காலைல சீக்கிரமே எந்திரிச்சு ரிப்ரஸ் ஆகி, அப்பா போட்ட டீய மூக்கால இழுத்து வாசத்த உள்ள விட்டு, எனக்கு ஜூஸ் போட்டு குடிச்சுட்டு, பட படனு ஒரு தக்காளி சாதம், காலைல அப்பாவுக்கு ஓட்ஸ், தம்பிக்கு நாலு சப்பாத்தி, எனக்கு ரெண்டு சப்பாத்தி கூடவே கொண்டைகடல குருமா வச்சு முடிச்சாச்சு. இனி என்ன, உங்கள எல்லாம் மறக்காம உங்களுக்கு குட் மார்னிங்க சொல்லிட்டு அப்படியே கிளம்பிறலாம்தான்...
ஆனாலும் ஏதாவது ஒரு தத்துவத்த சொல்லி உங்கள எல்லாம் திருத்திரலாம்னு ஒரு முடிவு பண்ணினேன். மனசு ரெண்டு விதமா யோசிச்சுச்சு. நான் சொல்ற தத்துவமே என்னை திருத்திடுச்சுனா அப்புறம், உங்களுக்கெல்லாம் தத்துவம் சொல்ல நான் இருக்க மாட்டேனே, அதனால எதுக்கு வம்பு, பேசாம ஒரு குட் மார்னிங்கோட முடிச்சுப்போம் அப்படின்னு ஒரு மனசு என்கிட்ட சொல்லிட்டே இருந்துச்சு.
சரி, வரது வரட்டும்னு ஒரு முடிவோட நான் காலைல, மதியம், சாயங்காலம், அப்படி இப்படி எப்படியோன்னு டைப் டைப்பா யோசிச்ச தத்துவத்துல சிலத (சிலத மட்டும்) உங்களுக்கு சொல்லிட்டு நல்ல புள்ளயா காலேஜ் கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்
நீங்க எங்க கிளம்புறீங்க, டீ எல்லாம் அப்புறம் குடிக்கலாம், முதல்ல மொக்கைய ச்சே ச்சே தத்துவத்த படிங்க. உங்களுக்காக தானே சுவத்துல எல்லாம் முட்டிக்கிட்டு யோசிச்சேன்.
குழந்தை தனமா யோசிச்சுட்டு இருந்தப்போ உதிச்ச தத்துவம்
.................................................................................
ஒரு குழந்தை இருக்கு. அதுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட எந்த எதிர்பார்ப்புமே இல்லாம ஓடி ஓடி போகுது. ஆனா அப்படி ஓடி வர்ற குழந்தைய கைய நீட்டி பிடிச்சி தூரமா நிப்பாட்டினா கொஞ்ச நாள் அதுக்கு புரியாது, மறுபடியும் மறுபடியும் ஓடி வரும். ஆனா எதோ ஒரு நேரம் அது மனசுல சுருக்குன்னு குத்தும். நாம ஒதுக்கி தள்ளப்படுறோம்னு புரியும். அந்த பாயிண்ட்ல தான் அது தன்னோட குழந்தைதன்மைய இழக்குது. அன்பு மேல அதுக்கு எதோ ஒரு விரக்தியும் வந்துடுது. அப்புறமும் அந்த குழந்த அதே ஆள பாக்கும் தான், சிரிக்கும் தான், ஆனா கொஞ்சம் எட்ட நின்னே பேசிட்டு போயிடும்...
விடியற்காலைல உதிச்ச ஒரு தத்துவம்:
................................................................................
என்ன தான் நமக்கு ஒருத்தர் மேல கோபம் இருந்தாலும், இந்த வன்மமும் குரோதமும் நம்ம உடம்புல வலு இருக்குற வர தான். நமக்கு கிடச்ச இந்த வாழ்க்கைய ஏதோ ஒரு கட்டத்துல இழந்துட்டு நிக்கும் போது தான், நாம நம்ம வாழ்க்கைய இந்த மாதிரி தேவை இல்லாம தொலச்சதே மண்டைல உறைக்கும். அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, நாம நல்லா இருக்குறப்பவே மனசுல இருக்குற வன்மத்தை தூக்கி போட்டுட்டா அப்புறம் நிம்மதின்னு ஒண்ணு நம்ம கூடவே எப்பவும் இருக்கும்...வாழ தானே வாழ்க்கை, வாழ்வோமே, அதுவும் நிம்மதியா, சந்தோசமா....
அப்படியே புரிஞ்சுகிட்ட தத்துவம்...
........................................................................
அன்பு அதிகமாகும் போது எதிர்பார்ப்பும் அதிகமாகுது, எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றம் அதிகமாகுது, ஏமாற்றம் அதிகமாகும் போது இடைவெளிகள் அதிகமாகுது, இடைவெளிகள் அதிகமாகும்போது அன்பு குறைய தொடங்குது. அன்பு குறையும் போது எதிர்பார்ப்பு குறையுது, எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையுது. ஏமாற்றம் குறையும் போது இடைவெளிகளும் குறையுது, இடைவெளிகள் குறையும் போது மறுபடியும் அன்பு அதிகமாகுது.....வாழ்க்கை ஒரு வட்டம்..... எது எப்படி இருந்தாலும் அன்பா இருப்போம்........... எதிர்பார்ப்புகள குறைப்போம் ஏமாற்றங்கள தவிர்ப்போம்.......

நாட்டுநடப்பு பாத்து சட்டுன்னு மனசுல எட்டிப்பாத்த தத்துவம்
..................................................................................................
மனசுல அதிகமா ஆசைகள் இல்லாத போது தான் உறவுகளோட அருமை நமக்கு தெரியும். காசு பணம்ன்னு பெருசா இல்லனாலும் இருக்குறத வச்சி கூட்டமா பகிர்ந்துக்குற மனசு வரும். எப்போ காசு மேலயும் புகழ் மேலயும் ஆச வருதோ அப்பவே எல்லோரோட காலையும் இழுத்து விட்டுட்டு, யார் மேலயாவது ஏறி மிதிச்சுட்டு, யாரையாவது காக்கா புடிச்சுட்டு மேல ஏறி போய்ட்டே தான் இருக்கணும். எங்கயாவது ஒரு இடத்துல போய் திரும்பி பாத்தா கீழ பாதாளம், விழவும் பயம், மேல யாருமே இல்லாம, யார் அடுத்து தன்னோட கால பிடிச்சு விடுவாங்களோங்குற பயத்துலயும் சந்தேகதுலயும் நிம்மதிய தொலைச்சுட்டு ஏறி போய்ட்டே இருக்க வேண்டியது தான்... வானத்துக்கு போற வரைக்கும்.

பஜ்ஜி சுட்டுட்டே யோசிச்ச தத்துவம்:
..........................................................................
என்ன தான் கஷ்டப்பட்டு பஜ்ஜி போட்டாலும் கொஞ்சம் தண்ணி அதிகமா விட்டுட்டா பஜ்ஜி சப்பையா போயிடும். அப்புறம் அத சரி பண்ணவே முடியாது. அப்படியே சாப்பிட வேண்டியது தான்....மறுபடியும் கொஞ்சம் மாவு மட்டும் மிக்ஸ் பண்ணினா போதாது, அதுக்கு தகுந்த மாதிரி காரம், உப்புனு சரியா சேர்க்கணும், இல்லான டேஸ்ட் போச்சு.....அப்படி தான், உறவுகளும், ஆரம்பத்துலயே சரியா மெயின்டைன் பண்ணணும், இல்லனா அவ்வளவு தான்... சரி பண்ண ரொம்ப போராடணும், இல்ல அப்படியே ஏத்துகிட்டு சகிச்சுட்டு போக வேண்டி இருக்கும்.

சாயங்காலம் ரெஸ்ட் எடுக்கும் போது உதிச்ச தத்துவம்:
...........................................................................................................
நமக்கு நெருக்கமானங்களுக்கு நாம ஆலோசனை சொல்லலாம், ஆனா அத செய் இத செய்னு வற்புறுத்தக் கூடாது. அவங்க அத கேட்காதபட்சத்துல அவங்க மேல காழ்ப்புணர்ச்சியும் கொள்ள கூடாது... அப்படி யோசிச்சா அது உண்மை அன்பு இல்ல. அதே மாதிரி தான், நமக்கு நெருக்கமானவங்க சொல்றாங்களேங்குறதுக்காக மட்டுமே நாம அவங்க சொல்றத அப்படியே கேக்க கூடாது. சரியா தப்பானு நமக்குள்ளயே யோசிச்சு முடிவு எடுக்கணும். இல்லனா கொஞ்சம் கொஞ்சமா நாம நம்மோட சுயத்த இழக்க வேண்டி வரும்...மொத்தத்துல எங்க சுயநலமில்லாத அன்பு இருக்கோ, அங்க அதோட ஆயுள் நீட்டிக்கப்படும்...
ராத்திரி தூக்கத்துல புலம்புரப்போ உதித்த தத்துவம்
..............................................................................................................
சில விசயங்கள மனசுக்குள்ளயே போட்டு குழப்பிட்டே இருக்காம, அப்படியே அத தூக்கி தூர போட்டுட்டு கொஞ்சம் சிரிச்சு தான் பாருங்களேன், அப்படியே வானத்துல சந்தோசமா மிதக்குற எபக்ட் வரும். இங்க எதுவுமே மாறல, எல்லாமே அப்படி அப்படியே தான் இருக்கு, ஆனாலும் நாம சந்தோசமா இருப்போம், ரொம்ப ரொம்ப ரொம்ப..................
சரி, சரி, நானே கொஞ்சம் திருந்துற மாதிரி இருக்கு, அதானால இன்றைய தத்துவத்த இதோட நிறுத்திப்போம்... இன்னொருநாள் வேற தத்துவம் சொல்றேன், சரியா?

//அன்பு அதிகமாகும் போது எதிர்பார்ப்பும் அதிகமாகுது, எதிர்பார்ப்பு அதிகமாகும் போது ஏமாற்றம் அதிகமாகுது, ஏமாற்றம் அதிகமாகும் போது இடைவெளிகள் அதிகமாகுது, இடைவெளிகள் அதிகமாகும்போது அன்பு குறைய தொடங்குது. அன்பு குறையும் போது எதிர்பார்ப்பு குறையுது, எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையுது. ஏமாற்றம் குறையும் போது இடைவெளிகளும் குறையுது, இடைவெளிகள் குறையும் போது மறுபடியும் அன்பு அதிகமாகுது.....வாழ்க்கை ஒரு வட்டம்..... //
ReplyDeleteஆஹா, இதில் எல்லாமே அடங்கியிருக்கு!
நீங்க யாருன்னு தெரியல, ஆனாலும் கருத்து பதிவுக்கு நன்றி
Deleterரசனையோட நல்லாவே தத்துவம் சொல்ற, வாழ்த்துகள்
ReplyDeleteதேங்க்ஸ் மேடம்
Deleteரொம்பதான் ஜிந்திக்குறீங்க போல!!
ReplyDeleteஆமாமா, ஜிந்தனை தொடரும்
Deleteசில விசயங்கள மனசுக்குள்ளயே போட்டு குழப்பிட்டே இருக்காம, அப்படியே அத தூக்கி தூர போட்டுட்டு கொஞ்சம் சிரிச்சு தான் பாருங்களேன்...இது நல்ல தத்துவமா இருக்கே.. ஆமா எப்படியெல்லாம் சிந்திக்குறிங்க.
ReplyDeleteதானா வருது, நான் என்ன பண்றது?
Deleteஅவ்வவ்வ்வ்வ் நானே உளறிட்டு இருக்கேன்
ahahahaa nan kuuda ethirpaarkkala ellam super akka...
ReplyDeleteதேங்க்ஸ் மகேஷ்
Deleteதத்துவங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
ReplyDeleteஎல்லாமமே நல்லா இருக்கு.
தேங்க்ஸ் :)
Deleteரைட்டு... கலக்குங்க...
ReplyDeleteநன்றி, இதுக்கு பேரு தான் கலக்குறதா?
Deletevery qute
ReplyDeletevery qute
ReplyDelete