திருநெல்வேலி பயணம்...
எதுக்காக?
என்னோட பி.ஹச்.டி கைட் கிட்ட இன்னொரு அடிமை சிக்கிடுச்சு. அதாங்க, புதுசா ஒரு பொண்ணு ரெஜிஸ்ட்டர் பண்ண போறா. வீட்டுக்கு ரொம்ப செல்லம் போல. சொந்த ஊர் மதுரை. அவசர அவசரமா வந்துருக்காங்க. அப்ஸ்ட்ராக்ட் கூட எழுதல. அதெல்லாம் எழுதி, கைட் கிட்ட இருந்து சிக்னேச்சர் வேற வாங்கணும்.
முந்தின நாள் தான் என்கிட்ட சொன்னாங்க. வீட்ல இருந்தே நான் ரெடி பண்ணி மெயில் அனுப்பிட்டேன். ஆனாலும் நான் வந்தா நல்லா இருக்கும்னு கைட் சொல்லிட்டாங்க. அப்பாவும் மழை தானே, வெயில் இல்லல, அப்படியே அடுத்த வருசத்துக்கான உன் பீஸ்சும் கட்டிட்டு வந்துடலாம்னு சொல்லிட்டாங்க.
அதனால தான் கிளம்பியாச்சு.
டிரைவர் யாரு? வழக்கம் போல அப்பா தான்...
நான் திருநெல்வேலி போனது, அங்க நடந்தது எல்லாம் இருக்கட்டும்ங்க.. இதுல முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா, இது முழுக்க முழுக்க ஒரு நெடுஞ்சாலை பயணம்...
மூணு நாலு வருசத்துக்கு முன்னால எல்லாம் திருநெல்வேலி ஹைவேஸ் எனக்கு நெருக்கமான ஒண்ணு. ரொம்ப பிடித்தமான ஒண்ணும் கூட.... சர் சர்ன்னு ஆக்சிலேட்டர்ல கால வச்சா கார் விஸ்க் விஸ்க்ன்னு 120 கிலோமீட்டர் வேகத்துல பறக்கும். ஒண்ணு ரெண்டு நாள் எங்கயாவது ஒரு இடத்துல கார நிறுத்தி குட்டி தூக்கம் போட்டுட்டு கூட பொறுமையா வீடு திரும்பியிருக்கேன்...
இன்னிக்கி வீட்ல இருந்து கிளம்பும் போதே என் கார்ல போவமான்னு அப்பாகிட்ட லைட்டா கொக்கி போட்டேன். கார நான் தான் ஓட்டுவேன்னு சொன்னார். ஓ... சரிப்பான்னு நல்லப்புள்ளயா தலைய தலைய ஆட்டிகிட்டேன்.
கார் சந்து பொந்துக்குள்ள எல்லாம் புகுந்து ஒரு வழியா ஹை-வேல அடியெடுத்து வச்சுது...
அப்பா அப்பா அப்பான்னு கை கால உதற ஆரம்பிச்சுட்டேன். காத புடிச்சி முறுக்கிகிட்டே "நினச்சேன்... இந்த கார நீ எடுங்கன்னு சொல்லும் போதே"ன்னு ஒரு கரகர....
நமக்கு காதா முக்கியம்? புஜ்ஜு செல்லம்ல-ங்குற கொஞ்சல்ஸ்ல அப்பா காலி....
கார ஹேன்ட் ஓவர் பண்ணும்போதே அறுபதுக்கு மேல போகாதன்னு சொல்றார்... கிர்ர்ர்ர்... ராட்சசன்.... இதுக்கு நான் மாட்டு வண்டியே ஓட்டிட்டு போயிருக்கலாம்...
நாம என்னிக்கி அப்பா பேச்ச கேட்ருக்கோம்?
அப்புறம் என்ன, கார் நெடுஞ்சாலைல பறக்க ஆரம்பிச்சாச்சு.
முன்னாடி போற பைக், ஆட்டோ, கார், லாரி, பஸ், டேங்கர் ஒண்ணு விட கூடாது... அத்தனையும் முந்து.... ஹுர்ரே..... காருக்குள்ள அப்பா அலறல் தான் நமக்கு கைத்தட்டு....
ரொம்ப நாளைக்கு அப்புறம் செம ஜாலி...
ஆக்சிலேட்டர்ல கால வச்சதும் ஒரு தெம்பு மனசுக்குள்ள கெத்தா வந்து உக்காந்துக்குது.
நெடுஞ்சாலைல வண்டி ஓட்டுறதுல ஒரு சவுகரியம், ஆக்சிலேட்டர் மேல வச்ச கால பிரேக்குக்கு கொண்டு வர வேண்டாம். அப்படியே பாதைல வழுக்கிகிட்டு போகும். ஒரு குண்டு இருக்காது, ஒரு குழி இருக்காது, ஆனா ஒண்ணு, பூனையோ நாயோ குறுக்க வந்தா காலி தான்... சமயத்துல நாமளும் மேல போக வேண்டியது தான்...
ரோட்டோரமா பூத்து கிடக்குற மஞ்சள் பூக்கள காணோம். இப்போ தான் மழை பெய்ய ஆரம்பிச்சிருக்குறதால அவ்வளவா பச்சையத்தையும் காணோம்.
ஒரு மிதப்புலயே தான் வண்டி ஓட்டிகிட்டு இருந்தேன். ஆனா ஹைவே முடிஞ்சி சர்விஸ் ரோடு என்ட்ரி ஆனதும் அப்பா எதிரியாகிட்டார்... போச்சு போச்சு... டிரைவிங்க பறிச்சிட்டார்...
அப்புறமா, திருநெல்வேலி டவுன்ல போய் என்னோட கைட் பாத்து, அந்த பொண்ணையும் பாத்து, அவளுக்கு பார்ம் நிரப்பி குடுத்து, வேலையெல்லாம் கொஞ்சம் முடிச்சு, அவங்க கார்ல அபிசேகப்பட்டி போயிட்டு, அங்க அவளோட அப்ளிகேசன் குடுத்துட்டு, நானும் பீஸ் கட்டிட்டு, ஒருவழியா வந்த வேலைய எல்லாம் முடிச்சுட்டு மறுபடியும் என்னோட காருக்கு தொத்தி ஹைவேஸ் வந்தாச்சு...
"நீ ஓட்றியா"ன்னு அப்பா எந்த நேரத்துல வாய தொறந்தாரோ, சட சடன்னு பெய்ய ஆரம்பிச்சாச்சு மழை...
கரு கருன்னு மழைமேகம் சூழ்ந்துட்டு சோ...... ன்னு இரைச்சலோட தப தபன்னு பெய்யுது. கார் கண்ணாடி முழுக்க திரை விழுந்தாச்சு.
நமக்கு ஏற்கனவே கண்ணு அவுட் ஆப் போக்கஸ்... இதுல இந்த இருட்டுல கார ஓட்டினா விளங்கிடும்.... நைசா கழண்டாச்சு.... நல்ல புள்ளன்னு வேற பேர் கிடைக்கும்ல...
பேய் மழை பேய் மழைன்னு சொல்லுவாங்களே... அது இது தான்னு நினைக்குறேன். வைபரால மழையை சமாளிக்கவே முடியல. கார ஒரு இடத்துல நிறுத்தலாம்ன்னு நினைச்சாலும் பின்னால வர்றாங்க கண்ணு தெரியாம டமார்ன்னு வந்து இடிச்சிட்டா?
ஷப்பா.... இடது பக்கமா கார ஓட்டினா மழை கார தூக்கி சர்விஸ் ரோட்டுல எறிஞ்சிடும் போல... அவ்வளவு வேகம். அட, அத விடுங்க, கீழ ரோட்டுல ஓடுற தண்ணி இன்னொரு பக்கமா கார இழுக்குது.
காரோட அடிபாகத்துல தண்ணி மோதுற வேகத்துல கழண்டு விழுந்துடுமோன்னு பயம் வேற... அவ்வளவு பெரிய டபடபரா சத்தம்....
இது பத்தாதுன்னு கடந்து போற வண்டிங்க எல்லாம் தண்ணிய அலை மாதிரி மேல விசிறியடிச்சுட்டு போகுதுங்க... அந்த நேரம் கடலுக்குள்ள இருக்குற எபக்ட்....
இந்த கப்பல் கப்பல்ன்னு சொல்லுவாங்களே, அதுல நான் போனதே இல்ல... அந்த கொறைய இந்த பயணம் தீர்த்து வச்சிடுச்சு...
ஆக மொத்தம், பறந்தேன், மிதந்தேன்... நடக்க மட்டும் தான் செய்யல... ஒரு நாள் நெடுஞ்சாலைல நடந்தே போகணும்...
அவ்வளவு தாங்க, ஒரு அட்வஞ்சர் பயணம் போய்ட்டு வந்தாச்சு...வீடும் வந்து சேர்ந்தாச்சு... இனி என்ன, தூங்க வேண்டியது தான்...
இடைச்சொருகல்:
1. மழை இவ்வளவு களேபரம் பண்ணிட்டு இருக்கும் போது நமக்கெல்லாம் வேண்டப்பட்ட ஒருத்தர் அங்கயே தான் ரோட்டுல வேடிக்கை பாத்துட்டு இருந்துருக்கார். ஆனாலும் மழை கண்ண மறைச்சிடுச்சு...
2. எப்பவும் 120 கிலோமீட்டருக்கு குறையாத என் ஸ்பீட் இன்னிக்கி நூறு தாண்டல... வயசாகிட்டே போகுதுன்னு காட்டி குடுக்குது...
எல்லாம் நல்லாத்தான்...போகுது..
ReplyDeleteஎன்ன வேகம் அதிகம்..!
வேண்டாம் சகோ..!
அண்ணா, ஹைவேஸ்-ல தான் எதிர்த்தாப்புல வண்டி எதுவும் வராதுல... ரோடும் பெருசா, குண்டு குழி இல்லாம இருக்கும்ல.. அதோட பழகின ரோட் வேற... அதனால தான் அத்தனை வேகம்
Deleteநாம் என்னதான் திறமையா ஓட்டினாலும், எதிரில் வருபவரும் திறமைசாலியாக இருக்க வேண்டும் அல்லவா,
ReplyDeleteவேகத்தைக் குறைப்பத நலம் என்று எண்ணுகிறேன் சகோதரியாரே
ஹை வேஸ்ல எதிர்ல வண்டி வராது அண்ணா, அந்த தைரியம் தான்
Deleteஹாய் அக்கா.
ReplyDeleteநல்லா இருக்குரீங்கலா?
உங்க பதிவ படிச்சு ரொம்ப நால் ஆச்சு!
இந்த பதிவு எப்பவும் பொல உங்க ஸ்டைல்ல நல்லாத்தான் எழுதி இருக்குரீங்க.
இனி வேகத்தை குரைச்சிக்கோங்க அக்கா! (கார் ஓடது)
ஆணா பதிவு எழுதும் வேகத்தை அதிகரிக்கவும்! (எதாவது க்ரியேட்டுவிட்டியா எழுதுங்க)
ஹாய் மகேஷ்... நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க?
Deleteநீ சொல்றதா கண்டிப்பா பாலோ பண்றேன், ஏன்னா, இங்க நீ தானே எனக்கு வழிகாட்டி
வேகம் தான் வாகனத்திற்கு கூடாது!ஆவ்வ்
ReplyDeleteஹஹா... அங்க எல்லாருமே வேகமா தான் போவாங்க
Deleteநல்ல பதிவு. நெடுஞ்சாலை பயணம் மிகவும் பிடித்த ஒன்று.
ReplyDeleteகண்டிப்பா அண்ணா... எதிர்ல வாகனம் வரும்ங்குற பயமே இல்லாம... ஜாலியா போகலாம்
Deleteஆஹா..ஆசையாருக்கு....உங்க கூடவே பயணிக்க வைச்சுட்டீங்க .....நன்றி தோழி
ReplyDeleteஹஹா கூடவே வந்தா பெட்ரோல் காசு குடுக்கணுமே
Deleteஎனக்கு அதில் எப்படி இணைவதுன்னு தெரியலயே
ReplyDelete