Monday, 17 February 2014

தேவதை பிறந்தாள்





காத்திருப்புகள் யுகமாய் கரைய
சந்தோஷ திகிலொன்று லப்டப்படிக்க
சிறகில்லாமல் கால்கள் பறக்க
காக்க வைத்த தேவதையொருத்தி
இதோ பூமிதனில் ஜனித்துவிட்டாள்

உற்சாகம் துள்ளி குதிக்க
மனதெங்கும் சாரலடிக்க
மாமனின் ஆசியோடு
முதல் சுவாசம் உள்ளிழுத்துக் கொண்டாள்

கீதமிசைக்க குயில்கள் வந்துசேர
நடனமிட மயில்கள் தோகை விரிக்க
வருணனின் ஆசியோடு
தன் சங்கீதத்தை துவக்கி விட்டாள்

வானத்து விண்மீன்களே
வந்தெங்கள் தேவதையை பாருங்கள்
வனத்தின் மான்குட்டிகளே
அவளோடு விளையாட வாருங்கள்

சின்ன சின்ன பாதம் கொண்டு
எட்டி உதைக்கும் அழகினை பருகுங்கள்
ஆதரவாய் பற்றிப் படரும்
அந்த ஐவிரல்களில் இதழ்கள் பதியுங்கள்

புன்னகை என்றும் அவளின்
உதட்டோடு உறையட்டும்
சந்தோசம் என்றும் அவளின்
மனதோடு நிலைக்கட்டும்

இவள் இனி
பரபர உலகந்தனில் அழகியலை ரசிக்கட்டும்
சுயம் சார்ந்து தலைநிர்ந்து நிற்கட்டும்
வேண்டும் கலைகள் கற்று
மனம் நிறைந்து வாழட்டும்

வாருங்கள் வாருங்கள்
மலர்ச்சியோடு உற்சாகம் ததும்ப
வாழையடி வாழையாக
இவள் குலம் தழைக்க
வாழ்த்துவோம் வாருங்கள்...

.

18 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    கவிதை அருமையாக இருக்கிறது குழந்தை படமும் அழகு...

    எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும..... என்றென்றும் இறைவன் துணை இருப்பான்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, உங்களோட வாழ்த்துக்கு

      Delete
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்டதுக்கும் தாங்க்ஸ் அண்ணா

      Delete
  3. குட்டி பாப்பா யாருப்பா? பெற்றோருக்கு என் வாழ்த்துகளையும் சொல்லிடுப்பா...

    ReplyDelete
    Replies
    1. பிரெண்ட்டோட தங்கச்சி குழந்தை அண்ணா.... கண்டிப்பா சொல்லிடுறோம் அண்ணா :)

      Delete
  4. கொடுத்து வைத்த குழந்தை, இப்படி ஒரு அருமையான வாழ்த்துபாமாலையை பெறுவதற்கு.
    குழந்தையின் பெற்றோருக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.
    இப்படி ஒரு அருமையான கவைதையை படைத்ததற்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அண்ணா, கண்டிப்பா சொல்லிடுவோம்

      Delete
  5. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  6. குட்டி செம அழகு!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்... அது நெட்டுல சுட்டது... ஓனர் இல்லாம இருந்ததால

      Delete
  7. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாக்குறேன் அண்ணா.... தேங்க்ஸ்

      Delete
  8. காயத்ரி...! குட்டிப் பாப்பாக்கள் எல்லாமே அழகு, அந்தக் குட்டிப் பாப்பாவை வரவேற்றுப் பாடின கவிதை வரிகளும் மழலை போல வெகு அழகு! படிக்கையிலயே மனசுல ஒரு உற்சாகம் தொத்திக்கிச்சு! உன் ஃப்ரெண்டோட தங்கச்சி குழந்தைக்கு என் வாழ்த்துகள் + ஆசிகள் + நல்வரவு என் சார்பா தெரிவிச்சுடும்மா!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தெரிவிச்சுடுறேன் அண்ணா.... குட்டி பாப்பானாலே கொஞ்ச நேரம் நாமளும் அவங்களா மாறி தான் போறோம்

      Delete
  9. ஒரு கவிதை பற்றிய கவிதை.... மிக அழகு.....

    பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete