நான்னெங்கே என அறிந்தும்
புரியாமல் கேட்பவனே
உனக்கேன் தெரியவில்லை
உன் வழித்துணையாய்
காலடி சுவடாய் நானிருப்பதை???
பகலில் மறையும்
நிலவென்றாய் என்னை...
சூரியனாய் மாறி உன்
விடியல் மலர காரணம் நானே...!
உன்னோடு சங்கமித்து விட்ட
வழிகளெங்கும்
உன் வலி சுமந்தே
சுமை தாங்கி கற்களாய்
நானும் உருமாறி போனேன்...!
வாழ்க்கைப் பாதையில் காதல் வலி கூட பூக்களின் சுவடாய் உதிர்ந்து கிடக்கும்
ReplyDeleteஉன்னில் நான் கொண்ட காதல்
ReplyDeleteஉலகிற்கு புரியாது
உனக்கும் தெரியாது
நான் கொண்ட காதலும்
ஊமை கண்ட கனவும்
உண்மையில் ஒன்றுதான்
உருவமில்லா என் காதலுக்கு
உயிர் கொடுத்தவள் நீதான்
விசும்பல்கள் மறையும்,
ReplyDeleteசிறு ஒலியில்,
உன் சப்தம் கேட்டிருக்குமோ,
என்றஞ்சி இறுக்க மூடிக்கொள்கிறேன்,
செவிகளை,
ஆனால் மூட மறந்த விழிகளில்,
கண்ணீர்..
உன் மூடிய செவிகள் உள்ளே
Deleteவெளியேற இயலா என் விசும்பல்
என்றும் உன்னை வாழ்த்தியே ஒலிக்கும்
மறைக்க இயலா உன் கண்ணீர் துளி
உன் விசும்பலை எனக்குள் விதைத்து
நட்பு வேரை இன்னும்
பலமாக பதியமிட்டு செல்லும்...!
This comment has been removed by the author.
ReplyDeleteஉன் மூடிய "விழிகளின்" உள்ளே
ReplyDeleteவெளியேற இயலா என் விசும்பல் "காட்சி"
என்றும் உன்னை வாழ்த்தியே தொடரும்....("நலம்" வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்)
மறக்க இயலா உன் "தேன்மொழிகள்" (நடுநிஷி என்றும் பாராமல், நேரம் போவதே தெரியாமல் நீ கதைத்த சொற்கள்)
உன் "நினைவை" தினமும் எனக்குள் விதைத்து
"காதல்" ஆணி வேரை இன்னும்
பலமாக என்மனமென்னும் பூமியில் ஊன்றிச்செல்லும் செல்லும்...!