Saturday 28 September 2013

ரெத்ததானமும் என் அனுபவமும்....


26/09/2013 காலைல இருந்து ரொம்ப வேலை அப்படின்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன், ஆனாலும் காலேஜ் லீவ் போட்டுட்டு தூங்கோ தூங்குன்னு தூங்கிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டோமேனு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அப்போ தான் பேஸ் புக் ஓப்பன் பண்ணிட்டு உக்காந்தேன். ஒரு போன் கால். வழக்கமா நான் ஸ்டோர் பண்ணாத கால் அட்டென்ட் பண்ண மாட்டேன். இருந்தாலும் யார்னு பாக்கலாம்னு எடுத்து ஹலோ சொன்னேன். ஒரு பெண் குரல், என் பெயர் சொல்லி "உண்டோ"னு கேட்டாங்க, நான் தான் பேசுறேன்னு சொன்னேன்.


உடனே கொஞ்சம் சைலென்ட். அப்புறம் பாத்தா "ஹலோ ஆன்ட்டி ஞான் ரஞ்சினியானு" ன்னு ஒரு குட்டி பாப்பா குரல். அடடா, யாருன்னு தெரியலயேன்னு மனசுக்குள்ள நினச்சுகிட்டாலும், இருபத்து மூணு வயசுல நம்மள ஆன்ட்டி ஆகிட்டாளேன்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டும் "சொல்லு மோளே, எந்தா வேணும்" ன்னு எடுத்து விட்டேன். "ஐ நீட் யுவர் ப்ளஸ்சிங்க்ஸ், டுடே ஈஸ் மை பர்த்டே" அப்படின்னு அந்த குழந்தை என்கிட்ட ஆசிர்வாதம் கேக்குது. நல்லா இருன்னு அதுக்கு ஆசிர்வாதம் பண்ணி தட்டு தடுமாறி கொஞ்சம் மலையாளம் சம்சாரிச்சு (அவ்வவ்) போன் வைக்குற வரை யார் இந்த ரஞ்சினின்னு நிஜமா எனக்கு புரியல.

அப்புறமா ரொம்ப யோசிச்சப்போ தான் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாசம் இருக்கும். நான் அப்போ உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருந்தேன். அங்கயே கொஞ்சம் நடை பழக பிசியோதெரபி யூனிட் உண்டு. அங்க போய் கொஞ்சம் நடந்துட்டு வரது வழக்கம். அப்போ தான் அந்த பொண்ண பாத்தேன். ரொம்ப அழகு. ஒரு ஆக்சிடென்ட்ல அதோட கால், கை முறிஞ்சு போச்சு. உடம்புல கட்டு போட்டுட்டு அத நடக்க கூட்டிட்டு வருவாங்க. அதோட கை ரொம்ப சிதஞ்சி போயிடுச்சுனும் ஏற்கனவே ரெண்டு சர்ஜரி முடிஞ்சு மூணாவது சர்ஜரி பண்ணணும்னும் அவங்க அம்மா சொல்லி தெரிஞ்சுகிட்டேன். அதுக்கு ஓ நெகடிவ் ரெத்தம் வேணும், எங்கயும் கிடைக்கலன்னு வருத்தப்பட்டாங்க. சரி எதுக்கும் நம்ம ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு பாப்போம்ன்னு ஊர்ல இருக்குற ப்ரென்ட் ஒருத்தனுக்கு போன் பண்ணி கேட்டேன்.

அவன், மதுரைல இருந்து அவனோட ஜூனியர் ஒரு பையன், அப்புறம் அவனோட ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர்னு மொத்தம் மூணு பேர் வருவாங்க, பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டான். நானும் அவங்க போன் நம்பர் எல்லாம் கேட்டு அந்த பொண்ணோட அம்மாகிட்ட குடுத்ததோட என் வேலை முடிஞ்சுது.

ஹாஸ்பிட்டல்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால சர்ஜரி நடக்கும் போது அவங்க அம்மா கிட்ட போன்ல தான் பேசினேன். அப்புறம் ஆப்பரேசன் முடிஞ்சு அந்த பொண்ணு வீட்டுக்கு கிளம்பும் போது கூட நான் பாக்கல. அப்பா கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்களாம். எனக்கு இந்த போன் கால் வர வரைக்கும் சுத்தமா இதெல்லாம் நியாபகம் இல்ல.

அந்த பொண்ணு தேங்க்ஸ் சொல்லணும்னாலோ இல்ல ஆசிர்வாதம் வாங்கணும்னாலோ நான் போன் பண்ணின உடனே சிரத்தை எடுத்து அதுக்கு ஏற்பாடு பண்ணின என் ப்ரென்ட் கிட்டயும், கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீட்டர் ட்ராவல் பண்ணி ரெத்தம் குடுத்துட்டு போன அந்த மூணு பசங்க கிட்ட தான் வாங்கி இருக்கணும்.

அவங்க யாருனே எனக்கு தெரியாது, ஆனாலும் இந்த நேரத்துல அந்த பொண்ண அந்த பசங்க எங்க இருந்தாலும் ஆசிர்வதிக்கணும்.

இந்த விசயத்த நான் என்னோட பேஸ் புக் பக்கத்துல ஸ்டேடஸ்சா போட்டுருந்தேன். அதுல கார்த்திக் வந்து அவரோட அனுபவத்த சொல்லி இருந்தாரு. அதையும் உங்க பார்வைக்கு வைக்கலாம்னு நினைக்குறேன்.

கார்த்திக் சொன்னது இது
.................................................................
சில வருடம் முன் (2007) அலுவலகத்தில் ஜனவரி 2-ம் தேதி
காலை நேரத்தில் சீனியர் மேனேஜர் வந்து கேட்டார். கார்த்திக் உங்க ப்ளட் க்ரூப் என்னன்னு. தெரியாது சார் ஏன்னு கேட்டேன். ‘இல்ல ஜி.எம்க்கு தெரிஞ்சவங்க யாரோ கேஜி ஹாஸ்பிட்டல்ல (கோவை) அட்மிட் ஆகி இருக்காங்க... இரத்தம் கொடுக்கணுமாம்... அதான்”னு சொல்லவும் சரி நான் கொடுக்குறேன் சார்ன்னு ஒரு ஆறு பேர் ஆம்னியில் கிளம்பிப் போனோம்.

அதுவரைக்கும் இரத்தம் கொடுத்து முன்பின் அனுபவம் இல்லை... லாபியில் காத்திருந்து என் முறை வந்ததும் உள்ளே போய் செவிலியர் காண்பித்த கட்டிலில் சாய்ந்தமர்ந்தாயிற்று.... பயிற்சி செவிலியர் போல கொஞ்சம் பயந்துகிட்டே இடது கையில் ஊசியை இறக்கினார். என்னவோ தவறு செய்துவிட்டார் என்பது அவர் கண்ணில் தெரிந்தது.  தயக்கமின்றி அடுத்தகையை நீட்டினேன். மீண்டும் ஊசி வலது கையிலும் குத்தப்பட்டது. பின் ரத்தம் எடுக்கப்பட்டது... எதுவும் எனக்கு வலிக்கும் விஷயமாகப்படவில்லை... இரண்டு கைகளிலும் ப்ளாஸ்த்திரி போட்டு விட்டார்கள். எல்லாம் முடிந்து கிளம்பும் போது ஒருச்சான்றிதழைக் கொடுத்தார்கள் அதில் எனது குருதி வகை A1+ve என்றிருந்தது. .

சரி வந்தவேலை முடிந்தது கிளம்பலாமா என்றதும் யாருக்கு கொடுத்தோமோ அவருடைய தந்தை வந்திருந்தார். தன் நன்றியைக் கூறிவிட்டு தன் மகனைப்பார்க்க அழைத்துக் கூட்டிப்போனார். முதல் தளம் சென்றதும் தான் தெரிய வந்தது... நாங்கள் இரத்தம் கொடுத்தது... ஒரு பத்து வயதுச் சிறுவனுக்கு அவனுக்கு இரத்த சம்பந்தமான வியாதியினால் தாக்கப்பட்டு உடல்நிலைக்குன்றி எலும்பும் தோலுமாய் இருந்தான். நெஞ்சம் உடைந்துபோகும் காட்சியது.. அவனருகே அச்சிறுவனின் தாய் கண்ணீர் திரள் எங்கள் கால்களைத் தொட வந்தார். மறுத்துப்பின் வாங்கியபோதுதான் மனதளவில் நான் செய்த காரியத்தின் மீதான மதிப்பு எனக்கே தெரிந்தது...
அன்று முதல் இன்றுவரைக்கும் எத்தனை முறை இரத்ததானம் செய்தேன் என்பது எனக்கே நினைவில் இல்லை..
...............................................................................................................................................................

பாத்தீங்களா, ரெத்ததானம் செய்றதால நமக்கே தெரியாம எவ்வளவு நன்மை இருக்குன்னு. நாம குடுக்க போறது ஒரு யூனிட் ரெத்தம்ங்க, ஆனா அதனால அத வாங்குனவங்க சந்தோசத்துக்கு விலையோ எல்லையோ கிடையவே கிடையாதுங்க. அது மட்டுமில்லங்க, நாமளும் எதோ நாலு பேருக்கு நல்லது செய்தோம்னு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும் பாருங்க, அத விட நமக்கு வேற என்னங்க வேணும்?                                                                                                                            என்ன? உடனே கிளம்பிட்டீங்களா? ரெத்ததானம் செய்யுறதுக்கு... வாழ்த்துகள்ங்க, பாருங்க எத்தன பேரு உங்கள வாழ்த்துறாங்கன்னு...

10 comments:

  1. இண்ணும் பலருக்கு விலிப்புனர்வு வர வேண்டும் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. ஆமா மகேஷ், ரெத்ததானம் செய்யுறதால நமக்கு எந்த பாதிப்பும் இல்ல, ஆனா அதனால எத்தன பேரு பயனடைவாங்க

      Delete
  2. எல்லோருக்கும் வாழ்த்துகள். அனைவரும் ரெத்ததானம் செய்ய வேண்டும். கல்லூரி காலங்களில் நானும் ரெத்ததானம் செய்துள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம். என்னால ரெத்ததானம் செய்ய முடியாது. ஆனாலும் என் ப்ரெண்ட்ஸ் மூலம் நிறைய பேர ரெத்ததானம் பண்ண வச்சிருக்கேன்

      Delete
  3. என்னுடைய பழைய நினைவுகளை கிளறியது இந்தப்பதிவு...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். என்னோட ஸ்கூல் டேஸ்ல இந்த மாதிரி முகாம்கள்ல ரொம்ப தடவ கலந்துகிட்டிருக்கேன்

      Delete