Saturday 12 September 2015

யாதுமாகியவன்


அந்தப் பாடல்
என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...
பகலில் கூட வானத்தை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

விம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை
அணையுடைத்து வெளிக்கொண்டு வந்தவன்
ஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்
என் கைப்பற்றிக் கிடந்தான்...

அது ஒரு மொட்டை மாடியென்று
உங்களுக்கு சொல்லத் தேவையில்லை...
நிலாவெளிச்சத்தில் எங்களை
ரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்
ஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...

யாரவன் உனக்கு?
இப்படி திடீரென ஒரு கேள்வியை
உங்களிடமிருந்து எதிர்க்கொண்டால்
நிச்சயம் திணறித் தான் போவேன் நான்...

யாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்
முடித்துக் கொண்டால்
புரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...

ஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்
உங்கள் கற்பனையில்
உருவகித்துவிடக் கூடாது பாருங்கள்...

இவன் என் சண்டைக்காரன்.
முணுக்கென்று கோபம் கொண்டு
நான் விட்டெரியும் தலையணைகளை
அலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...

எதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,
என்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.
காது பிடித்து திருகினாலோ
பவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.

காட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது
படக்கென்று ஒற்றை முத்தத்தால்
என்னை ஊமையாக்கிவிடும் பாதகன்...

என் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...
இன்னும் இன்னும் நிறைய...

மற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்
என் பிள்ளை என்பேன்.
அவனோ என்னை குழந்தையாக்கி
தாலாட்டு பாடிக் கொண்டிருப்பான்...

இதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...
"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...



.

8 comments:

  1. Replies
    1. ஹஹா மகேஷ்... உண்மை கவிதைல, அதான் சூப்பரா இருக்கு

      Delete
  2. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆஹா! அந்த யாதுமாகியவன் யாரென்று தெரியுமே! அருமையான வரிகள்...உணர்ந்து எழுதப்பட்டவை...மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா... அதான் போட்டோ போட்ருக்கேன்ல... உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  4. ஆஹா அருமைடா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அண்ணா

      Delete