கவ்வி பிடிக்கும் பயமொன்று ஏனோ
அவசரகதியில் தொற்றிக்கொண்டது.
ஜன்னலோர கம்பிகள் துணையுடன்
தைரியம் பூசிக்கொள்ள துடிக்கிறேன்...
கற்பாறை ஒன்று நெஞ்சக்கூட்டுக்குள்
விழுந்து நொறுங்க...
ரெத்த நாளங்களின் வாசனை
இன்னும் பயம் தூவி செல்கிறது...
இன்னதென்று வரையறுக்க முடியாமல்
தலை பாரம் சுமந்து கொள்கிறது.
கண்களோ உறக்கம் தொலைந்து
கண் திரை மறைக்கின்றன...
உள்மன கூச்சல்
நெஞ்சம் பிளந்து வெளிப்பட தயாராக...
உன் மடி தேடி சுருண்டுக் கொள்ள
ஏங்கி தவிக்குது இதயத் துடிப்பு...
வந்து விடேன்... உன் கைகளால்
என் முதுகு பற்றிக் கொள்...
நெஞ்சக்குளிக்குள் முட்டுக் கொடுத்து
என் உயிர் கொஞ்சம் தாங்கு...
உன் மார் கற்றை முடிக்குள்
கொஞ்சம் முகம் புதைத்துக் கொள்கிறேன்...
கழுத்தோடு கைகள் பூட்டி
உன் உயிரோடு பிணைத்துக் கொள்கிறேன்...
என் உள்ளங்கைக்குள்
உன்னால் ஓர் அழுத்தம்...
உன்னோடு நானிருக்கிறேன் என்று
இதம் கொடுத்து செல்லும்...
வா... வந்தென் வலி விரட்டிச் செல்...
அப்படியே உனக்குள் புதைந்து
என்னை மறந்துக் கொள்கிறேன்...
என் உள்ளங்கைக்குள்
ReplyDeleteஉன்னால் ஓர் அழுத்தம்...
உன்னோடு நானிருக்கிறேன் என்று
இதம் கொடுத்து செல்லும்...// அருமையான வரிகள்.. கலக்குறே காயத்ரி..
ஹஹா தேங்க்ஸ் அண்ணா...
Deleteரசிக்க வைக்கும் அழைப்பு...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா
Deleteஇப்போது தான் கவனித்தேன்... உங்கள் கருத்துகளே எனது தளத்தில் இல்லையே... வேலைப் பளுவோ...?
Delete//உனக்குள் புதைந்து என்னை மறந்துக் கொள்கிறேன்...//
ReplyDeleteஎன்ன மாதிரியான உணர்வு இது? பயமா?
ரசித்தேன்...
பயமும் வழியும் கலந்த, ஒரு பாதுகாப்பு தேடுற உணர்வு
Deleteவா... வந்தென் வலி விரட்டிச் செல்...
ReplyDelete>>
வந்தாலும் வலிதானே காயத்ரி!?
அப்படி சொல்ல முடியாதே.... வலியை விரட்ட தானே ஆதரவு தேடி நிக்குறோம்
Deleteபடமும், படத்திற்கேற்ற கவிதையும் மிக அழகு....
ReplyDeleteபாராட்டுகள்.