Monday 30 December 2013

இது என் அம்மா...



என்னடா இவ, மாம்பழத்தோட படம் போட்டுருக்காளேன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. காரணம், இது என் அம்மா...

ஆமா, அம்மாவே தான். என்னை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவே தான். அதெப்படின்னு கேக்குறீங்களா?

இந்த பழம் பழுத்து வந்தது ஒரு சாதாரண மரத்துல இருந்து இல்ல. என் அம்மாவோட சரீரம், இந்த பூமி சுழற்சியினால பதபடுத்தப் பட்டு, அவளோட ஒவ்வொரு அணுவும் உரமா, உயிரா வேர் வழி பரவி, அழகா கிளையா, இலையா, இளந்தளிரா மாறி, பருவத்தோட பூவாகி, பிஞ்சாகி, காயாகி, இப்போ கனியாகி இருக்கா...

அம்மா பத்தி இன்னும் சந்தேகம் இருந்தா இத பாத்து தெரிஞ்சுக்கோங்க...

அப்புறம், இன்னொரு விஷயம் என்னன்னா, இது மாம்பழ சீசனே இல்ல. ஆனாலும் இந்த நேரம் காய்த்ததால மழைல கொஞ்சம் மாட்டிகிட்டு. அதனால அணில்கள், மற்ற மர விலங்குகள், பறவைங்கன்னு எல்லாரும் சாப்பிட்டு போக மொத்தமே அஞ்சு பழம் தான் கிடைச்சதா சித்தப்பா கொண்டு வந்து தந்துட்டு போனாங்க...

இங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், அன்னிக்கி முழுக்க (29/12/13) மனசு கொஞ்சம் அலைபாஞ்சுட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம, எதையோ நினச்சு குழம்பிட்டு, எதுவுமே தப்பாகிட கூடாதுன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்துச்சு. சாயங்காலம், எங்க தென்னந்தோப்புல தாவி தாவி விளையாடிட்டு, அதுகளோட வாழ்வாதாரத்த சந்தோசமா வச்சிக்கிட்டு இருந்த அணில்ல ஒண்ணு வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே துடிதுடிச்சி உயிர விட்டுடுச்சு. எல்லாமா சேர்ந்து என்னை மொத்தமா சோர்வடைய செய்தப்போ தான் சித்தப்பா அம்மாவ கொண்டு வந்து என்கிட்ட சேர்த்தாங்க.

இத விட வேற என்ன நிரூபணம் வேணும்க, அம்மா என் கூடவே தான் இருக்கான்னு சொல்றதுக்கு. நேத்து கார்த்திக் இன்னொரு விஷயம் சொன்னார், உன் அம்மா அவங்க ஆயுள உனக்கு குடுத்துருக்காங்கன்னு. அது எத்தனை உண்மையான வார்த்தைன்னு என்னை முழுசா அறிஞ்சவங்களுக்கு தெரியும்....

இப்போ நான் வாழுற இந்த ஒவ்வொரு நொடியும் என் அம்மாவோட ஆயுள் தான்...

அம்மாவுக்கு எப்பவுமே இயற்கை மேல தணியாத காதல். அத விட தணியாத காதல் அப்பா மேல இருந்துச்சு. என்கிட்ட ஒருத்தர் கேட்டாரு, அம்மா பத்தி மட்டுமே எழுதுறீங்களே, அப்பா பத்தி ஏன் எழுதலன்னு. எனக்கு எழுத தோணலங்குறது தான் நிஜம். காரணம், எப்போ எல்லாம் நான் காதல உணர்றேனோ, எப்போ எல்லாம் அமைதிய உணர்றேனோ, எப்போ எல்லாம் அஹிம்சைய உணர்றேனோ, அப்போ எல்லாம் நான் அவங்க ரெண்டு பேரையுமே உணர்றேன். இங்க, அம்மாங்குற வார்த்தைக்குள்ள ரெண்டுபேருமே அடங்கிடுறாங்க. அம்மா எனக்கு அவ ஆயுசை குடுத்தா, அப்பா, எனக்கு அவளோட அருகாமையை குடுக்குறார். இத தவிர எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல...


இந்தா, ஒரு மாம்பழம் மிச்சம் இருக்கு, இந்த அப்பாவ தின்ன விட்ற கூடாது... நான் போய் ஒரு தடை உத்தரவு போட்டுட்டு வர்றேன்....



.

28 comments:

  1. அனைத்து வரிகளிலும் அம்மாவின் அன்பை உணர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... உங்க வாழ்த்துக்கு

      Delete
  2. திரும்பத் திரும்ப படிக்க வைத்தது அந்த அன்பு....

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்

      Delete
  3. GREAT EXPRESSION...I REMEMBERED MY MOTHER'S BIRTH DATE TOO ON 29.12.2013..!!!
    UNFORGETTABLE TAMIL MOTHERS!

    ReplyDelete
    Replies
    1. உங்க அம்மாவுக்கு ஹாப்பி பர்த்டே....

      Delete
  4. எல்லா உணர்வையும் அப்படியே வார்த்தையா கொண்டு வருவது கடிணம் தான்.... இருந்தாலும் இந்த பதிவு உங்கள் உணர்வுகளை படிப்பவர்க்கும் ஏற்படுத்துவதை உணர முடிகிறது...இதில் கொடுக்கப்பட்ட லிங்க் ம் சேர்த்து படித்து நெகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ்

      Delete
  5. காலையிலேயே படிச்சுட்டு "Senti" ஆகிட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அண்ணா... அதென்னமோ, அத வருடும்போது அப்படியே மனசுக்குள்ள ஒரு சந்தோசம்

      Delete
  6. அது என்ன எப்ப பார்த்தாலும் எங்கே பார்த்தாலும்
    அம்மா அம்மா அம்மா அப்படின்னே !!

    அம்மாடி, இப்பதான் ஒத்தரு,
    மாம்பழமும் இருக்குது அப்படின்னு காமிச்சு இருக்காரு.

    இருந்தாலும்,
    அந்த
    அம்மா விலே
    மா வும்
    மறைந்திடுமோ இல்லை
    மறந்திடுமோ !!

    எனிவே,
    அம்மாவும் ச்வீட்.
    மாவும் ச்வீட்.

    வரப்போற 2014 எல்லோருக்கும் ச்வீட்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அம்மா பத்தி எழுத தானா வருது தாத்தா... நான் என்ன பண்ண?

      தேங்க்ஸ் தாத்தா உங்க wishesக்கு

      Delete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன் அண்ணா, காலைலயே தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா சொன்னாங்க :) வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா

      Delete
  8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா உங்க வாழ்த்துக்கு. உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என் சார்பா புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  9. வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்.

    வாழ்க ..நலங்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்... தொடர்ந்து ஆதரவு தாங்க

      Delete
  10. வாழும் கடவுள் அம்மா எனக்கு ...

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் ஆமா... எல்லாருக்கும் தான்

      Delete
  11. வலைச்சர புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete

  12. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      Delete
  13. அருமை......

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்

      Delete
  14. எண்ணங்களை இரத்தமும் சதையுமாக எழுத்தில் வடிக்கும் கலை உங்களுக்கு மிக அருமையாக வந்திருக்கிறது... வாழ்த்துக்கள்...

    //அம்மா பத்தி இன்னும் சந்தேகம் இருந்தா இத பாத்து தெரிஞ்சுக்கோங்க... //
    உணர்ச்சிக் குவியல்...

    அல்லாம் போட்டச்சு... போட்டாச்சு...

    ReplyDelete