Friday 6 June 2014

நிலவறை



ஷ்ஷ்ஷ்..... சத்தமே போடாம வாங்க....

நாம இப்போ இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்கு போகப்போறோம்...

வாங்க வாங்க, வீட்டோட பின்வாசலுக்கு வாங்க. ஏங்க, கிணத்தடி பக்கமா இப்போ போக வேணாம், நாம போக வேண்டிய இடம் பின்வாசல் ஒட்டிய நிலவறை தான்.

பாத்து, பாத்து, இருட்டா தான் இருக்கும். ஆனாலும் சூரிய வெளிச்சம் மெல்லிசா உள்ள வந்துட்டு தான் இருக்கு பாத்தீங்களா? எதுக்கும் ஒரு மண்ணெண்ணெய் லாந்தர் கைல எடுத்துப்போம். மெதுவா கால்கள எடுத்து வச்சு படி இறங்குங்க.. பத்தே படிதான். தரை வந்துடுச்சு பாத்தீங்களா?

ஹோய், யாரது, நிலவறை கதவ மூடினது, வெளிச்சம் வர வேணாமா? அப்புறம் பின்னால வர்றவங்க கண்ணு தெரியாம குவிச்சி வச்சிருக்குற தேங்கா மேல இடறி விழுந்துட போறீங்க... ஜாக்கிரதையா வாங்க..

இங்க தேங்காய் கொட்டி கிடக்கு பாத்தீங்களா, கிட்டத்தட்ட நூறு தேங்கா, ரெண்டு மாசத்துக்கு தேவையானத சேமிச்சு வச்சிருக்கு. தேவைப்படுறப்போ அஞ்சாறு நாளைக்கு ஒருதடவ பத்து, பதினஞ்சு தேங்காய வெளில எடுத்துட்டு போய் உரிச்சி வச்சிக்கலாம்.

இந்தா அந்த பக்கம் விறகு அடுக்கி வச்சிருக்காங்க. மழை நேரத்துல விறகு எல்லாம் நனஞ்சுடக்கூடாதுல, அதே போல வெயில் நேரத்துல கரையான் அரிச்சுடும். அதான் பாதுகாப்பா இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க.

செமையா மாம்பழ மணம் வருதே, மாம்பழத்த காணோம்ன்னு தேடுறீங்களா? ஹஹா, அதோ அந்த ஈக்காம்பெட்டி இருக்கு பாத்தீங்களா, அது நிறைய வைக்கோல் தெரியுதா? அதுக்குள்ள தான் மாம்பழம் இருக்கு. வைக்கோலுக்குள்ள வச்சி மாம்பழம் பழுக்க வச்சா மணமும் ருசியும் தனி தான், தெரியும்ல...

ஆத்தீ.... பாத்து வாங்க, மம்பட்டி, கொறடு, சாந்து சட்டி, அருவா, கடப்பாரை எல்லாம் இங்க தான் இருக்கு. வயல் வேலை நடக்கும் போது எடுத்துட்டு போய்டுவாங்க, இதெல்லாம் விவசாயத்துக்கு தான் பயன்படுத்துவாங்க. நீங்க பயப்படாதீங்க.

அடடே, நாம இப்போ கொஞ்ச நேரம் அந்த வைக்கல்கட்டு மேல உக்காந்து ரெஸ்ட் எடுத்துக்கலாம். அந்தா, அந்த வலது மூலைல செந்துளுவன் பழம் இருக்கு பாருங்க, அப்படியே அந்த குலையை தூக்கிட்டு வாங்க, ஆளுக்கொரு பழம் எடுத்து சாப்பிடலாம்.

என்னது, மாம்பழமா? அந்த ஈக்காம்பெட்டிய அப்படியே தூக்குங்க, புட்டு சாப்பிடும் போது, அது கூட சைட் டிஷ்ஷா வெட்டி வச்சி சாப்பிடலாம்.

பாத்தீங்களா, உங்கள சுத்திக் காட்டுற உற்சாகத்துல வந்த வேலையை மறந்துட்டேன்....

குட் மார்னிங்...

6 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    கதையோட்டம் அமிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. குட் மார்னிங் கதைகள் ன்னு ஒரு லேபில் போட்டுடலாமே!!

    ReplyDelete
    Replies
    1. குட் மார்னிங்ன்னு தனியா ஒரு லேபல் போட்டுருக்கேன் அண்ணா

      Delete
  3. ஆஹா.... நிலவறையில் வைத்திருக்கும் பொருட்கள் நிறையவே ரசிக்க வைத்தன! மாம்பழம் இங்கேயும் கொஞ்சம் பார்சல்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா.... பச்சை மாங்காவ இப்படி பழுக்க வச்சா, எல்லாம் ஒரே நேரத்துல பழுத்துடும். அப்புறம் என்ன ரெண்டுமூணு நாளுக்கு மாம்பழம் மட்டும் தான் சாப்பாடே

      Delete
  4. தேங்க்ஸ் அண்ணா

    ReplyDelete