Sunday 4 March 2012

கருவின் தாலாட்டு....

என்ன பாவம் செய்து விட்டேன்
நீ என்ன பாவம் செய்து விட்டாய்?
உலகம் விடியுமுன்னே
என் விடியல் அழித்து விட்டாய்...
(என்ன பாவம் .....)

கொட்டி விடும் தேளாக
கட்டியவன் கைவிரிக்க...
கொடும்பனியில் தூங்க வைத்தாய்
உனக்குள்ளே கொள்ளியும் வைத்தாய்...

மாமியார் வசைப்பாட
நாத்தனார் துதிப்பாட...
சாவு மணி அடித்து விட்டாய்
சத்தமின்றி முடித்து விட்டாய்...

கொள்ளி கண்ணு உனை வதைக்க
கள்ளிப்பால் கொடுத்தாயோ?
நெஞ்சுக்குள்ளே ஈரம் வற்றி
நெல்மணிகள் கொடுத்தாயோ?
(என்ன பாவம் .....)

கண்ணே என் கண்மணியே
இனியொரு ஜென்மம் வேண்டும்...
நீயும் வந்து மலராக 
என் மடியில் ஜெனிக்க வேண்டும்...

நீ மறந்த தாலாட்ட
நானுனக்கு பாட வேண்டும்...
தாய்மாமன் சீராட்ட
என் மடியில் தூங்க வேண்டும்....

சுவர்க்கம் சென்று வந்து
மீண்டும் பிறந்திடுவேன்....
தாய்பால் கொடுத்து உன்னை
மாரோடு அணைத்திடுவேன்...
(என்ன பாவம் .....)

தொப்புள் கொடி உறவே நீ
கலங்காமல் கண்ணுறங்கு....
ஆராரோ ஆரிரரோ
அம்மா நீ கண்ணுறங்கு....
ஆராரோ ஆரிரரோ
என் உயிரே நீ கண்ணுறங்கு.....

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. தாய்க்கொரு சேயின் தாலாட்டு. நின் குரல் கேட்டு நிச்சயம் வருவாள் ஒருநாள் உன்னிடம்...தாயாய் அல்ல உன் சேயாய்.

    ReplyDelete
  3. Kottiyavan Thaelaaka
    Kattiyavan kaivirikka

    Unmai. Adi pattavanukku mattumae athan 'vali' theriyum.

    Thaaimaaman seeraatta
    en madiyil thungavaendum..

    Oru Udanpiravaa Thaaimaaman
    Uvagaiyudan kathirukiraan..
    'Golden Thangs'.

    ReplyDelete