அப்போ நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த நேரம். எங்க கிராமத்துல பொம்பள பிள்ளைங்க ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்லயே தான் இருப்பாங்க. லீவு நாள்ல மொத்தமா யாராவது ஒருத்தர் வீட்ல கூடி ஊர் கதை எல்லாம் பேசுவாங்க. பசங்க ஆறு, குளம் னு ஊர் சுத்த கிளம்பிடுவாங்க. நமக்கு தான் ஒரு இடத்துல இருந்தா பிடிக்காதே, நானும் பசங்க கூட சேர்ந்து கிளம்பிடுவேன்.
இந்த பசங்க பயங்கர கேடிங்க... எங்க தோப்புல மாங்காயும் இளநியும் திருடுவோமானு என்கிட்டயே ஐடியா கேப்பாங்க. அப்போ எல்லாம் நமக்கு தேவை ஜாலி தான், யார் வீட்டு தோப்பா இருந்தா என்ன? புகுந்துடுவோம்.
வீட்டு பக்கத்துக்கு தோப்புல எப்பவும் ஆள் நடமாட்டம் இருக்கும். அதனால ஒரு ரெண்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதிச்சி போய் எங்க வேட்டையை ஆரம்பிப்போம். அங்க எல்லாம் முள் வேலி தான் உண்டு. உள்ள போகணும்னா முள் செடியை நீக்கிகிட்டு எகிறி குதிக்கணும். பசங்க குதிச்சுடுவாங்க, நான் உள்ள போக யாராவது ஒருத்தன் குனிஞ்சுக்குவான், அவன் மேல ஏறி, அந்த பக்கம் இருக்குறவன் முதுகுல தாவி கீழ இறங்குவேன்.
அப்பாவுக்கு எப்பவுமே தோட்ட கலை மேல தனி ஆர்வம். மாந்தோப்பும் தென்னந்தோப்பும் அப்பாவோட கண்காணிப்புல விளைச்சல் அமோகமா இருக்கும். அதுலயும் மாமரம் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். புளிக்குற மாங்காய்ல இருந்து இனிக்குற மாங்காய் வரை.
அங்க நிறைய பறவைங்க கூடு கட்டியிருக்கும். மாங்காய் பறிக்கும் போது அங்க இருக்குற கிளிகளுக்கும் அணில்களுக்கும் கொஞ்சம் விட்டு வச்சுட்டு தான் பறிப்பாங்க. அதனால தோப்புல நேரடியா மாம்பழமே பறிச்சு சாப்பிடலாம். கொஞ்ச நேரம் மரம் மேல ஏறி பழமோ, காயோ சீசன் தகுந்த மாதிரி பறிச்சு சாப்பிடுவோம். மாங்காய சாப்ட்டுட்டு மரத்துல இருந்து கிளி குஞ்சு எடுத்துட்டு வருவாங்க. அணில் குஞ்சு, மைனா குஞ்சும் கிடைக்கும். எனக்கு பிடிச்சத நான் வீட்டுக்கு எடுத்துட்டு போவேன்.
அம்மாவுக்கு எங்க இருந்து தான் கோபம் வருமோ தெரியாது, ஏன் அத எல்லாம் அதோட அம்மா கிட்ட இருந்து பிரிக்குறீங்கனு சண்டைக்கு வருவாங்க. நீங்க எவ்வளவு வேணும்னாலும் மாங்கா பறிச்சு சாப்பிடுங்க, ஆனா இதெல்லாம் தப்புன்னு பொறுமையா புரிய வைக்க ட்ரை பண்ணுவாங்க. பாவம், அந்த குஞ்சுகளுக்கு அப்புறம் யாரு இருக்கா? யாரு அதை ஏத்துப்பா? அணில் குஞ்சுகளை அம்மா மொட்டை மாடியில வைப்பாங்க, ஏதாவது அணில் வந்து தூக்கிட்டு போற வரை மறைஞ்சிருந்து அதை பாதுகாப்பாங்க. அப்புறம், கிளி மைனா எல்லாம் அம்மாவே கூண்டுல வச்சு வளப்பாங்க. கொஞ்சம் பெருசானதும் பறக்க விட்டுருவாங்க. அப்பாவுக்கும் அப்படி தான் பறவைகள் வளர்க்குறதுல ஆர்வம் வந்துச்சு. என் தம்பி வேற அம்மா முந்தானைய பிடிச்சுட்டே அதுகளையும் பாசமா பாத்துப்பான். இனி இப்படி எல்லாம் பறவைகள டிஸ்ட்டர்ப் பண்ண கூடாதுன்னு சொன்னாலும் யார் கேக்குறது? அது தொடர்ந்துகிட்டே தான் இருக்கும்.
அப்புறம் ஒரு நாள் கொண்டு வந்த கிளி குஞ்சுகள்ல ஒண்ணு ரொம்ப சின்னது, பாவம் இரை எதுவும் சாப்பிட தெரியாம செத்துப் போச்சு. அப்போ தான் எனக்கு அழுக அழுகையா வந்துச்சு. இனி இந்த பசங்க கூட சேர கூடாதுன்னு அப்பாவ கூட்டிட்டு போய் வழக்கமா நாங்க திருட்டுத்தனமா நுழையுற இடத்த நல்லா முள் வச்சு அடைக்க சொல்லிட்டேன்.
அப்புறம் என்ன? மாங்காய் பறிக்க முடியாம போயிருக்கும்னு தானே நினைக்குறீங்க?
அதுதான் இல்ல, வாராவாரம் களைகம்பை அப்பா தோள்ல சுமக்க, ரெண்டு கிலோமீட்டர் நடந்தே போய் மாங்காய் பறிச்சுட்டு வருவோம். அப்படியே, அப்பா அங்க ஒரு ஓடை கரை பக்கமா உக்காந்து, அத பொடி பொடியா ஆஞ்சு உப்பு, மிளகாப்பொடி, சின்ன உள்ளி எல்லாம் போட்டு நல்லா வெயில்ல அரை மணி நேரம் ஊற வச்சு குடுப்பாங்க. அதுவர நாங்க ஓடையில மீன் பாத்துட்டும், பிடிச்சுட்டும் இருப்போம். நல்ல வெயில்ல அந்த மாங்கா துண்டுகள நாக்குல வச்சா..... ஷ்ஷ்ஷ்ஷ்
ஸ்ஸ்... ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ரசித்ததுக்கு தேங்க்ஸ் அண்ணா... இன்னும் ரசிக்கணும்
DeleteSuper rumbo enjoy pannierukeenga
ReplyDeleteஹ்ம்ம்ம் தேங்க்ஸ்
Deleteபழைய ஞாபகங்கள் ஆயிரம் குறும்புகள் செய்திருந்தாலும் என்றுமே இனிமையானவைதாம் .
ReplyDeleteகண்டிப்பா... எப்பவுமே பழைய நியாபகங்கள் நமக்கு ஒரு வரப்ரசாதம் தான்
Deleteம்ம்ம்...
ReplyDeleteஎனக்கு மாம்பழம் சாப்பிடனும் போல இருக்கே அக்கா:-)))
கண்டிப்பா சாப்பிடலாம் மகேஷ்... அதுவும் மரத்துல இருந்தே நேரடியா பறிச்சு சாப்பிடலாம்
Deleteமாமரம் ஏறி மாங்காய் பறிப்பது தனி த்ரில் தான்... சூப்பர்
ReplyDelete:) இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கு மேடம்
Delete