Sunday, 23 February 2014

சக்தி....



சில விசயங்கள கோர்வையா சொல்ல முடியாது, காரணம் நாம சொல்ல வர்ற விசயங்களுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்து முடிஞ்சியிருக்கும். இப்போ நான் சொல்லப்போற விசயமும் அப்படி தான்...

இத நீங்க படிக்குறப்போ உங்களுக்கு புரியாம போகலாம். காரணம், இது உங்களுக்கு முன்பின் சம்மந்தமே இல்லாத ஒரு விசயத்தோட இறுதிப்பகுதி.  உங்களுக்கு தெரியவே தெரியாதுன்னு ஒரேயடியா சொல்லிட முடியாது, காரணம், இங்க இருக்குற நீங்க என்கூட பேஸ் புக்லயும் இருக்கீங்க.  புதுசா என்னை பத்தி தெரியாதவங்களும் இத படிங்க, படிச்சிட்டு நீங்க விடுற ஒரு பெருமூச்சு என் சக்திய வாழ்த்திட்டு போகும்.

சக்தி யாருன்னு தெரியாதவங்க இந்த லிங்க்க படிச்சுட்டு மேற்கொண்டு படிச்சா புரியும்னு நினைக்குறேன்.

ஆமா, நேத்து என் சக்தி என்னை விட்டுட்டு போய்ட்டான். அவனுக்கும் எனக்குமான உணர்வுகள நான் இன்னும் முழுசா எங்கயும் பதிவு பண்ணல, அதுக்கு முன்னாடி இறுதி கட்டத்துக்கு வந்துட்டேன்...

கூடிய சீக்கிரம் எங்க ரெண்டுபேரோட வாழ்க்கைய பதிவு பண்றேன். இப்போ தொடர்ந்து படிங்க...
........................................................................

சக்திய தேடிகிட்டே முழிச்சு எப்.பி வந்தப்போ கார்த்திக் என்னை tag பண்ணின நோட்டிபிகேசன் வந்துச்சு. அங்க போய் பாத்தா ஷேர்க்கான் அண்ணாவோட "உறங்கும் முன் ஒரு வார்த்தை" இருந்துச்சு. அதுல என்ன எழுதி இருந்துதுனா

"மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒரு நாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதி விலக்கு அல்ல" ன்னு எழுதியிருந்துச்சு.

அப்புறம் கார்த்தி "விதைத்தது அன்பென்றாலும் விளைவது கண்ணீர் துளிகளே அனேக இடங்களில்" ன்னு சொல்லியிருந்தார்.

ஆமா, இதனாலயே நேசிப்புங்குற வார்த்தைய நான் எப்பவும் கொஞ்சம் தள்ளியே வச்சிருப்பேன். நான் மட்டுமில்ல, வீட்ல எல்லாருமே அன்பை அள்ளி கொட்ட கூடியவங்கதான்னாலும் எல்லாருமே செண்டிமென்டல் இடியட்ஸ்.... எல்லாருமே அன்பை கொஞ்சம் தள்ளியே வச்சிருக்கோம்.

சக்திய என் கிட்ட கொண்டு வந்து குடுத்த தம்பி, அப்புறம் ரெண்டு மூணு நாள் எட்ட நின்னே பாத்துட்டு போவான். அதுக்கப்புறம் நேத்து தான் சக்திய உயிரில்லாம பாத்தான். சக்திய கைல வாங்கி அவன தடவி குடுத்தப்போ சக்தியோட உண்மையான ஸ்பரிசம் அவனுக்கு கிடச்சியிருக்காது. ஒரு விறைத்து போன உடல் தான் அவன் விரல்களுக்கு தட்டுபட்டுருக்கும். என் தம்பியோட ஏக்கம் எனக்கு புரியாம இல்ல. அன்பை வெளில காட்டாமலே அடக்கி வச்சி பழகிட்டவன் அவன். வீட்ல உள்ளவங்க கிட்ட தான் அப்படி. மத்தப்படி சொந்தக்காரங்க கூட அவன் சந்தோசமா பேசி சிரிக்கும் போது எட்ட நின்னே நான் சந்தோஷ கண்ணீர் விட்டுருக்கேன். வாட்ஸ் அப் வந்த பிறகு தான் நாள் முழுக்க அவனோட மெச்செஜ் ராத்திரி பகல்ன்னு தூங்க விடாம சத்தம் போட்டுட்டே இருக்கும். அவன் சந்தோசம் கெட்டுற கூடாதுன்னே நான் அந்த கும்பலோட ஐக்கியமாகுறது இல்ல. நேத்து சக்தி செத்து போயிட்டான்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருந்தான். அவன் வாட்ஸ் அப் ப்ரோபைல் பிக்சர்ல என்னிக்கோ ஒரு நாள் நான் ஷேர் பண்ணின சக்தியோட ஒரே ஒரு போட்டோ இருந்துச்சு.

அப்பா, எப்பவும் எட்ட நின்னே பழக்கப்பட்டவங்க. என்கிட்ட சக்தி இருக்கான்னு மட்டும் தான் தெரியும். அவன பாத்ததே இல்ல. அப்பப்போ அவனுக்கு வாழப்பழம், ஆப்பிள், கொய்யா, சப்போர்ட்டான்னு விதம் விதமா தந்துட்டு போவாங்க. சமைக்கும் போது தேங்காய் சில் எடுத்துட்டு வந்து ரூம்ல வச்சுட்டு போவாங்க. மறக்காம காலைலயும் சாயங்காலமும் அவனுக்கு பசும்பால காய்ச்சி ஆற வச்சுட்டு போவாங்க. அவன் உருவம் எப்படி இருக்கும்ன்னே தெரியாத அவன் மேல அப்பாவுக்கு இருந்த அன்பு எப்படி பட்டதுன்னா, அவனுக்கு உடம்பு சரியில்ல, ஹாஸ்பிடல் கொண்டு போகணும்ன்னு சொன்ன உடனே முக்கியமான வேலையா கிளம்பி போயிட்டு இருந்தவர் அப்படியே திரும்பி வந்து கையோட டாக்டரயும் கூட்டிட்டு வந்துட்டார்.

அவ்வளவு துடிச்சுட்டு இருந்தாலும் சத்தம் கேட்டு சக்தி பாய்ஞ்சு போய் ஒளிய ட்ரை பண்ணினான். அவன கைக்குள்ள வச்சு கெட்டியா பொதிஞ்சு வச்சு தான் ஹாலுக்கு கொண்டு போய் டாக்டர் கிட்ட காட்டினேன். அப்போ தான் அப்பா முதல் முதலா சக்திய பாத்தாங்க. ஏனோ உடனே முகத்த திருப்பிட்டு வேலை இருக்குற மாதிரி வெளில போய்ட்டாங்க. சக்தி நிரந்தரமா தூங்கின உடனே அப்பா கிட்ட தான் கொண்டு போய் குடுத்தேன். அப்போ தான் அப்பா கண்ணுல அந்த ரெண்டு துளி கண்ணீரை பாத்தேன்.

அப்புறம், நீங்க. உங்களுக்கு அவன தெரியாதுன்னு என்னால சொல்ல முடியாது. காரணம், அவன உணர்வு பூர்வமா எல்லாருமே அறிஞ்சு வச்சிருக்கீங்க. நேத்து அவனுக்காக பிரார்த்தனை பண்ண இத்தன பேர் இருந்தீங்களே... நான் எப்படி இதுக்கெல்லாம்............. லவ் யூ ஆல்...

என்ன செய்றதுன்னே தெரியாம பதட்டத்துல இருந்தப்போ என்னை கூப்பிட்டு என் கூடவே பதறி துடிச்ச பானு, பிறந்தநாள் அதுவுமா கலங்கின கவி, உன் குரலை கேக்க சக்தியில்லன்னு சொன்ன பிரகாஷ் அண்ணா, ஆறுதல் சொன்ன பிரபா அண்ணா, சக்தி போட்டோ போட்டா ஏன் என்னை tag பண்ண மாட்றீங்கன்னு சண்டைக்கு வர்ற மணிகண்டன், சக்தின்னு சொன்ன உடனே அணில் போட்டோவா போடுற சாதிக் அலி அண்ணா, சக்திக்கு பெயர் வைக்க தூண்டின பிரகாஷ் குமார் தமிழ்வாசி அண்ணா, அப்புறம் சந்திரசேகர் அண்ணா, தமிழ் அருவி அக்கா, ஆச்சி, மீரா இன்னும் எவ்வளவோ பேர்... ம்ம்ம்ம் மச்சி மச்சின்னு எப்பவும் சக்திய சிலாகிக்குற யுவ கார்த்திக்.... உங்க எல்லாருக்கும் நான் என்ன பண்ண போறேன்... என் அன்பை குடுக்குறேன், தூரத்துல இருந்தே....

கார்த்திக், எனக்கு தெரியும். சக்தி பத்தி நீங்க கிண்டல் பண்ணினாலும், நீங்க அறிஞ்சோ அறியாமலோ அவன் மேல உள்ள அன்ப அப்பப்போ கொட்டியிருக்கீங்க. உங்களுக்கு வேற என்ன சொல்லன்னு தெரியல, ஆனா என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்... லவ் யூ கார்த்திக்
.....................................................................

என் சக்தி எவ்வளவு அழகு பாருங்களேன்... 





6 comments:

  1. முகநூலில் படத்தைப் பார்த்தேன்... விவரம் இந்தப் பகிர்வில் தான் அறிந்தேன்... உங்களின் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா.... அவனை பத்தின எல்லா நியாபகங்களையும் பதிவு செய்யனும்னு தான் ஆசை... கண்டிப்பா செய்வேன்

      Delete
  2. RIP என்ற மூன்றெழுத்து இழப்புகளை ஈடுகட்டி விட முடியாது என்பதை அறிவேன். ஆயினும் வாழ்வில் தவிர்க்க முடியாத சில விஷயங்களில் இறப்பும் ஒன்று.. சக்தி பற்றிய விஷயம் கேள்விப் பட்டவுடன் வருத்தம் இருந்தது. ஆறுதல் கூற தமிழில் வார்த்தைகள் நிச்சயம் போதாது. உடனிருந்த ஓர் உயிர் ஒரு நாள் சட்டென்று மறைந்து விடும் நாளில் உள்ளே இனம் புரியா ஒரு சோகம் தானாக அப்பிக்கொள்ளும். அதிலிருந்து வெளியே மீண்டு வர பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அவன் போயிட்டான்னு இன்னும் நம்ப முடியல அண்ணா... அவன தடவி குடுக்கணும்ன்னு கை பரபரன்னு வந்துகிட்டே இருக்கு. என் bed பக்கத்துலயே என்னோட மெடிக்கல் கிட் இருக்கும். அது கீழ இருந்தத பாத்துட்டு காலைல அப்பா அது ஏன் கீழ இருக்குன்னு கேட்டாங்க. ஸ்டூல் மேல வச்சா பொடியன் தட்டி விட்ருவான் அப்பா, அதான் கீழ வச்சிருக்கேன்னு சொன்னேன். இனி தட்டி விட அவன் இல்லையே, எடுத்து மேல வைன்னு சொன்னாங்க... இன்னும் நான் அத எடுத்து வைக்கல...

      Delete
  3. எனக்கும் இப்படியான அனுபவம் உண்டு காயத்ரி... செண்டிமெண்டல் இடியட் அப்படிங்கற வளையத்தில இருந்து வரணும்னு நினைத்தாலும் முடியறதில்லை...

    ReplyDelete
  4. sakthi padicha santhosathala inga vantha ipadi oru ilapa. ene sola vaarthai ilai...

    ReplyDelete