Thursday, 14 June 2012

தாவணி கனவுகள்...!

எண்ணிப் பார்க்கிறேன்...
அந்த சின்னஞ்சிறு
மழலைப் பருவத்தை...!

பயமறியாமல் கொய்யா மரமேறி
மாமர அணிலோடு மற்றொரு அணிலாய்
பழம் கொறித்து போட்டி போட்டதை...!

சவால் விட்டு நுனிமரமேறி
ஒடிந்து விழும் கிளையோடு
சேர்ந்தே விழுந்து அழுததை...!

காடு மேடென அலைந்து
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடும்
கருங்குயிலை தேடி அலைந்ததை...!

தோழமை புடைசூழ
மணல் வீடு கட்டி புது மனை புகுந்து
மணல் சோறு சாப்பிட்டதை...!

செல்லக் கோபத்தோடு
துரத்தும் தாயை ஓட விட்டு
மூச்சிரைத்ததும் பின்னால்
வந்து கட்டிக்கொண்டதை...!

தெருவோரமாய் தோழர்கள்
சேர்ந்து கோலிக்குண்டு
விளையாடி சண்டை போட்டு வந்ததை...!

தாவணி போட்ட
பள்ளிச்சிறுமிகளை
ஏக்கமாய் பார்த்ததை...!

எண்ண மறந்து விட்டேன்...
அந்த தாவணியே அவர்கள்
சிறைக்கதவுகள் என்பதை...!

இன்று என் ஆசைகள்
தாவணிக் கனவுகளாய்...!

5 comments:

  1. மறுபடியும் மழலை ஆவது அசாத்தியம் . அதை சாத்தியமாக்குகிறது ...உங்கள் தாவணி கனவுகள் கவிதை. உங்களுடைய கவிதைகளை ரசிப்பதற்கு வேறொரு மனமும் அறிவும் வேண்டும், அருமையோ அருமை.

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாப்பா

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாப்பா

    ReplyDelete
  4. திரும்பிப் பார்க்கிறேன் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete