Friday, 14 February 2014

காதல்



- காதல்

இந்த ஒரு வார்த்தைக்குள்ள ஏகப்பட்ட அர்த்தங்கள் ஒளிஞ்சி கிடக்கு.

அன்பு, பாசம், நேசம் எல்லாமே இதுக்குள்ள தான் அடக்கம்.

காதல்ன உடனே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் வரணும்ன்னு இல்ல, முதல்ல நாம நம்மள காதலிக்கணும். நம்ம சுற்றி இருக்குறவங்கள காதலிக்கணும். நம்மள நேசிக்குரவங்கள காதலிக்கணும். இயற்கைய காதலிக்கணும். நேர்மைய காதலிக்கணும்.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கி வேலன்டைன்ஸ் டே...அதாங்க, காதலர் தினம். இது மனசளவுல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் நேசிக்குற, ஆணுக்கும் பெண்ணுக்குமான தினம்.

இந்த நாள்ல அவசர அவசரமா காதலிக்காதீங்க, அப்படினா இந்த நாளுக்கு ஒரு பயனே இல்லாம போயிடும். முதல்ல காதல்ன்னா என்னான்னு புரிஞ்சுக்கோங்க...

ஒரு ரோஜா குடுத்து ப்ரொபோஸ் பண்ணி, நாலு நாள் பைக்ல சர் சர்ர்னு சுத்திட்டு, அஞ்சாவது நாள் பிரேக் அப் சொல்லிக்குறது காதலில்ல....

ஏகப்பட்ட கட்டுகதைகள் சொல்லி எதோ ஒரு வகைல அவங்கள வலைல விழ வச்சி, சாதிச்சிட்டோம்ன்னு இறுமாறுறதும் காதல் இல்ல...

பிரச்சனைன்னு வந்த உடனே ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போட்டுக்குறதும், எதிரிய விட வெறுக்குறதும் காதல் இல்ல...

எந்த கஷ்டம் வந்தாலும், ஒருத்தர ஒருத்தர் விட்டுக் குடுக்காம, அவங்கள மட்டும் நேசிக்காம, அவங்களோட ஆசைகள், விருப்பங்கள், லெட்சியங்கள் எல்லாத்தையும் நேசிச்சுகிட்டு, தடுமாறுற நேரத்துல நானிருக்கேன்னு ஆதரவு குடுத்து அரவணைச்சுகிட்டு, நெற்றியில முத்தம் குடுக்குற அத்தனை காதலர்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துகள்...

11 comments:

  1. வணக்கம்

    நல்லா சொன்னிங்கள்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
  2. // முதல்ல நாம நம்மள // சிறப்பு...

    சுருக்கமாக சொன்னாலும் அருமையாக சொல்லி விட்டீர்கள்... பாராட்டுக்கள்...

    அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா..... ஆமா, அன்பு தினம் வேண்டும், குடுக்கவும் செய்யணும்

      Delete
  3. சிறப்பான இப் பகிர்வு போல இனிக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  4. என்னா ஒரு வழமை!!!!… இருந்தாலும் சரிதான்,, காதலை விட வழமையான விஷயம் உலகத்திலே வேறெதுவும் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.... காதல்க்கு மாற்றும் எப்பவும் கிடையாது

      Delete
  5. காதலுக்கான இலக்கணத்தை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ்... உங்களோட வாழ்த்துக்கும்

      Delete
  6. //ஏகப்பட்ட கட்டுகதைகள் சொல்லி எதோ ஒரு வகைல அவங்கள வலைல விழ வச்சி, சாதிச்சிட்டோம்ன்னு இறுமாறுறதும் காதல் இல்ல...//

    சிறப்பாய் சொன்னீர்கள்.....

    அருமையான பகிர்வு சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete