வற்றா நதி – இத பத்தி இதுவரைக்கும் நான் மூச்சு கூட
விடல. ஆனா இதோட மேக்கிங் ப்ளான் எப்ப ஆரம்பிச்சுதோ, அப்ப இருந்து கூட இருக்கேன்.
இதுல இருக்குற இருபத்தி ரெண்டு கதைகளும் புத்தக தயாரிப்புல இருக்கும் போதே நான்
வாசிச்சுட்டேங்குரதால புக் கைல கிடைச்சதும், யாதுமாகியவளுக்கு ப்ரியமும் அன்புமாய்
மு. கார்த்திக் புகழேந்தி அப்படிங்குற வார்த்தையையே ஒரு மாசத்துக்கு வெறிக்க
வெறிக்க பாத்துட்டு இருந்துட்டேன் (புக் ரிலீஸ் டிசம்பர் இருபத்தி ஒண்ணு, எனக்கு
புக் கைல கிடைச்சது ஜனவரி பத்து. என்ன ஒரு வேகம் பாருங்க).
அப்புறம் அதுல இருக்குற கதைகள பத்தி சொல்லனும்னா,
ஒவ்வொரு கதையும் படிச்சுட்டு ரசிச்சு ரசிச்சு நான் கொண்டாடின கதைகள் தான் எல்லாமே.
திருநெல்வேலில வச்சு, இந்த கதைய படிச்சுப் பாருன்னு கார்த்திக் சொன்னா
முந்திரிகொட்டைதனமா நான் முதல்லயே படிச்சுட்டேன்னு சொல்லி திட்டு எல்லாம் வாங்கியிருக்கேன்.
லூசு, இது எடிட்டெட் வெர்சன், வர வர உனக்கு பொறுப்பும் இல்ல அக்கறையும் இல்லன்னு
மண்டைல கொட்டும் வாங்கியிருக்கேன். அதனால ஒருவேளை வற்றா நதி-ல சில அடையாளக் கதைகள்
நான் சரியா வாசிக்காம விட்டுருக்கலாம்... (என் மேல தப்பே இல்ல, இந்த கண்ணாடி தான்
பிரச்சனையே... திட்டனும்னா என் கண்ணாடியை திட்டிக் கொள்ளவும்).
எனக்கும் கார்த்திக்குக்கும் வாக்குவாதங்கள்
எல்லாம் வந்துச்சுன்னா அது “சிவந்திப்பட்டி கொலை வழக்கு” கதைல தான். நிறைய விவாதம்
பண்ணியிருக்கேன் அதுல. அந்த கதைய வாசிச்ச வேகத்துல எனக்கு மனசே ஆரல. யார திட்டுறேன்னே
தெரியாம நிறைய திட்டித் தீத்திருக்கேன். அப்புறம் வந்த கமண்ட்ஸ், திருப்பி கதைய
எல்லாம் படிச்சுட்டு தான் நடக்குறத தான் சொல்லியிருக்கார், இங்க மெஸ்சேஜ் சொல்ல
இடம் இல்ல தானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள் என்னை
கோபப்பட வச்ச கதை அது. அவ்வளவு தாக்கம்.
“அப்பாவும் தென்னை மரங்களும்”ல கார்த்திக் ஆந்தைகள்
பத்தி சொல்லியிருப்பார். அதுவும் அதோட அருமை பெருமைகள எல்லாம் அடுக்கியிருப்பார்.
என் அப்பா அத எல்லாம் சொல்லித் தந்தது இல்லைனாலும் ஆந்தைகள் அப்பாவுக்கும் ரொம்ப
பிடிக்கும். யாரு சொன்னா எங்கையா செத்துட்டார்ன்னு கார்த்திக் அதுல கெத்தா
நிமிர்ந்து நிப்பாரு, அதே தான் நானும் சொல்லுவேன், எங்கப்பா சிங்கம்டே...
எங்களோட பழைய வீடு, அந்த வீட்ல ஒரு நிலை கதவு
உண்டு. தம்பி எப்பவும் அந்த நிலைகதவுல தான் தொங்கிட்டு இருப்பான். எல்லாரோட
வீட்லயும் இப்படி ஒரு நிலைக்கதவு கண்டிப்பா இருக்கும். அது பழைய நியாபகங்கள
கண்டிப்பா தட்டி எழுப்பும். “நிலை கதவு” படிச்சா இப்படி தான் இப்படி தான், எங்க
வீட்ல நானும் ____ம் ன்னு சொந்த கதைய நாமளும் ஆரம்பிச்சுடுவோம். இத தான நான் சொல்ல
வந்தேன், அதுக்குள்ள இந்தாளு சொல்லிட்டாரேன்னு கண்டிப்பா பொறாம வரும்... ஏன்னா,
எனக்கு வந்துச்சு.
இவர் எழுதின லவ் ஸ்டோரி படிச்சுட்டு இன்பாக்ஸ்
பக்கமா ஒதுங்குன பொண்ணுங்க ஏராளாம். எல்லார் கிட்ட இருந்தும் இவர படாதபாடு பட்டு
காப்பாத்த நான் பட்ட பாடு எனக்கு தான தெரியும்... “இதுக்கு மேல பச்சை, பிரிவோம் சந்திப்போம்,
கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி” கதைகள் பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லன்னு
நினைக்குறேன். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட முறைல ஹப்பா... என்னமா எழுதியிருக்க,
செம, ஐயோ செல்லம் சான்சே இல்ல பின்னிட்ட போன்னு கால் பண்ணி சிலாகிச்சாலும் பக்கி
ஒரு வேளை இவரே சைட் அடிச்சிருப்பாரோன்னு கொஞ்சம் கிலிய உண்டு பண்ணினது என்னவோ
உண்மை. அவ்வளவு தத்ரூபம் (இந்த இடத்துல ஒரு சோக ஸ்மைலி எனக்கு மட்டும் நானே
போட்டுக்குறேன் L )
ஆனாலும் “காற்றிலிடைத் தூறலாக” படிச்சதும்,
அப்படியே இல்லாத சட்டைக் காலர நானே தூக்கி விட்டுகிட்டேன். ஏன் தெரியுமா, அதுல
வர்ற ஹீரோயின் கல்கி என்னை மாடலா வச்சு எழுதினது தான். நான் இம்பூட்டு நல்லவளா
அப்படின்னு நானே பெரும பட்டுகிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த கதை ரொம்ப நல்லா
இருக்கு, சான்சே இல்லன்னு பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் பாராட்டினாங்க மக்கான்னு
கார்த்திக் சொன்னப்ப, அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். அதே மாதிரி
“வணக்கத்துக்குரிய” படிச்சுட்டு பெரும தாங்கல. இத எல்லாம் கல்வெட்டுல பொரிக்கணும்
அதுக்கு பதிலா தான் புக் போட்ருக்கு. பின்ன நாளைக்கு இவர் பேச்சு மாறிடக் கூடாதுல.
இன்னொரு முக்கியமான விஷயம், அந்த கதைல அப்படி என்ன விசேசம்னு கேக்குறீங்களா,
மாமனாருக்கு லெட்டர் எழுதினாராமாம், அதையே கதையாக்கிட்டார். படிச்சு பாருங்க,
புரியும்.
இந்த பொங்கலோ பொங்கல் கதைய படிச்சதும், பாரு, இந்த
பக்கி அப்பவே இப்படி, அதான் இப்பவும் ரசிகைகள் கூட்டம் இவருக்கு மொய்க்குதுன்னு
செம கடுப்புல இருக்கேன். அதனால அத பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களும்
படிச்சுடாதீங்க, அப்புறம் உங்களுக்கும் கடுப்பு ஏறும், எப்படி எல்லாம்
வாழ்ந்துருக்கான் பாருயான்னு...
“பற்றியெரியும் உலை” பத்தி நான் அதிகமா சொல்ல
விரும்பல. காரணம், நீங்க அதுல ஆழ்ந்து வாசிச்சா உங்களுக்கே புரியும். நம்மளை பேசவே
விடாம, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியில தள்ளி விடுற கதை அது. மனசு படபடத்து என்ன
பண்றதுன்னே தெரியலயேன்னு ஒரு தவிப்பு நாலு நாளுக்கு மனச பிசைஞ்சுட்டே இருக்கும்.
உங்களுக்கு குற்றவுணர்ச்சி வரவேனாம்னா அந்த கதைய படிக்காதீங்க, அதுவும் ரெண்டு தடவ
படிச்சிடவே படிச்சிடாதீங்க.
இன்னும் நிறைய கதைகள். அத பத்தி எல்லாம் இன்னொரு
நாள் சொல்றேன். இப்ப மூச்சு வாங்குது...
கடைசியா ஒண்ணு, இவர் கே.பி இல்ல கே.டி....
ஒவ்வொருத்தரோட பல்ஸ் அறிஞ்சி ஆள ஈசியா மயக்கிடுறாரு... நான் ரொம்ப ரொம்ப
கேர்புல்லா இருக்கணும்...
நன்றி சகோதரியாரே
ReplyDeleteபதிவு மொத்தமும் தூள்ன்னா அந்த கடைசி வரி அட்ரா சக்க :-)
ReplyDeleteஅருமையான நூல் விமர்சனம். பாராட்டுகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete