ப தான் பயமுறுத்துவேன்

      Delete
  6. கதை சொல்றேன்னு சொல்லிட்டு தத்துவம் சொல்றீங்களே நியாயமா

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.... அதுக்கு தானே, கதையும் தத்துவமும்ன்னு தலைப்பு போட்டேன்...

      Delete