Thursday 24 September 2015

இதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல




ஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்நிலைல நான் ரொம்ப நாளாவே நான் பேசணும்னு நினைக்குற ஒரு தலைப்பு இது. சுய இன்பம் பற்றினது. இத வெளிப்படையா பேச இன்னும் இந்த சமூகம் ஒத்துக்குதான்னு தெரியல. ஆனா, அத பத்தி பேசிடலாம்னு இப்ப முடிவு பண்ணிட்டேன்.

அப்ப தான் நான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்துருந்தேன். கொஞ்ச நாள்லயே அங்க இருக்குற ரெட் ரிப்பன் க்ளப் உறுப்பினரா சேர்ந்தேன். தீவிர உறுப்பினர்கள்ங்குற முறைல எங்களுக்கு பல்கலைக்கழகத்துல வச்சு ஒரு கூட்டம் போட்டாங்க. அந்த கூட்டத்துல ஒரு துண்டு சீட்டு குடுத்தாங்க. பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துறது எப்படின்னும் சுய இன்பம் பாவமல்லன்னும் சொல்லி அதுக்கான விளக்கமும் குடுத்துருந்தாங்க. அந்த வயசுல அத பத்தின எந்த எதிர்பார்ப்பும் இல்ல, தெரிஞ்சுக்கணும்னு ஆவலும் இல்ல, அவசியமும் இல்ல. ஆனா அந்த விஷயம் தப்பில்லன்னு மட்டும் மனசுக்குள்ள பட்டுச்சு.

அதுக்கப்புறமா எனக்கு வந்த சில உடல்நிலை பாதிப்புனால மாதவிடாய் பிரச்சனை நிறையவே வந்துச்சு. வயித்த கிழிக்குற மாதிரியான வலி. அப்படியே கத்திய எடுத்து வயித்த கிழிச்சு போட்டுட்டா என்னன்னு தோணும். மாசக் கணக்குல ரெத்தப்போக்கு நீடிக்கும். நடக்கவே முடியாம தலைசுத்தி படுக்கைலயே விழுந்து கிடப்பேன். அப்படி எனக்கு என்னதான் பிரச்சனைன்னு பாத்தா, எல்லாமே சரியா இருக்குன்னு தான் மருத்துவமனை அறிக்கைகள் காட்டும். கர்ப்பப்பை முதற்கொண்டு சூல்ப்பை வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். தைராய்டு அளவுகள பாத்தா அதுவும் பிரச்சனைக்குரியதா இல்ல.

ஆனா மாதவிடாய் ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் பிரசவ வலி மாதிரியான ஒரு வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பிக்கும். சுண்டுவிரல் அளவிலான ஒரு சதைப் பகுதி அறுந்துகிட்டு வெளில வந்தா மட்டும் தான் வலி குறைய ஆரம்பிக்கும். அந்த நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். இதென்ன கர்ப்பப்பை கிழிச்சு வெளில வருதோன்னு. அப்புறம் தான் என் அம்மா, சித்தி, பாட்டி எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்குறது தெரிய வந்துச்சு. அந்த சதைப் பகுதிய எடுத்து டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க பிரசவம் ஆனவங்களுக்கு தான இப்படி வரும், உனக்கு ஏன் இப்படி வருதுன்னு என் கிட்டயே திருப்பி கேப்பாங்க. அவங்க தான் இன்னொரு டாக்டர போய் பார்க்க சொன்னாங்க.

அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல கருப்பை உச்சளிப் படலத்தோட (Endometrium) அடர்த்தி அதிகமா இருக்கு, ஹார்மோன் அளவு கம்மியா இருக்கு, நீ சுய இன்பம் பண்ண மாட்டியான்னு கேட்டாங்க. “இல்ல மாட்டேன், எனக்கு அப்படினா என்னன்னு கூட சரியா தெரியாது, அதுல இஷ்டமும் இல்ல”ன்னு சொன்னதும், அம்மாவ கூப்ட்டு பொண்ணுக்கு சொல்லிக் குடுங்க, இல்லனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க.

மாதவிடாய் பிரச்சனை வர பல காரணங்கள் இருக்கலாம், அந்த காரணங்கள்ல இதுவும் ஒண்ணாம். அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியத அந்தந்த வயசுல அனுபவிக்கணும்ன்னு இதுக்கு தான் சொல்லியிருக்காங்க போல. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்குறதும் இதுக்குதான். ஆனா, எல்லாராலும் நினச்ச மாதிரி கல்யாணமும் பண்ண முடியாது. எல்லோருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமைஞ்சுடுறதும் இல்ல. சரியான வாழ்க்கைக்கு சரியான வாழ்க்கை துணை அவசியம். அப்படி அமையாத பட்சத்துல சுய இன்பம் தப்பில்ல - இது என் அம்மா எனக்கு கத்துக் குடுத்தது.

இத பத்தி நான் எழுதணும்னு முடிவு எடுத்த உடனே இணையத்துல என் மாதிரியான அனுபவம் உள்ளவங்க இருக்காங்களான்னு தேடித் பாத்தேன். ரொக்சனா பென்னெட்ங்குற பெண் இந்த கருப்பை உச்சளிப் படலத்தோட பிரச்சனைனால எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளானாங்க, அவங்களால ஏன் இயற்கை உடலுறவு பண்ண முடியாம போச்சு, எதனால அவங்களுக்கு சுய இன்பம் அவசியமாச்சுன்னு சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சுரப்பு சரியில்லாதவங்க, எதிர்பாலினம் மேல ஈர்ப்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சர்வ சாதாரணமா வந்துடுது. அப்படியும் இல்லையா, சில நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது பக்க விளைவுகளாவும் வந்துடுது.

இந்த இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) வந்துடுச்சுனா, கல்யாணம் ஆகி குழந்தை உள்ள பெண்களா இருந்தா கர்ப்பப்பைய நீக்குறது தான் நிரந்தரத் தீர்வு. கல்யாணம் ஆகாத பெண்களா இருந்தா, அறுவை சிகிச்சை மூலமா இந்த கருப்பை உச்சளிப் படலத்த நீக்குறாங்க. அப்படி பண்ணினா ரெண்டுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் இந்த பிரச்சனை திரும்பி வராம இருக்கும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனாலும் அதுக்கு எந்த உத்தரவாதமும் குடுக்க முடியாது. இப்படி வலியும் வேதனையுமா அவஸ்தைப்படுறதுக்கு பேசாம சுய இன்பம் பண்ணிட்டு போய்டலாம். ஓரளவு இந்த பிரச்சனைல இருந்து தப்பிச்சிரவும் செய்யலாம்.
.................................................

சரி, முன்னப் பாத்தது உடல் ரீதியான பிரச்சனை. இதுல மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன வரும்?

பாலியல் உணர்வுங்குறது எல்லாராலும் சுலபமா கடந்து வர முடியாத விஷயம். இந்த உணர்வுகள் இல்லாத உயிரினமே கிடையாதுங்குறப்ப இத பத்தி பேச மட்டும் ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியல. ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இந்த உணர்வு இயற்கையானது. அடுத்தவங்கள குறை சொல்லிட்டு இருக்குறவங்க தனக்கும் இந்த உணர்ச்சிகள் இருக்கும், அதையும் தான் பூர்த்தி செய்துட்டுதான் இருக்கோம்ங்குறத ஏனோ சுலபமா மறந்துடுறாங்க. சுய இன்பம்ங்குற வார்த்தைய கேட்டாலே முகம் சுளிக்குற எல்லாருக்குமே கலவி தேவையா தான் இருக்கு. வித்யாசம் என்னன்னா, அவங்களுக்கு ஒண்ணு அவங்களோட பாலியல் ஆசை நிறைவேற வழி இருக்கு, அதனால அத பூர்த்தி செய்ய முடியாதவங்கள பாத்தா என்னமோ தீண்டத்தகாதவங்கள பாக்குற மாதிரி தோணுறது, இன்னொரு வகை மனுசங்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள நிறைவேற்ற வழி இருந்திருக்காது, அதனால அடுத்தவங்கள திருத்துறேன்ங்குற பெயர்ல அவங்களே வார்த்தை பலாத்காரம் செய்துகிடுவாங்க. ஒரு பொதுவான விசயத்த, அதாவது நாம பண்ற விசயத்த அடுத்தவங்க பண்ணினா ஐயோ அம்மா, தப்புன்னு குதிக்குரத முதல்ல நிறுத்தினாலே போதும்.

ஆண்கள பொருத்தவரைக்கும் இந்த உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாதவங்க தான் தீவிர விளிம்புநிலைக்கு போய் அஞ்சு வயசு பொண்ணுன்னு கூட பாக்காம தூக்கிட்டு போய் கற்பழிக்குறான். ஐம்பது வயசு பெரியம்மாவையும் நாசம் பண்றான். நாம இங்க உக்காந்து அவனோட அத வெட்டணும், இத வெட்டணும், அவன் வீட்டு பொம்பளைங்கள இப்படி செய்தா தான் அவனுக்கு புத்தி வரும்னு நம்ம மனசுல இருக்குற வக்கிரங்கள கொட்டிகிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் அவன் இப்படி பண்ணக் காரணம் என்ன, அவன் மனசுல படிஞ்சு இருக்குற அழுக்க நீக்க நாம என்ன செய்துருக்கோம்ன்னு யோசிச்சிருக்காங்களா? சரி, அதெல்லாம் விடுங்க, கற்பழிக்கப்படுற பொண்ணையும் சேர்த்து இன்னும் இன்னும் கற்பழித்தவன் வீட்டு பெண்களும் வார்த்தை கற்பழிப்பு செய்யப்படுவாங்க நம்ம சமூகத்துல. இதெல்லாம் ரொம்ப தெளிவா கூச்சமே இல்லாம செய்வோம், ஆனா இந்த மாதிரியான பாலியல் உணர்வு தப்பு இல்லன்னும் அத எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் சொல்லிக் குடுக்க மட்டும் தயங்குவோம். கேட்டா அதப் பத்தி பேசினா அசிங்கமாம், ஆபாசமாம். சொல்லிக் குடுக்கலாம் தானே நம்ம வீட்டு பசங்களுக்கு, இந்த பாலியல் உணர்வு இயற்கையானது. உன்னால கட்டுப்படுத்த முடியலனா சுய இன்பம் பண்ணிட்டுப் போ, எந்த பொண்ணையும் நாசம் பண்ணாதன்னு.

இந்த விசயத்த இன்னும் கொஞ்சம் ஆழமா போய் உணர்வு ரீதியா பாத்தோம்னா, ஆண்களை போல தான் பெண்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள் இருக்கு. சில நேரத்துல எதோ ஒரு காட்சி, இல்லனா நினைவு மனசுக்குள்ள பாலியல் ஆசைய தூண்டி விடும். அத அடக்கி வச்சுட்டு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தா, அத பத்தின நியாபகத்துலயே சகஜமா இருக்க முடியாது. பதற்றம், பயம், கோபம் விரக்தி எல்லாம் இதுனாலேயும் தான் வருது. ஆண்கள் எப்படி அடக்க முடியாத காமத்த கற்பழிப்புல காட்டுறாங்களோ, அப்படி பெண்கள் தங்களோட பாலியல் ஆசை நிறைவேறாத தருணங்கள கோபத்துல காட்டுறாங்க. எதைப் பாத்தாலும் கோபம், என்ன செய்தாலும் கோபம். இதனால அவங்கள சார்ந்து உள்ளவங்க தான் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரியான ஆசைகள உள்ளயே வச்சுட்டு கோபமும் பதற்றமுமா திரியுறது பதிலா அடுத்தவங்கள பாதிக்காத, அடிமையாகாத, எல்லை மீறாத மாற்று வழி தப்பே இல்ல. சுய இன்பம் பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம்.

ரொம்ப சமீபத்துல முகநூல்ல ஒரு சண்டைய பாத்தேன். ஒரு ஆணும் பெண்ணும் அசிங்க அசிங்கமா திட்டி மாத்தி மாத்தி நிலைத் தகவல் போட்டுகிட்டே இருந்தாங்க. பாக்குறதுக்கே அத்தன அருவெறுப்பு. ஒருத்தர் மேல இன்னொருத்தர் சேறை வாரி இறைஞ்சதோட இல்லாம, அவங்கவங்க குடும்பத்து பெண்களையும் வார்த்தை கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க. இத எல்லாம் வேடிக்கைப் பாத்தவங்க அதுக்கும் மேல. அந்த ஆள தூண்டி விட கொஞ்ச பேர், இந்த பொண்ணை தூண்டி விட கொஞ்ச பேர். அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்ததன்னு அந்த பொண்ணுக்கு சொல்ல யாரும் இல்ல. எல்லாருமே விடாதீங்க, நாங்க இருக்கோம்ன்னு உசுப்பேத்திட்டு இருந்தாங்க. அதுவே அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனைன்னு வந்தா ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சு, தனியா அந்த பக்கம் போய் இன்னொரு பொண்ணை பத்தி பேசிட்டு இருப்பாங்கங்குறது தான் நிதர்சனமான உண்மை. கெட்ட கெட்ட வார்த்தை ப்ரயோகத்துக்கு வக்காலத்து வாங்குறவங்க, உணர்வுப்பூர்வமா விளக்கம் குடுக்க நினச்சா ஆபாசம்னு சொல்லுவாங்க.

இப்படி இந்த நிறைவேறாத பாலியல் ஆசைகளால ஆண்கள நம்பி ஏமாந்து போற பெண்கள் எத்தனையோ பேர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, மாறிப் போன காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய இணையத்த பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதேநேரம் இன்றைய சூழ்நிலைல இந்த மாதிரி வேறு ஆண்களோட உறவு வைக்குற பெண்கள் அவங்களுக்கே தெரியாம பல விதத்துல பலருக்கும் பயன்படுறாங்க. அலைபேசி மூலமா நம்பிக்கையான ஒருத்தன் கூட தான் பாலியல் பேச்சுகள் வச்சுக்குறோம்ன்னு நினச்சா அவன் அந்த பக்கம் சத்தமா போட்டு அவ பேசிட்டு இருக்குறத நண்பர்கள் கூட உக்காந்து கூட்டமா கேட்டுட்டு இருப்பான். அத பதிவு செய்து இணையத்துல உலவ விடுவான். அதுக்கப்புறம் அந்த பெண்ணோட நிலைய நினைச்சுக் கூட பாக்க முடியாது. அத்தனை பேரும் அவங்கவங்க நிலை மறந்து அந்த பெண் மட்டுமே தப்பு செய்தவள்ன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. வார்த்தை பலாத்காரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. கேலிகளும் கிண்டல்களுக்கும் நக்கல்களுக்கும் குறைவே இருக்காது. அதே மாதிரி தான் இணையத்துல முகநூல், ஜி-டாக் வகையறாக்களும். உள்டப்பியில பதிவு செய்யப்படுற வார்த்தை பிரயோகங்கள் அப்படி அப்படியே எத்தனை பேருக்கு வெட்டி ஒட்டப்படும்ன்னு சொல்ல முடியாது. இன்னும் விதவிதமான பிரச்சனைகள சந்திச்சவங்க எத்தனையோ பேரு.

எல்லாம் சரியா போயிட்டு இருக்குற வரைக்கும் தப்பில்ல, ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பதிவு செய்யப்பட்ட பாலியல் பேச்சுகளும், பாலியல் உரையாடல்களும் (sex chatting) மிரட்டுறதுக்கு பயன்படும். பெண்கள் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்குறது இந்த மாதிரி நேரங்கள்ல தான். ஒண்ணு அந்த பெண் விருப்பமே இல்லாம அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சு போகணும், இல்லனா தங்களோட வாழ்க்கைய முடிச்சுக்கணும். குடும்பத்த எதிர்க்கொள்ள முடியாம, மான அவமானம் தாங்க முடியாம இந்த மிரட்டல் தற்கொலைல வந்து முடிய வேண்டியதா இருக்கு.

உனக்கெதுக்கு இந்த அக்கறை, யாருக்குமே இல்லாத அக்கறைன்னு கேள்விகள் கேட்டா, பெண் என்பவள் வெறும் போதை பொருள் இல்ல, எல்லாரையும் போல் சிந்திக்கவும், சுதந்திரமா இருக்கவும் அவளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைய புரிய வச்சுட்டாலே குற்றவுணர்ச்சில இருந்து அவ தப்பிச்சிடுவா. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி கணவனை இழந்தவங்க, கணவனை பிரிஞ்சி இருக்குறவங்க, சந்தர்ப்ப சூழ்நிலையான கல்யாணம் ஆகாதவங்க, குடும்ப பிரச்சனைகள்ல ரொம்ப பெரிய மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு இது பெரிய ஆறுதல். உடனே எல்லா பெண்களும் சுய இன்பம் பண்ணனும்னு சொல்றீங்க, அதெப்படி நீங்க சொல்லலாம்னு சண்டைக்கு வந்துடாதீங்க, நான் எல்லாரும் கண்டிப்பா சுய இன்பம் பண்ணனும்னு சொல்லவே இல்ல. அதே நேரம், அப்படி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா தப்பில்லன்னு தான் சொல்ல வரேன். அதென்னவோ கொலை குற்றம் பண்ற மாதிரி கூனி குறுகி போக வேண்டிய அவசியம் இல்லன்னு தான் திரும்ப திரும்ப சொல்ல வரேன்.

இப்போதைக்கு விடைபெறுறேன்....

....................................................................................

இந்த கட்டுரை என்னோட சொந்தப் படைப்பு. இந்த படைப்பு தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- 215- புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 215” வகை- (3) பெண்கள் முன்னேற்றம் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.  இது இதுக்கு முன் வெளியான படைப்பு இல்ல, முடிவு வெளிவர வரைக்கும் வேற இதழ்கள்ல வெளிவராதுன்னு உறுதி அளிக்கிறேன். 

நன்றி
படம்: இணையம் (www.google.com) 


121 comments:

  1. அருமையாக எழுதி உள்ளீர்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அக்கா! கட்டுரை ரொம்ப நல்லா வந்திருக்கு!.

    ReplyDelete
  3. பலரும் பேச தயங்குகிற ஒரு விஷயத்தை எடுத்து கொண்டதற்கு பாராட்டுக்கள், இந்த கட்டுரையில் நிறைய ஆங்கில வார்த்தைகள் அப்படியே கையாளப்பட்டு இருக்கின்றன. அதை முடிந்த அளவில் மாற்றப்பாருங்கள். இதை சொல்ல காரணம் போட்டி நடத்தப்படுவது வலைப்பதிவர்களாக இருந்தாலும் இதில் தமிழ் இணையக் கல்விகழகமும் இணைந்து செயல்படுவதால் ஆங்கிலம் அதிக கலந்து இருப்பதால் வெற்றி வாய்ப்பு குறைய ஒரு காரணமாகலாம்.நேரம் கிடைத்தால் மாற்ற முயற்சிக்கவும்.பலரும் வெளிப்படையாக பேச தயங்குகிற ஒரு விஷயத்தை மிக எளிதாக கையாண்டதற்கு பாராட்டுக்கள். கட்டுரையை படித்த பின் இன்பாக்ஸ் தொந்தரவுகள் வரலாம் அதை அப்படியே ஒதுக்கி கொண்டே செல்லுங்கள். இறுதியாக போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரியுது. நான் எப்பவுமே மனசுல தோணுறத அப்படியே சொல்லியே பழக்கப்பட்டுட்டேன். பேசும் போது தயக்கம் வராம இருக்கவும், நெருடல் இல்லாம சொல்லவும் இந்த english terms கைக்குடுக்குது. சரி, ஆனது ஆகட்டும்னு தான் அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன். முடிஞ்ச அளவு மாத்தப் பாக்குறேன். தேங்க்ஸ்

      Delete
  4. பெரும்பாலோனோர் தொடத் தயங்கும் subject-ஐ முழுக்க உணர்வு சம்பந்தமாகவோ, உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ இல்லாமல் neutral-ஆக வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். ரொம்ப நாளாவே பேசணும்னு நினச்ச டாபிக் இது. போட்டின்னு தெரிஞ்சதும் ஏன் எழுதக் கூடாதுன்னு தோணிச்சு, எழுதிட்டேன்.

      Delete
  5. நல்லதொரு விழிப் புணர்வு கட்டுரை ,பரிசினை வெல்ல வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்க வாழ்த்துக்கு

      Delete
  6. saga vaalthukal. intha aangela maruthuvam thaan udal uruba veturaga. nam inthiya maruthuvam patrium udal urubu patrium theliva soli irukaga. anatomictherapy.org/tindex.php

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் கண்டிப்பா லிங்க் போய் பாக்குறேன். தேங்க்ஸ்

      Delete
  7. பெண்கள் சொல்லத் தயங்கும் உண்மைகளை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.நல்ல கட்டுரை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இந்த விசயத்த பத்தி பேச இப்ப பெண்கள் தயாரா இருந்தாலும் ஒரு வித தயக்கம் இருந்துட்டே தான் இருக்கு. யாராவது ஆரம்பிச்சு வைக்கனுமே, அது நானா இருந்துட்டு போறேன்னு தான்

      Delete
  8. Very bold attempt!keep posting such thought provoking issue!
    Vishwanathan

    ReplyDelete
    Replies
    1. முதல்ல தேங்க்ஸ். அப்புறம் எனக்கு தோணினத எழுதிட்டு தான் இருக்கேன் இதுவரைக்கும். ஏற்கனவே மாதவிடாய் பத்தி ரெண்டு போஸ்ட் எழுதிட்டதால போட்டியில கலந்துக்க இத எழுதினேன். தொடர்ந்து படிங்க

      Delete
  9. அனைவருக்கும் பயன்படும் அருமையான கட்டுரை. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் காயத்ரி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். வெற்றிங்குறது அடுத்த கட்டம். எழுதணும்னு நினச்சத எழுதிட்டேன், அதுவே எனக்கு முதல் சந்தோசம் தான்

      Delete
  10. Good post ma'am!!! All the very best. You will surely win.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  11. நம்மூரில் அதுவும் பெண்கள் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை எடுத்து உணர்வுப்பூர்வமாக கூறியிருக்கிறீர்கள். அழகாக வந்திருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. அர்த்தமே இல்லாம சண்டை போட்டுட்டு இருக்குறதுக்கு பயன் உள்ளதா நாலு வார்த்தை பேசிட்டு போயிடலாமேன்னு தான். உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  12. நான் இந்த விசயத்தை சொல்ல முடியாமல் அதற்கான வாத்தைகள் சிக்காமல் நிறைய நாட்கள் தின்டாடி இருக்கேன் ஆனா நீ பட்டுன்னு சொல்லிட்ட! போட்டியில வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கா! :)

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகள் சிக்காதுன்னு எல்லாம் எதுவுமே இல்ல அண்ணா, நிறைய விஷயங்கள் மனசு விட்டு எதிர்ல உள்ளவங்க கிட்ட பேசுற மாதிரி நினச்சு எழுத ஆரம்பிச்சாலே தன்னால வந்துடும்.

      தேங்க்ஸ் அண்ணா உங்க பாராட்டுக்கு

      Delete
  13. நம் பெண்கள் பேச அஞ்சும் விடயத்தை, மிக இலகுவாகத் தேர்ந்த சொற்களால் அழகானத் தொடுத்துள்ளீர்கள்.
    இந்த மாதவிடாய் வேதனையால் வாடும் என் மிகநெருங்கிய உறவுகளுக்கு வைத்தியர் பரிந்துரைத்தது, திருமணமே! அப்போ புரியவில்லை.
    புரிய வைத்தீர்கள்.
    போட்டியில் வெல்லத் தவறினும் , உங்கள் எழுத்து தொடத் தயங்குவதைத் தொடுவதால் வென்று விட்டது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பீரியட்ஸ்னு சொன்னதும் ஏனோ வயித்து வலி மட்டும் தான் நிறைய பேருக்கு நியாபகம் வருது. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்குறத கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு வரேன். உங்க பாராட்டுக்கு நன்றி

      Delete
  14. Masturbation என்ற இந்த வார்த்தையை முதலில் 'தலைப்பில்' தமிழில் வையுங்கள். ஆங்கிலத்திலேயே தலைப்பு வைத்து தமிழ் போட்டிக்கே அனுப்புவதா? வடமொழியிலும் கூடாது---இது தமிழுக்கான போட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள். வட மொழியில் சொல்வது ஆங்கிலத்தில் சொல்வதை விட மோசம். ஆகவே, தமிழில் சொல்லணும். ஆங்கிலத்தில் Masturbation என்ற சொல்லுடன் இந்த போட்டிக்கு வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்.

    வடமொழியில் ஆங்கிலத்தில் சொன்னால் ஆபாசம் இல்லை என்ற மனப்பக்குவம் வளராத வரை தமிழ் மொழி வளராது. வளரப்போவது இல்லை. அப்படி தமிழில் சொன்னால் அதை இந்த சமூகம் அனுமதிக்கனும். அதைவிட முக்கியமாக, இந்த போட்டியின் நீதிபதிகள் அந்த வார்த்தையை தமிழில் சொல்ல அனுமதிக்கணும்? அவர்களுக்கு அந்த மனப்பக்குவம் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு தமிழ் மொழிப்பற்று இருந்தால் போதும்

    வட மொழி அல்லது ஆங்கிலத்தில் Masturbatio என்ற சொல்லுடன் சொல்லுடன் இந்த போட்டிக்கு வருவது சரியிலல!.

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரைக்கும் எந்த போட்டியிலயும் கலந்துகிட்டது கிடையாது. சரி கலந்துக்கலாமேன்னு தான் முதல் முதலா இந்த லிங்க் அனுப்பி வச்சேன். அதுல விதிமுறைகள்ன்னு ஆங்கில வார்த்தைகள் கலக்க கூடாதுன்னு எதுவும் இல்ல. இருந்தாலும் நீங்க சொன்னதுக்காக அந்த தலைப்ப மாத்திட்டேன். நன்றி....

      போட்டிக்கு அனுப்புறதுக்கு அப்பாற்பட்டு, நிறைய பேர் என்கிட்ட கேக்குற ஒரு விஷயம் எப்படி கஷ்டமான, பேச தயங்குற விசயத்த சரளமா பேசி கடக்குறன்னு தான். இங்க நிறைய தமிழ் வார்த்தைகள் கெட்ட வார்த்தையா தான் பாக்கப்படுது. அத எல்லாம் மாத்தணும்னா அதுக்கு தமிழ் அறிஞர்கள் உழைப்பு வேணும். நாங்க எல்லாம் ரொம்ப சாதாரணமா ஆள். மக்களோட மக்களா அவங்க பேசுற முறைல நான் பேசுறதால தான் என்னை ஓரளவுக்கு அவங்க ஏத்துக்குறாங்கன்னு நினைக்குறேன். எனக்கும் அவங்க கிட்ட இப்படி சரளமா பேசுறது ரொம்ப ஈசியா இருக்கு.

      கட்டுரை போட்டிக்கு தமிழ் வார்த்தைகள மட்டுமே தான் எழுதணும்ன்னு கட்டாயம் இருந்தா, போட்டிக்கான தலைப்பு தமிழ் சார்ந்து தான் இருந்துருக்கணும், பொது விஷயங்கள் சார்ந்து இருந்திருக்க வேணாம்ங்குறது என் கருத்து. இங்க ரொம்ப சுலபமா புரிஞ்சுக்க வேண்டிய தகவல்கள யாருக்கும் நெருடல் இல்லாம குடுத்தா போதும்ங்குற எண்ணத்துல மட்டும் தான் நான் இத அந்த போட்டிக்கு அனுப்பி வச்சேன்.

      நடுவர்கள் எடுக்குற தீர்ப்பு என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா சொல்ல வந்த விசயத்த நான் சொல்லிட்டேன்ங்குற திருப்தி இருக்கு. அதுவே எனக்கு பெரிய பரிசு.
      ஆங்கில வார்த்தை பிரயோகம் தவிர்த்து, என் கட்டுரையோட சாராம்சம் குறித்து ஒண்ணு ரெண்டு கருத்து நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன். நன்றி

      Delete
  15. உண்மையில் தக்க நேரத்தில் ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று இன்றே தெரிந்துகொண்டேன். உண்மையில் இன்று தாங்கள் எழுதிய பின்பே பல உண்மைகள் தெரியவந்தது. இன்னும் என் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது பத்தின விசயத்த எழுதலாம்னு முடிவெடுத்தப்ப ஒரு தகவலா தான் இந்த விஷயம் பேசப்பட்டுருந்துச்சு. உளவியல் சார்ந்து பேச நாம ஏன் முதல் அடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு நினச்சேன். எழுதிட்டேன். உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  16. நல்ல கட்டுரை. பலரும் சொல்ல்த் தயங்கும் விஷயங்களை வெளிப்படச் சொல்லியிருப்பது நன்று. பாராட்டுகள்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  17. நேர்த்தியான பதிவு...

    ReplyDelete
  18. உங்களோட வாழ்த்துக்கு நன்றி அண்ணா... போட்டிக்கான நாள் இன்னும் பாக்கி இருக்குங்குற தைரியத்துல தலைப்பை கொஞ்சம் மாத்தியிருக்கேன். தேங்க்ஸ்

    ReplyDelete
  19. உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு நன்றி

      Delete
  20. அருமையான பதிவு காயத்ரி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அக்கா...

      Delete
  21. தைரியமான பதிவு!வாழ்த்துக்கள். இது நிச்சயம் தேர்ந்தெடுக்கப் படும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதுல இருக்குற சில குறைபாடுகளால இது போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படாதுங்குறது எனக்கு தெளிவா புரியுது, ஆனாலும் உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  22. அதே அனானியின் தொடர்ச்சி!
    பெண்களின் உடம்பு மனது சம்பந்தப்பட்ட ஒரு உண்மையை கூற எவ்வளவு யோசிக்கவேண்டிஇருக்கிறது? நம் சமூகம் மிகவும் பிற்பதுத்டுதப்ப்ட்ட ஆணாதிக்க சமூகம். அதுவும் ஒரு பெண்ணே இவைகலைப் பேசினால்? ஆண்கள் கூறினாலே எடுத்துக் கூறமுடியாததை ஒரு பெண் கூறியதற்கு வாழ்த்துக்கள்.

    தமிழ் நாடு அரசு – தமிழ் இணையாக கழகம் இணைந்து இனைந்து நடத்துவதால் ஆங்கிலவாதர்தைகளுடன் எழுதுவது சரியல்ல—மேலும் அதற்கு ஒப்பான அழகான தமிழ் வாத்தைகள் இருக்கும்போது; அந்த தமிழ் வார்த்தைகளையே எழுதுங்களேன்!
    ____________________________________________________
    சொல்லுங்கள் இங்கேஇது தேவையா?
    “நான் யூ.ஜி படிச்சது மனோன்மணியம் சுந்தரனார்”
    யூ.ஜி-வை தாரளமாக தமிழில் எழுதலாமே! மற்ற படி இது தேவையா?
    ______________________________________________
    அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல எண்டோமெட்ரியம் (Endometrium) அடர்த்தி (thickness) ஜாஸ்தியா இருக்கு, ஹார்மோன் லெவல் கம்மியா இருக்கு, நீ masturbate பண்ண மாட்டியான்னு கேட்டாங்க”. இந்த கூற்றை ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் தான் நிரூபிக்கவேண்டும். ஒரு டாகடர் உங்களுக்கு கூறியதற்கு ஒரு மதிப்பும் இல்லை.

    இப்படி எழுதுவதை தவிருங்கள். இப்படிப்பட்ட -personal conversation-களை ஆதாரத்துடன் நிரூபிக்க முயாதவரை தவிர்பது நலம். இல்லாவிட்டால் எவனும் மதிக்கமாட்டான் (உண்மை இல்லை என்று நினைப்பான்) அப்படி எழுதத் தான் வேண்டுமென்றால் அதற்கு "சில வரைமுறைகள்" உள்ளது. அவைகள்—எப்படி எழுதுவது என்றால் Ph.D dissertation-எழுதுவது எப்படி என்ற புத்தகம் மாதிரி போய்விடும்.

    எனவே, எல்லா ஆங்கில வார்த்தைகளையும் எடுத்து---உங்கள் அனுபவங்களை தவிர்த்து எழுதினால்---வெற்றி உங்களுக்கே !

    ஆங்கில மெடிக்கல் வார்த்தைக்கு தம்ழில் இருக்கா?
    இதையும் படியுங்கள்
    https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்

    இங்கு செல்லுங்கள்.
    தமிழ்படுத்த வேண்டய ஆங்கில வாத்தையை தமிழில் டைப் அடியுங்கள்.தமிழ் நாட்டில் இருக்கும் மறத் தமிழர்களுக்கு தமிழ் புரியாது என்றால், தமிழில் வார்தையை எழுதிவிட்டு அடைப்புக்குள் ஆங்கில வாத்தையை அடிக்கலாம். மேலும் உங்கள் கட்டுரையின் சூட்டில் விக்கியின் ஆதாரத்தை காட்டுங்ககுள்.

    மக்கள் அந்த தமிழ் மொழி பெயர்ப்பு வார்தைகளை ஏற்றுக்கொள்வார்கள். கணினி ஏன்ற சொல் வந்த பொது எதிர்த்தவர்கள் எவ்வளவு பேர்? இன்று??

    மக்கள் ஒத்துக்கொள்வார்கள் (கடினமான மெடிக்கல் வார்த்தைகளை மட்டும் அடைப்புக்குள் கொடுக்கலாம்.
    "endometrium" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
    • endometrium
    பலுக்கல் endometrium கருப்பையின் உள்ளுறை கருப்பை உட்சளிப் படலம்; கருப்பையகம் உள்வரிச் சவ்வு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endometrium
    ____________________________________
    “எல்லா ஆங்கில வார்த்தைகளையும் எடுத்து, உங்கள் அனுபவங்களை தவிர்த்து எழுதினால்...வெற்றி உங்களுக்கே காயத்ரி தேவி அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் அனானி!
      சகோதரி...
      இது ஒரு நல்ல சந்தர்ப்பம் தமிழில் எழுதி தமிழை நிலை நாட்டுங்கள். பரிசு பெறுங்கள், அதை விட்டு விட்டு பழக்கப்பட்ட சம்பந்தம் இல்லாத வட சொல்லுக்கு போகவேண்டாம். உதாரணம். ஆண்களுக்கு. Wet Dreams' வரும் என்பதை 'சொப்பன ஸ்கலிதம்' என்று வடமொழியில் விற்பன்னர்களான "வாலிப வயோதிகர் லாட்ஜ் டாக்டர்கள்" சொல்வது மாதிரி நீங்களும் வடமொழியில் சொல்லாமல் தமிழில் எழுதுங்கள். அப்படி நீங்கள் வட மொழியில் எழுதினாலும் நம்ம தமிழ் நீதிபதிகள் பரிசு கொடுத்து விடுவார்களா என்ன? அவர்கள் யார்? எல்லோரும் நெற்றிக்கண்ணை திறப்பார்கள்.

      தூய தமிழில் எழுதினால் பரிசு உங்களுக்குத் தான் காயத்ரி தேவியாரே! நீதிபதிகளும் நீங்கள் தூய தமிழில் எழுதுவதைத்தான் விரும்புவார்கள். பரிசும் தூய தமிழில் எழுதும் கட்டுரைகளுக்கு மட்டும் தான் கிடைக்கும்

      Delete
    2. போட்டிக்காக மட்டுமேன்னு எழுதினா என் எழுத்தோட உணர்வுகள் செத்துப் போய்டும். இப்பவே இது வழக்கமான காயு இல்லன்னு எனக்கு நானே வருத்தப்பட்டுட்டு இருக்கேன். அதனால வர்றது வரட்டும், தூய தமிழ் தான் வேணும்னா அதுக்கு தனியா ஒரு போட்டி வச்சிருக்கலாம்ங்குறது என் கருத்து. மத்தப்படி நடுவர்கள் என்ன நினைக்குறாங்களோ அந்த முடிவுக்கு கட்டுப் பட்டு தான் ஆகணும்

      Delete
    3. அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல எண்டோமெட்ரியம் (Endometrium) அடர்த்தி (thickness) ஜாஸ்தியா இருக்கு, ஹார்மோன் லெவல் கம்மியா இருக்கு, நீ masturbate பண்ண மாட்டியான்னு கேட்டாங்க”. இந்த கூற்றை ஆராய்ச்சி கட்டுரைகள் மூலம் தான் நிரூபிக்கவேண்டும். ஒரு டாகடர் உங்களுக்கு கூறியதற்கு ஒரு மதிப்பும் இல்லை./// நானே ஒரு மருத்துவ ஆராய்ச்சி துறை மாணவி தான். ஒரு புரியாத பி.ஹச்.டி ரிபோர்ட் ஆகிடக் கூடாது நான் சொல்ல வந்த விஷயம்னு தான் இவ்வளவு மெனக்கிடுறேன்.... என்னோட எல்லா பதிவுகளுமே அனுபவங்கள் சார்ந்து எழுதுறது தான். என்னை நான் படிச்சுட்டு இருக்கேன், ஆராஞ்சுட்டு இருக்கேன்னு வேணா வச்சுக்கலாம்.

      Delete
  23. Unfortunately I have to give negative mark for this post. Dont worry I am not in the evaluating committee!! So, you might win the first prize! :)

    It is not that I am conservative or a saint. I dont like the justification "it is not a sin". I think it is and people who engage in that are indeed sinners. May be everyone in the world is.If I eat noveg and kill animals for my living, Is that not a sin? I think it is. It is funny people try not to be a "sinner". Once you born as a human being with a working brain, you need to realize that you are a sinner!

    ReplyDelete
    Replies
    1. உலகத்துல இருக்குற ஒரு செல் உயிரில இருந்து இந்த உணர்வு தொடங்குது. bacterial conjugation-ல ஆரம்பிச்சு mating வரைக்கும் இந்த உணர்வு வராத உயிரினங்கள் இல்ல (with few exceptions, but even though we list them in exceptions list because we don't know the actual feeling of them). மனுசனா பிறந்தாலே அவன் பாவம் செய்தவன்னா இனப்பெருக்கம் பண்ற எல்லா உயிரினங்களும் பாவிகள் தானா?

      வேடிக்கையா இருக்கு... survival of the fittest கேள்விப்பட்டுருப்பீங்க. நீங்க சொல்றத பாத்தா sexual feel-ல நிவர்த்தி பண்ணிக்குற நிலைல இருக்குறவங்க மட்டுமே புண்ணியம் செய்தவங்க, மத்தவங்க எல்லாம் பாவிகள்னு சொல்ல வரீங்களா? இந்த உணர்வு வராத ஒரே ஒரு மனுசப் பிறவியயோ இல்ல விலங்கினத்தையோ உங்களால அடையாளம் காட்ட முடியுமா?

      Delete
    2. I dont understand why you are comparing reproduction here? You dont talk about reproduction here. You are talking about masturbation. Masturbation does not lead to reproducing younger ones. So, you are digressing from the topic you brought up here.

      I dont understand why we have to justify whatever we do are all "OK"? It is better to plead guilty and move on! Human beings set the rules of what is ight and wrong. How do they know which is right or wrong? They dont. They fool themselves by doing so!

      Delete
  24. "போட்டியில்" கலந்துகொள்(வதற்காக)ள எழுதிய கட்டுரையாகினும்..உங்களுக்கு சொல்லனும்னு முடிவு செய்த ஒரு "விஷயத்தை" (மேக்ஸிமம்..ஐயோ இங்கிலிஷ்) இவ்வளவு தெளிவாகவும் (அதே சமயம்) அழுத்தமாகவும் (துணிவுடன்) சொன்னதற்கு வாழ்த்துக்கள். மத்தபடி..இந்த "போட்டி" அமைப்பாளர்களின் "தமிழ் பற்றுக்கு" கட்டுப்பட்டு "தூய தமிழ்" எழுதினால்..நீங்க சொல்லவ(ந்த)ர "விஷயம்" என்னைப்போன்ற (!) "சாமாணியனுக்கு" (அதிகமாக) புரிந்திட வாய்ப்பில்லை. இதற்கு முன் "மாதவிடாய்" பற்றிய "விளக்க"த்தை காட்டிலும்..மிக முக்கிய "விஷயத்தை" இவ்வளவு எளிதாக (எழுத்தில்) சொன்னதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த "போட்டி" அமைப்பாளர்களின் "தமிழ் பற்றுக்கு" கட்டுப்பட்டு "தூய தமிழ்" எழுதினால்..நீங்க சொல்லவ(ந்த)ர "விஷயம்" என்னைப்போன்ற (!) "சாமாணியனுக்கு" (அதிகமாக) புரிந்திட வாய்ப்பில்லை. /// ஒரு blogger ரா சாமானியனுக்கும் புரிய வைக்கணும்ங்குறது தான் அண்ணா என் ஆசை. இந்த பாராட்டு போதும் அண்ணா தேங்க்ஸ்

      Delete
    2. இந்தக் காலத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தமிழ் புரிய வேண்டும. தமிழ் போட்டி என்றால் தமிழில் தான் எழுதணும். தாய் மொழியில் புரியவில்லை என்று சொன்னால் அளவிற்கு நம் தமிழ் மொழியை நாசப் படுத்தி இருக்கிறார்கள். இது மாறவேண்டும்! அதற்கு தான் இந்த போட்டி!

      மறுபடியும்...கணினி என்ற சொல் எளிதா அல்லது கம்ப்யூட்டர் எளிதா என்றால் கம்ப்யூட்டர் தான் எளிது என்று அன்று சொன்னோம்...இன்று கணினி தான் எளிது மட்டுமல்ல. சரியான தமிழ் வார்த்தை.

      தமிழ் விக்சனரி செல்லுங்கள். ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் கற்றுக் கொள்ளுங்கள்.
      ----------------------
      "endometrium" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது
      • endometrium
      பலுக்கல் endometrium கருப்பையின் உள்ளுறை கருப்பை உட்சளிப் படலம்; கருப்பையகம் உள்வரிச் சவ்வு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் endometrium
      ---------------
      endometrium: இதை ஆங்கிலத்தில் எழுதவதை விட தமிழில்.."கருப்பை உட்சளிப் படலம்" என்று எழுதினால் எளிதாக எங்களுக்கு புரியும். ஆங்கில வட சொல்லில் அறிவிள்ளதா என் மாதிரி தமிழர்களுக்கு எளிதாக புரியும்..நீங்கள் இன்று தமிழில் எழுதுவது பரிசுக்கு அல்ல; நாளை எனக்கு என் சந்ததியினருக்கு.

      Delete
  25. பாலியல் கல்வியின் அவசியத்தை உணரச்செய்த பலமான பதிவு மணைவி மற்றும் சகோதரியின் பல கஷ்டங்களை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி

    உங்கள் தொய்வில்லாத எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    இந்த கட்டுரை வெற்றிபெற வாழ்த்துக்கள்

    அதிகமாக தமிழ் படுத்தினால் கட்டுரை வெற்றிபெறும் உங்கள் எண்ணம் தோல்வியடைய வாய்புள்ளது எனவே உள்ளது உள்ளபடியே இருக்கலாம் எனக் கருதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்... என்னை புரிஞ்சுகிட்டதுக்கு. கட்டுரை வெற்றி பெறுறத விட என் எண்ணத்த பலமா சொல்ல நினைக்குறேன். ஏற்கனவே நிறைய மாத்தி எழுதிட்டேன், இதுக்கு மேல மாத்தி எழுதினா அதுல இருக்குற எளிமை இல்லாம போய்டும். அப்புறம் இதுவும் ஒரு மருத்துவ கட்டுரைன்னு கடந்து போய்டுவாங்க.... நான் மக்களோடு மக்களா பேச நினைக்குறேன் அவ்வளவு தான்

      Delete
    2. காயத்ரி தேவி அம்மா!
      எளிமை எப்படி போகும்? ஆங்கிலத்தில், வட சொல்லில் சொல்வது எளிமை என்று நீங்கள் நினைத்து கொண்டு இருப்பது தவறு--அதை மாற்ற இந்த போட்டி.

      மறுபடியும்...கணினி என்ற சொல் எளிதா அல்லது கம்ப்யூட்டர் எளிதா என்றால் கம்ப்யூட்டர் தான் எளிது என்று அன்று சொன்னோம்...இன்று கணினி தான் எளிது மட்டுமல்ல. சரியான தமிழ் வார்த்தை.

      நீங்கள் "endometrium" என்று எழுதினால் எங்களுக்கு எப்படி புரியும்? தமிழில்
      கருப்பை உட்சளிப் படலம் என்று எழுதினால் எங்களை மாதிரி தமிழில் மட்டும் புரிந்து கொள்ளும் ஆட்களுக்கு வசதியாக இருக்கும் அல்லவா? ஆங்கிலத்திலும் எங்களுக்கு அறிவில்லை; வட சொல்லிலும் அறிவில்லை. ஏன் எங்களுக்காக ஏதோ கொஞ்ச்ம் நஞ்சம் தமிழ் படிக்கத் தெரிந்த எங்களுக்காக தமிழில் எழுதுங்களேன்---தயவு செய்து தமிழில் மட்டும்-எங்களுக்கும் புரியும்படி ஒரே மொழியான, நம் தாய் மொழி தமிழில்----போட்டியை நடத்தும் தமிழ் இணையதுக்காகவும் தமிழில் எழுதுங்கள் அம்மா!

      Delete
    3. அப்படி எழுத நிறைய தமிழ் அறிஞர்கள் இருக்காங்க சாரே, காயு தேவையில்ல

      Delete
  26. காயத்ரி தேவியாரே!
    தமிழ் மட்டுமே அறிந்த (பத்தாம் வகுப்பு தமிழ்) எனக்கு சில கேள்விகள். உங்கள் கட்டுரையில் இருந்து சில கேள்விகள் மட்டுமே! எல்லா கேள்விகளையும் இங்கு வைக்கவில்லை.
    _________________
    உங்கள் கட்டுரையில் இருந்து...
    நான் யூ.ஜி படிச்சது: யூ.ஜி என்றால் என்ன அர்த்தம். நானும் தமிழ்நாட்டு தமிழன் தான். இதற்கு தமிழில் வார்த்தை இல்லையா? இல்லை என்றால் யூ.ஜி என்ற வார்த்தையை உபயோகப் படுத்தலாம். ஆமாம். யூ.ஜி என்றால் என்ன அர்த்தம்?

    ‘ஆக்டிவ் மெம்பர்ஸ்ங்குற’ = இரண்டு புரியாத வார்த்தைகள். அவைகளுக்கு என்ன தமிழ் அர்த்தம்?

    யூனிவேர்சிட்டில வச்சு ஒரு ‘மீட்டிங்’==இரண்டு ஆங்கில வார்த்தைகள். என்ன தமிழ் அர்த்தம்?

    Masturbation is not a sin = Masturbation அப்புறம் sin இவைகளுக்கு தமிழில் என்ன அர்த்தம்?

    நார்மல் நார்மல்ன்னே ரிபோர்ட்ஸ் காமிக்கும்== நார்மல் என்றால் என்ன அர்த்தம். எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். அதான்!

    தைராய்டு பிரச்சனை = அது என்ன தைராய்டு பிரச்னை? தமிழில் விளக்கமாக சொல்லுங்கள்.

    ஜவ்வு மாதிரி ஒரு சதைப் பகுதி== அது என்ன ஜவ்வு? வட சொல்லா? ஆங்கிலமா? தமிழில் அர்த்தம் சொல்லுங்க. ஜவ்வு என்றால் சளிப்படம் என்று அர்த்தம் கொள்ளலாமா?

    டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க டெலிவரி ஆனவங்களுக்கு== டாக்டருக்கு மருத்தவர் என்ற தமிழ் வார்த்தை எனக்கு தெரியும். அது என்ன டெலிவரி" அதுக்கு அர்த்தம் புரியவில்லை அம்மா! டெலிவரிகு தமிழ் அர்த்தம் சொல்லுங்க.

    இன்னொரு டாக்டர ரெபர் பண்ணி விட்டாங்க.== டாக்டர் புரியுது! அது என்ன ரெபர் பண்ணி விட்டாங்க? தமிழில் அர்த்தம் சொல்லுங்க.

    ஹார்மோன் லெவல்= ஹார்மோன் என்றால்? லெவல் என்றால்? ஒருவேளை லெவல் என்றால் அளவு என்று அர்த்தமா? எனக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. தமிழிலும் ஏதோ பத்தாம் வகுப்பு தமிழ் தான்.

    அட்வைஸ் = தமிழில் என்ன அர்த்தம்?
    சைட் எபக்டாவும்= தமிழில் என்ன அர்த்தம்?

    சர்ஜரி மூலமா இந்த எண்டோமெட்ரியம் செல்கள ரிமூவ் பண்றாங்க== சர்ஜரி அப்புறம் ரிமூவ் இதற்க்கு தமிழில் அர்த்தம் இல்லையா இல்லைதமிழில் எளிதான வார்த்தைகளே இல்லையா?

    கியாரண்டியும்==இது என்ன புது வார்த்தை? என்ன மொழிங்க?
    ஈசியா = அப்படின்னா? தமிழில் இதற்கு வார்த்தை இல்லையா?
    கண்ட்ரோல் பண்ண முடியலனா == கண்ட்ரோல் என்றால் என்ன அர்த்தம்?
    கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க= கற்பழிப்பிற்கு தமிழ் வார்த்தைள் உண்டு. அதை எழுதுங்கள் அம்மா!
    ரேஞ்ச்ல=அப்டின்னா?
    யூஸ்=அப்படின்னா? யூஸ்-இது தமிழா?
    சாட்டிங்= சாப்பிடும் இடமா?
    ஸ்ட்ரெஸ் ரிலீப்.= அப்படின்னா? என்ன மொழி இது; இது தமிழ் இல்லை என்று தெரிகிறது!

    இது மாதிரி ஏகப்பட்ட புரியாத வார்த்தைள், சொற்றொடர்கள். மொழிகள். இது தமிழ் போட்டிக்கா? தமிழ் இணையம் அளிக்கும பரிசு; தூய தமிழில் உள்ள கட்டுரைக்கு தான் பரிசு கொடுக்கவேண்டும்.

    அன்புள்ள,
    மற்ற மொழிகள் அறியா மற்றும் ஏதோ தமிழ் மட்டும் கொஞ்சம் [பள்ளிப் படிப்பு வரை] அறிந்த
    உங்கள் நண்பன்.
    நெற்றிக்கண்ணை திறக்காத நக்கீரன்!

    ReplyDelete
    Replies
    1. இது போட்டிக்கு எடுக்கப் படுதான்னே தெரியாது, அதுக்குள்ள என்னவோ இதுக்கு பரிசு குடுத்த மாதிரியும், நீங்க அதுக்காக போராடுற மாதிரியும் சொன்னா என்ன அர்த்தம்.

      ஹஹா... இதன் மூலம் நடுவர்களுக்கு நீங்க சொல்ல வந்தத சொல்லிட்டீங்க. அவங்களும் கண்டிப்பா புரிஞ்சுப்பாங்கன்னு நம்புறேன்... உங்க ஆசை நிறைவேற என்னோட மனப்பூர்வமான வாழ்த்துகள்

      Delete
  27. பொதுவாக வெளிப்படையாய்ப் பகிர்ந்து கொள்ள முடியாத, உடலியல் உளவியல் பாலியல் தொல்லைகள் சார்ந்த செய்திகளை இக்கட்டுரையில் துணிச்சலுடன் பதிவிட்டுள்ளமைக்குப் பாராட்டுகள். நாம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தோடு இணைந்து நடத்துகின்ற மின்-தமிழ் இலக்கியப் போட்டி என்பதால் விரவி வந்துள்ள பிறமொழிச் சொற்களைத் தவிர்த்திருந்தால் எளியவர்க்கும் நன்கு புரிய ஏதுவாகும்.
    தங்களின் துணிவினைபாராட்டி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. துணிச்சல்ங்குறது ஒரு பிரச்சனையே இல்ல, ஆனா அது பின்னால சேற்றை வாரியிறைக்க வருவாங்க பாருங்க, அது தான் கஷ்டமா இருக்கும். ஆனா இங்க ஒரே ஒருத்தர தவிர வேற எல்லாருமே வரவேற்றுருக்காங்க, அதுவே எனக்கு பெரிய வெற்றி தான். பிறமொழி சொற்கள முடிஞ்ச அளவு மாத்தி இருக்கேன். நன்றி

      Delete
  28. பாலியல் கல்வி அறிவு பள்ளியிலேயே கவனமாக கொடுக்கப்பட வேண்டும்...எது தவறு எது சரி என்பது இன்னும் நாம் சமூகத்திற்கு உணர்த்தவில்லை...உடலுறுப்பு வார்த்தைகளையே கெட்ட வார்த்தைகள் என்றுதான் இன்னும் வழக்கில் உள்ளன...இருந்தாலும் இந்த கருத்து எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று தான்மா...பொதுவாக தமிழ் கட்டுரைப்போட்டி என வருகையில் ....இந்தமாதிரி மொழிச்சிக்கல் வரும்....இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  29. எனது கருத்துக்கள் நல்ல எண்ணத்தில் எழுதியவை. எவரும் எடுக்க பயப்படும் பொருளை (தமிழ் நாட்டில் ) ஒரு பெண் எடுத்து கட்டுரையாக வடிக்கும் பொது, எழுத்தும் எழுதும் நடையும் நண்பிகளுடன் அரட்டை அடிக்கும் பாங்கில் இருந்தது. இதுபோட்டிக்கு சரியல்ல. எளிய தமிழ் வார்த்தைகள் இருக்கும் பொது, ஆங்கில, வட சொற்கள் ஏனோ!

    முப்பது வருடம் முன்பு அபேட்சகர் என்ற பெயரை தமிழ் படுத்தியதற்கு தமிழ் ஊடகங்கள் செய்த கலாட்டா? அவர்கள் எல்லாம் தமிழ் விரோதிகள். உங்களுக்கு தெரியுமா அபேட்சகர் என்றால் அர்த்தம் ?
    அபேட்சகர் என்றால் வேட்பாளர்! ஹஹ்ஹா
    ஒரு அசிரியர் மாதிரி நீங்கள் நன்றாக எழுத நான் கூறிய ஆலோசனைகள். தவறாக இருந்தால் மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. இந்த விசயங்கள அரட்டையா எழுதி போடுறப்பவே நிறைய எதிர்ப்புகள சந்திச்சுட்டேன். எந்த விதமான நாப்கின்கள தேர்ந்தெடுக்கணும்னு பேசினதுக்கே, ஒரு பொண்ணு இத எல்லாம் வெளில சொல்லலாமான்னு ஒரு நாலு பேர் வம்படியா வந்து உக்காந்து பிரச்சனை பண்ணினாங்க. அத விட சென்சிடிவ் விஷயம் இது, இத பத்தி பேசுறப்ப சரளமா english வார்த்தைகள் வந்துடுச்சு. நீங்க மன்னிப்பு கேக்குறது எனக்கு நெருடலா இருக்கு. வயசுல பெரியவங்களா தான் நீங்க இருப்பீங்க. நான் மதிச்சிருக்கணும் உங்கள. முதல்ல சாரி. இன்னும் மூணு நாள் இருக்கு. முடிஞ்ச அளவு இத மாத்திடுறேன். போட்டி எல்லாம் முடிஞ்சு வேற இடங்கள்ல பதிவிடலாம்னு ஒரு நிலை வர்றப்ப வேணா இத அப்படியே வெளியிட்டுக்குறேன். நன்றி.

      Delete
    2. என்னால முடிஞ்ச அளவு சில google translater உதவியோட தமிழ் படுத்தியிருக்கேன். இன்னும் சில வார்த்தைகள் (எடுத்துக்காட்டு: ஸ்கேன்) தமிழ்ல என்னன்னு எனக்கு தெரியல. மறுபடியும் இத வாசிச்சுட்டு இன்னும் என்ன தப்பு விட்டுருக்கேன்னு சொன்னா மாத்திடுறேன். நன்றி

      Delete
  30. தோழி !! நான் முன்பே முதல் ஆளாய் கருத்துகள் வரும் முன்னரே இங்கே வந்திருந்தேன். ஆனால் என் இணைய பிரச்சனையால் அப்போது கருத்துகூற முடியவில்லை அதனால் தான் fb ல கமெண்ட் போட்டேன். பாரதி தம்பி விகடனில் எழுதிய பேசாத பேச்செல்லாம் என்பதையும் மிஞ்சி விட்டது உங்க பதிவு! பல புதிய செய்திகள் தெரிஞ்சுக்க முடிந்தது. ஆண்கள் சுயஇன்பம் பெரும் பாவம் என்பது போல பத்துமணி தொலைக்காட்சி வைத்தியர்கள் கத்திக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் பெண்களுக்கு இதை பரிந்துரைப்பதை இத்தனை பேர் ஏற்றுகொண்டிருப்பதே உங்கள் முதல் வெற்றி என்று தோன்றுகிறது. பத்தோடு பதினொன்றாக ஒரு பதிவெழுதி காலம் போக்குவதைவிட இப்படி ஒரு விழிப்புணர்வு பதிவை துணிந்து எழுதிவிட்டு சும்மாவே இருக்கலாம்!! ஆனால் நீங்கள் தொடர வேண்டும் தோழி! அந்த அனானி யாரோஎவரோ இருந்துவிட்டுப்போகட்டும். ஒரு தோழியாய் உங்களுக்கு ஒரு சஜஷன் சொல்ல ஆசைபடுகிறேன். நானும் உங்களை போல எனக்குத்தொன்றுவதை என் மொழியில் பதிவாக்குபவள் தான். ஆனா இந்த போஸ்ட் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் மற்ற பதிவுகள் போல அல்லது வெற்றி பெற்றபின் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் பகிரப்பட போகிற, அவர்களது நூலில் தொகுக்கப்பட்ட உள்ள ஒரு கட்டுரை என்பதையும், பின்வரும் காலத்தில் பல கல்லூரி மாணவர்கள் படிக்கப்போகிற விஷயம் என்பதும் நாம் நினைவு படுத்திக்கணும். இப்போவே நீங்க நிறைய மாத்திருக்கீங்க. இப்போ நான் சொன்ன கண்ணோட்டத்தில் மீண்டும் ஒருமுறை உங்க பதிவை வாசித்துப்பார்த்து ஆவன செய்யவேண்டும் என்பது இந்த தோழியின் ஆசை. செய்வீர்கள் என நம்புகிறேன். வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு நன்றி. இப்ப மறுபடியும் சில வார்த்தைகள தமிழ்ப்படுத்தி இருக்கேன். எனக்கே நிறைய விஷயங்கள் இப்ப தான் சரியா புரிபட ஆரம்பிச்சிருக்கு. எழுத்துல முதிர்ச்சி வர இன்னும் நான் பக்குவப்படணும்னு தோணுது. அனானி சொன்னது முதல்ல எனக்கு குழப்பமா தான் இருந்துச்சு. இப்ப யோசிச்சு பாத்தா, நம்ம மொழில பக்குவமா பேசுறது தப்பில்லங்குறத உணர ஆரம்பிச்சுட்டேன். அவருக்கும் என்னோட நன்றி

      Delete
  31. நீங்க எடுத்துகிட்ட, இந்த தலைப்பே. உங்களுக்கு வெற்றி குடுக்கணும்னு நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.. ஐந்து நிமிடம் என் அம்மா. என் தங்கை, என்னுடன் பழகி சண்டை இட்டு சென்ற என் தோழி, இப்போழ்து என்னுடன் பழகி வரும் எனது தோழி மற்றும் விவாகரத்து பெற்று மறுமணம் எதிர்பார்க்கும் எனது இன்னொரு தமக்கை இவங்க எல்லாம் தான் நினைவில் வந்தார்கள்.. உங்க பதிவோட வெற்றி இது தான்.. என்னை சார்ந்துள்ள பெண்கள் அனைவரிடமும் உண்மையான அக்கறை மற்றும் மரியாதை இனிமேல் தான் ஏற்படும் எனக்கு ..

    வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற, மற்றும் கோடி நன்றிகள் என்னை போல் மனிதர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ...

    ReplyDelete
    Replies
    1. இத எழுதினதுக்கான நோக்கம் நிறைவேறின மாதிரியான உணர்வு எனக்கு. உங்களுக்கு என்னோட வாழ்த்துகள்

      Delete
  32. காயத்ரி அம்மா:
    வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கு என்னோட நன்றிகள்.

      Delete
  33. யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த சகோதரிக்கு வாழ்த்துகள்.
    குட்டிரேவதியின் தொகுப்புத் தலைப்புப் போல அதிர்ச்சியூட்டும் தலைப்போடு ஆழமான கட்டுரையைத் தந்தமைக்கு வாழ்த்துகள். சிலநேரம் இதுபோலும் அதிர்ச்சி வைத்தியமும் தேவைதான். ஆனால், இது நமது “மூட“பழக்கம் மிகுந்த சமூகத்தில் பெண்ணுரிமைகளின் உச்சகட்டமாகவே இது எனக்குப் படுகிறது. அதாவது, உங்கள் மொழியிலேயே சொன்னால், தன் மனைவியின் “மூடு“பற்றிக் கவலைப்படாமல் அணுகும் ஆண்களின் உலகமிது. உறவுக்குப் பின்னுமான உளவியல் நிறைவுதான் நிறைவான வாழ்க்கையின் மையம். இதுபற்றியே பேசப்படாத நம் சமூகத்தில் அதன் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் தாவியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. அதாவது பத்தாம் வகுப்பு மாணவரிடம் முதுகலைப் பாடத்திட்டங்களை அறிமுகப்டுத்துவது என்று சொன்னால் புரியுமா? பலகட்ட நிலைகளில் பல படிகளைத் தாவிக் குதிக்கச் சொல்கிறீர்கள்.. எனவே இது சரியாகப் புரிந்துகொள்ளப்படும் சூழலைப் பற்றி முதலில் பேசவேண்டும் என்பதே எனக்குப் படும் கருத்து. அதற்காக, மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவன்தான் விமானம் ஓட்டப் பழகவேண்டுவதும் இல்லை.. தங்கள் நடையும் ஒரு தடையாகப் படுகிறது..கல்லூரி மாணவ விடலை நடை. ஒரு பெரும் சவாலான கருவை இப்படி எழுதுவதும் சரியாகப் படவில்லை.. என..எனக்குப் பல கருத்துகள் தோன்றினாலும், தங்களின் கருத்துகள் பெண்ணுலகமறியச் சொ்ல்லப் படவேண்டியவை என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தன் மனைவியின் “மூடு“பற்றிக் கவலைப்படாமல் அணுகும் ஆண்களின் உலகமிது/// இத பத்தி நான் ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருக்கேன். அதோட இது என் முதல் கட்டுரை இல்ல. தொடர்ந்து எழுதிட்டு தான் இருக்கேன். இன்னொன்னு, மக்கள் பேசுற மொழில இருந்தா அவங்கள ரீச் ஆக ஈசியா இருக்கும். தூயத் தமிழ் பாடப்புத்தகத்துல வைக்க வேணா யூஸ் ஆகும். நான் என்னை வாசிக்குரவங்களுக்கு புரிய வைக்கனும்னு ஆசைப்படுறேன். மாபெரும் விசயம்னு சொல்றீங்க, அத ஏன் கனமா தான் குடுக்கணுமா? ஈசியா கடந்து போற மாதிரி குடுக்க கூடாதா

      Delete
  34. therinchuka vendiya vishyam..aaan open ah yartayum kekka mudiyatha onnu... romba azhaga explain pannirukeenga.. ipdi kooda disease irukuma nu yosikiren.. but ur such a brave lady to talk what you think.. hats off.. because i lost my identity for some reasons.. god bless you dear..

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கு என்னோட நன்றிகள். இத பேசுறதுல எப்பவுமே தப்பு இல்ல, ஆனா என்ன விதத்துல பேசுறோம்ங்குறது தான் முக்கியம். கொஞ்சம் வார்த்தைகள் பிசகிட்டாலும் சமூக போராளிகள் பொங்கிடுவாங்க.

      Delete
  35. Advance Congratulations.... Keep it up

    ReplyDelete
    Replies
    1. உங்க முன்கூட்டிய வாழ்த்துக்கு நன்றி ஜெய்ச்சுட்டேன்

      Delete
  36. Very bold article...
    இந்த மாதிரி எழுதுவதற்கு ஒரு தில் வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  37. வாழ்த்துகள் Ukg..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் :) போட்டில ஜெய்ச்சாச்சு

      Delete
  38. கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  39. முதல் பரிசு பெற்றதும் வாழ்த்தவேண்டும் என்றிருந்தேன்...வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

      Delete
  40. முதல் பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..சகோதரி...பென்ணின் உணர்வுகள் போற்றப்படுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி. வெளியில சொல்லாம சொல்லாம ஸ்ட்ரெஸ்ல எத்தனை பெண்களோட சுயம் இழந்துருக்கும்? நிறைய பேசணும் பெண்கள் பற்றி

      Delete
  41. போட்டியில் முதலிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  43. காயு டியர்!! வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு. என் எழுத்துக்கான பெரிய அங்கீகாரம் இது

      Delete
  44. வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்--------ஆம்! உங்களை எழுத்தை dissect செய்த அதே அனானி தான்!

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்து தான் அப்பவே எனக்கு கிடச்சிடுச்ச்சே... கொஞ்சம் தயக்கத்தோட இருந்த என்னை கொஞ்சம் கொஞ்சமா உளி கொண்டு செதுக்கி முதல் பரிசுக்கு காரணமா இருந்த உங்களுக்கு என்னோட நன்றி.

      Delete
  45. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கு என்னோட மனமார்ந்த நன்றி

      Delete
  46. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

      Delete
  47. அன்புள்ள சகோதரி,

    முதல் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  48. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டுக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  49. பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் காயத்ரி

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றியும் கூட

      Delete
  50. வெற்றிபெற்றமைக்குமனமார்ந்தவாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாழ்த்துகளுக்கு

      Delete
  51. முதல் பரிசு வென்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. என்னோட மனப்பூர்வமான நன்றி

      Delete
  52. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் காயத்ரி

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு என்னோட நன்றி

      Delete
  53. வாழ்த்துகள் ....

    ReplyDelete
  54. காயத்ரி முதலில் உங்களுக்கு வாழ்த்துகளுடன் பொக்கே! உங்க அம்மாவைப் பார்த்தேன். ஆனால் நானும் உங்கள் ஊர்தான் என்பதைச் சொல்லிக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். தங்கள் விருதில் இருந்த தவறைத் திருத்த விழாக் குழுவினருக்குத் தெரிவிப்பதில் கவனம் சென்றதால் மறந்தே போய்விட்டேன். தங்கள் புகைப்படத்தை அந்த விருதில் தான் கண்டேன்.

    தங்கள் கட்டுரையை முன்னரேயே வாசிக்கவில்லை. நடுவர் குழுவில் எங்கள் தளம் இருந்தமையால்.

    இப்போது கட்டுரைக்கு.......அருமையான தலைப்பு. பாராட்டுகள். கருத்துகளும் அருமை. நானும் நாகர்கோவில் என்பதாலும்...நான் படித்தது ஹோலிக்ராஸ் கல்லூரி. வருடம் 1983 பேச். அப்போதே எங்கள் கல்லூரியில் ஒரு ஃப்ரென்ச் (என்ற நினைவு) மருத்துவ அறிவியல் கூடிய பெண்களின் பிரச்சனைகள் சார்ந்த திரைப்படம் காட்டி, அதில் எல்லாமுமே பேசப்பட்டது...குழந்தை உருவாகுவது எப்படி, செக்ஸ் கல்வி, கருக்கலைப்பு, சுய இன்பம், என்பது பற்றி முழுமையான எல்லா தகவல்களும் உட்ப்ட ஒரு வாரம் செமினார் வகுப்புகள், தியரி வகுப்புகள், குடும்பம்பற்றி, உறவு பற்றி என்று பல விதத்திலும் கவுன்சலர்ஸ் என்று எங்களுக்கு வகுப்புகள் கலந்துரையாடல், கவுன்சலர்களுடன் நம் தனிப்பட்டக் கேள்விகள், அவர்களது அறிவுரைகள், ஆலோசனைகள் என்று எல்லாம் அறிந்துகொள்ள முடிந்தது. அப்போதே எனக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய தாங்கள் சொல்லும் கருத்துகள் உண்டு. ஏன் இந்தக் கல்வியை எல்லா கல்லுரிகள், உயர்நிலைப்பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதன் பின், முதுகலை என்று படித்தாலும், எழுத நினைத்தாலும் எழுத முடியாமல் இத்தனை வருடங்கள் பரணில் இருந்தவை கடந்த இரு வருடங்களாகத்தான் ந்ண்பரும் நானும் சேர்ந்து எழுதி வருகின்றோம். அதனால் எழுத்துகள் அனுபவம் இல்லாமல் போனது. எனது கருத்துகளை தங்கள் கட்டுரைகள் வெளிப்படுத்தும் போது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. மிக்க நன்றி காயத்ரி....பாராட்டுகள், வாழ்த்துகள். (கொஞ்சம் பெர்சனல் உரையாடல்களைத் தவிர்த்து அதைக் கட்டுரை வடிவத்தில் கொடுத்திருக்கலாமோ....கட்டுரைக்கு அது அனுபவப் பதிவாகிவிட்டதோ என்று தோன்றியது...பரிசு வெல்லக் கூடிய தகுதி உள்ளக் கட்டுரை இது பேசப்படாத ஒன்று என்பதால்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முதல்ல நன்றி. அம்மா உங்கள சந்திச்சத பத்தி சொன்னாங்க.

      அப்புறம் நான் படிச்சதும் அதே காலேஜ் தான், என்ன வருஷம் தான் 2008.

      கொஞ்சம் பெர்சனல் உரையாடல்களைத் தவிர்த்து அதைக் கட்டுரை வடிவத்தில் கொடுத்திருக்கலாமோ//// எனக்கு அதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல. வெறும் கட்டுரையா எழுதிட்டு போய்ட்டா பரிசு கிடைக்க தகுதியானதா வேணா இருக்கலாம் ஆனா மக்களுக்கு நான் கொண்டு சேர்க்க நினச்ச விதமும் விசயமும் மிஸ் ஆகியிருக்கும். ஒரு நல்ல ஆசிரியை புத்தகத்துல உள்ளத அப்படியே சொல்லிக் குடுக்குறவங்களா இருக்கக் கூடாது. நாளைக்கு என் பொண்ணுக்கு நான் என்ன சொல்ல நினைக்குறேனோ அத தான் நான் இங்க எழுதிட்டு இருக்கேன். அப்படி பாக்குறப்ப இந்த மாதிரியான ஒரு உரையாடல் ஒரு நெருக்கத்த குடுக்கும். நாம என்ன சொல்ல வரோமோ அத சரியா புரிய வைக்க முடியும்

      மக்களுக்கு தேவை கடினமான கட்டுரை வடிவம் இல்ல, ஒரு இயல்பான பேச்சு நடை. நான் என்னோட ஸ்டுடென்ட்ஸ்க்கு எப்படி க்ளாஸ் எடுக்குறேனோ அதயே தான் எழுத்துல குடுக்குறேன். இதுவே என் பலமாவும் நான் நினைக்குறேன்...

      பலகீனம்னு நினைக்குறது அவங்கவங்க கருத்தே...

      Delete
    2. ஒரு நல்ல ஆசிரியை புத்தகத்துல உள்ளத அப்படியே சொல்லிக் குடுக்குறவங்களா இருக்கக் கூடாது. நாளைக்கு என் பொண்ணுக்கு நான் என்ன சொல்ல நினைக்குறேனோ அத தான் நான் இங்க எழுதிட்டு இருக்கேன்.// தெரியும் காய்...உங்க பதிவுகளைப் படிப்பவள்தான். நல்ல கருத்துதான்...ஸ்டீரியோ டைப்பா இல்லாம...ரைட்...

      நான் என்னோட ஸ்டுடென்ட்ஸ்க்கு எப்படி க்ளாஸ் எடுக்குறேனோ அதயே தான் எழுத்துல குடுக்குறேன். இதுவே என் பலமாவும் நான் நினைக்குறேன்... // குடோஸ்!!! ரைட் சாய்ஸ் பேபி...என்னுடைய செமினார் வகுப்புகள் அப்போது கல்லூரியில் இப்படித்தான் பேசப்படும்....மீண்டும் உங்களில் என்னைப் பார்க்கின்றேன். ஆனால் டீச்சர் கனவு பலிக்கவில்லை....

      நோ இது உங்கள் பலமே! மாணவ மாணவிகளின் நெருக்கம்தான் மிக மிக முக்கியம். எகைன்....உங்களுக்கு என் மனமார்ந்த கைகுலுக்கல்கள்....நிச்சயமாகச் சந்திக்க வேண்டும் என்ற அவா எழுகின்றது....பார்ப்போம்...(நாங்கள் இருவர் எழுதுகின்றோம் துளசிதரன் எனது நண்பர், நான் கீதா)

      கீதா

      Delete
  55. Hats off mam,really superb and need guts to write abt tis….congrats for won the prize.ellorum thayakura visayatha neega post panirukega.intha articlela ellorum kandipa padikanum share pananum…great effort mam…(http://menstrupedia.com/ )..tis link useful for everybody

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அந்த லிங்க் பாத்தேன், நல்ல யூஸ்புல்லா இருக்கும்னு தோணுது. நண்பர்களோட பகிர்ந்துக்குறேன் நன்றி

      Delete
  56. Bold subject...neatly handled - but I am not sure whether you have discussed about the theme to any relevant doctors like 'psychiatrists' and 'gynaecologists' before presenting it. Ours is a country with a unique culture and accepting certain 'behavioural exceptions' may be a taboo.....anyhow my appreciation goes for the 'controversial title' handled by a woman......best of luck!

    ReplyDelete
    Replies
    1. இத பத்தி நான் நாலு மாசத்துக்கு முன்னாடியே ஒரு பெண்கள் குரூப்ல டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். அங்க டாக்டர்களும் சைக்காலஜிஸ்ட்களும் அடக்கம். அவங்களோட நடந்த கருத்து பரிமாற்றங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தெளிவுக்கு வந்து தான் இத நான் எழுதினேன்.

      அதோட, எந்த பெண்களும் இத குற்றம்னு சொல்லல. வயசானவங்க கூட தைரியமா பேசுறமான்னு தான் தட்டிக் குடுத்தாங்க. சின்ன வயசுல கல்யாணம் ஆனதால இத பத்தி தெரிஞ்சிக்கலன்னு சொன்னவங்களும் இருந்தாங்க, என் வாழ்க்கைய மீட்டெடுத்தது இதான்னு வெளிப்படையா சொன்னவங்களும் இருந்தாங்க. அதனால தான் சொல்றேன், பெண்கள் இத ஈசியா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க, இது தப்பில்லன்னு ரியலைஸ் பண்ணவும் செய்றாங்க. இதோ இங்க கமன்ட் பண்ணின ஆண்களும் தப்புன்னு சொல்லலயே...

      ஆக எந்த விதமான விசயமா இருந்தாலும் சொல்ற விதத்துல சொன்னா நம்ம மக்கள் உணர்ந்து ஏத்துக்குறாங்க

      Delete
  57. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை உங்கள் அனுபவத்துடன் எழுதியிருக்கிறீர்கள். பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  58. இங்க பிரச்சனையே செக்ஸ் கல்வி பற்றிய போதிய அறிவு இல்லாததுதான். சுய இன்பம் என்பது உடலின் ஒருவித வடிகால், இது ஆண் பெண் இருவருக்கும் பொது. இதில் தவறேதுமில்லை என்றே தோன்றுகிறது.

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய பதிவு. `அத' பத்தி எழுதினா வேற மாதிரி முத்திரை வந்திராதா என்ற மூட பழக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு தைரியாகச் சொன்னதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்! இங்கு எந்தவித தவறான எண்ணங்களும் பதிக்கப்பட வில்லை. தொடர்ந்து எழுதுங்கள், ஒரு பெண் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் ஒரு பெண்ணால் மட்டுமே சரியாகக் குறிப்பிட முடியும், தொடர்ந்து எழுதுங்கள்..

    இன்றைய தலைமுறையினருக்கு நிச்சயம் புரியும்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete