ரொம்ப நாள் ஆகிடுச்சுல கதை சொல்லி....
அதனால கொஞ்சம் டெரரான ஏரியாவுக்குள்ள தைரியமா நுழைவோமா?
அப்படியே சைலென்ட்டா வாங்க, மூச்சு விடுற சத்தம் கூட வெளில கேக்க கூடாது...
ஒரே கும்மிருட்டா இருக்கா, அப்படியே எல்லாரும் ஒரே நேரத்துல வலது கால் எடுத்து வைங்க... ம்ம்ம்ம் இப்போ லெப்ட்டு...
முன்னாடி நிக்குறவங்க கொஞ்சம் கைய முன்னாடி நீட்டுங்க... எதோ நீளமா வழவழன்னு தட்டுப் படுதுல அதான் மலப்பாம்பு.
ஹே.... நோ... இப்படி பேய் தனமா வீல்ன்னு கத்தக் கூடாது, அப்புறம் மலப்பாம்ப கழுத்துல விட்ருவேன்... அப்படியே சைலென்ட்டா வரணும், புரியுதா?
அவ்வ்வ்வ் அதென்ன தந்தியடிக்குற சத்தம் கேக்குது, பயந்தீங்கன்னா உள்ளுக்குள்ளயே பயந்துக்கணும். இப்படியா பயத்துல பல்ல தந்தியடிக்க விடுறது...(எனக்கே சாவு பயத்த காட்ட ட்ரை பண்றாங்க பரமா...)
கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா, எல்லாரும் பயத்துல புளி மூட்ட மாதிரி அப்பிகிட்டு....
சரி, சரி, அடுத்த ஸ்டெப் எடுத்து வைங்க, ஹலோ முன்ன நிக்குறது யாரு? மலப்பாம்ப தொட்டு தடவினது போதும், கொஞ்சம் முன்னாடி நகருங்க...
என்னது காலு நகர மாட்டேங்குதா, கிளம்புங்கங்க.... இல்லனா மலப்பாம்பு கடிச்சுடும்...
போச்சா, போச்சா, கடிச்சிடுச்சா.... அதுவும் பெருவிரல் பாத்து நறுக்குன்னு கடிச்சிடுச்சா? நான் தான் அப்பவே சொன்னேன்ல....
ஐய்யய்யோ, ஏன் எல்லாரும் ஓடுறீங்க, திரும்பி வாங்க, இன்னும் நிறைய இருக்கு பாக்க....
ஹஹா... அந்த இடத்த விட்டு வெளில வந்தும், ஏன் உங்க மூஞ்சி எல்லாம் இப்படி வேர்த்து கொட்டுது? பயந்துட்டீங்களாக்கும்?
அது சரி, நீ ஏன் கடைசி வர பயப்படவே இல்லன்னு கேக்குறீங்களா?
ஹிஹி, நீங்க சுத்தி பாத்ததே என்னோட ரூம் தான். அது மலப்பாம்பு இல்ல, புடலங்காய அங்க கட்டி தொங்க விட்டதே நான் தான்...
நறுக்குன்னு கடிச்சி வச்சது நம்ம சக்தி செல்லம்....
ஹிஹி.... ஏமாந்துட்டீங்களாக்கும்.... சரி சரி, போங்க போங்க ஒரு குட் மார்னிங்க வாங்கிட்டு வேலைய போய் பாருங்க...
குட் மார்னிங்....
.....................................................................
ஹஹா என்ன இதுன்னு குழம்பிட்டீங்களாக்கும்....
எப்பவுமே பேஸ் புக்ல கத சொல்லியே குட் மார்னிங் சொல்ல பழகிட்டேனா, அதான் உங்களையும் இம்சை பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
நான் அப்பப்போ எப்.பியில போடுற ஸ்டேடஸ் நீங்களும் படிக்கணும்ல... அதான் இப்போ ரெண்டே ரெண்டு சாம்பிள் படிச்சுட்டு போங்க... மீதி, இன்னொரு நாள் பார்ட் பார்ட்டா வரும்....
................................................................................

இப்போ கொஞ்சம் குளுகுளுன்னு ஒரு கதை பாருங்க....
.........................................................................
இது ஒரு குளிர் காலை நேரம். போர்வைக்குள்ள தூங்கினாலும் குளிர் வெடவெடக்க வைக்குது. இந்த குளிர்ல ஒரு வாக்கிங் போனா எப்படி இருக்கும்? வாங்களேன் போய் பாப்போம்....
எதுக்கும் ஒரு போர்வை எடுத்துக்கலாம். குளிருக்கு இதமா இருக்கும். அப்படியே போய் வாசல் கதவை திறப்போம்.
அவ்வ்வ்வ் வெளில மழை பெய்யுது பாருங்களேன். அதனால ஓடிப் போய் கைல குடையும் எடுத்துப்போம்.
ஓகே, இப்போ மெதுவா தெருவுல இறங்கி நடப்போம்.
பாருங்களேன், இந்த மழைல ஒரு சேவல் நனஞ்சிகிட்டே நடந்து போகுது. செகப்பு கலரு சேவல்ன்னு சொன்னாலும், அது செக்கசெவேல்ன்னு இருக்காது. கருப்பும், செவலையும் கலந்த ஒரு நிறம். மழைல நனைஞ்சு இருந்தாலும் அதோட வால் பளபளப்பு குறையவே இல்ல.
இது கிராமமில்லையா, பெரும்பாலும் நம்மள கடந்து போறவங்க தினமும் நிலத்துல உழைக்குற மக்களா தான் இருக்காங்க. குடை யூஸ் பண்றதெல்லாம் ரொம்ப கம்மி. இவங்க மழை கிட்ட இருந்து எப்படி தப்பிக்குறாங்க பாத்தீங்களா? சொசைட்டில கிடச்ச யூஸ் பண்ணின பிளாஸ்டிக் உர சாக்குகள ஒரு பக்கமா கிழிச்சி விட்டு அத எடுத்து போர்த்தியிருக்காங்க.
இப்போ எனக்கு இந்த குடைய பாத்தா ஏனோ அந்நியமா தோணுது. சரி, அவங்க அப்படியே வேலைக்கு போகட்டும். நாம, இந்தா திண்ணையில ஒரு பாட்டி கால் நீட்டி உக்காந்துட்டு வெத்தலை இடிச்சுட்டு இருக்காங்க பாருங்க, குடைய மடக்கி வச்சுக்கிட்டு அவங்க கிட்ட போவோம்...
இனி பாட்டி வாய தொறந்தா ஊர்ல உள்ள பல கதைகள் சொல்லுவாங்க. அதனால நான் சைலென்ட் ஆகிக்குறேன். அதுக்குமுன்னாடி எல்லாருக்கும் குட் மார்னிங் சொல்லணும்ல...
குட் மார்னிங்........
......................................................................................
ஹஹா இனி குட்டியா ஒண்ணு
....................................................................
மனுசங்கள பொருத்தவரைக்கும் இது ஒரு இரண்டாம் உலகம். இந்த உலகத்து அன்போ, சந்தோசங்களோ, சுக துக்கங்களோ மனுசங்களுக்கு (பெரும்பாலும்) புரியவே புரியாது. ஆனா, அங்க உள்ள ஜீவன்களோட உணர்வுகளா நாமளும் மாறிப் பாத்தா அந்த அற்புத உலகம் நம்மோட கண்ணுக்குள்ள தெரியும்...
ஆமாங்க, இந்த விலங்குகளோட உலகம் ரொம்ப அழகானது. அவங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அவங்களுக்கும் பிடிக்காத விசயங்கள கண்டா கோபம் வரும், சுயம் சீண்டப்படும் போது ரவுத்திரம் வரும், மனசுக்கு பிடிச்சவங்கள கண்டா காதல் வரும்.. அதுவே ஒருத்தங்க பிரிஞ்சி போய்ட்டா சோகமும் வரும்....
கண்ணால பேசி, செய்கையால அன்பை உணர்த்துற அந்த ஜீவன்கள நாமளும் நேசிப்போம். நேசிச்சா மட்டும் பத்தாது, புரிஞ்சுப்போம்...
குட் மார்னிங்...
..........................................................................
இப்போதைக்கு இது போதும், நீங்க பொறுமையா படிச்சுட்டு கமன்ட் போட்டு வைங்க.... குட் மார்னிங் கூட சொல்லலாம்....
வர்ட்டா...... (தொடரும்)

ரொம்ப டெரரான இருக்கே...!
ReplyDeleteகுளுகுளு கதை ரசனை...
அவ்வ்வ்வ் அண்ணா இது ஜுஜுபி
Deleteஅட.. பதிவு தேத்த இப்படி ஒரு வழி இருக்கா??
ReplyDeleteஹஹா ஒரு முப்பதுல இருந்து நாப்பது பதிவு தேத்திடலாம் அண்ணா
Deleteஆஹா... மலைப்பாம்பை(*? வெச்சு சொன்ன டெரரான குட்மார்னிங் ஜோர்! (அசலா ஒரு சிறுகதையே க்ரியேட் பண்ணிரலாம் போலயே) மத்ததும் கூடவே கையப் புடிச்சுக் கூட்டிட்டுப் போற மாதிரி ஸ்டைல்ல சொல்றது நல்லாவே இருக்கும்மா! குட்மார்னிங்!
ReplyDeleteஹஹா தேங்க்ஸ் அண்ணா... ஹாவ் எ குட் டே
Deleteஒரே நாள்ல, இத்தனை குட் மார்னிங்கா...
ReplyDeleteஹஹா இது மூணு நாள் போட்டது அண்ணா
Deleteஅட புடலங்காதானா!
ReplyDeleteரூம்லையே சொல்லிருந்தா, ரூம்க்கு எடுத்துடுட்டு வந்து பொறியல் பண்ணிருக்கலாம்.
இப்போ பாருங்க மூஞ்சியெல்லாம் பொரி பொரியா ஆயிருச்சு; வியர்வையால.
வளர்த்த பாசத்துல உங்களவிட்டு என் கால கடிச்சுருச்சு; பயத்துல.
குளிர்காலத்துல மழைல நனையிறதும் நல்லாதான் இருக்கு.
குட் மார்னிங்.
ஹஹா...
Deleteஇப்படி ஒரு குட்மார்னிங்கா!! டெரரா இருக்கே :)
ReplyDeleteEna oru kolantha thanam.
ReplyDelete