Sunday, 12 April 2015

பார்த்திக்காக - 6



பார்த்தி,
காதல்ங்குறது ஒரு புரிதல்டா

அந்த புரிதலே இல்லாதப்ப
எதுக்காக ரெண்டு பேரும்
காதலிக்குறதா சொல்லி ஏமாத்திக்கணும்?

உன்னை காதலிச்ச உரிமைல
ஒண்ணே ஒண்ணு
கேட்டுக்குறேன் பார்த்தி
எப்பவாவது உன்கிட்ட
பேசத் தோணினா பேசிக்குறேன் பார்த்தி

சிரிக்காதடா, உனக்கே தெரியும்
உன்கிட்ட லயிச்சுக் கிடக்க
எனக்கு இருபத்தினாலு மணி நேரம்
பத்தாதுன்னு...

ஆனா உன் முத்தம் வேண்டாம்
உன் அணைப்பு வேண்டாம்
உன் காதல் வேண்டாம்
நீ மட்டும் வேணும் பார்த்தி

பார்த்தி, நான் என்ன தப்பு செய்தேன்னு
திருப்பி கேக்காத பார்த்தி
உன்னைப் பத்தி நான் எதுவுமே சொல்லல பார்த்தி,
எல்லாமே என்னோட மனநிலை தான்...

நீயும் தான என்னை காதலிச்ச?
என்னை புரிஞ்சுக்க மாட்டியா பார்த்தி

என்னை அழ விட்டு
ரெண்டு கையையும்
விரிச்சுக்க மாட்டியா பார்த்தி

உன்னை புரிஞ்சுக்க
என்கிட்ட சக்தியில்ல பார்த்தி
மூழ்கிட்டு இருக்கேன் பார்த்தி
எங்கயோ திசை தெரியாத சுழல்ல
சிக்கிட்டு இருக்கேன்

என் முடிவு தெரியல பார்த்தி
தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும் தான் பார்த்தி
நீ மட்டும் தான்

12 comments:

  1. அருமை வித்தியாசமான பார்வையில் சென்றது....

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா, இத எல்லாம் பாத்துட்டு இந்த பசங்க கொஞ்சமாவது பொண்ணுங்கள புரிஞ்சுகிட்டா சரி தான்

      Delete
  2. சுழலில்
    சிக்குண்டவரை உங்களை
    உயிர்ப்பிக்க
    பாத்திக் கட்டி
    பரந்தாமனாய் பார்த்தி
    வருவார்!
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா வரட்டும் வரட்டும்...

      Delete
  3. Replies
    1. ஒண்ணுமில்ல, பார்த்தி கூட பிரியம்வதனா சண்டை போட்டுட்டா...

      Delete
  4. Replies
    1. எதுக்கு இத்தன ஷாக்?

      Delete

  5. வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு

      Delete