Sunday, 13 May 2012

அன்னையின் பொம்மை...


என் புன்னகை...
ரோஜா இதழ்களால்
ஸ்பரிசிக்கபடும் ஆழ்நிலை உணர்வாய்...!

என் சிரிப்பு...
பொங்கிய பாலில்
நுரை விடும் நிறைவாய்...!

என் மவுனம்...
அடித்து ஓய துடிக்கும்
அலைகளின் நிசப்தமாய்...!

என் கண்ணீர்...
பிறர் இரக்கம் வேண்டா
தனிமை சிறையாய்...!

என் தவிப்பு...
வேடன் வலையில் சிக்குண்ட
இளந்தளிர் மானின் மருட்சியாய்...!

என் கோபம்...
செந்தணலில் இடப்பட்ட
திருஷ்டி மிளகாயாய்...!

மென்ஸ்பரிசமும் இளகிய மனமுமாய்
பார்த்து பார்த்து சேகரித்த அன்னை
கடுகும் காரமும் சேர்ந்தல்லவோ
பிசைந்திட்டாள் என்னை...!

1 comment:

  1. ரோஜா ஸ்பரிசம்
    பாலில் நுரை
    அலை நிசப்தம்
    தனிமை சிறை
    மானின் மருட்சி
    திருஷ்டி மிளகாய்
    கடுகும் காரமும் கலந்து
    உயர் தரத்தில் செய்த நல்கவிதை.
    உம்மை நோக்கி வீசப்படும் வாழ்த்துப்பூக்களில்
    எம்முடையத்ம் ஒன்றாக இருக்கட்டும்....!

    ReplyDelete