Friday, 3 April 2015

நானும் என் பலவீனங்களும்



நாம எல்லாருமே எல்லா விதத்துலயும் பெர்பெக்ட்ன்னு எப்பவும் சொல்லிடவே முடியாது. ஆனாலும் நம்மோட நெகடிவ் பக்கத்த நாம எப்பவுமே மறைச்சு வைக்கத் தான் ட்ரை பண்ணுவோம். எந்த ஒரு விசயமா இருந்தாலும் நம்மோட பாசிட்டிவ் பக்கங்கள் தவிர்த்து நாம எதையும் வெளிப்படுத்த தயாரா இருக்குறதில்ல.

சரி, இப்ப இதெல்லாம் எதுக்கு. நான் சொல்ல வந்தது என்னோட எதிர்மறை அதாவது நெகடிவ் பக்கத்த பத்தி. இத பத்தி நான் முதல் முதல்ல பேஸ்புக்ல தான் போஸ்ட் போட்ருந்தேன். கோவை ஆவி அண்ணா இன்பாக்ஸ் ஓடி வந்து இந்த மாதிரி பதிவுகள் பொதுவெளில வேணாமேன்னு சொன்னார். மறுவார்த்தை பேசாம ஓடிப் போய் அத தூக்கிட்டு, எடுத்துட்டேன் அண்ணான்னு சொன்னேன். ஆமா, அவர் சொன்னது எனக்கு சரியா பட்டுச்சு. எல்லாரும் அத சரியா புரிஞ்சுப்பாங்களாங்குறது சந்தேகம் தான். காரணம் நான் அதுல என்னோட நெகடிவ் பக்கத்த மட்டும் தான் சொல்லியிருந்தேன்.

சின்ன வயசுல இருந்து பிடிவாதம், அடம், கோபம்னு எல்லாமே எனக்கு உண்டு. ஆனா அந்த அடமும் கோபமும் யாராவது தப்பு செய்தா தான் அதிகமா வரும். ஒருத்தங்க தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சா யாரா இருந்தாலும் சண்டை போடுவேன். எதிர்த்து கேள்வி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ஆனா அத மீறி சில விஷயங்கள் விட்டுக் குடுப்பேன். எவ்வளவு தான் பகையாளியா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப் போய் முதல் ஆளா கைக்குடுப்பேன். இதனாலயே எனக்கு என்னை புரிஞ்சுகிட்ட பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. எந்த நிலையிலும் என்னை விட்டுக் குடுக்க மாட்டாங்க. காரணம் அவங்களுக்கு தெரியும் நான் எப்படின்னு.

கோபம்னு வந்துட்டா அப்பாவா இருந்தாலும் விட மாட்டேன். அவங்க செய்தது தப்புன்னு அவங்க ஒத்துக்குற வரைக்கும் இல்ல, அடுத்தும் அவங்க அத திருப்பி செய்யக் கூடாதுன்னு எல்லாம் மிரட்டுவேன். வாக்குறுதி வாங்குவேன். ஆனா இதெல்லாம் நியாயமான கோபம். இப்பவும் இந்த மாதிரியான கோபம் எனக்கு வரும். இதுல தப்பு இருக்குறதா எனக்கு தெரியல...

ஆனா, நான் காரணமே இல்லாம கோபப்பட்டுருக்கேன். எத்தனையோ விதத்துல பலரை காயப்படுத்தியிருக்கேன். இதெல்லாம் ஏன் நடந்துச்சு?

சர்ஜரி, ரேடியேசன், ஹீமோன்னு ஒரு மாதிரியா அழுத்தத்துக்குள்ளயே வாழ்ந்த நாள் அது. அம்மா ஏதாவது சாப்பிட குடுத்தா கூட கத்துவேன். வேணாம் போன்னு தூக்கி விசிறியடிப்பேன். அடுத்த நிமிஷம் இதே சாப்பாட்டு தட்ட தூக்கி எரியுற அப்பாவ திருத்த நானும் தம்பியும் போடுற நாடகம் எல்லாம் நியாபகம் வரும். ஓடிப் போய் பைத்தியம் பிடிச்ச மாதிரி விசிறியடிச்ச சாப்பாட்டு தட்டுல எல்லாத்தையும் வழிஞ்சு வைப்பேன்.

அம்மா எதுவுமே சொல்ல மாட்டா. என் கூட சேர்ந்து எல்லாத்தையும் ஒவ்வொரு சோத்து பருக்கையா பொறுக்குவா. என்னை பிடிச்சு ஓரமா நிக்க சொல்லிட்டு தரைய கிளீன் பண்ணுவா. எனக்கு மன்னிப்பு கேக்கணும்ன்னு கூட தோணாது. பேசாம போய் படுத்துருவேன். அப்ப தான் அவளோட அந்த கை என் முதுகுல படும். அவ கைப் பட்ட அடுத்த நொடி உடைஞ்சு போய் ஓன்னு அழ ஆரம்பிச்சுடுவேன். இன்னும் அழுத்தம் அழுத்தமா கட்டிப் பிடிப்பா. திமிறி பாப்பேன். ஒரு கட்டத்துல அடங்கிடுவேன்.

அப்புறமா என்னன்னெவோ புலம்ப ஆரம்பிப்பேன். எல்லாத்தையும் கேப்பா. மெதுவா எழுந்துப் போய் அடுத்து சாப்பாடு எடுத்துட்டு வருவா. என் முன்னால உக்காந்து என் கண்ணையே பாத்துட்டு இருப்பா. திடீர்னு என் புள்ள எவ்வளவு அழகுன்னு சொல்லுவா. பட்டுன்னு வெக்கமா சிரிப்பான்னு தெரியாது, ஆனா சங்கோஜமா நெளிவேன். சரி சரி, சாப்டுன்னு ஊட்டி விடுவா. அந்த சாப்பாட்ட நான் தின்னு முடிக்குறதுக்குள்ள சகஜமாகி, உனக்கு சமைக்கவே தெரியல லெட்சுமி, பாரு உப்பு ஜாஸ்தியா போட்ருக்கன்னு நக்கல் அடிப்பேன். இருடி, நாளைக்கு இன்னொரு கை உப்பு சேத்து அள்ளிப் போடுறேன்னு அம்மா சொல்லுவா. அப்புறம் என்ன நீயே தின்னுன்னு நான் அவளுக்கு ஊட்ட, அவ எனக்கு ஊட்ட ஒரே லா...லா....லா.... தான்....

ஒரு உதவின்னு கேட்டு பிரெண்ட்ஸ் வருவாங்க. அதெல்லாம் முடியாது, நானென்ன உங்களுக்கு வேலைக்காரியான்னு பட்டுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவேன். அவங்க மனசு எவ்வளவு நொறுங்கி போயிருக்கும்ன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. ஆனா என்னோட மூளை வார்த்தைகள வெளில விட்ட உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும். சட்டுன்னு பல்லை கடிச்சுட்டு சரி சரி சாரின்னு சாரி கேப்பேன். அதெப்படி அவங்க மன்னிப்பாங்க, அவங்க மன்னிப்பாங்கன்னு நாமளும் எதிர்பாக்க கூடாது இல்லையா... ஒண்ணுமே பேசாம அந்த இடத்த விட்டுப் போய்டுவேன். அப்புறமா அவங்க கேட்ட உதவிய கடகடன்னு செய்து முடிச்சுட்டு, அதான் சாரி கேட்டுட்டேன்ல, அப்புறமும் என்ன மூஞ்சிய தூக்கி வச்சுட்டு, நீ என்ன பெரிய கொம்பனா/கொம்பியா ன்னு கேட்டு ஒரு வழியா அவங்கள சிரிக்க வச்சு, தோள் மேல கைப்போட்டு கதைபேச ஆரம்பிச்சுடுவோம்.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே மாதிரியான ஒரு சூழ்நிலைல பாட்டி மேல இருந்த கோபத்துல கைல இருந்த சொம்ப தூக்கி வீச, ஆச ஆசையா நான் வாங்கி வச்ச மீன் தொட்டி உடைஞ்சு போச்சு. அப்பா, தம்பி எல்லாரும் அப்படியே அசையாம நின்னுட்டு இருக்காங்க. நான் படார்ன்னு கதவ சாத்திட்டு பெட்ல வந்து விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஐயோ என் மீனுக்கு என்னாச்சுன்னு ஞானோதயம் வர ஓடிப் போய் கதவ மடீர்ன்னு தொறந்தா, அப்பாவும் தம்பியும் மீன எல்லாம் பிடிச்சு இன்னொரு பக்கெட்ல போட்டு வச்சிருந்தாங்க. அப்பா என்னைப் பாத்ததும் சிரிச்சாங்க. நான் மறுபடியும் கதவ படீர்னு சாத்திட்டேன்.

காலைல பத்து மணிக்கு நான் எழுந்து வந்து பாத்தா அதுக்குள்ள மீன் தொட்டி ரெடி ஆகி, மீன் எல்லாம் உள்ள தூக்கி போட்டுட்டு இருந்தான். . ஓடி போய் தம்பியப் பாத்து சிரிச்சேன். அவன் தான் உம்மணாமூஞ்சி ஆச்சே, மீன் வலைய என் கைல தந்துட்டு அவன் பாட்டுக்கு போய்ட்டான். பாட்டி வாயத் தொறந்து பேசக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார் போல, அவங்களும் வாயே தொறக்கல. அப்புறம் காலேஜ்க்கு ஏன் வரல, உடனே வான்னு போன் வர கடகடன்னு கிளம்பி போயிட்டேன். சாயங்காலம் திரும்பி வந்தப்ப பேக் டு நார்மல்...

இதுல இருந்து எல்லாம் என்னால மீண்டு வர முடிஞ்சதுக்கு காரணம் நான் மட்டும் தான் காரணம்ன்னா நினைக்குறீங்க?

கண்டிப்பா இல்ல... அன்னிக்கி நான் சாப்பாட்டுத் தட்ட விசிறியடிச்சுட்டு போனப்ப எனக்கென்ன, உனக்கு அவ்வளவு திமிரான்னு என் அம்மாவும் மூஞ்சை திருப்பிட்டு போயிருந்தா இன்னிக்கி இந்த காயு இருந்துருக்க மாட்டா. இன்னும் கோபமும் வெறியும் அதிகமாகி ஒரு பைத்தியக்காரியா தான் உலாவிட்டு இருந்துருப்பா. மன்னிப்பு கேட்ட உடனே மன்னிக்கணும்ன்னு என் பிரெண்ட்ஸ்க்கு அவசியம் இல்ல. அப்படி அவங்க மன்னிக்காம போயிருந்தா நட்பு வட்டத்துக்குள்ள யாருமே நேசிக்க முடியாத ஒரு விரோதியா தான் நான் மாறி போயிருப்பேன். மீன் தொட்டிய நான் உடச்சப்ப அப்படியே போகட்டும்னு விட்டுட்டு அப்பாவும் தம்பியும் போயிருந்தா, மீன் செத்து போச்சுன்னு என் ஆத்திரம் அதிகமா தான் ஆகியிருக்கும். விட்டுக்கொடுத்தலுக்கான எந்த வித புரிதலும் எனக்கு புரியாமலே போயிருக்கும்.

நல்லா பழகிட்டு இருப்போம். திடீர்னு ஒருத்தர் நமக்கு எதிரா செயல்படுவார். நிஜமா நாம அவங்கள நேசிச்சோம்னா உடனே யாரையும் வெறுத்திட முடியாது இல்லையா... அவங்களோட அந்த செயல்களுக்கான காரணம் என்னன்னு நாம நேரடியாவே அவங்க கிட்டயே கேக்குறதால ஒண்ணும் நாம குறைஞ்சு போய்ட மாட்டோம். எப்பவுமே நட்புக்குள்ள பிரச்சனைன்னா நான் சம்மந்தப்பட்டவங்க கிட்ட நேரடியாவே கேட்டு என்னோட சந்தேகத்த தீத்துப்பேன். இதனால சில விலகல்கள் மாறி இன்னும் அதிகமா நெருங்கியதும் உண்டு. சில பேர இவங்க நட்புல இருக்க வேண்டிய ஆள் நாம இல்லன்னு புரிஞ்சு விலகி வந்ததும் உண்டு. எல்லாருக்குமே அவங்கவங்க எப்படி இருக்கணும்ன்னு முடிவெடுத்துக்குற உரிமை உண்டு இல்லையா...

சரி, சொல்ல வந்த விசயத்த விட்டு விலகிப் போறேன்னு நினைக்குறேன். இந்த மாதிரியான டிப்ரஸ்ட் பெர்சன் அதாவது மன அழுத்தத்துல இருக்குறவங்கள நீங்க சந்திக்கலாம், கடந்து வந்துருக்கலாம். நான் சொல்ல வர்றதெல்லாம், அவங்கள சந்திக்குற போது அவங்க நிலைல நம்மள பொருத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாக்கலாம். நாம இப்படியான ஒரு நிலைல இருந்தா, மத்தவங்க நம்மள எப்படி ட்ரீட் பண்ணணும்ன்னு எதிர்ப்பார்ப்போம்? அப்படி நாம அவங்கள ட்ரீட் பண்ணலாம் இல்லையா?

என்னை சுத்தி உள்ளவங்க என்னை சரியா ஹேண்டில் பண்ணினதால தான் இன்னிக்கி காயு உங்க கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கா... அப்போ உங்க பக்கத்துல இருக்குறவங்கள நீங்க சரியா ஹேண்டில் பண்ணினா எத்தனையோ காயுக்கள், அவங்கள அவங்களே உணர நீங்க உதவியா இருக்கலாமே...

கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விட்டுக்குடுத்தல், கொஞ்சமே கொஞ்சம் அன்பு... இதெல்லாம் இருந்தா போதுமே... சக மனுசன நேசிக்க.... அவனும் தன்னை உணர்ந்துக் கொள்ள....

லவ் யூ ஆல்.... லவ் யூ பார் எவர்.....







31 comments:

  1. Neettalum mazhithalum vendaa ulagam
    PaLithathu ozhithu vidin
    Said Thiruvalluvan .
    Of the many that are to be rid
    Anger stands first.
    Your own experience proves this
    All the best.
    What do you do to see that u r loved ?
    Love them without anything in return.

    Subbu thatha

    ReplyDelete
    Replies
    1. எதிர்பாக்காம நேசிக்குறது ஒரு சுகம் தான். ஆனா எல்லார் கூடவும் அப்படி இருக்க முடியுறதில்ல... சில நேரம் மனசு அடம்பிடிக்க தான் செய்யுது.... ஹஹா... தேங்க்ஸ் தாத்தா இந்த பக்கமா வந்ததுக்கு

      Delete
  2. நமது பலவீனங்களை நாமே சொல்ல உண்மையில் தைரியம் வேண்டும்.அது உங்களைப் போன்ற ஒரு சிலருக்கே இருக்கின்றது.அந்த நேர்மை பலருக்கும் இல்லை என்பதே உண்மை

    ReplyDelete
    Replies
    1. :) நேர்மை அது இதுன்னு எல்லாம் பெரிய வார்த்தை வேணாம் அண்ணா, சில நேரம் நம்மள வெளிபடுத்திட்டா கொஞ்சபேராவது நம்மள புரிஞ்சுப்பாங்கங்குற எண்ணம் தான்.... தேங்க்ஸ் அண்ணா

      Delete
  3. பலவீனங்களை அறிவதே பெரிய விசயம்... அதுவே சிறந்த பலம்...

    நேரம் கிடைப்பின் http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html

    "அடேங்கப்பா...!" என்று fb comment box-ல் எதிர்ப்பார்க்கிறேன்.... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா உங்க எதிர்ப்பார்ப்ப வீணாக்க முடியுமா அண்ணா... கமன்ட் போட்டுட்டேன், ஆனா எந்த கமன்ட் பாக்ஸ்ன்னு தான் சரியா பாக்கல

      Delete
  4. தனபாலன் சார் சொல்ற மாதிரி பலவீனங்களை உணர்வதே பெரிய பலம் ஏனோ கோபப்படும் எல்லோரையும் எந்த சூழல் கோபப்பட வைத்தது என்று யோசிக்கப் பழகியிருந்ததால் எந்த நட்பையும் விலகி நிற்க நேர்ந்ததேயொழிய பிரிய நேரிடவில்லை

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.... என்னை என்னை சுத்தி உள்ளவங்க புரிஞ்சுகிட்டதால தான் நான் இன்னிக்கி என்னை சுத்தி உள்ளவங்கள புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்... எல்லார் மனசுலயும் வர வேண்டிய மாற்றம் இது

      Delete
  5. இந்த பதிவு பல விஷயங்களை சிந்திக்க தூண்டுகிறது. குட்..... எனது மனம் இப்போது நீங்கள் சொன்ன விஷயங்களை அசைப் பொட்டு கொண்டிருக்கிறது.... மீண்டும் ஒரு குட் உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அசை போட ஆரம்பிச்சுட்டீங்களா.... இப்ப நான் வெற்றி வெற்றின்னு மூணு தடவ கூவணும்.... பின்ன ஒருத்தர அசைப் போட வச்சுட்டேனே

      Delete
  6. மனதில் உள்ளவைகளை யாதார்த்தமாக கொட்டி விடுகிறீர்கள் நானும் இப்படித்தான் தவறுனா யாராயிருந்தாலும் எதிர்த்திடுவேன் பல மனிதர்கள் கடவுளைக்கூட எதிர்ப்பாங்க ஆனால் எல்லா மனிதர்களுமே எதிர்க்க முடியாத ஒருவர் இருக்கிறார் அவர்தான் அவரவருடைய மேலாளர்.
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா... நான் என்னோட ஹச்.ஓ.டி, ப்ரின்சிப்பால கூட விட்டு வச்சதில்ல...

      ஓட்டுப் போட்டதுக்கு தாங்க்ஸ் அண்ணா

      Delete
  7. நீங்கள் நலமாக இருங்கள்.
    நீங்கள் சொல்வதுபோல் சிலசமயம் நாம் அடுத்தவர் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் போது, அவர்கள் தங்கள் தவறைப் புரியாமலே போவது மாத்திரமன்றி, நம்மை "லூசு" களாகக் கணிக்கிறார்களே!
    மயிலிறகானாலும் அதிகமானால் அச்சு உடையும் என்கிறார் . வள்ளுவர்.
    பொறுமையின் எல்லை என்ன?
    உறவு, நட்பு, உலகம் - அனுசரித்துச் செல்வதே வாழ்க்கை ஆனால் இதை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டாமா?
    அதை நினைவு படுத்துவது தவறா?

    ReplyDelete
    Replies
    1. நாம் அடுத்தவர் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் போது, அவர்கள் தங்கள் தவறைப் புரியாமலே போவது மாத்திரமன்றி, நம்மை "லூசு" களாகக் கணிக்கிறார்களே!/// ஹஹா அப்படி எனக்கும் நடந்திருக்கு. ரொம்ப நம்பினேன், ரொம்ப பழகினேன், என்னோட சில மனவருத்தங்கள கூட அவங்க கிட்ட பகிர்ந்திருக்கேன். திடீர்ன்னு என்னை துரோகின்னு சொன்னார், விசம்னு பொதுவெளில பதிவிட்டார். மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்தாலும் காரணம் தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசைப் பட்டேன். நானா அப்படி சொல்லல, அவன் அப்படி சொன்னான், இவன் இப்படி சொன்னான், அதனால நானும் அப்படி சொன்னேன், மத்தப்படி எனக்கு எந்த விரோதமும் இல்ல, நான் தப்பு செய்யல, நானா அப்படி சொல்லலன்னு திரும்ப திரும்ப சொன்னாங்க. அந்த ஒரே நிமிஷம் அவங்கள எடை போட எனக்கு போதுமானதா இருந்துச்சு. ச்சீ-ன்னு அந்த நிமிஷம் விட்டு விலகி வந்துட்டேன்.

      யார் சொல்லியும் நான் அவங்கள தப்பா எடை போடல, அவங்களே சொன்னாங்க.... நான் புரிஞ்சுகிட்டேன்....

      இப்படி கணிக்குரவங்க கூட அப்புறம் நமக்கு என்ன பேச்சு? ஒரே ஒரு செகண்ட் அடடா, நாம அவள காயப்படுத்திட்டோமோன்னு கூட சிந்திக்காத, நான் தப்பே செய்யல, அடுத்தவங்க சொன்னதால தான் சொன்னேன்னு சொல்றவங்கள என்ன பண்ண முடியும்?

      புரிஞ்சுக்காதவங்கள விலக்குதலும் நல்லது தான்.... அது அமைதியா விலகிடணும்....

      நான் விலகியும் தொடர்ந்து காயப்படுத்தப் பட்ருக்கேன். இன்னொரு நாள் யாருக்கும் பாதிப்பில்லாம அதையும் சொல்லுவேன்...

      /////உறவு, நட்பு, உலகம் - அனுசரித்துச் செல்வதே வாழ்க்கை ஆனால் இதை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டாமா?
      அதை நினைவு படுத்துவது தவறா?///// புரிஞ்சுக்காதவங்களுக்கு நினைவுப்படுத்துவது தப்பு தான்.... கண்டிப்பா..... விலகிக்கலாம்.... நமக்கு நம்மோட ஆரோக்கியமும் சந்தோசமும் முதல்ல முக்கியம். யாரோ ஒருத்தராகி போய்டவங்ககிட்ட வாதாடி என்ன ப்ரோயோஜனம் சொல்லுங்க?

      Delete
  8. ஒருவர் தங்களது நெகடிவ் விஷயங்களை பொதுவெளியில் சொல்ல மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். பெரும் மனிதர்களுக்கு மாத்திரமே அது இருந்தது.
    இதை சொன்னதன் மூலம் சமூகத்துக்கு நல்ல மெசேஜ் ஒன்றை சொல்லியிருக்கிறீர்கள்.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. இங்க கண்டிப்பா யாருமே பெர்பெக்ட் கிடையாது. நானும் தான். அப்புறம் எதுக்கு நான் பெர்பெக்ட்ன்னு சொல்லிக்கணும்ன்னு புரியல. ஆனா ஒண்ணு மனசாட்சிக்கு ரொம்பவே பயப்படுவேன். அதனால தான் சாதக பாதகங்கள அலச முடியுது

      Delete
  9. kadantha 6 masama intha Surgery, chemo, radation pathu enaka oru matheri aidichu. atha anupavachvugaluku than antha vethanai therium. paka velivu vera athu atha vida perum kodumai. itharku maatru vali iruku nu eanaku sonaga antha link paruga http://vediccowproducts.com/30-distilled-cow-urine.html anivarukum ithu payanpadum endru nampukeran. mmjnd oa

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப இனிமேல் நான் எப்படி போராடினேன் (உண்மைய சொன்னா நான் போராடவே இல்ல, வீட்ல உள்ளவங்க தான் போராடினாங்க) அப்படின்னு சொல்றேன்.... நம்பிக்கை மட்டும் தான் ஒரே மருந்துங்குறது என்னோட நம்பிக்கை

      Delete
  10. முதலில் மொய் (தம 5)
    அப்புறம் 1 வேண்டுகோள்
    சகோ நானும் பதி எழுதுறேன்னுதான் பேரு ஆனா உருப்படியா 1ம் தேரலை எனவே
    விரைவில் எழுத ஒரு அற்புதமான தலைப்பு தந்திருக்கீங்க. கவலைப்படாதீங்க உங்க பதிவின் தலைப்பை மட்டும் கொஞ்சம் மாத்தி ' நானும் என் சொல்ல முடியாத பலவீனங்களும்' அப்டீனு பதிவிடலாம்னு இருக்கேன். (உங்க அன்பான அனுமதியோட) நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஹஹா எழுதுங்க எழுதுங்க

      Delete
  11. வணக்கம்
    தங்களைப் போல துணிவு வேண்டும் ...முதல் பலவீனம் என்றால் அடுத்தது வெற்றிதான் அந்த பலவீனத்துக்கு என்ன காரணம் என்று தேடி கண்டு பிடிக்கவேண்டும் அப்படி கண்டு பிடித்தால் ஒவ்வொரு மனிதனையும் அடுத்த வெற்றிக்கு வழிதேடல்.. பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அண்ணா... அடுத்தவங்க கிட்ட தன்னோட பலவீனத்த ஒத்துக்கலனா கூட பரவால, நமக்கு நாமே கூட ஒத்துக்குற மறுக்குறோம். ஆனா சுய அலசல் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லாம் சரியாகிடும்... ஓட்டுப் போட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  12. //கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விட்டுக்குடுத்தல், கொஞ்சமே கொஞ்சம் அன்பு... இதெல்லாம் இருந்தா போதுமே... சக மனுசன நேசிக்க.... அவனும் தன்னை உணர்ந்துக் கொள்ள.... //

    சரியாச் சொன்னீங்க.....

    நம் தவறுகளை உணர்ந்து கொண்டால் திருத்திக் கொள்வது சுலபம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா.... தன்னை உணர்தல் தான் இங்க முக்கியம்.... தேங்க்ஸ் அண்ணா கமன்ட் போட்டதுக்கு

      Delete
  13. எனது பதிவு மதுரை மண்டு மருதமுத்து படிக்கலாமே.....

    ReplyDelete
    Replies
    1. படிச்சு கமன்டும் போட்டாச்சு அண்ணா

      Delete
  14. எத்தனை இலகுவாக கடத்திச் செல்கிறாய் வார்த்தைகளை. பல இடங்கள் மயிலிறகாய் வருடுகிறாய் பெண்ணே... மன அழுத்தத்திற்கான கவுன்சிலிங் தேவைப்படுவோருக்கு உன் இந்தப் பதிவுகளை வாசிக்கக் கொடுக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா கார்த்திக் தேங்க்ஸ் எ லாட்.... <3 <3 <3 லவ் யூ சோ மச்....

      Delete
  15. I remember to have read this on your wall. An excellent piece. A mixture of confession & innate contradiction. I remember one more feature of this. A humorous mention about your mother to your father. OK. Why are you here @ midnight ? You should be resting @ this time ?

    ReplyDelete
    Replies
    1. முதல்ல தேங்க்ஸ்... அப்புறம் நீங்க கமன்ட் போட்ட ராத்திரி ஒரு மணிக்கு நான் ஸ்பாட்லயே இல்ல.... கொஞ்சம் வொர்க் இருந்துச்சு. பாத்துட்டு தூங்கப் போயிட்டேன்.... (எப்படி எல்லாம் மிரட்டுறாங்கப்பா)

      Delete
  16. வலைச்சர அறிமுகம் பார்த்து வந்தேன் வாழ்த்துகள்

    ReplyDelete