Friday 4 April 2014

லவ் யூ அப்பா...


புதுசா ஒரு அறிமுகம் கிடச்சா ரொம்ப நாளா நம்ம கூடவே இருக்குறவங்கள கொஞ்சம் தள்ளி வச்சி வேடிக்கை பாக்குறது மனுஷ குணம்... ஆனா அது ரொம்ப நாள் நீடிக்க போறதில்லன்னு தெரிஞ்சும் அந்த புது அறிமுகத்து மேலயே அத்தனை ஆர்வமும் போயிடுது...

அட, பிரெண்ட்ஷிப் தான் இப்படின்னா, கல்யாணம் பண்ணிட்டு வாழுறவங்க நிலைமை அவ்வளவு தான்... புரிதலே இல்லாம எத்தனையோ பேர் வாழ்க்கைய வாழத்தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க...

வீட்டுக்கு வர்றவங்க, நாம ரோட்ல நடந்து போறப்ப எதிர்ல வர்றவங்க, பிரெண்ட்ஸ் இப்படி எல்லாருமே நம்மால கொஞ்சம் கூட முகம் சுளிச்சுட கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டு அவங்கள தூக்கி கொண்டாடுற ஆண்கள், இவ நம்ம பொண்டாட்டி தானேங்குற நினைப்புல தன் கூடவே இருக்குற, தனக்காகவே வாழுற ஜீவன கொஞ்சமும் சட்டை செய்றதேயில்ல....

எப்போ வருவீங்கன்னு கேட்டா, இந்தா வந்துட்டே இருக்கேன்னு நாலு மணி நேரமா ஒரே டயலாக் பேசுறது, எங்கயாவது கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு பிரெண்ட் இல்ல வேற யாரோ கூப்டதும் அவங்க கூட போறது, மனைவிய கிண்டல் பண்ற சொந்தக்காரங்களோ இல்ல பிரெண்ட்ஸ் கிட்டயோ இவ எப்பவுமே இப்படி தான்னு விட்டு குடுத்துடுறது....

தனக்கோ, தன்னை சார்ந்தவங்களுக்கோ சின்ன சின்னதா உடம்பு சரியில்லாம போறப்போ, மனைவி தன்னை நல்லா கவனிச்சுக்கணும்ன்னு நினைக்குற அவங்க, மனைவிக்கு அந்த நிலைமை வர்றபோ நாம கவனிச்சுக்கணும்ங்குறத ஏனோ மறந்துடுறாங்க...  (பெரிய வியாதிகள காசு பணம்ன்னு செலவழிச்சு கவனிக்குறாங்க... இல்லனா வீட்ட கவனிக்க ஆள் இருக்காதே).

ஒரு சின்ன பாராட்டு, அன்போட ஒரு அணைப்பு, இதுக்கு தானே பொண்ணுங்க மனசு ஏங்கி கிடக்கும்... அதை சரியா குடுக்காதப்போ தான் ஏங்குற மனச நிலைபடுத்த, அடுத்த பொருட்கள் மேல ஆசைப்பட ஆரம்பிக்குது மனசு... அது இன்னொரு ஆண் மேல வந்தா தப்பா போயிடும்ங்குற உள்ளுணர்வு, நகை, புடவை மேல ஆசைப்பட்டு, அதனால தன்னோட அழகையாவது அடுத்தவங்க ஆராதிக்கணும்ன்னு எதிர்ப்பார்க்க ஆரம்பிக்குது... எங்கயோ எதையோ எதிர்பார்த்து கிடைக்காத ஏக்கத்தோட வாழுற பொண்ணுங்க இங்க கோடி கோடி பேர்....

இப்போ இதுல நான் சொன்னதுல முதல் பாரா மட்டும் என்னோடது.... அடுத்தடுத்து வந்த டயலாக்ஸ் என் அப்பா வீட்டுக்கு வந்த ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ எதேச்சையா கேட்டது...

இத்தன அறிவுரை சொல்ற என் அப்பா எப்படி இருந்தார்?

ஆரம்பத்துல பாட்டி பேச்சை கேட்டுட்டு அவரும் சராசரியா தான் இருந்தார்.... கோபத்துல சாப்பாடு தட்ட கூட விசிறியடிச்சிருக்கார். ஆனா எல்லாமே எங்களுக்கு விவரம் தெரியுற வரை தான்... எப்போ நானும் தம்பியும் அப்பாவ பாத்து சாப்பாடு தட்ட அம்மா மூஞ்சியிலயே விசிறியடிக்க ஆரம்பிச்சோமோ அப்போயிருந்து அம்மாவோட காதல் வாழ்க்கை ஆரம்பிச்சுது...  அப்படி தான் சொல்லணும்னு நான் நினைக்குறேன். காரணம், அப்பாவும் அம்மாவும் விரும்பி கல்யாணம் பண்ணியிருந்தாலும் அப்பா மேலே சொன்ன அலட்சியங்கள் அத்தனையும் செய்துட்டு தான் இருந்தார்...

அப்புறம் ஒரு தலைகீழ் மாற்றம். அப்பா அம்மாவ குறை சொல்லி பாத்த நாங்களும் அம்மாவ எதுக்கெடுத்தாலும் குறை சொல்ல ஆரம்பிக்க, அம்மாவுக்கு ஆதரவா அம்மாவ அணைச்சுப்பார் அப்பா.... இவ என் பொண்டாட்டி... அப்புறம் தான் உங்க அம்மா... என் பொண்டாட்டி பத்தி யார் குறை சொன்னாலும் எனக்கு பிடிக்காதுன்னு இறுக்க முகம் காட்டுவார்...

அம்மா பக்கத்துல வந்து நின்னாலே பாட்டிக்கு பயந்து ஒதுங்கி போற அப்பா, அம்மா தோள் மேல கை போட்டு சரிக்கு சமமா சோபால உக்காந்து டீ.வி பாக்க ஆரம்பிச்சார். ரெண்டு பேர் மடியிலயும் ஆளுக்கொரு பிள்ளை.... நான் எப்பவுமே அப்பா மடியில தான்... அப்பா நான் பிறந்ததுல இருந்தே எனக்கான ஹீரோ....

அப்பா தோளை கட்டி கொஞ்சி அம்மாவ வெறுப்பெத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும்.... என் புருசண்டி அவர், கீழ இறங்கி ஓடுன்னு பக்கத்துல கிடக்குற ஏதாவது துணி எடுத்து அடிச்சி விரட்டுவா அம்மா...

அப்பாவ பாத்தே அம்மாவ வா போன்னு சொல்லி பழகியிருந்தோம்... காலப்போக்குல தம்பி வாங்க போங்கன்னு பேசி பழகிட்டான்... எனக்கு தான் அவ எப்பவுமே அம்மாவா இல்லாம ஒரு டாம் அண்ட் ஜெர்ரி பிரெண்டா மாறிப் போயிட்டா...

அதெல்லாம் தனிக்கதை... இப்போ விசயத்துக்கு வருவோம்...

கூட்டமா நாங்க சேர்ந்து விளையாடிட்டு இருப்போம். பாய்ஸ் கேர்ள்ஸ்ன்னு டீம் பிரிப்போம். அப்பா பாய்ஸ் டீம், அம்மா கேர்ள்ஸ் டீம்னு பிரிச்சா அப்பா ஒத்துக்கவே மாட்டார். நான் அவளுக்கானவன். அவ எனக்கானவ. எங்கள பிரிக்க நினைக்குறது தப்புன்னு எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்... அட போங்கப்பான்னு தலைல அடிச்சுட்டே விளையாட ஓடிடுவோம்...

பல நாட்களும் பாத்து பாத்து மனசுல ஊறிப் போன இன்னொரு விஷயம் உண்டு. ஆமா, அம்மா அழுது துடிச்சுட்டு இருப்பாங்க... இல்லல, கதறிட்டு இருப்பாங்க. அப்பா அம்மாவ அணைச்சுட்டு இருப்பார். அம்மாவ விட்டு எங்கயுமே போகாம ஊட்டி விட்டுட்டு இருப்பார். இது ஏன் எதுக்குன்னு பல நாள் எனக்கு புரியவே புரியாது. அப்புறம் தான் தெரிஞ்சுது, அம்மாவோட மாதாந்திர வலிகள் அவள படுத்தி எடுக்குறப்ப எல்லாம் அவ கூடவே சேர்ந்து கண்ணீர் விட்ருக்கார் அவர்...

அந்த அணைப்பும் ஆதரவும் புரிய புரிய எனக்கு அவங்க மேல வந்த காதல்... அத வார்த்தைல சொல்ல முடியாது...

அம்மா போனப்போ அப்பா எப்படி அத தாங்கிகிட்டாங்க?
எப்படி ஒரு இறுக்க முகத்த மறைச்சுகிட்டு வலம் வர்றாங்க?
அந்த சூழ்நிலையிலயும் அம்மாவோட ஆசைய (கண் தானம்) நிறைவேற்ற எங்க இருந்து அவருக்கு துணிச்சல் வந்துச்சு?

அப்பாவால கூட பதில சொல்ல முடியாதுன்னு நினைக்குறேன்....

லவ் யூ அப்பா....


15 comments:

  1. GREAT..WRITE MORE ON DAD..MUM..OTHERS..PLACES..EXPERIENCES..OBSERVATIONS..FACTS..ETC!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... கண்டிப்பா எழுதுறேன்

      Delete
  2. வணக்கம் சகோதரி
    தங்களின் இந்த வெளிப்படையான பதிவு அப்பா மீது மிகுந்த மரியாதையை வரவழைக்கிறது. அவருக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கண்டிப்பாக பெற்றோர்களின் அன்புக்கு இணையாக இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் அப்பாவின் அன்பு உங்களை மகிழ்விப்பது கண்டு எங்களுக்கும் மகிழ்ச்சியே.. வாழ்க்கை புத்தகத்தில் சில் பக்கங்களை புரட்டும் போது அது நம்மை துன்புறுத்தலாம் (அம்மாவின் இழப்பு) சில பக்கங்கள் நம்மை மகிழ்விக்கலாம் (அம்மா, அப்பாவின் காதல் வாழ்க்கை) இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அன்றே புத்தகம் எழுதிய இறைவன் தீர்மானித்து விட்டான். வாழ்ந்து தானே ஆக்னும் சகோதரி. ரொம்ப பேசிட்டேனு நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணா... உங்கள மாதிரி எண்ணங்களை சொல்றவங்க இருக்குறதால தானே எங்களுக்கும் எழுதணும்னு தோணுது

      Delete
  3. me too ...love my dad

    ReplyDelete
    Replies
    1. நானும் தான்... ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்

      Delete
  4. Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... சில நிகழ்ச்சிகள நினச்சி பாத்தா ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கும்

      Delete
  5. ஹாய் காயு .....முதல் தரம் வருகிறேன் நல்லா எழுதுறிங்க .....அப்பாக்கு எவ்ளோ கோபம் கொண்டவர் அன்பனாவரா மாறி இருப்பவர் .....நாமலம் கொடுத்த வைச்சவங்க காயு இப்படிக் கிடைக்க ..i லவ் மை அப்பா வெரி மச் ....எனக்கு தெரிஞ்சு எல்லா அப்பாக்களும் இப்படி இருப்பதில்லை ....

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்க வருகைக்கு நன்றி

      Delete
  6. Arumaiyana parhivu nalla karuthu

    ReplyDelete
  7. பெண்களுக்கு அப்பா எப்போதுமே ஒரு ஹீரோ தான்! அந்த உணர்வு, தான் தாயாகி பிள்ளைகள் பெற்று விட்டதற்கப்புறமும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்! ஒரு அழகான தாம்பத்தியத்தைப்பற்றியும் அப்பாவின் அருமையைப்பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா, அப்பா எப்பவுமே பிள்ளைங்களுக்கு ஹீரோ தான்... உங்க கருத்துக்கு தேங்க்ஸ்

      Delete
  8. மௌனங்களோடு கடந்துபோகிறேன். எனக்கொன்றும் சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete