இந்த காலத்துல கைல மொபைல் இல்லாத யங்ஸ்டேர்ஸ் பாக்குறது அபூர்வம்ங்க. அதுவும் பிரெண்ட்ஸ்க்குள்ள மாத்தி மாத்தி எஸ்.எம்.எஸ் அனுப்புறத அடிச்சுக்கே யாராலயும் முடியாது. இப்போ இந்த எஸ்.எம்.எஸ் ட்ரன்ட் வாட்ஸ்அப், வைபர்னு டெவலப் ஆகிடுச்சு. அப்படி தான் என் வாட்ஸ்அப்க்கு என் மாமா பொண்ணு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தா. அத பாத்த உடனே அத ஒரு கதையா எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ, நீங்க இனி படிக்கப் போற கதையோட காமடி பகுதிக்கு காரணமான புண்ணியவான் யாரோ?
பிட் அடிச்சாலும், பிட் எழுதி வச்சிருந்த பேப்பரும், அதுல எழுதின பென்னும், பிட்ட பாத்த கண்ணும், எழுதின கையும் எனக்கே சொந்தமானதுன்னு நாம உரிமை கொண்டாடுற மாதிரி இதில் வரும் கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் எனக்கே சொந்தம்... (அவ்வ்வ்வ் எப்படி எல்லாம் பில்ட் அப் விட வேண்டியிருக்கு).
இது ஒரு ஹீரோவுக்கும் அப்பப்போ வர்ற ஹீரோக்களுக்கும் இடையில நடக்கும் கதை. (வர்றதே நாலு டப்பா கேரக்டர்ஸ், எதுக்கு இது ஹீரோ, இது வில்லனுட்டு. சம உரிமை குடுப்போம் பாஸ்). இதுல ஹீரோவுக்கு பெயர் சூட்டு விழா ரொம்ப முக்கியம். காரணம், நானும் இந்த அப்புசாமி தாத்தா, துப்பறியும் சாம்பு வரிசையில ஒரு பிரபலமான ஹீரோவ இன்ட்ரோ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதனால இந்த படத்த வெற்றிகரமா ஓட்ட வேண்டியது உங்க பொறுப்பு.
சரி, சரி, பேச்சு ட்ராக் மாறி போய்ட கூடாது, நமக்கு பெயர் தான் முக்கியம். அதனால நம்ம ஒரு ஹீரோவுக்கு ரொம்ப யோசிக்காம பவர் ஸ்டார் பரந்தாமன்னு டக்குனு பெயர் வச்சுட்டேன்.
ஹலோ, இந்த உலகத்துலயே ஒரே ஒரு பவர் ஸ்டார்தான் உண்டு அப்படின்னு நம்ம பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனோட தொண்டரடிபொடிகள் எல்லாம் சண்டைக்கு வந்தாலும், கேஸ் போட்டாலும் நான் பெயர மாத்துறதா இல்ல, பின்ன நாம எப்போங்க பவர் ஸ்டார் ஆகுறது? வேணும்னா நீங்க இந்த பரந்தாமன ப்ளாக் பவர் ஸ்டார் பரந்தாமன்ன்னு கூப்ட்டுக்கோங்க...
நாம இப்போ கதைக்குள்ள போயே தீருவோம் (வரமாட்டேன்னு அடம் புடிச்சீங்கனா, உங்க கனவுல ஒரிஜினல் பவர் ஸ்டார் வந்து டான்ஸ் ஆடுவார்ன்னு சாபம் குடுத்துடுவேன்). இந்த கதைல அப்பப்போ வர்றவங்க குட்டி குட்டி ஹீரோ, ஹீரோயின் பெயர எல்லாம் கதை போற போக்குல யோசிச்சுப்போம். இந்த கதைய எங்க இருந்து ஆரம்பிக்குறது?
எந்த கதையா இருந்தாலும் ஒரு ஹீரோ பிறந்தாதான் கதையே ஆரம்பிக்கும் இல்லையா? அதனால நாம இப்போ பவரோட பர்த்டே-ல தான் ஆரம்பிக்க போறோம். அவர் எப்பவோ பிறந்து வளர்ந்துட்டாலும் இப்போ தானே நம்ம கண்ணுல மாட்டியிருக்கார், அதனால இது தான் அவரோட ஸ்டார் பர்த்டே...
வாங்க, நாமளும் பவரோட சேர்ந்து அவரோட பர்த்டே கொண்டாட போவோம்...
.....................................................................................................................................................................
நம்ம பவர் ஸ்டார் பரந்தாமன் நாள் முழுக்க பிசியா இருக்குற ஆளு. அப்படி என்னதான் பிசின்னு நீங்க கேள்வி எல்லாம் கேட்டுறாதீங்க, எனக்கும் சொல்லத் தெரியாது, அவருக்கும் சொல்லத் தெரியாது அவ்வளவு பிசி.
அப்போ தான் அவருக்கு பிறந்தநாளு வந்துச்சு. பிறந்தநாள்னா கண்டிப்பா புதுசா துணி எடுத்தே ஆகணுமே, இல்லனா தெய்வ குத்தம் ஆகிடாதா? அதனால காலங்காத்தாலன்னு நினச்சுட்டு ராத்திரி நாலு மணிக்கு (அவ்வ்வ்வ், ராத்திரி தானே) அவர் பிரெண்ட் மூணாவது தெரு முருகேசன் வீட்டு லேன்ட் லைன் நம்பருக்கு ஒரு போன்ன போடுறார்..
முருகேசன்: “ஹலோ”
பவர்: “என்னடா, தூங்கிட்டியா?”
முருகேசன்: (கடுப்புல) “இல்லடா, தலைகீழா யோகாசனம் பண்ணிட்டு இருக்கேன்”
பவர்: “எங்க, வீட்லயா, ஜிம்லயா?”
இவரு எவ்வளவு அப்பாவியா கேள்வி கேக்குறார் பாத்தீங்களா?. நீங்க டென்சன் ஆகாதீங்க, இப்படி தான் போன வாரம் அம்புஜம் மாமி வீட்ல விசேஷமாம். போனவர், அங்க பந்தியில உக்காந்து சாப்ட்டுட்டு இருந்தவர பாத்து, என்ன சாப்பிட வந்தீங்களான்னு கேட்டுருக்கார். பார்ட்டி டென்சன் ஆகி, இல்ல, டிரஸ் அயர்ன் பண்ண வந்தேன்னு சொல்ல, அப்படியா நல்லா பண்ணுங்கோன்னு இவர் பாட்டுக்கு அடுத்த பந்திக்கு காத்திருக்க ஆரம்பிச்சுட்டாராம்.
இப்போ மறுபடியும் விசயத்துக்கு வருவோம், ஒருவழியா எப்படியோ முருகேசன கூப்டுகிட்டு அரக்க பறக்க காலங்காத்தால பதினோரு மணி ஐம்பது ஒன்பதுக்கு நிமிடத்துல (பனிரெண்டுன்னு சொன்னா, அது காலைல இல்ல, மதியம்ன்னு நீங்க சண்டைக்கு வருவீங்களே) ஜவுளி கடைக்குள்ள நுழஞ்சுட்டாரு.
அப்படியே கடைக்குள்ள நுழைஞ்ச மனுஷன் கண்ணுல நேரா மஞ்ச கலர்ல நம்ம ராமராஜன் போட்டுட்டு பாட்டெல்லாம் பாடுவாரே, செண்பகமே செண்பகமேன்னு, அத சட்டை மாட்டிடிச்சு. அப்படியே குதிச்சு குதிச்சு ஓடி போய் சேல்ஸ் பையன் கிட்ட போய்
பவர்: “இது மஞ்ச கலரு சட்ட தான”
சேல்ஸ் பாய்: “இல்ல சார், நீல கலரு பனியன்”
பவர்: “என்னடா, விளையாடுறியா?”
சேல்ஸ் பாய்: “இல்ல சார், தூங்கிட்டு இருக்கேன்”
இவங்க பண்ணுன ரவுசு முடியுறதுக்குள்ள முருகேசன் அவருக்குன்னு தனியா நாலு சட்டை, நாலு வேஷ்டி எடுத்து வச்சுகிட்டாரு. ஒரு வழியா பவர் பரந்தாமன் சமாதானம் ஆகி, அந்த நீல கலரு பனியனயே ச்சே ச்சே இல்லல்ல, மஞ்ச கலரு சட்டையவே எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி, கூட ரெண்டு வேஷ்டி (நல்ல வேளை, அதுல வெள்ளை மட்டும் தான் உண்டு) சேர்த்து எடுத்து பில் போட போனாரு.
பில் போட்ட இடத்துல தான் பவர் பரந்தாமன் ப்யூனா இருக்குற காலேஜ்ல அட்டெண்டரா வேலை பாக்குற குண்டு பத்மா அந்த பக்கமா வர்றாங்க... (என்னது, பவர் ப்யூனா? இது எப்போன்னு கேள்வி கேட்டுறாதீங்க, எனக்கே இப்போ தான் தோணிச்சு, உடனே அவர அப்பாயின்ட் பண்ணிட்டேன்)
பவர்: “துணி எடுக்க வந்தியாக்கும்”
பத்மா: “இல்ல, துணி துவைக்கலாம்னு வந்தேன்”
பவர்: “ஹிஹி... அப்புறம் முடி எல்லாம் குட்டையா வெட்டியிருக்க போல”
பத்மா: “இல்ல, எலி கடிச்சுடுச்சு”
பத்மா கடுப்பாகி, அந்த பக்கமா மெதுவா நகரத் தொடங்க, நம்ம பவர் கால்லயே ஹீல்ஸ் காலால ஏறி இறங்கிட்டாங்க. இப்போ பணிவா போக வேண்டியது பத்மா டேர்ன்..
பத்மா: “சாரி, லேசா தெரியாம பட்டுடுச்சு, வலிக்குதா?
பவர்: “ச்சே, ச்சே, வலி சுத்தமா இல்ல, யானை ஏறி மிதிச்ச மாதிரி பூ போல இருந்துச்சு”
பத்மா: “ஏங்க, நிசமா வலிக்கலையா?”
பவர்: “அட, நிசமாதான்மா... இப்போ தான் மயக்க மருந்து போட்டுட்டு வந்தேன், வேணும்னா இந்த கால்லயும் மிதிச்சு பாக்குறியா?”
நம்ம பத்மாவுக்கு ஒரே வெக்கம். நக்கல் பண்ணிட்டாரேன்னு. அப்படியே வாய்ல சுண்டு விரல வச்சு வெக்கப்பட்டுகிட்டே ஓடி போய்டுச்சு. என்ன இது எதுவுமே வாங்காம அது பாட்டுக்கு ஓடி போய்டுச்சுன்னு நினச்சு இந்த பில் போடுறவருகிட்ட விசாரிச்சா, அம்மணி ஒரு ஜோடி கர்சீப் வாங்கி வச்சிருந்துச்சாம், வெக்கத்துல விட்டுடுச்சு போய்டுச்சுன்னு அந்த பில்லையும் இவர் தலைல கட்டிட்டாரு.
பாவம், துணி எடுக்க வந்தவரு அப்படியே பக்கத்துல ஒரு மெடிக்கல் ஷாப் போய் ஒரு பேண்டெய்ட் வாங்கி போட்டுக்க வேண்டியதா போச்சு.
பேண்டெய்ட் வாங்கி கால்ல சுத்திகிட்டு போன மனுஷன் என் வீட்டு பக்கமா கிராஸ் பண்ணி போனார். நான் அப்போ தான், ரெண்டு வருசமா கழுவாத காரை மாங்கு மாங்குன்னு கழுவிட்டு இருந்தேன். அந்த பக்கமா போனவர் சும்மா போக வேண்டியது தானே, என்கிட்ட வந்து
பவர்: “கார் கழுவுரீங்களாக்கும்”
நான்: “இல்ல, காருக்கு தண்ணி ஊத்திட்டு இருக்கேன்”
பவர்: (ஆச்சர்யமா) “தண்ணி ஊத்துறீங்களா? எதுக்கு?”
நான்: அப்போ தான் இது வளர்ந்து லாரியாகும்”
பவர்: “அப்போ அந்த சைக்கிளுக்கு தண்ணி ஊத்தினா?”
நான்: “ஆங்... ட்ரைன் ஆகும்”
பவர்: “நல்லா வளரட்டும், எதுக்கும் ஒரு ஏரோப்ளேன் ஒண்ணு வளருங்க, நான் அடிக்கடி வயலுக்கு போயிட்டு வர யூஸ் ஆகும்”
இப்போ என்னோட பி.பி சுகர் எல்லாம் நார்மலா இருக்கும்னா நினைக்குறீங்க, விடு ஜூட்.... ஹாஸ்பிடலுக்கு...
போகுற போக்குல இன்னொரு விஷயம் சொல்லிட்டு போய்டுறேன், இதுல போட்டுருக்குற படம் கூகிள்-ல இருந்து சுட்டது. இதுக்காக நீங்க என் மேல வழக்குப் பதிவு பண்ணினா உங்களுக்கெல்லாம் ஒரு பாக்கெட் ஆச்சி ஊறுகாய் வழங்கப்படும்...

ஹலோ ஹலோ.... பர்த்டே என்னாச்சுன்னு கேக்குறவங்களுக்கு....
இப்போ தானே அறிமுகமே ஆகியிருக்கார், நியாயமா பாத்தா இன்னும் பத்து மாசம் கழிச்சு தான் இவருக்கு பொறந்தநாளே கொண்டாடனும், இப்பவே அவசரப்பட்டா எப்படி. எதுக்கும் அடுத்த வாரமாவது இவருக்கு பொறந்தநாள் கொண்டாட முடியுதான்னு பாக்குறேன்....
சிறப்பான பகிர்வு
ReplyDeleteஅப்படினா, இப்படி தான் எழுதணுமோ?
Deletehahaha.. nalla karpanai thangoose.. nadakattum..
ReplyDeleteஅண்ணே... அதான் சொல்லிட்டேன்ல அண்ணே.... பிட் அடிச்சாலும், பிட் எழுதி வச்சிருந்த பேப்பரும், அதுல எழுதின பென்னும், பிட்ட பாத்த கண்ணும், எழுதின கையும் எனக்கே சொந்தமானதுன்னு நாம உரிமை கொண்டாடுற மாதிரி இதில் வரும் கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் எனக்கே சொந்தம்னு
Deletehahaha.. nalla karpanai thangoose.. nadakattum..
ReplyDeleteஏன்னே... எத்தினி வாட்டி.... மிடில
Deleteஹஹஹா. இந்த கதைய அவரு ரெண்டு தடவ நல்லா இருக்குன்னு சொன்னதையே உங்களால தாங்க முடியலையே.. அவரு எப்படி ரெண்டாவது தடவ படிச்சிருப்பாருன்னு யோசிச்சு பாருங்க..
Deleteஅதானே... அது கண்டிப்பா ஒரு அறிவியல் விந்தையா தான் இருக்கணும்
Deleteவணக்கம்
ReplyDeleteபவருக்கு எழுதிய பதிவு நன்று வாழ்த்துக்கள்
பவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
---------------------------------------------------------------------------------------------------------------
ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது இறுதி வெற்றியாளர்களின் விபரம் வாருங்கள்.... வாருங்கள் அன்புடன்
http://2008rupan.wordpress.com/2013/11/13/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-2/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹஹா பிறந்தநாள் இன்னும் கொண்டாடல அண்ணா, கொண்டாடும் போது வாழ்த்து சொல்லுங்க...
Deleteகண்டிப்பா போய் பாக்குறேன் அந்த லிங்க்
நகைச்சுவை கலந்த கற்பனை வளம் வருது உனக்கு. தொடர்ந்து எழுது . கற்பனைய இன்னும் improve பண்ணி எழுது. எழுதி முடிச்சதும் ரெண்டு முறை படிச்சு பார்த்து இன்னும் என்ன சேர்க்கலாம்னு யோசி. கதை இன்னும் சுவாரஸ்ய படும்.
ReplyDeleteஇம்ப்ரூவ் எல்லாம் பண்ண தெரியாது அண்ணா, என்ன தோணுதோ, அத எழுதுறேன், அவ்வளவு தான்... உங்களுக்கு கதை சுவாரஸ்யமா தோணலயோ என்னவோ, உங்க டேஸ்ட்க்கு இன்னும் நிறைய பேர் எழுதுறாங்க, எல்லாரையும் தேடி படிங்க
DeleteHa ha kmmm kathai nala than eruku parakalam adutha varam
ReplyDeleteரொம்ப எதிர்ப்பார்க்க கூடாது, அது தான் பத்து மாசம் இருக்குன்னு சொல்லியிருக்கேன்ல
Deletehahahaha.....gayuu ! semmma story ponga !
ReplyDeletenallathaan poittu irunthuchu....Ninga ethukku(eppo) story kullaa vanthinga ! ..
script la illaye ;)
powerstar a remmba kalaichutringa....next part ku remmmba aavala kaathuttu irukken !
awesome :D
போற போக்குல என்கிட்ட கேக்காமலயே வீட்டு பக்கமா வந்துட்டார், இருக்கட்டும் இருக்கட்டும், அவர் பிறந்தநாள் எப்படி கொண்டாடுறார்னு பாக்கலாம்
Deleteமுடியல ...... பரந்தாமா முடியல
ReplyDeleteஅண்ணா, வெற்றி வெற்றி...... அப்படியே கொஞ்ச நேரம் உக்காந்து அழுதீங்கன்னா இன்னும் பரம சந்தோசப்படுவேன்...
Delete'ஆமா கதைல என்ன சொல்ல வந்தீங்க என்ன சொல்லியிருக்கீங்க?' அப்படியெல்லாம் நான் கேக்கலை ஏன்னா நீங்க கேட்கக் கூடாதுன்னு சொல்லுவீங்க. அது எப்படீங்க இப்படியெல்லாம் ............
ReplyDeleteஹஹா அதெல்லாம் எனக்கே தெரியாதுங்க, அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும், எப்படியும் ஒரு பத்து எப்பிசோட் போறதுக்குள்ள ஏதாவது தெரியும்னு நினைக்குறேன்
Deleteஉன்னையெல்லாம் ஏன் சுனாமி தூக்கல
ReplyDeletehahaha....sunamikitta powerstar pera solli thappichuruppanga thala ! . :)
Delete@கார்த்திக், நாங்கெல்லாம் இமயமல மாதிரி... அசைக்க முடியாது
Deleteசந்திரன் அண்ணே.... யாருண்ணே நீங்க? தல ன்னு எல்லாம் கூப்டுறீங்க... காசு எவ்வளவு வாங்குனீங்க?
Deleteunmaya sonnaa enakku evlo tharuvinga ?
Deleteநாலு பனங்கிழங்கு தரலாம்..
Deleteஹ்ம்ம் தேங்க்ஸ் யாருன்னே தெரியாதவரே
ReplyDeleteநம்ம ஊரு டிவி சீரியல் மாதிரி இது போய்டே இருக்கும் அப்பப்போ எழுதிட்டே இருங்க. வாழ்த்துக்கள்
ReplyDeleteம்ம்ம்ம் எழுதிட்டா போச்சு, ஆனா தயவு செய்து இத தொடராதீங்கன்னு ரசிக பெருமக்கள் கேட்டுக்குராங்களே
Deleteபவர் ஸ்டார்ன்னு பேர் வச்சாலே மொக்கையா தான் இருக்குமோ? என்னங்க கவிதை, Rapunzel கதை, சமூக சிந்தனைன்னு இதுவரைக்கும் நான் படிச்ச உங்க எல்லா பதிவுகளுமே டாப் கிளாஸ்.. இது வெறும் 'பிளாஸ்டிக்' கிளாஸ்.. (கொஞ்சம் வெளிப்படையா சொல்லிட்டேன். கோவிச்சுக்காதீங்க..)
ReplyDeleteஹஹா... நானும் அப்படி தான் நினைக்குறேன்... சில நேரம் இப்படியும் எழுத வந்துடுது
Delete