கிராமம் – இந்த வார்த்தைய கேட்டாலே இப்போ இருக்குற நடுத்தர மக்களுக்கு (வயசுல) பாரதி ராஜா தான் ஸ்க்ரீன் ஒப்பன் பண்ணுவார். சின்ன பசங்களுக்கு அதுவும் தெரியுமான்னு தெரியல. கிராமத்துலயே நான் இருந்தாலும் வீட்டை விட்டு அதிகமா வெளில போறதுமில்ல. ஒரு லீவு நாள்ல தூக்க கலக்கத்துல அணிலுக்கும் குருவிக்கும் நடந்த பாட்டுக்கச்சேரிய பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன் பேஸ் புக்ல. உடனே கார்த்திக் கிராமத்து வாழ்க்கைய நான் அணுஅணுவா ரசிக்குறனு சொல்லிட்டார். நான் எனக்குள்ளயே ஒரு கேள்விய கேட்டுக்கிட்டேன், நிஜமா நான் கிராமத்து வாழ்க்கையை ரசிக்குறேனானு.
இப்போ என்ன நடந்து போச்சு, லீவ் தானே, வீட்ட விட்டு கொஞ்ச நேரம் வெளில போய் தான் பார்ப்போமேன்னு ஒரு வீர தீர முடிவு எடுத்துட்டு உடனே கிளம்பிடலாம்னு முடிவு பண்ணினேன். இந்த செருப்பை எடுத்து கால்ல மாட்றதுக்குள்ள எனக்கு வர்ற சோம்பல் இருக்கே... ஷ்ஷ்ஷ்ஷ்... வெளில சொல்ல கூடாது.

இந்த நேரத்துல யார கூட்டிட்டு போறது? நந்து வேற ஸ்கூல் போய்ட்டா. சரி, நமக்கு நாம தான் துணைனு முடிவு பண்ணி வெளில இறங்கிட்டேன். சும்மாவே இப்போலாம் வீட்டுக்குள்ள நடக்குறப்பவே பிரியாத வரம் வேண்டும் படத்துல வர்ற செகண்ட் ஹீரோயின் மாதிரி பொத்து பொத்துனு கீழ விழுவேன், இங்க தோப்புல தார் ரோடா போட்டு வச்சிருப்பாங்க, கண்ண மூடிட்டு நடக்குறதுக்கு? நாலு ஸ்டெப் எடுத்து வச்சதுமே தடால்னு கீழ விழுந்தாச்சு. மழை பெஞ்சு தரை எல்லாம் ஈரம்.
ஆனாலும் முன் வச்ச கால பின் வைக்கலாமா? அது சரி வராதுன்னு ஒரு வழியா வீட்டு பின் பக்கமா வந்து சேந்துட்டேன்.
இந்த வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் கோழி, ஆடு, நாய் எல்லாம் ஏறி படுக்கனு அங்கங்க சிமென்ட் ஸ்லாப் போட்டு வச்சிருக்காங்க. நானும் அதுல போய் உக்காந்துகிட்டேன்.
அழகா அஞ்சாறு பட்டாம்பூச்சிங்க பறந்து போச்சு. பக்கத்துல இருக்குற புல் மேல அததுங்க பாட்டுக்கு போய் உக்காந்து உக்காந்து மறுபடியும் பறந்து போகுதுங்க. பாவம் மழைனால பூக்கள்ல தேன் இருக்குமோ என்னவோ? திடீர்னு எனக்கு கொஞ்சம் கவலையாகிடுச்சு. அந்த பட்டாம்பூச்சிகள்ல ஒண்ணு சுத்த வெள்ளை. எப்படி தான் அழுக்கே படாம மெயின்ட்டெயின் பண்ணுதோ தெரியல. அதையே பாத்துட்டு இருக்கேன். மழை நேரமா வேற இருந்துச்சா, இந்த தட்டான் பூச்சிங்க வேற அங்கயும் இங்கயும் பறந்துட்டு இருக்கு. எங்க ஊர்ல இத எல்லாம் பத்மாசூரனோட படைகள்னு சொல்லுவாங்க.



பக்கத்துல தான் புறா கூடு. ஆனா இப்போ புறா இல்ல. அதுக்கு உள்ள அணில் எல்லாம் கூடு கட்டியிருக்கும். அதனால உள்ள போறதே இல்லை. அதுகள நாம தொந்தரவு பண்ண கூடாதுங்குறது அப்பா ஆர்டர். எப்போ பாத்தாலும் கீச் கீச்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கும். இந்த அணில்களுக்கு எல்லாம் ரொம்ப தைரியம். கோழிங்களுக்கு போடுற நெல்ல பயமே இல்லாம நம்ம பக்கத்துல வந்து சாப்பிடும். ஆனா நாம அசையாம இருக்கணும். அது முக்கியம். கொஞ்சம் அசைஞ்சா மின்னல் மாதிரி மரத்துல தாவிடும். படு ஸ்பீட். இந்த அணில் நெல் எடுத்து சாப்பிடுறது தனி ஸ்டைல். ரெண்டு கால தரைல ஊனி, வாலை வளைச்சு வச்சுட்டு ரெண்டு கையால நெல்லை எடுத்து வாய்ல வச்சு கொறிக்கும். பாத்துட்டே இருக்கலாம். கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒரு அணில் குஞ்சு கீழ விழுந்து ஒரு பெரிய அணில் தூக்கிட்டு போச்சு. யாருக்கு தெரியும், இப்போ இந்த அணில் கூட்டத்துல அந்த அணில் குஞ்சும் இருக்கலாம். அதுக்கு என்னை அடையாளம் தெரியுமோ என்னவோ?
எங்க இருந்தோ ஒரு கொக்கு கூட்டம் பறந்து வந்து மரங்களுக்கு தண்ணி பாய்ச்சுற கால்வாய் பக்கமா உக்காந்துச்சுங்க. அதுல எப்பவுமே தண்ணி தேங்கி இருக்கும். வீட்டுல மாட்டு சாணம் எல்லாம் தட்டி வைக்குற உரக்கிடங்கும் அங்க தான் இருக்கும். அதனால அதுல மண்புழு ஜாஸ்தியா இருக்கும். இயற்கை உரம் எப்பவுமே மண்ணுக்கு நல்லது தானே. வெள்ளை வெள்ளையா கொக்கு கூட்டம் நடுவுல சாம்பல் நிறத்திலேயும் ரெண்டு கொக்குங்க இருந்துச்சு. அப்புறம் ஒரு மீன்கொத்தி பறவை பக்கத்துக்கு வேப்பமர கிளைல இருந்துட்டு எதையோ குறி வச்சுட்டு இருந்துச்சு.
அடிக்கடி கொய்யா மரத்துல பழம் சாப்பிட வர்ற கிளி கூட்டத்தை காணோம். கொய்யா மரத்துல பழமும் இல்ல. அதே மாதிரி எப்பவாவது கண்ணுல படுற சிட்டுக் குருவிங்களையும் காணோம். அட, ஒரு காக்கா கூட கண்ணுல தட்டுப்படல. நான் அதுங்கள தேடினத யாராவது போய் சொன்னா நல்லா இருக்கும். நான் பி.ஜி பண்ணுறப்போ கிளாஸ் கட் அடிச்சுட்டு போய் காக்கா பாக்க போயிருக்கேன்.

அப்புறம், இவ்வளவு தான் பாத்தியான்னு கேக்காதீங்க, ஒரு வீட்டு பின்பக்கத்துலயே இவ்வளவு அழகு கொட்டி கிடக்குதுனா இந்த கிராமம் முழுக்க எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கும்? இன்னும் நிறைய இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா சொல்றேன். இல்லனா அடேங்கப்பா இதெல்லாம் எப்படி வாசிக்குறதுன்னு ஓடி போயிட மாட்டீங்களா? அதுக்குள்ளே நானே வீட்டுக்குள்ள போய்டுறேன். பை பை, டாட்டா...
வீட்டு பின்பக்கத்துலயே இவ்வளவு அழகு கொட்டி கிடக்குதே... படங்களுடன் அழகான ரசனை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா, ரசிச்சதுக்கு
Deleteவணக்கம்
ReplyDeleteகிராமத்து வாழ்க்கை என்றால் அதில் ஒருவித சுகம்இருக்கு என்பதை மிக அழகாக படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்டிப்பா... ஜில்லுனு ஒரு குளிர்ச்சி இருக்கத்தான் செய்யுது
Deleteகண் முன் கொட்டிக்கிடக்கும் இத்தனை இயற்கை அழகை ரசிக்காமல் முடங்கிக் கிடக்கும் மூடர்கள் நாம்.. என்னே அழகாக வர்ணித்தீர்கள். உங்கள் அறிமுகமும் சிறப்பு.
ReplyDeleteரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்க எல்லோரோட சப்போர்ட் கண்டிப்பா என்னை ஊக்குவிக்கும்
Deleteஅப்புறம், இவ்வளவு தான் பாத்தியான்னு கேக்காதீங்க, ஒரு வீட்டு பின்பக்கத்துலயே இவ்வளவு அழகு கொட்டி கிடக்குதுனா இந்த கிராமம் முழுக்க எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கும்?//
ReplyDeleteம்ம்ம் கண்டிப்பா நகரத்தை விடவும் கிராமம்தான் அழகே!
இன்னும் நிறைய இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா பொறுமையா சொல்றேன். இல்லனா அடேங்கப்பா இதெல்லாம் எப்படி வாசிக்குறதுன்னு ஓடி போயிட மாட்டீங்களா? அதுக்குள்ளே நானே வீட்டுக்குள்ள போய்டுறேன். பை பை, டாட்டா...///
இது ஃபேஸ்புக் இல்லையே, ப்லாக் ஆச்செ எப்போ ஆணாலும் படிச்சுக்கலாம்..
நல்லா எழுதுரீங்க அக்கா!
தொடற்ந்து உங்களிடம் பல பதிவுகலை எதிர்பார்க்கிரோம்!
கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன் மகேஷ்.. இனி இங்க அடிக்கடி வரத்தானே போறேன்
Deleteநான் பி.ஜி பண்ணுறப்போ கிளாஸ் கட் அடிச்சுட்டு போய் காக்கா பாக்க போயிருக்கேன்.
ReplyDeleteஅழகான நாட்கள்..!