அந்தப்பக்கம்: ஹலோ காயத்ரி மேடம்ங்களா?
நான்: ஆமா, நீங்க யாரு?
அந்தப்பக்கம்: நான் ______ காலேஜ்ல இருந்து பேசுறேன் மேடம், நாளைக்கு எங்க டிபார்ட்மென்ட் அசோசியேசன் டே. நீங்க சீப் கெஸ்ட்டா வர முடியுமா?
நான்: சார், நீங்க வேற யார்கிட்டயோ பேச வேண்டியத என்கிட்ட பேசுறீங்க. நான் ஸ்டாப் கிடையாது, ரிசெர்ச் ஸ்காலர்.
அந்தப்பக்கம்: தெரியும்ங்க, போனமாசம் நீங்க திருநெல்வேலி ராணி அண்ணா காலேஜ்ல பேப்பர் ஒண்ணு ப்ரெசென்ட் பண்ணுனீங்க தானே
நான்: ஆமா...
அந்தப்பக்கம்: அப்படினா நீங்களே தான்.
நான்: சரி, அப்படி இருந்தாலும் ஏன் நாளைய ப்ரோக்ராம்க்கு இன்னிக்கி சாயங்காலம் கூப்டுறீங்க?
அந்தப்பக்கம்: மேடம் சாரி, நாலு நாளா உங்கள காண்டாக்ட் பண்ண ட்ரை பண்றோம். உங்க நம்பர் கிடைக்கவேயில்ல. இப்ப தான் கிடைச்சு உடனே கால் பண்றோம்.
நான்: ஒரு வேளை என் நம்பர் கிடைக்காம போயிருந்தா?
அந்தப்பக்கம்: வேற ஒரு ப்ரோபஸசர் இருக்காங்க. அவங்கள கூப்ட்டு நடத்தியிருப்போம். ஆனாலும் நீங்க வந்தா நல்லாயிருக்கும்ன்னு தான் கடைசி வரை முயற்சி பண்ணினோம்.
நான்: எந்த டாபிக்ல பேசணும்
அந்தப்பக்கம்: நீங்க பேச ஆரம்பிச்சாலே டாபிக் ஆகிடும் மேடம். என்ன வேணா பேசுங்க (ங்ஞே.... இத மட்டும் தெளிவா சொல்லுவாங்களே)
நான்: சரி சார், நான் காலேஜ்ல பெர்மிசன் கேட்டுட்டு வந்து சொல்றேன்...
கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி, நான் எம்.பில் பண்ணிட்டு இருந்தப்ப அந்த காலேஜ் போயிருக்கேன். அவங்க நடத்துன நேசனல் லெவல் செமினார்ல பேப்பர் ப்ரெசென்ட் பண்ணி பஸ்ட் ப்ரைசா ஒரு மெட்டல் திருவள்ளுவர் சிலை வாங்கிட்டு வந்தேன். அப்புறம் போன மாசம் திருநெல்வேலில அந்த ப்ரோக்ராம் நடத்துன ஸ்டாப் வந்து கைகுடுத்தாங்க. நீங்க அந்த செமினார்ல ப்ரைஸ் வாங்கினவங்க தானேன்னு நியாபகமா கேட்டாங்க. இந்தா இப்ப இப்படி ஒரு அழைப்பு....
பேப்பர் ப்ரெசென்ட் பண்ண பல மேடை ஏறி இறங்கியிருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு போட்டி மனப்பான்மைல... முதல் முறையா சீப் கெஸ்ட்ங்குற அங்கீகாரம், அதுவும் வேலைல சேர்றதுக்கு முன்னாடியே...
மேடைல முதல் படில கால் எடுத்து வைக்குறேன்... முதல் பேச்சும் பேசப் போறேன்....
vaalthukal mudal padi vetri padi aagatum.
ReplyDeleteதேங்க்ஸ்... நல்லபடியா முடிஞ்சுது. சீக்கிரம் என்ன பேசினேன்னு பதிவு பண்றேன்
Deleteஎமது அட்வான்ஸ் வாழ்த்துகள் வெற்றி உமதே...
ReplyDeleteதமிழ் மணம் 1
ஓட்டுப் போட்டதுக்கும் வாழ்த்துக்கும் தேங்க்ஸ் அண்ணா
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி..
வெற்றியுடன் திரும்பி வர எனது வாழ்த்துக்கள்.த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹஹா தேங்க்ஸ் அண்ணா, ப்ரோக்ராம் முடிஞ்சிடுச்சு
Deleteகன்னிப் பேச்சில் கலக்குங்க :)
ReplyDeleteநீங்கள் கலக்குவீர்கள், கலக்குங்கள்.
ReplyDeleteஹஹா தேங்க்ஸ்.... ப்ரோக்ராம் முடிஞ்சிடுச்சு
Deleteவாழ்த்துக்கள்.போய்விட்டு வந்து விழா குறித்தும், பேசிய டாபிக் குறித்தும் எழுதுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு தேங்க்ஸ்... இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல கண்டிப்பா எழுதுறேன்
Deleteமிகவும் மகிழ்ச்சி...
ReplyDeleteசிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
வாழ்த்தினதுக்கு தேங்க்ஸ் அண்ணா
Deleteவாழ்த்துக்கள்............
ReplyDeleteதேங்க்ஸ்
Deleteஅசத்துங்க
ReplyDeleteஅசத்தியாச்சு... பேச்சு சீக்கிரம் வெளிவரும்
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா
Delete