திடீர்னு ஒரு நாளு அர்த்தராத்திரியில மனசுக்குள்ள ஒரு மாதிரியான ஒரு வெறுமை. என்னடா இது, பிறந்தோம், வளந்தோம்னு ரொம்ப வெட்டியாவே இருக்கோமோன்னு தோணிகிட்டே இருந்துச்சு.
எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும், அதுவும் சீக்கிரமே வேணும்னு நினச்சப்ப தான் ஏன் நாம எழுதின உணர்வுகள எல்லாம் ஒரு புத்தகமா போட்டு இந்த மக்கள கொலை பண்ணக் கூடாதுன்னு தோணிச்சு.
உடனே சரி, நாம எழுதினதுல காதல் சார்ந்தத தனியா எடுத்து வைப்போம்னு முடிவு பண்ணி கடகடன்னு காதல் கவிதைகள (கவிதைன்னு சொல்றது தப்பு தான், ஆனா வேற என்ன பேரு குடுக்கணும்னு தெரியல) அந்த அர்த்த ராத்திரியில தொகுக்க ஆரம்பிச்சேன்.
ஒரு புக் போட தேவையான கவிதைகள தேர்ந்தெடுத்தாச்சு, அடுத்து என்னப் பண்ணலாம், காசு குடுத்து எல்லாம் நம்மால புக் போட முடியாதேன்னு ஒரே யோசனை...
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ம்ம்ம்-ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்க கவிதைகள புக்கா போட்ரலாம்ன்னு மங்காத்தா சொல்லிட்டே இருப்பார். அவருக்கு "நான் புக் போட ரெடி, இதெல்லாம் தான் நான் புக்ல போட தேர்ந்தெடுத்த கவிதை. எப்போ புக் வெளி வரும்னு ஒரு மெயில் தட்டி விட்டேன்...
அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மளமளன்னு வேலை ஆரம்பிச்சாச்சு...
பப்ளிஷர்க்கு கால் பண்ணி, நான் அஞ்சு பைசாக் கூட தர மாட்டேன், எனக்கு மார்கெட்டிங் பண்ணத் தெரியாது, அதனால ஒரு புக் கூட என்னால விக்க முடியாதுன்னு சொன்னேன். அதனாலென்ன, எல்லாம் நான் பாத்துக்குறேன்னார்... நமக்கு அந்த வார்த்த போதாதா என்ன?
நம்மகிட்ட மாட்டிகிட்டவர சும்மா விட முடியுமா, அடுத்து, ஒவ்வொரு கவிதைக்கும் படம் போட்டு டிசைன் பண்ணுவோமான்னு கேட்டேன். பாவம், அவரும் சரின்னு தலையாட்டினார்.
இப்ப புக் கலர்ல பிரிண்ட் ஆகுறதா முடிவாகிடுச்சு. வெறுமனே ஒரு படத்த எடுத்து கவிதை மேல போடுறதுல எனக்கு விருப்பம் இல்லாததால நானே படங்கள தேர்வு செய்து, இந்த கவிதைக்கு இது தான் படம்னு முடிவு பண்ணி டிசைன் பண்ணினேன்...
எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, அடுத்து கவிதை பிரிண்ட் பண்ணப்பட வேண்டிய பேப்பர் சாதரணமா இருந்தா நல்லாயிருக்காதேன்னு அதையும் பளபளப்பா குடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. பப்ளிஷர் அதுக்கும் தலையாட்டுறார்... எனக்கு கோவில் ஆடு ஏனோ நியாபகத்துக்கு வந்து தொலைக்குது...
சரி, அடுத்து இந்த அணிந்துரை, கருத்துரை எல்லாம் இருக்கே யார் கிட்ட கேக்குறது?
எனக்கு செல்வா அண்ணா, கார்த்திக், தமிழரசி அக்கா மூணு பேரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.
கார்த்திக் கிட்ட கேக்கலாம், ஆனாலும் ஒரு பயம். திட்டி விட்ருவாரோன்னு. தயங்கி தயங்கி கேட்டேன். எழுதி தரேன்னு சொன்னார், ஆனாலும் அடுத்த நேரம் பேசும் போது கவிதை புக் எல்லாம் நீ போடுறது வேஸ்ட்ன்னு சொன்னார். சரி தான், அப்ப இவர் எழுதிக் குடுக்குறது சந்தேகம் தான்னு முடிவு பண்ணிட்டேன்...
பேஸ்புக்ல எழுத ஆரம்பிச்ச காலங்கள்ல செல்வா அண்ணா என்னை தட்டிக் குடுத்துருக்கார். இவர் மட்டும் அணிந்துரை எழுதி தந்தா "ஆத்தா நான் பாசாயிட்டேன்"ன்னு எகிறி குதிக்கலாம். ஆனா அண்ணாவுக்கு நேரம் இருக்குமா, அப்படியே நேரம் இருந்தாலும் நம்ம எழுத்தெல்லாம் அவர் ரசிக்குற மாதிரி இருக்குமான்னு எல்லாம் பயங்கர சந்தேகம். ஆனாலும் அண்ணா, நான் ஒரு கவிதை புக் போடப் போறேன், அணிந்துரை எழுதித் தருவீங்களான்னு கேட்டுட்டேன். அதுக்கென்ன தங்க்ஸ், உடனே எழுதி தரேன்னு அவரும் சொல்லிட்டார்.
அப்புறம் தமிழரசி அக்கா. எங்கடா போனாங்க இவங்கன்னு பேஸ்புக் முழுக்க வலைவீசி தேடிட்டு இருக்கேன். அவங்க வாட்ஸ் அப் நம்பர கூட நான் தொலைச்சுட்டேன் (இந்த வாக்கியம் அக்கா கண்ணுல பட்டுரக் கூடாது அவ்வ்வ்வ்). திடீர்னு ஒரு நாள் ஒரே பட்டாசு வெடிக்குற சத்தம். யாருடா இதுன்னு பாத்தா அட, நம்ம அக்கா... ஓடிப் போய் அவங்க இன்பாக்ஸ்லயும் நான் புக் போட போற விசயத்த சொல்ல அவங்களும் சந்தோசமா எழுதித் தரேண்டான்னு சொல்லிட்டாங்க...
ஆக, இப்ப செல்வா அண்ணா, தமிழரசி அக்கா ரெண்டு பேரும் ஆசிகளோட அவங்க முன்னுரைய எழுதி தர, எழுதி தரமாட்டாரோன்னு நினச்ச கார்த்திக்கும் அணிந்துரை எழுதித் தர, புக் முக்கால்வாசி தயாராக ஆரம்பிச்சாச்சு.
அட்டைப்படம் டிசைன் பண்ணணும். ஏற்கனவே சிவகாசி சுரேஷ் கிட்ட சொல்லி ஒரு அட்டை வடிவமைச்சாச்சு. ஆனாலும் மனசுக்குள்ள இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமோன்னு தோணிகிட்டே இருக்கு. யாராவது நல்லா படம் வரைய தெரிஞ்சவங்க ஒரு அட்டைப் படம் வரைஞ்சு குடுத்தா நல்லாயிருக்கும்... தேடிட்டு இருக்கேன்...
வழக்கம் போல, நான் எதுனாலும் உங்ககிட்ட தானே சொல்லுவேன், அதனால இதையும் சொல்லிட்டேன்...
நன்றியும் ப்ரியமும்
Mangaaththa Mangai க்கு
Selva Kumar அண்ணாவுக்கு
தமிழ் அரசி அக்காவுக்கு
சிவகாசி சுரேஷ் க்கு...
அப்புறம், அப்புறமா கார்த்திக்கு தனியா தேங்க்ஸ் சொல்லிக்குறேன், காரணம், இன்னும் கொஞ்சம் வேலை வாங்கவேண்டியிருக்கு அவரை. ஒருவாரமா ட்ரை பண்றேன், ஆள் இன்னும் சிக்கல...
நூல் வெளியிட எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDeleteஅட்டைப்படம் நீங்கள் நினைத்தது போல் வரைந்து தர எனது முழு சம்மதம் ஆனால் பாருங்க எனக்கு படம் வரையத் தெரியாது அதுதான் பிரட்சினை.
தமிழ் மணம் 2
வாழ்த்துக்கு தேங்க்ஸ்...
Deleteஆனாலும் அநியாயத்துக்கு கொஞ்சம் நம்பிட்டேன், நீங்க வரைஞ்சு தருவீங்கன்னு... கிர்ர்ர்ர்.....
வணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்க்ஸ் அண்ணா
Deletekovil aadu nepagm arumai. . . . . 2012 la kavitheya eluthi irukega atha matum than inum padikala. yan na kavithi padikanum na oru thanimai vendum. vaalthukal. #
ReplyDeleteதேங்க்ஸ்.... அப்படினா கவிதை தவிர்த்து எல்லா போஸ்ட்டும் படிச்சுட்டீங்களா? வாட் எ மெடிக்கல் மிராக்கிள்
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteமுகநூல் உறவுகளுக்கு பாராட்டுக்கள்...
இதனால் தான் எந்த தளத்திலும் உங்களை பார்க்க முடிவதில்லையோ...?
தேங்க்ஸ் அண்ணா... உங்க பாராட்டுக்கு..
Deleteblog-ன்னு இல்ல, பேஸ்புக்ல கூட நான் யார் பக்கமும் போறதில்ல. மாறணும்னு நினைப்பேன், ஆனா அந்த மாற்றம் நிரந்தரமா இருக்கணுமே...
உங்களுக்கு ஒரு மெயில் பண்ணினேன் அண்ணா, நீங்க கவனிக்கலன்னு நினைக்குறேன்
அட்டைபடம்தானே நம்ம வாத்தியார் பாலகணேஷ் அய்யவை பிடிங்க அசத்தலா செய்திடுவார்
ReplyDeleteஅய்யய்யோ அண்ணா பெரிய ஆள்.... அவர் கிட்ட போய் காசு தரமாட்டேன், சூப்பரா அட்டைப் படம் செய்து தாங்கன்னு எப்படி கேக்குறது
Delete