ப்ரீயா தானே இருக்கோம்.... வாங்களேன், கிச்சனுகுள்ள புகுந்துடுவோம்...
மேல அந்த ஸ்லாப்ல ஒரு எவர்சில்வர் தூக்குவாளி இருக்கு பாருங்க, அத எடுங்க...
இதுக்குள்ள இருக்குறது தான் அரிசி மாவு. இது எப்படி ரெடி பண்ணனும்ன்னு இப்ப நான் சொல்லித் தரேன், சரியா...
பச்சரிசிய நல்லா தண்ணியில ஊறப் போட்டு, அப்புறம் தண்ணிய நல்லா வடிச்சி எடுத்துக்கங்க. அப்புறம் சுளவுல கொட்டி அப்படியே பரவலா விரிச்சி வச்சுட்டா தண்ணி எல்லாம் நல்லா வடிஞ்சுடும். அப்புறமா அத எடுத்து உரலுல போட்டு, உலக்கை எடுத்து இடிச்சிக்கங்க.
இப்போ இடிச்சி எடுத்த அரிசி மாவுல குருணை கிடக்கும். அதனால நல்லா பரும்கண்ணி வச்ச அரிப்புல வச்சு அரிச்சி மாவு தனியா, குருணை தனியா பிரிச்சி எடுத்துக்கணும் சரியா. குருணைய மறுபடியும் உரல்ல போட்டு இடிங்க... மாவு கிடைச்சிடும்.
இந்த மாவை அப்படியே சேர்த்து வைக்க முடியாது. ஈரப்பதம் அதிகமா இருக்குறதால ஈசியா பூஞ்சை புடிச்சுடும். அதனால இப்போ மாவு வறுப்போம் வாங்க...
அந்த வெங்கல உருளிய எடுத்துக்கோங்க. இப்போ மாவை அதுல கொட்டுவோம். அடுப்பை பத்த வச்சுப்போம். அய்யய்யோ கிண்டி குடுக்கணுமே, அந்த கண்ணாப்பைய எடுங்க. கை விடாம கிண்டி குடுத்துட்டே இருக்கணும் சரியா, இல்லனா அடி பிடிச்சுக்கும்.
இப்போ மாவு பொன்னிறமா வந்துடுச்சா, அவ்வளவு தான், வேலை முடிஞ்சுது. கொஞ்சம் ஆற வச்சுட்டு, தூக்கு வாளில போட்டு வச்சுடலாம்...
ஹலோ, ஹலோ, ஹலோ.... எங்க போறீங்க, இதல்லாம் ப்ளாஷ் பேக் தான். இனி மேல தான் வேலையே இருக்கு.
வாங்க, ஒரு கப் மாவு எடுத்து அந்த சருவத்துல எடுத்துக்கோங்க. அப்படியே ஒரு கப்புல உப்பு தண்ணி எடுத்து வச்சுக்கோங்க. முக்கியமா தேங்காய் துருவ மறந்துடாதீங்க. அத தனியா ஒரு தட்டுல துருவி வச்சுக்கோங்க...
சரி இப்போ, உப்பு தண்ணிய கொஞ்சம் கொஞ்சமா மாவுல விட்டு பிசைய ஆரம்பிங்க. கொஞ்சம் கூட தண்ணி விட்ட மாதிரி தெரிய கூடாது. மாவு கொஞ்சம் ஈரப்பதமா ஆகணும். அவ்வளவு தான். உப்பு டேஸ்ட் எப்படின்னு பாத்துக்கோங்க... ஓகே, இப்போ மாவு ரெடி...
இன்னிக்கி சிரட்டை புட்டு செய்வோமா? அந்த தேங்காய் துருவின சிரட்டை இருக்குல, அதுல ஒரு கண்ணை கத்தி வச்சி கொஞ்சம் பெருசாக்கிகோங்க... உள்ள இருக்குற கசட எல்லாம் நல்லா கத்தி வச்சி இளைச்சி எடுத்துடுங்க. வீட்ல சின்னதா இருக்குற குக்கர்ல தண்ணி மட்டும் விட்டு அடுப்புல வச்சிடுங்க. குக்கர் வெயிட்டர் மட்டும் போட வேண்டாம்.
இப்போ தண்ணி சூடாகி, ஆவி வரப்ப, சிரட்டையோட கண்ண அதுல சொறுகிடுங்க... ஒரு கை மாவு அள்ளி போட்டு, அது மேல தேங்காப்பூவ தூவி விட்டுருங்க...
என்ன, ஆவி இப்போ தேங்கா துருவல் மேல படர்ந்து வெளில வருதா, அப்போ புட்டு ரெடி. சுடாம இருக்க ஒரு துணி சுத்தி, சிரட்டைய எடுத்து, பாத்துரத்துல கவுத்துருங்க... அவ்வளவு தான், இனி அடுத்த புட்டு செய்ங்க...
சரி, சரி, நேரம் ஆகிட்டதால கொல்லாங்கொட்டைய நானே வறுத்து உடைச்சும் வச்சுட்டேன். பப்படமும் பொரிச்சி வச்சுட்டேன். மணக்க மணக்க கருப்பட்டி காப்பியோட இன்னொரு நாள் இந்த வேலைய நீங்க தான் செய்யணும் சரியா....
இப்போ வாங்க சாப்பிடலாம்...
புட்டு சாப்ட்டுட்டே ஒரு குட் மார்னிங்....
akkaaa. ennathu puttaaa me escape....
ReplyDeleteஹஹா மகேஷ், ஏன், உனக்கு புட்டு பிடிக்காதா?
Deleteஅருமை!தேங்கா சிரட்டையில புட்டு!தமிழ் நாட்டுல இப்புடியா புட்டு செய்வாங்க?இன்ட்ரஸ்டிங்!
ReplyDeleteஇப்படி மட்டுமில்ல, கோதுமை புட்டு, பனங்கிழங்கு புட்டு, கப்பக்கிழங்கு புட்டு... இப்படி நிறைய வகை உண்டு. கோதுமை புட்டுலயே சர்க்கரை சேர்த்து, கருப்பட்டி சேர்த்துன்னு பல வகை உண்டு
Deleteரொம்ப நாளா ஆளைக் காணாம்...?
ReplyDeleteவேலை அண்ணா... பேஸ்புக்ல இருக்கத்தான் செய்றேன், ஆனாலும் ப்ளாக் எழுத ஏனோ சோம்பேறித்தனம் வந்துடுச்சு...
Deleteஅதானே... இது தனபாலன் சார் கேள்வியோட கன்டினியேஷன்... நெஜம்மா உலக்கையாலயாப்பா மாவு இடிச்சீங்க...
ReplyDeleteஹஹா அதான் வந்துட்டேன்லமா.... எங்க ஊர்ல இன்னமும் புட்டுக்கு உலக்கைல தான் இடிச்சுட்டு இருக்காங்க
Deleteஆஹா புட்டு.....
ReplyDeleteசாப்பிட வந்தாச்சு!
வாங்க வாங்க அண்ணா, வந்து உங்க காம்பினேசன் என்னன்னு சொல்லுங்க... அப்படி புட்டு செய்துடலாம்
Deleteபுட்டு...ஸ்ஸ்பாஅ...கேரளாவில், பழமும் கூட தொட்டுக்குவாங்க/வோம்....கடலை கறி....இப்படி பல காம்பினேஷன்ஸ். விவரித்த விதம் அருமை!
ReplyDeleteஎனக்கு கடலை கறி சாப்பிட்டு பழக்கம் இல்ல. இனி சாப்பிட்டு பாக்கணும்ன்னு ஆசை வந்தாச்சு
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு
ReplyDeleteபுட்டு
அருமை
நஙனற சகோதரியாரே
தேங்க்ஸ் அண்ணா... உங்க ரசிப்புக்கு
Deleteதம 2
ReplyDeleteஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா
Deleteபுட்டுக்கான செய்முறை ஜோர்தான் காயூ. புட்டுகூட வாழைப்பழம் சேர்த்து சாப்பிடறதுன்னா எனக்கு கொள்ளை இஷ்டம்.
ReplyDeleteஎனக்கும் புட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அண்ணா... புட்டு கூட மட்டிப் பழம் டேஸ்ட். ஆனா அத விட சென்தொளுவன் செம டேஸ்ட்
Delete