Saturday 10 October 2015

இது ஒரு நன்றி கூறல்





படம்: வெற்றிக்கோப்பையோட இருக்குறது பூங்கோதை அம்மா.

காலைல ஆறரை மணி. திடீர்ன்னு மகேஷ்கிட்ட இருந்து போன். தூக்கக் கலக்கத்தில் எடுத்து ஹலோ சொன்னேன். “அக்கா வாழ்த்துகள் அக்கா போட்டி முடிவுகள் அறிவிச்சுட்டாங்கன்னு” சந்தோசமா சொன்னான்.

அவன் வாழ்த்து சொன்னதவச்சு, அப்போ நமக்கு ரெண்டாவது இல்ல மூணாவது பரிசு கன்பார்ம்ன்னு முடிவெடுத்துக்கிட்டேன். ரிசல்ட் வந்த உடனே உங்க தலைப்பைத் தான் தேடுனேன் அக்கா. உங்களுக்குத்தான் முதல் பரிசுன்னு அவன் சொன்னதும் டக்குன்னு கொஞ்சம் ஃப்ரீஸ் ஆகிட்டேன். மனசுக்குள்ள ஒரு சந்தோசம்.

என்னோட துறை சம்பந்தமா நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனா, என்னோட கவிதைக்கு முதல்முதலா பரிசுகொடுத்து அங்கீகரிச்சது எழுத்து டாட்.காம் தான். அதன்மூலமாதான் என்னோட கவிதைகள தானே பதிப்பிச்சு புக்போட முன்வந்தார் மங்காத்தா. அந்த புக் “தென்னங்கீற்றுகளின் சாட்சியாக”ன்ற பெயர்ல வெளியாகப்போகுது சீக்கிரமே.

என்னோட எழுத்துகளுக்கு ரெண்டாவதாகவும், பெரிய அங்கீகாரமாகவும் இந்த  கட்டுரைக்கு முதல்  பரிசு கிடைச்சிருக்கு. உலக அளவில் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லாருமா சேர்ந்து கலந்துகிட்ட/ நடத்தின கட்டுரை போட்டியில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தலைப்பில் இந்த பரிசு கிடைச்சது சந்தோசத்தோட இன்னொரு காரணம்.

இந்த பரிசு கிடைச்சதும் ஏழு மணிக்கு போன்ல கூப்ட்டு வாழ்த்து சொன்ன தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, விஷயம் கேள்விப்பட்டு சந்தோசப்பட்ட பூங்கோதை அம்மா, திரு அண்ணா, ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்ட கார்த்திக், ஸ்டேடஸ் போட்டு ட்ரீட் கேட்ட யது நந்தன், உடனே வாழ்த்து சொல்லி இன்னும் நிறைய எழுதணும்னு ஊக்குவிச்ச நல்லினி அருள் எல்லாருக்கும் என்னோட நன்றி.

ஆங், அப்புறமா, அவங்க பிறந்தநாள் அதுவுமா எனக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்ன பாலா அம்மா, கட்டுரை பாத்து பாஸிட்டிவ் கம்மெண்ட் கொடுத்தவங்க, இன்னும் நல்ல தமிழ்ல எழுதனும்ன்னு என்னை ஊக்குவிச்சவங்க, நான் ஜெயிச்சதுக்கு தானே ஜெயிச்சதா நினைச்சு சந்தோஷப்படும் மகேஷ், இன்பாக்ஸ்க்குள்ள ஓடி வந்து, எனக்கு உன் மேல லவ் லவ்வா வருதே, யார்கிட்ட போய் சொல்லுவேன்னு துள்ளி குதிச்ச அருட்செல்வி குமரேசன், ட்ரீட் கேட்ட ப்ருந்தா ஆறுசாமி, விஷயம் கேள்விப் பட்டதும் வாழ்த்துகளா குவிச்சவங்க, இன்னும் நிறைய நிறைய சப்போர்ட் பண்ணும் எல்லாருக்கும் என்னோட பெரிய தேங்க்ஸ். என்னை கொஞ்சம் மெருகேற்ற உதவிய அந்த பெயர் தெரியாத ஆன்மாவுக்கு தனிப்பட்ட நன்றி.

அச்சச்சோ பாத்தீங்களா, நம்ம புதுகோட்டை வலைப்பதிவர் விழா குழுவினருக்கு தேங்க்ஸ் சொல்லல. அவங்களுக்கு  என்னோட ஸ்பெசலோ ஸ்பெசல் தேங்க்ஸ். பின்ன, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க காரணமா இருந்துருக்காங்களே....

நாளைக்கு புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்கள் திருவிழாவில் ஐயாயிரம் ரூபாய் பரிசும், வெற்றிக்கேடயமும் குடுக்குறாங்க. என்சார்பா பூங்கோதை அம்மா கலந்துக்கப் போறாங்க. மானே தேனே மாதிரி இடையில கார்த்திக் தன் பேரை போடலையே ஏன்னு கேட்டிருக்கார். பரிசுத் தொகையை அப்படியே உங்க அக்கவுண்ட்ல போட்டுட்றேன் கார்த்திக். ஒழுங்கு மரியாதையா எனக்கு வெப்சைட் ஆரம்பிச்சுக் கொடுத்துடுங்க.

ம்ம்ம் வேறென்ன சொல்ல.. ஏதாச்சும் மிஸ் ஆகி இருந்தா நாளைக்கு வந்து சொல்றேன். இப்போ குட்டித் தூக்கம் போடனும் கொர்ர்ர்ர்ர்ர்



.




20 comments:

  1. எமது வாழ்த்துகளும் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அண்ணா :)

      Delete
  2. Mudal padi vetripadi aaikiyathu pool, mudal adi mudal paricuku vaalthukal.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் பாராட்டுக்கு

      Delete
  3. வாழ்த்துக்கள் காயத்ரி..தங்களுடைய கட்டுரையை படித்ததுமே முதல் பரிசு உங்களுக்கு தான் என்று கணித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி. இன்னும் நிறைய எழுதனும்னு ஒரு பயத்த குடுக்குது இந்த பரிசு

      Delete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் காயத்ரி. இக்கட்டுரைக்கு பரிசு கிடைக்கும் என எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. என்னோட மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.

      Delete
  5. வாழ்த்துக்கள் காயத்ரி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி

      Delete
  6. வாழ்த்துக்கள் காயத்ரி......

    ReplyDelete
  7. பரிசைப் பெற்றுக் கொண்ட அம்மாவிடம் வாழ்த்தைத் தெரிவித்தேன் ,வந்து சொன்னார்களா :)

    ReplyDelete
    Replies
    1. ஆமா சொன்னாங்க. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். ரொம்ப ரொம்ப நன்றி

      Delete
  8. அன்பு சகோ ஆக்க பொறுத்தாச்சு கொஞ்சம்
    ஆறப்பொறுப்போம்.

    நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.
    பரிசு பெற்றதும் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சொல்றேன். நிகழ்ச்சி நல்லா வரணும்னு பண்றதுல பதற்றத்துல இப்படி ஆகுறது தான். எங்க காலேஜ்ல நிகழ்ச்சி ஆர்கனைசர்ங்குற முறைல இந்த அனுபவம் எனக்கும் உண்டு. கண்டிப்பா பரிசு கோப்பை கைல வந்ததும் தெரிவிக்கிறேன்

      Delete
  9. அந்தப் பதிவுல வாழ்த்தினோமானு தெரில....எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ!!! (இப்படி கமென்ட் வந்தா எங்கள் இருவரது கருத்தும் ...கீதானு வந்தா அது கீதாவின் கருத்து ஓகேயா? குழப்பம் வேண்டாம்...முக்கியாவாறும் ஒருமித்த கருத்தாகத்தான் இருக்கும். தனிக் கருத்துகள் இருந்தால் மட்டுமே கீதா....என்று வரும்....ஓகே?)

    /என்னை கொஞ்சம் மெருகேற்ற உதவிய அந்த பெயர் தெரியாத ஆன்மாவுக்கு தனிப்பட்ட நன்றி. //

    இந்த ஆன்மா யாரென்று எங்களுக்குத் தெரியும்...அவர் ஒரு டாக்டர். டாக்டர் நம்பள்கி! நல்ல விமர்சகர். நல்ல கருத்துகளைச் சொல்லுவார். எங்களுக்கு மிகவும் பயனுள்ள கருத்துகளைச் சொல்லி இருக்கிறார். ப்ளாக் ஆரம்பித்த புதிதில் அவர் எங்கள் பதிவுகளை வாசித்த போது...

    ReplyDelete
  10. அவரது எழுத்து ந்டை வைத்துத்தான் சொன்னோம். மட்டுமல்ல...னாங்கள் அவரை அழைப்பது "நக்கீரன்" என்றும் ந ந என்றும் அதாவது நம்பள்கி நக்கீரன்...நக்கீரன் என்று அவர் ஒரு பின்னூட்டத்தில் சொன்னதும் உறுதியாயிற்று...சகோ..

    ReplyDelete