Saturday, 14 March 2015

சைட் அடித்தல் - ஒரு பிரதாப சரித்திரம்



அவன் அழகானவன்....

அதான் அழகானவன்னு சொல்லிட்டேன்ல அப்படின்னா கண்டிப்பா சைட் அடிச்சிருப்பேன்...
.....................................

நைட் சாப்பாட்டுக்கு கொத்துப் பரோட்டா கொண்டு வந்தப்ப நந்து தோனி பத்தி ரொம்பவே சிலாகிச்சுட்டு இருந்தா... கூடவே ஐ லவ் தோனி, ஹைய்யோ அவன் என்னா அழகுன்னு சிலிர்ப்பு வேற... முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள இதுக்கு பேச்சைப் பாருங்க...
................................

கன்னாபின்னான்னு சைட் அடிக்குறதுல என் அம்மா கில்லாடி... அதுவும் அம்மா ஜடேஜாவோட பயங்கர ஃபேன். எனக்கு ஜடேஜா எல்லாம் நியாபகம் இல்லனாலும் அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவ ஜடேஜா பேரை சொல்லாம விட மாட்டா... எப்ப பாத்தாலும் என் கன்னத்த பாத்து, அப்படியே ஜடேஜா கன்னம் என் பொண்ணுக்குன்னு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுப்பா... அஞ்சு வயசுல எல்லாம் போமா, யாருக்கோ குடுக்க வேண்டிய முத்தத்த எனக்கு குடுக்குறன்னு சட்டுன்னு கைய வச்சு முத்தத்த துடச்சிடுவேன்...

நான் எய்த் படிக்குற நேரம் எல்லாம் அழகா (அது என்ன அழகுன்னு அம்மாகிட்ட தான் கேக்கணும், இங்க அழகுங்குறது ஒரு குறியீடு மட்டுமே) இருக்குற பசங்கள பாத்தா பையன் செம ஸ்மார்ட்ல... அவன் ஹேர் ஸ்டைல் பாரேன், ஹே அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் பாரேன், ஸ்மார்ட்லன்னு தொணத்தொணத்துட்டே வருவா...

அம்மாவுக்கு இயற்கை பிடிக்கும், அழகு பிடிக்கும், அன்பு பிடிக்கும், நேசம் பிடிக்கும்.... எல்லாத்தையும் விட அவள் ஒரு குழந்தைத்தனமானவள்... அதனாலதானோ என்னவோ அப்பாவுக்கு அவள மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்...

நாங்க சேர்ந்து வெளில போறப்ப, அம்மா சைட் அடிச்சா, அப்பா உங்களுக்கு எந்த பொண்ணு அழகா இருக்குற மாதிரி தோணுதுன்னு கேப்பேன்.... எனக்கு எப்பவுமே உன் அம்மா மட்டும் தான் அழகுன்னு பதில் சொல்லுவார்... அம்மாவும் ஏய் என்னடி, என் புருசன மாத்தப் பாக்குறியான்னு எகிறுடுவா...

வேணாம் அன்னலெட்சுமி, பெருமாளுக்கு துரோகம் பண்ணாதன்னு நான் கலாய்ச்சா, ரெண்டும் ஜோடியா சேர்ந்துட்டு இத்துனூண்டு இருந்துட்டு பேச்சைப்பாருன்னு வலிய இழுத்துப் பிடிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா முத்தம் குடுப்பாங்க...
.........................................

எனக்கு அப்பா எல்லாம் சைட் அடிச்சாரான்னு இதுவரைக்குமே தெரியல... ஒருவேளை சைட் அடிக்குற உரிமை அப்பாவுக்கு மறுக்கப்பட்ருக்கலாம்.... லாம்... லாம்.... லாம்....

இந்த லாம்.... ஒரு குறியீடு, மறுக்கப்படலாம்ங்குறது யாருக்கும் சேர்த்துன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்....



.

12 comments:

  1. ரொம்பவே குறும்பு தான் உங்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் அண்ணா, எனக்கு குறும்பு பண்ணவே தெரியாது, அதான பிரச்சனையே

      Delete
  2. ungal elutiu rasikum padi iruthathu. vaalthukal.

    ReplyDelete
    Replies
    1. உங்க ரசனைக்கு நன்றி.

      Delete
  3. வணக்கம்
    கதை நன்றாக உள்ளது காதல் சுவை அதிகம்.... த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, இது கதை இல்ல நிஜம். ஹஹா ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  4. Replies
    1. ஆமா .........லாம்..... யாரும் சைட் அடிக்க கூடாது

      Delete
  5. வீட்டு குடும்பக் கதை அருமை.
    த ம ந 4

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... ஹஹா சரியா வந்து ஓட்டு போட்டுட்டீங்களே

      Delete
  6. சிறப்பாக வலைச்சரத்தை நடத்திச் சென்றதற்கு மனமார்ந்த பாராட்டுகள்..
    ஜாம்பவான்களுடன் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..
    மேலும் மேலும் சிறப்புகளை எய்துதற்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நேர்படப் பேசுதல் என்பது இதுதானோ

    ReplyDelete