Saturday 13 August 2016

அந்திம ஆசைகள்



அந்திம காலம்
நெருங்கி விட்டதை
புத்தி உணர்த்திக் கொண்டே இருக்கிறது...

உன்னைப் பார்க்காமலே என்
இறுதி யாத்திரை துவங்கி விடுமென
எச்சரிக்கை மணி
ஒலிக்கத்துவங்கி விட்டது...

அன்றொரு நாள்
நான் கண்ட கனவொன்றை உனக்கு
நினைவுறுத்த விரும்புகிறேன்...

என்னை காண வந்து என்
கல்லறையை நீ வருடி விட்டது
போலமைந்த கனவு அது...

உன் கண்களில் ஈரம் துளிர்த்ததாவென்ற
தெளிந்த சித்திரம்
என்நினைவிலில்லை...

ஆயினும் நீ
அழுதிருக்க கூடும்...

நீர்கோர்த்து வீங்கிருக்கும்
என் விரல்களை சற்று
எட்டிப்பாரேன்...

நீ வருடிய விரல்களே தான்.
ஏனோ திறன்களற்று ஏக்கத்தோடு
மீண்டும் உன் கை வருட
காத்துக் கிடக்கின்றன...

ஒரு வேளை நீயென்னை
மீண்டுமொருமுறை சந்திக்க
நேராமலே கூட போகலாம்.

அன்றென் கடைசி ஏக்கம்
எதுவென அறிந்து கொள்ள நீ
தவிப்பாயென தெரியுமெனக்கு...

இதோ உயிலினை போல்
உனக்காக இங்கென் ஆசைகளை
செதுக்கி வைக்கிறேன்.

உன்னை மீண்டும் மீண்டும்
கண்டுவிட வேண்டுமென்ற
பேராவல் எனக்கு...

ஆவி கலங்க சேர்த்தணைக்க வேண்டுமுன்னை...

பின்பு பெருங்குரலெடுத்து ஒரு அழுகை...

என் மொத்தமும் நீ தானென
உன்னோடு ஒரு வாழ்க்கை...

உன் கண்கள்....
உன் உதடுகள்...
உன் விரல்கள்...
உன் மார்பு...
உன் இதழ் முத்தம்...
மொத்தமாய்...

11 comments:

  1. அருமை
    உணர்ந்துப் படிக்க அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  2. ரொம்ப நல்லாயிருக்கு...

    ReplyDelete
  3. பொங்கியெழும் உணர்வைக் கொட்டி
    ஓங்கியடித்த வரிகளாச்சே!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அப்படீங்குறீங்க, ரைட்டு

      Delete
  4. பிந்நிட்டிங்க.
    just கவிதை மட்டும்தானா அல்லது உன்மையிலேயே லவ் failure ஆயிட்டிங்களா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா பாருங்க, இது லவ் பெயிலியர் ஆன கவிதை மாதிரியா இருக்கு? ஆனா ஒண்ணு, உண்மைலயே நடந்தத மட்டும் தான் எழுதணும்னா நாலு நாளைக்கு மேல கவிதை எல்லாம் எழுத முடியாது

      Delete
  5. அன்றொரு நாள்
    நான் கண்ட கனவொன்றை உனக்கு
    நினைவுறுத்த விரும்புகிறேன்...

    என்னை காண வந்து என்
    கல்லறையை நீ வருடி விட்டது
    போலமைந்த கனவு அது...

    உன் கண்களில் ஈரம் துளிர்த்ததாவென்ற
    தெளிந்த சித்திரம்
    என்நினைவிலில்லை...

    ஆயினும் நீ
    அழுதிருக்க கூடும்... ////

    இதைவிட அற்புதமாய் இங்கு வேறு வார்த்தைகளை பிரயோகித்திருக்க யாருமில்லை... சூப்பர்... வாசிக்கும் பொழுதே சில கவிதைகள் நெஞ்சைப்பிசையும்... இதுவும் அதில் ஒன்று...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி. இப்படி எல்லாம் கமன்ட் பாக்குறப்ப தான் நானே இன்னொரு தடவ வாசிச்சு பாக்குறேன். எனக்குமே ரொம்ப பிடிச்சு போச்சு. தேங்க்ஸ்

      Delete