ஒரு ஊருல ஒரு குயில் குஞ்சு இருந்துச்சு. அந்த கருங்குயில் பிறந்தது காக்கா கூட்டுல. அது பெருசாகுற வரைக்கும் காக்கா குஞ்சுகளோடயும் காக்காவோடயும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் அந்த கூட்டை விட்டு வெளியேறியே ஆகணும்ங்குற கட்டாயத்துல அது தனியா பறந்து போய்டுச்சு.
தனியா வந்த கருங்குயிலு ஒரு நாவல் மரத்து மேல போய் உக்காந்துகிட்டு கூ கூ...ன்னு சோகமா கூவிக்கிட்டு இருந்துச்சு. வழக்கமா நாவல் மரத்துல இளைப்பாற வர்ற பறவைங்க எல்லாம் மெதுமெதுவா இதுகிட்ட பேச ஆரம்பிச்சுதுங்க...
இப்படி போய்ட்டு இருந்தப்ப ஒரு முத்துக் குயிலு அதே நாவல் மரத்துக்கு வந்து சேர்ந்துச்சு. மத்த பறவைங்க கிட்ட பட்டும் படாமலும் பழகி வந்த கருங்குயிலு முத்துக் குயில பாத்து சந்தோசமாகிடுச்சு. அப்படியே ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் ஆக, முஸ்தபா முஸ்தபான்னு பாட்டு பாடிகிட்டே மத்த பறவைங்களோட சேர்ந்து சந்தோசமா இருக்க ஆரம்பிச்சதுங்க ரெண்டு குயில்களும்.
ஒரு நாள், பக்கத்து அரச மரத்துல வாழ்ந்து வந்த வல்லூறு நாவல் மரத்துக்கு வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா மத்த பறவைங்க கூட பழக ஆரம்பிச்ச வல்லூறு, கருங்குயில் கிட்டயும் அன்பா பேச ஆரம்பிச்சுது. ஆனா முத்துக் குயில கண்டா அதுக்கு பிடிக்குறது இல்ல...
வல்லூறு காட்டுன அன்புல மயங்குன கருங்குயில் முத்துக் குயில ஓரம்கட்ட ஆரம்பிச்சுடுச்சு. முத்துக் குயிலும் வேற வழியே இல்லாம, வேற ஒரு இடத்துக்கு பறந்து போய்டுச்சு...
கருங்குயிலுக்கு இப்ப ஏக சந்தோசம், முத்துக்குயில பத்தி அந்த மரத்த தேடி வர்ற பறவைங்க கிட்ட எல்லாம் பொல்லாப்பு சொல்லிட்டு திரிஞ்சுது. கூடவே வல்லூறு வேற இருக்கு, அதோட ஆட்டத்துக்கு சொல்லவா வேணும்....
எல்லாமே நல்லா போயிட்டு இருக்குறதா நினைக்குற அந்த கருங்குயில் ஒரு விசயத்த மறந்துடுச்சு... அதாவது அது இப்போ பழகிட்டு இருக்குறது ஒரு வல்லூறு... வல்லூறு எப்பவுமே தன்னோட இன்னொரு முகத்த எப்ப காட்டும்னு சொல்ல முடியாது...
தான் பண்ணின துரோகம், உதாசீனம், இதெல்லாம் புரிஞ்சு ஒரு நாள் கருங்குயில் தனிமைல உக்காந்து அழும்போது அது கூட யாருமே இருக்கப் போறதில்ல... மத்த பறவைகளும் வேடிக்கை பாத்துட்டு அது வழில போய்டும்...
இப்படி தான் சில மனுசங்களும் இருக்காங்க. தன் கூட நெருங்கிப் பழகினவங்கள, திடீர்னு வந்து நட்பாகுற மனுசங்களுக்காக விட்டுக் குடுத்துடுறாங்க. மேம்போக்கா பழகுறவங்கள காயப்படுத்த யோசிக்குறவங்க உயிருக்கு உயிரா பழகினவங்கள காயப்படுத்த கொஞ்சமும் யோசிக்குறதே இல்ல... இதெல்லாம் ஒரு நாள் அவங்களுக்கும் நடக்கும்னு ஏனோ நினைச்சுப் பாக்க மறந்துடுறாங்க...
இப்ப நாம என்ன பண்ணணும்னா நம்ம கிட்ட நட்பா இருக்குறவங்க கிட்ட நட்பா இருக்கணும். ஒருவேளை அவங்க நம்மள விட்டு பிரிஞ்சு போனா, அத பத்தி கவலப்பட்டுட்டு இருக்காம, அந்த இடத்த விட்டு விலகிடணும்...
நட்பும் கற்று மறத்தல் நன்று...
.
நட்பைப்பற்றிய பறவையை கலந்து சொன்ன கதை அருமை.
ReplyDeleteமுஸ்தபா முஸ்தபான்னு பாடுச்சா ? ஒருவேளை அந்தக்குருவி முஸ்லிமா ?
அப்புறம் வலைச்சரத்.... வேண்டாம் வீண் பிரட்சினை தமிழ் மணம் 1
குழந்தை அழகு.
முதல்ல அறுவைன்னு சொல்லாம அருமைன்னு சொன்னதுக்கு ஒரு தேங்க்ஸ்.... அப்புறம், முஸ்தப்பாங்குறத பெயர பொது பெயரா எப்பவோ ஏ.ஆர்.ரகுமான் மாத்திட்டார்....
Deleteஅப்புறம், அந்த வீண் பிரச்... சரி வேணாம், ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்...
குழந்தைனாலே அழகு தான்.... அதுக்கும் சேர்த்து அந்த குழந்தை சார்பா தேங்க்ஸ்
Natpum katru mara yano eanku udanpadu ila.
ReplyDeleteநீங்கள் நினைத்தாலும்... ஏன்...? யார் நினைத்தாலும் உண்மை நட்பு அழிவதில்லை...
ReplyDeleteசரியான நட்பை அறியாமல் இருப்பது வேதனைதான்
ReplyDelete