Wednesday 23 April 2014

இயற்கை விவசாயம்


சில விசயங்கள் நிஜமா நடந்துட்டு இருந்தாலும் அத  நாம கற்பனைல தான் பாக்க முடியும். அப்படியான ஒரு இடத்துக்கு தான் நான் இப்போ உங்கள கூட்டிட்டு போகப் போறேன்...

இது ஒரு விவசாய பூமி. பாத்தீங்களா, வயல்ல உளுந்து போட்ருக்காங்க. இந்த பக்கம் பாருங்க, தென்னந்தோப்பு. அந்தபக்கம் தக்காளி தோட்டம். பக்கத்துலயே பம்புசெட்டு. அட, இத எல்லாம் நம்மளால பாக்க முடியாதாக்கும்ன்னு அலுத்துக்காதீங்க. நான் கூட்டிட்டு போக போறேன்னு சொன்ன உலகம் இது இல்ல..

அதோ பக்கத்துலயே இலை தழைகள எல்லாம் கொட்டி மட்க வச்சிருக்காங்க பாத்தீங்களா, அங்க வாங்க, உள்ள கொஞ்சம் இறங்கி பாப்போம். இது மண்புழுக்கள் வாழுற இடம். நமக்கெல்லாம் பாக்க அருவருப்பா இருக்குல, ஆனா, இது நமக்கு எவ்வளவு நல்லது பண்ணிக்கிட்டு இருக்கு தெரியுமா?

நாம கழிவுன்னு தூக்கிப் போடுறதா எல்லாம் சாப்ட்டு, அத சத்தான பொருளா மாத்தி நம்ம மண்ணுக்கே அத திருப்பி தருது. மண்ணுக்குள்ள அங்கயும் இங்கயுமா இது ஊர்ந்துகிட்டே இருக்குல, இதனால நம்ம மண்ணு ரொம்ப மிருதுவா மாறிடுது. மண்ணுக்கு காற்றோட்டமும் கிடைக்குது.

இதுக்கு வாய் எங்க இருக்கு, வால் எங்க இருக்குன்னு கூட ஈசியா கண்டுபுடிக்க முடியாது. மண்ண அப்படியே முழுங்கி, அதுல இருக்குறத எல்லாம் ஜீரணிச்சு அப்படியே உரமா மாத்திடுது. இந்த உரத்த நாம அதோ அந்த வயலுக்கும் தோப்புக்கும் போட்டா விளைச்சல் அமோகமா இருக்கும். மண்ணும் கெட்டு போகாம இருக்கும்.

சரி, அப்படியே ஊர்ந்துகிட்டே அந்த உளுந்துச்செடி பக்கமா போவோம். அட அட அட, என்னமா காய்ச்சிருக்கு பாத்தீங்களா? இங்க கூட நாம கொஞ்சம் மண்ணுக்குள்ள முங்கி பாப்போமா?

அடடே, பாருங்க, உளுந்து செடியோட வேர்ல முடிச்சு முடிச்சா வீங்கியிருக்கு. ஏன் ஏன் பதறுறீங்க, உளுந்து செடிக்கு நோய் வந்துடுச்சுனா? ஹஹா அது வீங்கலீங்க, அது இன்னொரு இயற்கை அதிசயம். ஆமா, இங்க கடலை செடி கூட கூட்டு குடும்பமா இன்னொரு உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அது ஒரு பாக்டீரியா. அது பேரு ரைசோபியம்.

இந்த ரைசொபியம் என்ன பண்ணுதுனா, காற்றுல அதிகமா இருக்குறத நைட்ரஜன புடிச்சி கொண்டு வந்து செடிகள் எல்லாம் பயன்படுத்துற மாதிரி மண்ணுல தக்க வச்சிடுது. இதனால மண்ணு ஈசியா வளம் அடஞ்சிடுது. இதனால தான் விவசாயிங்க, நெல் பயிரிட்ட பிறகு, அதே நிலத்துல உளுந்து போடுறாங்க. மண்ணுல நைட்ட்ரஜன் சத்து எக்கசக்கமா கிடைக்கும். எதுக்குங்க நமக்கு இந்த யூரியா எல்லாம்? நிலத்துல சூட்டை கிளப்பி விட்டு, மண்ணை மலடாக்கிடும்.

ரைசோபியம் மட்டுமில்லீங்க, கோடி கணக்குல நம்ம கண்ணுக்கு தெரியாத உயிர்கள் நம்ம நிலத்தை உயிர் சத்தோட வச்சிக்க போராடிட்டு இருக்கு. என்னது போராடிட்டு இருக்கான்னு ஏன் ஷாக் ஆகுறீங்க? அதுங்க எல்லாம் என்னவோ அதுங்களோட வேலைய சரியா பாக்கணும்னு தான் நினைக்குதுங்க, ஆனா நாம என்ன பண்றோம்?

அதிகமா பேராசைப்பட்டு விளைச்சல் அதிகமா கிடைக்கணும்ங்குற நினைப்புல செயற்கை உரத்தை அள்ளி தெளிச்சிடுறோம். இதனால இயற்கையா நம்ம கூட இணைஞ்சு வாழ்ந்துட்டு இருக்குற இந்த இனங்கள் அத தாங்க முடியாம அழிஞ்சு போயிடுது. எப்பவுமே இவங்களோட அருகாமைல சந்தோசமா செழிப்பா இருந்துட்டு இருந்த பூமி, கலையிழந்து வறண்டு போயிடுது.

உயிரை விட்டுட்டு வெத்து பூமிய வச்சுட்டு சாப்பாட்டுக்கு என்னங்க பண்ண முடியும்? கொஞ்சம் கொஞ்சமா மண்ணோட வளத்த அழிச்ச இந்த ரசாயன உரங்கள், அப்படியே நாம சாப்டுற சாப்பாடு மூலமா நமக்குள்ளயும் ஆக்கிரமிக்க தொடங்கியாச்சு. நம்ம உடம்புல வந்து தாங்கிகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நம்மோட உடல் செயல்பாட்டுக்கள முடக்க ஆரம்பிச்சாச்சு.

இனியாவது கொஞ்சம் முளிச்சுக்கணும். இயற்கை உயிர்கள நாம செயற்கையா ஏதாவது பண்ணி அழிக்காம விட்டாலே போதும்... கொஞ்சம் நஞ்சம் எங்கயோ உயிரோட இருக்குற இந்த பூமி, தன்னோட சந்தோஷ கிளைகள படர விட்டுக்கும்....

8 comments:

  1. ரைசோபியம் பற்றிய தகவல் அருமை. இயற்கையை வாழவைக்க எத்தனையோ நுண்ணுயிரிகள் போராடுகையில் தன்னையறியாமலும்/அறிந்தும் அதை அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன். நிச்சயம் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு மிகமிகத் தேவை. அருமையான பகிர்வு காயூ. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா...

      Delete
  2. நாட்டுக்கு ரொம்ப தேவையான இயற்கை விவசாயத்தை பத்தி சொல்லி தனக்கும் சமூக அக்கறை இருக்குன்னு உரைத்த தங்கைக்கு ஒரு சல்யுட்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா... தேங்க்ஸ் அண்ணா... அப்பா ஒரு இயற்கை விவசாயி...

      Delete
  3. வணக்கம்

    நல்ல விழிப்புணர்வு... தொடருங்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்... உங்கள் பாராட்டுக்கு

      Delete
  4. எப்போதோ முழித்துக் கொண்டிருக்க வேண்டும்... ம்...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது அண்ணா. இப்பவாவது கொஞ்சம் விழிப்புணர்வு வருதே... உங்களை எங்க அண்ணா, காணோம், ஒரு ஹெல்ப் கேக்கனும்னு நினச்சேன்

      Delete