Wednesday 4 March 2015

டெல்லி ரேப் - பெண்கள் மீதான வார்த்தை வன்முறைகள்



எங்க திரும்பினாலும் டெல்லி ரேப் கேஸ் பத்தி தான் பேச்சா இருக்கு. நேத்தே அது சம்மந்தமான போஸ்ட்ட பாத்துட்டு நிறையவே டென்சன்ல புலம்பிட்டே இருந்தேன்...

என்ன தான் சொல்ல வராங்க இந்த ரேபிஸ்ட்களும், அதை பிரசுரிக்கும் மீடியாக்களும்?

பொண்ணுனா எப்பவுமே ஒரு வேட்டைப் பொருள். ஆண்கள் வேட்டைக்காரர்கள். வேட்டைப்பொருள் எப்பவுமே வெளில வரக் கூடாது, மீறி வந்தா வேட்டையாட முழு சுதந்திரம் வேட்டைக்காரர்களுக்கு உண்டுன்னு சொல்ல வராங்களா இவங்க?
எவ்வளவு தைரியம் இருந்தா, அவ ரேப் பண்ணும் போது எதிர்க்காம இருந்துருக்கணும், அப்படி இருந்திருந்தா அவள கொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது, எனவே இது ஒரு ஆக்சிடென்ட்ன்னு பேட்டி குடுத்துருப்பான்?

அதுலயும் ரேப் பண்றவங்களுக்கு மரண தண்டனை குடுக்கக் கூடாதாம், ஏன்னா, முன்னாடி எல்லாம் ரேப் பண்றவன் வெறும் ரேப் மட்டும் பண்ணிட்டு அய்யோ பாவம் பொழச்சு போகட்டும்னு உயிரோட விட்ருவானாம். இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டா அப்புறம் ரேப் பண்றவன், அவ காட்டிக்குடுத்துடுவாங்குற பயத்துல கொலை பண்ணிருவானாம். அதனால் அவனை தாராளமா ரேபிஸ்ட்டா சுதந்திரமா விடுங்க, கொலைகாரனா மாத்திராதீங்கன்னு சமுதாயத்துக்கு ஒரு உயரிய அட்வைசும் சொல்லியிருக்கான்.

இத பத்தி அவன திட்டி ஏகப்பட்ட எப்.பி போஸ்ட்ஸ்... சிலபேர், அவன் குடும்ப பெண்கள இழுத்து வக்கிரமாவும், சிலர் அமைதியான முறைல மனக்குமுறலையும் வெளிப்படுத்தியிருக்காங்க. ஸ்டேடஸ் மட்டுமே கவனத்துல கொள்ளாம கமண்ட்ஸ்ன்னு பாத்தா அவன் அம்மாவ அங்க இரும்பு கம்பி வச்சு அங்க குத்தி கிழிச்சா அவனுக்கு வலி தெரியும்னு ஒருத்தர் கமன்ட் போட்ருக்கார். ஏன்யா, அந்த பொண்ண கற்பழிச்சு கொன்னு, அது விதி அதோட முடிஞ்சு போச்சு. அவளுக்கு சப்போர்ட் பண்றேன்னு ஊர்ல இருக்குற பொண்ணுங்கள எல்லாம் வார்த்தை கற்பழிப்பு பண்ணி அற்ப சுகம் காணுற உங்கள எந்த லிஸ்ட்ல சேர்க்க? இதுல அவன் அக்கா தங்கச்சிங்கள அப்படி பண்ணணும், அப்போ இப்படி தான் பேசுவானான்னு அதிமேதாவித் தனமா கேள்வி கேட்டு அங்கயும் பொண்ணுங்கள தான் கற்பழிக்குறாங்க. அதான் அந்த வக்கீல் சொல்லிட்டான்ல, என் வீட்டு பொண்ணா இருந்தா அவள இழுத்துட்டு போய் எல்லார் முன்னாலயும் பெட்ரோல் ஊத்தி கொளுத்துவேன்னு... ரேப் பண்ணினா எதிர்த்து போராடக் கூடாது, ரேப் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தா அவள பெட்ரோல் விட்டு கொளுத்தணும்... பெண்களுக்கான அவனுங்க எண்ணங்களுக்கும் தர்மத்துக்கும் ஒரு சபாஷ்... அவனுங்க குடும்பத்துல பொறந்த பாவத்துக்கு இன்னும் அந்த பொண்ணுங்க எவ்வளவு தான் அனுபவிக்கணும் சொல்லுங்க....

இந்த கேஸ் சம்மந்தமா பொங்குற அத்தனை ஆண்/பெண்களுக்கும் என்னோட ஒரு ரிக்வஸ்ட்...

தயவு செய்து அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழினோ, இல்ல, அந்த ரேபிஸ்ட்ட திட்டணும்ங்குற சாக்குலயோ அவங்க வீட்டு பெண்கள தெருவுல இழுக்காதீங்க. அப்புறம் கற்பழிக்குற அவனுகளுக்கும் வார்த்தையாலயே கற்பழிச்சு, பலபேரையும் கற்பழிக்க தூண்டுற உங்களுக்கும் வித்யாசமே இல்லாம போய்டும்...
உங்கள் வார்த்தைகள சுயசோதனை செய்துக்கோங்க, வக்கிரம் உங்களுக்குள்ளயே எத்தனை நிறைஞ்சு ததும்புதுன்னு தெரிஞ்சிடும்...

இன்னொரு விஷயம், பெண் பிள்ளைகள கண்டிச்சு வளர்க்கணும், அவளுக்கு புத்தி சொல்லணும்னு சொல்ற சமூகம், அவன் தப்பு பண்ணினது பெண்களால தான்னு பழி போடுற சமூகம், ஆண் பிள்ளைகள் இனி நல்லவிதமா வளரணும்னு நல்லொழுக்கத்த சொல்லித் தர தயாரா இல்ல...

எண்ணங்களை நல்ல விதமாய் நினைப்போம், விதைப்போம், நடப்போம்... ஆண் பிள்ளையா இருந்தாலும் சரி, பெண் பிள்ளையா இருந்தாலும் சரி, பிறரையும் தன்னைப் போல் நேசிக்குற வித்தைய கத்துக் குடுப்போம்... இதுக்கு மேல வேற என்னத்த சொல்ல... இந்த சமூகத்துக்கிட்ட மவுனமா தான் போக வேண்டியிருக்கு...

6 comments:

  1. கடைசி பாரா 'நச்'

    இவனை இண்டர்வ்யூ செய்ய பிபிஸிக்கு யாரு அதிகாரம் கொடுத்தது? தான்செஞ்சது தப்புன்னு அந்த மிருகம் உணரவே இல்லை பாருங்களேன்:(

    ReplyDelete
  2. அருமை! மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள்! இப் பதிவை முழுதும் நான் ஆதரிக்கிறேன்! உங்களுக்கு என் வாழ்த்துகள்! தம -1

    ReplyDelete
  3. Well written post! Well matured post! Keep writing!

    ReplyDelete
  4. உணர்வுகளை தெளிவா வெளிப்படுத்தி இருக்கிங்க...

    அவன் பெண் உடலை வன்புணர்வு செய்தான் , அதை விமர்ச்சிகிறவர்கள் பெண்ணை வார்த்தைகளால் வன்புணர்வு செய்கிறார்கள், அவ்வளவே ! பெண்ணை பற்றிய எண்ணங்கள் மாறவேண்டும்... மாறுமா என்பதே கேள்விகுறி.

    ReplyDelete
  5. எப்படிச் சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன்..

    சமூகத்தை மௌனமாகத் தான் கடக்க வேண்டியதாக இருக்கின்றது.

    ReplyDelete