Wednesday 8 January 2014

மழை நியாபகங்கள்...


சோ............ன்னு மழை பெஞ்சுட்டு இருக்கு. குடை இல்லாம போனா ஜில்லுன்னு மழைல நனையலாம். ஆனா காலைல மழைல நனைஞ்சா ஜல்ப்பு புடிக்கும். அதனால ஒரு குடை எடுத்துட்டு வாங்க.

ரொம்ப குளிர தான் செய்யுது, ஆனாலும் கிடு கிடுன்னு பல்லெல்லாம் தந்தியடிக்குறது கூட சொகமா தான் இருக்கும். அப்படியே தெருவுல இறங்கி நடக்கலாம்.

அட, அங்க பாருங்க, ஒரு கோழி, வெடவெடன்னு நனைஞ்சு போய் பொம்ம மாதிரி நடந்து போகுது. காக்கா எல்லாம் இருந்த இடம் தெரியல.... அட, இந்த அணில் எல்லாம் கூட இன்னும் வெளில வரல போல, பின்ன, நேத்து சாயங்காலம் ஆரம்பிச்ச மழையாச்சே.

சரி, சரி, பக்கத்துல ஒரு டீ கடை இருக்கு. யாருக்கெல்லாம் டீ வேணும்? யாருக்கு காப்பி? பஜ்ஜி, வடை? எல்லாருக்கும் கிடைக்கும். தேவைபட்டத வாங்கி சாப்பிடுங்க.

அப்படியே, எனக்கு ஒரு குட் மார்னிங் பார்சல்....

குட் மார்னிங்….

இந்த மழை, இன்னிக்கி முழுக்க இப்படியே பெஞ்சுகிட்டு இருக்க கூடாதான்னு தோணுது. அப்போ கொஞ்சமாவது நிலத்தடி நீர் உயரும்ல... மரங்கள் எல்லாம் அதோட பெரிய பெரிய வேர் வச்சு, நீர மண்ணுல தங்கியிருக்க ஹெல்ப் பண்ணும்.

காலைல ஜன்னல் வழியா எட்டிப்பாத்தேன், தென்னை மரத்துல ஒரு வெள்ளரி கொடி படர்ந்து போயிருக்கு. எப்படி அவ்வளவு உயரமா படர்ந்துதுன்னு தெரியல. நிறைய மஞ்சள் பூக்கள் பூத்திருக்கு. ஒரு வெள்ளரி காய் கூட உயரத்துல காய்ச்சி தொங்குது. இத இத்தன நாள் பாக்காம போயிருக்கேனே...

ம்ம்ம்ம் அப்புறம், இந்த மழைய பாத்த உடனே சின்ன வயசு மழை நியாபகங்கள் எல்லாம் மனசுல அப்படியே ரீவைண்ட் ஆகுது. வாங்க, நீங்களும் அப்படியே என்கூட வந்து நாங்க பண்ணுன சேட்டைகள பாருங்க.
............................................................................................................

அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். மழைன்னா ரொம்ப பிடிக்கும். ரொம்ப மழை பெஞ்சா வீட்டு மாடியில இருந்து ஒரு மடை வழியா தண்ணி அருவி மாதிரி கீழ விழும். அதுல போய் நின்னு குளிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்படுவேன். அம்மாவுக்கும் மழை பிடிக்கும் தான், ஆனாலும் வீட்டுக்கு வெளில போய் எப்படி நனையுறதுன்னு அமைதியா இருப்பாங்க.

ஆனா நான் விடுவேனா, கண்டிப்பா மழைல நனஞ்ச்சே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு, அதுவும் அம்மாவும் வரணும்ன்னு அடம்புடிச்சு கூட்டிட்டு போவேன். மழைல குடை புடிச்சுட்டே என்னை குளிப்பாட்டுவாங்க அம்மா. அதோட விட்டாலாவது வரவால, நான் குளிச்சு முடிச்சதும், அம்மா கைல இருந்து குடைய பிடுங்கி எடுத்துடுவேன். பின்ன, நான் மழைல நனைஞ்சுடுவேன்ல...
..............................................................................................................................

அப்புறம், குட்டியா எனக்குன்னு ஒரு குடை உண்டு. அத எடுத்துட்டு ஓடுற தண்ணியில கப்பல் விட கிளம்பிடுவோம் நாங்க. நாங்கன்னா, நான், தம்பி, அப்புறம் அந்த தெரு பசங்க எல்லாரும். வீட்ல பெரியவங்க யாரும் வெளில விட மாட்டாங்க. அதனால அப்பவே பின்வாசல் வழியா போய் எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவோம். கப்பல் தம்பி தான் நல்லா செய்வான். அதனால அவன மோட்டார் ரூம்ல உக்கார வச்சு நிறைய கப்பல் செய்ய சொல்லுவோம். கப்பல் செய்ய பேப்பர் கிடைக்கலன்னு ஒரு தடவ அப்பா கணக்கு எழுதி வச்சிருந்த நோட் தூக்கிட்டு வந்து கப்பல் விட்டுட்டோம். அப்பா கணக்கு எல்லாம் கப்பலா போச்சு. அப்புறம் நோட்ட காணோம் நோட்ட காணோம்ன்னு தேடுனப்போ நான் முழிச்ச முழில அம்மா கண்டுபுடிச்சுட்டாங்க. அப்பா இருந்த டென்சனுக்கு ஒருவேளை என்னை அடி பின்னிருவாங்களோன்னு பயந்து அப்பா கிட்ட நீங்க எங்க கொண்டு போய் தொலைச்சீங்க? இவ்வளவு பெரிய மனுசனா இருந்துட்டு ஒரு பொருள பத்திரமா வைக்க தெரியலயேன்னு அப்பா மேல பாய ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா பயந்து அம்மாவ சமாதான படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஹஹா நானும் தம்பியும் எஸ்கேப்.

(அப்புறம் அன்னிக்கி சாயங்காலமே கிழிச்சு குதறப்பட்ட கணக்கு நோட் மோட்டார் ரூம்ல வெறும் அட்டையா கண்டெடுக்கப்பட்டது தனி கதை, அப்போ கூட பிள்ளைங்க கைக்கு எட்டுற மாதிரியா வைப்பீங்கன்னு அப்பாவும் அப்பா தான் நல்லா வாங்கிகட்டிகிட்டார். ஹை, ஜாலி ஜாலி...)

-ஆனா எனக்கு ஒரு வருத்தம், ஒரு ரூபா நோட்டு கட்டு கூட கைல மாட்டல, இல்லனா, நாங்களும் அப்பவே பச்சை கிளிகள் தோளோடு-ன்னு பாட்டு எல்லாம் பாடியிருப்போம்.
....................................................................................................................

மழைன்னு வந்தாலே இங்க செம்மண் காடு எல்லாம் சேறும் சகதியுமா இருக்கும். தோப்புக்குள்ள செருப்பு போட்டுட்டு கூட நடக்க முடியாது. நானும் தம்பியும், அப்போ தான் புதுசா வாங்கி தந்த செருப்ப எடுத்து மாட்டிகிட்டு கிளம்பிடுவோம். அங்க போய் சேறு அதிகமா இருக்குற இடத்துல போய் யார் கால் அதிகமா உள்ள போகுதுன்னு கால உள்ள விட்டு விளையாடுவோம். செருப்பு உள்ள மாட்டிகிட்டு, ஒத்த கால் செருப்ப மட்டும் நல்லா கழுவி கொண்டு வந்து ஷூ ரேக்-ல வச்சிடுவோம். ஆனா, ஒண்ணு, அம்மா கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே ஈர ஷூவுல இருந்து தண்ணி வழிஞ்ச இடத்துல ஓடி வந்து கால் வச்சு, பின்னந்தல படார்ன்னு தரைல மோதி விழுந்து அழுதா அம்மா கண்டுபிடிச்சிருவாங்கன்னு அப்பவும் ஒரு தடவ கெத்தா எழுந்து போனேன் அவ்வ்வ்வ்வ்வ். ஆனா அடுத்த தடவ அதே மாதிரி விழுந்தப்போ தாங்க முடியாம வீல்ன்னு அழுது, என்னை சமாதானம் பண்ற விசயத்துல செருப்பு விஷயம் வீட்ல தூசியா போச்சு...
......................................................................................

இன்னும் இருக்கு, ஆனா எல்லாம் இப்பவே சொல்லிட்டா எப்படி?


இன்னொரு நாள் பாப்போம். இப்போ காலேஜுக்கு லேட் ஆச்சு. நான் கிளம்புறேன். மழை ரசிச்சுட்டே போக போறேன். டாட்டா...




.

16 comments:

  1. இதெல்லாம் சேர்த்து வச்சு புக்கே போடலாம் போலிருக்கே..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அண்ணா, ரொம்ப கம்மியா தானே சொல்லியிருக்கேன்

      Delete
  2. வணக்கம்
    நடந்து முடிந்த சம்பவங்களை நன்றாக தங்களின் பேச்சு தமிழில் எழுதியுள்ளீர்கள்.சின்ன வயதில் அம்மா அப்பாவுக்கு மிகவும் தொல்லை கொடுத்துள்ளிர்கள்...அப்பாவின் கணக்கு கப்பலில் போன சம்பவம் எல்லம் இரசிக்கும் படி உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான் இப்பவும் சின்ன புள்ள தானே, ஆனா அப்பவும் இப்பவும் ரொம்ப சமத்து தெரியுமா

      Delete
  3. malaiya tan inga parkka mudiyila. unga pathiva parkalam vantha super eluthi irukkuringa akka pathivai padikkumpothu malaiyil nanaintha anupavam kidichathu.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ், எங்க கொஞ்ச நாளா உன்னை காணோம்?

      Delete
  4. தேங்க்ஸ் அண்ணா

    ReplyDelete
  5. மழை நினைவுகள் கிளறிவிட்டன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. சரி, சரி, பக்கத்துல ஒரு டீ கடை இருக்கு. யாருக்கெல்லாம் டீ வேணும்? யாருக்கு காப்பி? பஜ்ஜி, வடை? எல்லாருக்கும் கிடைக்கும். தேவைபட்டத வாங்கி சாப்பிடுங்க.

    அப்படியே, எனக்கு ஒரு குட் மார்னிங் பார்சல்....

    ///// ipdi solli ennaya yematha mudiyathu..i want bajji :)

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
  8. அருமை ரசித்தேன்.
    ///சரி, சரி, பக்கத்துல ஒரு டீ கடை இருக்கு. யாருக்கெல்லாம் டீ வேணும்? யாருக்கு காப்பி? பஜ்ஜி, வடை? எல்லாருக்கும் கிடைக்கும். தேவைபட்டத வாங்கி சாப்பிடுங்க.
    /////

    நான் நல்லா பஜ்ஜி, வடை சாப்டேன் .... காசு இல்லாமல் ..என்னை பஜ்ஜி போட வச்சிட்டாங்க.....


    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    www.99likes.in
    S. முகம்மது நவ்சின் கான்.

    ReplyDelete
  9. மழைல நனைந்துகிட்டே படிச்ச பீலிங். அப்புறம் மழை முடிந்தவுடன் மரக்கிளைகளை ஆட்டி குளிந்த பள்ளிநாட்கள் நினைவில் வருகிறன காயத்திரி!!

    ReplyDelete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

    ReplyDelete
  11. இவ்ளோ பொறுப்பான பிள்ளையா !

    ReplyDelete
  12. ஒரே லாலா லா தான்..

    ReplyDelete