Thursday 19 September 2013

என் பட்டாம்பூச்சி இறகின் மறுதுடிப்பு...

நான் எப்.பி வந்த புதுசுல தமிழ்ல எழுதுறதுக்கு ரொம்ப தடுமாறி இருக்கேன், இங்க எல்லோரும் தமிழ்ல எப்படி டைப் பண்றாங்கன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு கூகிள் மெயில்ல ஆன்லைன்ல டைப் பண்ணி அத காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயம், தமிழ் நான் ரொம்ப படிச்சதில்லனாலும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குற கமெண்ட்ஸ் இல்லனா போஸ்ட் பாத்தா கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும், போஸ்ட் எழுதுறவங்க கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை சரி பண்ணலாமேனு.... அப்புறம் கவிதை னு ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன்.


அப்போல்லாம் கவிதை எழுதுரவங்கள பாத்தா ரொம்ப மலைப்பா இருக்கும். நான் பெரிய ரசிகை எல்லாம் கிடையாது, ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் ஏதோ முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்ப காலங்கள்ல எனக்கு இந்த கூகிள் ட்ரான்ஸ்லேட்டர அறிமுகப்படுத்தி கவிதை எழுதுனு நச்சரிச்சுட்டே இருப்பார் திரு அண்ணா.... அப்போ நான் எழுதின கவிதை ஒண்ணு படிச்சுட்டு செல்வா அண்ணா நிறைய ஊக்கம் குடுத்துருக்காங்க. செல்வா அண்ணா தான் ப்ளாக் ஒப்பன் பண்ண எனக்கு கத்துக் குடுத்தாங்க, அப்புறம் என்னால அத எப்படி டெவலப் பண்றதுன்னு தெரியாம போச்சு. ஆனாலும் அதுல நான் எழுதினத போஸ்ட் பண்ணிட்டு தான் இருந்தேன்.

அப்புறமா எனக்கு கிடச்ச நட்பு வட்டம் தான் என்னை அடுத்த படி எடுத்து வைக்க உதவிச்சு. இந்த தடவை மனசு லேசாகின மாதிரி பீலிங்க்ஸ்... அங்க ஒவ்வொருத்தரும் கவிதை எழுதுறத பாத்துட்டு அவங்க கவிதை கூடவே பயணம் பண்ணி இருக்கேன். கார்த்திக், பிரகாஷ் அண்ணா, ஜான்சி.... கவிதை எழுதுறவங்கல பாத்தா மட்டும் கவிதை வராது, நல்ல விமர்சகரும் வேணும்ல.... அப்படி கிடச்சதுல ஒருத்தர் செல்வகுமரன் அண்ணா.... இவங்க எல்லாரோட சேர்ந்து நானும் பயணிக்க ஆரம்பிச்சேன்.

அப்போ தான் விளையாட்டா ஒரு பேஜ் ஆரம்பிக்கலாம்னு தோணிச்சு. ஆரம்பிக்கவும் செய்தாச்சு. ரெண்டு மூணு போஸ்ட் தவிர எல்லாமே கவிதைகள். நான், ஜீவா மேடம் இதுல எழுத ஆரம்பிச்சோம். ஒரு போஸ்ட் ராமச்சந்திரன் அப்பா எழுதினது, ஒண்ணு மீரா அம்மா எழுதினது. இங்கயும் ஏதோ கிறுக்கிட்டு இருந்த என்னை அடுத்த நிலைக்கு கூட்டிட்டு போனது கார்த்திக் தான். நான் எழுதின ஒரு கவிதையை அஞ்சு நிமிசத்துல கடகடன்னு கரெக்ட் பண்ணி, இப்போ போஸ்ட் போடுன்னு சொன்னார்.

எழுத்தாளர்களுக்கு எப்பவுமே ஒரு திமிர் இருக்குமாம். ஆனா எனக்கு மனசு உறுத்திகிட்டே இருந்துச்சு எல்லோரும் அந்த கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னப்போ... கார்த்திக் கிட்ட சொன்னப்போ, உன்னை நான் இப்போ உச்சாணி கொம்பில் தூக்கி வச்சுட்டேன், இனி நீ கீழ இறங்க நினைக்க கூடாதுன்னு சொன்னார். ரொம்ப நாளா போஸ்ட் எதுவுமே போடல. இனி என்னால எழுதவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டேன். திடீர்னு ஒரு நாள் கார்த்திக்கோட கவிதை ஒண்ணுக்கு கமண்ட் போட நினைச்சு எழுத ஆரம்பிச்சேன், அது ஒரு கவிதையா மாறிடுச்சு. சரி வரது வரட்டும்னு அதை போஸ்ட் பண்ணிட்டேன்.... என்ன ஆச்சர்யம், பிரகாஷ் அண்ணா அந்த கவிதையை பாராட்டிட்டார். எனக்கு அப்படி ஒரு சந்தோசம். மேல பறக்குற மாதிரியே....

அப்புறம் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன். இப்போ மறுபடியும் ஒரு தேக்கம். இதுவும் நல்லதுக்கு தான். சீக்கிரம் திரும்பி வருவேன்னு நம்பிக்கை இருந்துச்சு.

June 17, 2012 முகநூல்ல உணர்வுகள் பக்கத்த ஆரம்பிச்சு, இப்போ கிட்டத்தட்ட 130 போஸ்ட், 3200 க்கு மேல லைக்ஸ்... இதுல வேடிக்கை என்னனா என்னோட ப்ரெண்ட் லிஸ்ட் ல இருக்குற 600 பேர்ல 120 பேர் தான் அதை லைக் பண்ணியிருக்காங்க... மீதி எல்லோருமே எப்படி எப்படியோ பேஜ் பாத்து லைக் பண்ணினவங்க. இந்த நாள்ல நான் உங்க எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தேங்க்ஸ் டு எவ்ரிஒன்.

அப்புறமா தான் திடீர்னு ஏன் அப்படியே போட்டு வச்ச நம்மோட ப்ளாக்க மறுபடியும் ஒப்பன் பண்ண கூடாதுன்னு நினச்சேன், இதோ வந்துட்டேன். இங்க என்னோட பழைய போஸ்ட் நிறைய இருக்கு. இத எப்படி பயன்படுத்தணும்னு தெரியாம அப்படியே வச்சிருக்கேன். என்னோட அடுத்த பதிவு வர்ற வரைக்கும் இத கொஞ்சம் பாருங்களேன், ப்ளீஸ். உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்...



14 comments:

  1. வணக்கம்
    பதிவு அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நன்றி பிரதர், அப்படியே கொஞ்சம் என் கவிதைகள வாசிச்சீங்கனா இன்னும் சந்தோசமா இருக்கும்

      Delete
  2. வாழ்த்துகள். பிறரை கவரும் விதமான எழுத்து நடை

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம். உங்க ஆசிர்வாதம்

      Delete
  3. Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, ஆளே இல்லாத கடைல டீ ஆத்துற மாதிரி நான் பாட்டுக்கு ரெண்டு மூணு கவிதைகள போட்டுட்டு போய்டுவேன். அதுல தேடி வந்து அப்பப்போ கமன்ட் போடுற ஒரே ஜீவன் நீங்க தான். அதுக்கே நான் ஸ்பெஷலா உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

      Delete
  4. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தொடர்பு கொள்றேன் அண்ணா. நன்றி

      Delete
    2. இப்போது சரி செய்து விட்டேன்... இப்போது தமிழ்மணம் வேலை செய்யும்... பதிவு இட்டவுடன் தமிழ்மணத்தில் submit செய்யவும்... பிறகு நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்... மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

      Delete
  5. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதி கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ், நான் தொடர்ந்து எழுதுறேன், நீங்க உங்க ஆதரவ அப்படியே தொடர்ந்து குடுங்க :)

      Delete
  6. வெல்கம் டூ பதிவுலகம் ரி எண்ட்ரி அக்கா..
    உங்க எழுத்து இதுக்கு முன்ணாடி எல்லாம் எணக்கு தெரியாது பட் இந்த ஒரு பதிவு போதும் உங்கலுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்குனு தெரியுது..

    தொடற்ந்து பல ஸ்வாரஸ்யமான பதிவுகல கொடுங்க.. அப்படியே ## ப்லாக்கையும் வந்து பாருங்க..

    ஹிஹிஹி சும்மா ஒரு விலம்பரம்தான்..

    ReplyDelete
  7. ரொம்ப தேங்க்ஸ் மகேஷ்... கண்டிப்பா எல்லோரோடைய blog யும் விசிட் பண்றேன்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ...

    ReplyDelete