Saturday 23 June 2012

உன்னை அறிந்தேன்...!

மாய பிம்பங்கள் உடைத்து
உள்ளிருக்கும் உன்னை நான்
உரித்தே காண்கிறேன்...!

ரணங்களும் வேதனையும்
சேர்த்து பின்னிய வலையொன்றின்
தானே சிக்கிட்ட சில்வண்டாய் நீ...!

ஒவ்வொரு கணமும்
வேதனை மறைத்து பொய்மை பூசி
பிறர் மகிழ்வித்து நீ
தனியறையில் வீழ்ந்தே கிடக்கிறாய்...!

சாம்ராஜ்யம் காக்கும்
சர்வாதிகாரியான நீ
என்னிடம் மட்டும் மழலை முகம்
காட்டி அடம்பிடிக்கிறாய்...!

உன் ஆளுமை பண்பு
எனக்குள் மட்டும் ஏனோ
தன்னடக்கம் கொண்டு
பாசம் காட்டி நேசம் வேண்டுகிறது...!

பொதுவில் அறிமுகமாகும் போது
நாங்கள் என்றே அறிமுகபடுத்திக்
கொள்கிறேன் உன்னையும் சேர்த்து...!

சிலசமயம் என்னை மறைத்து நீயும்
பல சமயம் உன்னை மறைத்து நானும்
வெளிப்பட்டே உறைகிறோம்
மனசாட்சி என பெயரிட்டு...!



6 comments:

  1. காயத்ரியின் கவிதை உலகில் நாம் உலா வரும் பொழுது, எப்பொழுதோ இழந்த ஒரு உன்னதத்தை, இப்பொழுது பெற்றது போன்ற உணர்வு மேலெழுகிறது. ரணங்களும் வேதனையும்
    சேர்த்து பின்னிய வலையொன்றின்
    தானே சிக்கிட்ட சில்வண்டாய் நீ...!//# அனாயசமான நடை நம்மை அசத்துகிறது. கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி வரிசையில் காயத்ரியும் வருவார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா.... உங்கள் விமர்சங்கள் தான் எங்கள் எழுத்துக்கு உரம்

      Delete
  2. உங்கள் கவிதைகள் என்னை மறுபடியும் கவிதை எழுத தூண்டுகின்றன. உங்கள் அளவிற்கு எழுத முடியுமா தெரியவில்லை ஆனால் என்மேல் எனக்கு நம்பிக்கை உண்டு உங்கள் எழுத்துநடையின் ஓரமாக நானும் வருவேன் என்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி... தங்கள் ஆதரவு அவசியம் தேவை.. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.....

      Delete