Wednesday 2 April 2014

கரைந்து சென்றவனுக்காய்...


என்றோ ஓர்நாள்
ஓர் ரம்மிய வேளையில்
சுழன்றடித்து பின் காணாமல் போன
உன் நினைவுகள் இன்று அகழ்ந்தெழுகிறது...

ஆற்றுப்படுகையின் ஓரமாய்
படிந்திருக்கும் சுவடுகளாய்
உச்சி வெயில் நேரத்தில்
பளிச்சென வெட்டிச் செல்லும்
மின்னலைப் போலத்தான் நீ...

பார்த்த உடன்
கலைத்து விடச்சொல்லும் உன் கேசம்...
பரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...
உறைந்து விட்ட புன்னகை...
நீ விரிக்கும் கைகளில்
அடைக்கலமாகத் துடிக்கும் நான்...

உன் ஸ்பரிசங்களின் உஸ்ணங்கள்
எப்பொழுதும் என்னை
கிளர்ந்தெழ செய்ததில்லை...
மாறாய்... மடியிலிட்டு தாலாட்டும்...

நம் காதல் எழுதிவைக்க
இந்த பிரபஞ்சம் போதாதென்று
உன் தோள் கட்டிக் கிடந்தேன்...
உன் முதுகு எப்பொழுதும்
என்னை ஏகாந்தமாய் சுமந்துக் கிடந்தது...

ஏனோ ஓர்நாள் விரல் நுனி பிடித்து...
உச்சிமோர்ந்து... காதோரமாய்
கிசுகிசுத்து... என் நலமென சொல்லி
நீயாய் முடிவெடுத்தாய்...
பொருள் தேடி வருகிறேனென்று
பின் காற்றிலசைத்து சென்றாய்...

நாட்கள் காத்திருப்பதில்லை...
நீ விதைத்தது துளிர்த்து விட்டிருக்கிறது...
நீ மட்டும் ஏனோ காணாமலே போனாய்...

ஹ்ம்ம்... சிரித்துக் கொள்கிறேன்...
அதில் உயிர்சுரத்து இருக்கிறதாவென
நீயே கணித்துக் கொள்...
நான்... இந்த உலகத்தின்
பரபரப்பில்... என்னை
கரைத்துக் கொள்ளப் போகிறேன்..

10 comments:

  1. // நம் காதல் எழுதிவைக்க
    இந்த பிரபஞ்சம் போதாதென்று //

    வாழ்க...

    தமிழ்மணம் இணைத்து விட்டேன் சகோ... +1

    ReplyDelete
    Replies
    1. நேரம் இல்லாம அவசர அவசரமா போஸ்ட் போட்டுட்டு வந்துட்டேன்... தமிழ்மணத்துல இணைத்ததுக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
  2. அழகிய வரிகள்...
    ஏக்கம் சுமந்த கவிதை...!

    ReplyDelete
  3. ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா கவிதை முழுக்க ஏக்கம். தாங்குமா இதயம்!?

    ReplyDelete
    Replies
    1. இப்படி தான நிறைய பேரு தாங்க முடியாம தாங்கிட்டு இருக்காங்க அக்கா

      Delete
  4. அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மனம் கரைந்து போனது காயத்ரி.

    ReplyDelete