Monday, 4 November 2013

பிசியான நாட்கள் - வலைச்சரமும் ப்ராஜெக்ட்டும்


பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, பேரன்புக்குரிய தாய்மார்களே, ஆசை சகோதர சகோதரர்களே, அன்பு தோழர்களே...

அவ்வ்வ்வ் இதுக்கு மேல முடியல... நாம நம்ம ஸ்டைல்ல இறங்கிற வேண்டியது தான். நான் இப்போ உங்க கிட்ட என்ன சொல்ல வரேன்னு எனக்கே தெரியல, அதனால அங்கங்க நீங்க ஏதாவது பாயிண்ட்ட கண்ணால மோப்பம் புடிச்சுட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துடுங்க...

அப்புறம், ஒரு வாரமா நான் ரொம்ப பிசி. ஓவர் பில்ட் அப் குடுக்காதனு நீங்க பிரம்ப தூக்கி ஜாடையா காட்டுறது தெரியுது, ஆனாலும் உண்மைய சொல்லாம இருக்க முடியாதே. நம்புங்க, இல்லனா அதே பிரம்ப பிடுங்கி உங்கள மிரட்டுவேன்..

சரி, சரி, அப்படி என்ன பிசினு நீங்க கேக்கலனாலும் நான் சொல்லித் தானே ஆகணும். அது என் கடமையாச்சே...

பொதுவா ப்ராஜெக்ட் சப்மிசன்னா அது எப்பவும் ஈவன் (even) செமஸ்டர்ல தான் வரும். அதனால கோர்ஸ் (course) முடிச்சுட்டு போறப்போ தான் இந்த ப்ராஜெக்ட் எல்லாம் சப்மிட் பண்ண வேண்டியிருக்கும். ஆனா இந்த தடவை திருநெல்வேலி மனோன்மணியம் யூனிவர்சிட்டி ரூல்ஸ்ச மாத்திட்டாங்க, அதனால ப்ராஜெக்ட்  ஆட்(odd) செமஸ்டர்லயே வச்சுட்டாங்க. சோ, போன மாசம், அதான் அக்டோபர் 31 ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண கடைசி நாள்.

நம்ம மாணவ செல்வங்களை தான் நமக்கு நல்லா தெரியுமே (என்னையும் சேர்த்து தான்), எப்பவுமே கடைசி நிமிசத்துல தான் எதையுமே செய்வோம். எல்லாம் முடிச்சுடலாம் முடிச்சுடலாம்னு அதீத நம்பிக்கை வச்சு கடைசி நிமிசத்துல அய்யோ அய்யோனு பதற வேண்டியது.

இங்க இன்னொரு விஷயம் சொல்லணும்ங்க. அதாவது சில கோர்சஸ்ல கைட்னு ஒருத்தங்க இருப்பாங்க, ஆனா ஸ்டுடென்ட்ஸ் வெளில போய் ப்ராஜெக்ட் செய்துட்டு வருவாங்க. காசு குடுத்து அவங்களே தீசிஸ் ரெடி பண்ணி குடுத்துடுவாங்க. கைடோட வேலை முடிச்சு வர்ற தீசிஸ்ல வலிக்காம கையெழுத்து போடுறது மட்டும் தான். உடனே அடிக்க வராதீங்க, இது தான் நாட்டு நடப்பு. எந்த இஞ்சினியரிங் காலேஜ்லாவது அவங்க சொந்த லேப்ல கைட் உக்காந்து சொல்லி குடுக்குராங்களா? சொந்த காலேஜ் காம்பஸ்குள்ளயே ப்ராஜெக்ட் முடிச்ச ஸ்டுடென்ட் உண்டா? இதே தான் இப்போ ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் காலேஜ்லயும் நடக்குது.

ஆனா என்னோட கோர்ஸ் அப்படி இல்ல, எங்க டிபார்ட்மென்ட்ல ஸ்டுடென்ட்ஸ் யாரையும் வெளில போய் வொர்க் பண்ண விட மாட்டாங்க. ரொம்பவே அட்வான்ஸ் வொர்க்னா மட்டும் வெளில போகலாம். நான் கூட என்னோட வொர்க்காக பெங்களூர், திருவனந்தபுரம்னு போனேன். இன்னும் ஒரு வருஷம் அங்க எல்லாம் வேலை இருக்கு. ஆனாலும் பெரும்பாலான வேலைகள காலேஜ் உள்ள தான் செய்யணும்.

நாங்க வெளில போய் முழு ப்ராஜெக்ட்டையும் பண்ணிக்குறோம்னு யாராவது கேட்டா எங்க எங்களோட தல என்ன சொல்லுவார் தெரியுமா? உங்க அப்பா அம்மா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்கங்குறதுக்காக நீ வெளில போய் முப்பதாயிரம், நாப்பதாயிரம்னு காச இறைஞ்சு எதையாவது வாங்கிட்டு வந்து தலைல ஒண்ணுமே இல்லாத களிமண்ணா வெளில போக வேணாம், இங்கயே மூவாயிரம் நாலாயிரம் செலவு பண்ணி சின்ன விசயமா இருந்தாலும் எதையாவது கத்துக்கிட்டு போன்னு சொல்லிடுவார். அவர் கிரேட் தானே.... நான் கூட இத பத்தி நம்ம ஜீவா மேடம் கிட்ட கூட கேட்டுருக்கேன், நீங்க என்ன பண்ணுவீங்க உங்க காலேஜ்லன்னு. அவங்க கூட இதயே தான் சொன்னாங்க. அப்போ அவங்களும் கிரேட் தான்.

சரி, விஷயத்துக்கு வருவோம். இந்த மாதிரி உள்ளுக்குள்ளயே ப்ராஜெக்ட் செய்ய வைக்குறதால ஸ்டுடென்ட்ஸ் சில பேருக்கு கடுப்பு. காசக்குடுத்தோமா, ப்ராஜெக்ட் வாங்கினோமா, சப்மிட் பண்ணினோமான்னு இல்லாம, இதென்ன நாங்களே ப்ராஜெக்ட் பண்ணனும், நாங்களே எழுதணும்னு. இந்த பசங்க கூட ஓரளவு ஆர்வத்துல நாம சொல்லி குடுத்தா செய்வாங்கங்க, ஆனா பொண்ணுங்க இருக்காங்களே, முழு சோம்பேறிங்க. இது என்னோட அனுபவம் தான். நான் எல்லோரையும் சொல்லல, எனக்கு ஒரு ஸ்டுடென்ட் இருந்தா, அப்படியே என்னோட டிட்டோ மாதிரியே, அவ்வளவு ஆர்வம் அவளோட ப்ராஜெக்ட்ல. கைல 93% மார்க் வச்சிருக்கா, அப்படினா அவ எவ்வளவு ப்ரிலியன்ட் பாருங்க. அந்த பொண்ணு மட்டும் இல்லனா இந்த ஒரு வாரமா நான் ரொம்ப திணறி தான் போயிருப்பேன்.

இது கிராமத்து பக்கம். இங்க வர ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் தமிழ் மீடியத்துல படிச்சிருப்பாங்க. யூ.ஜி பண்ணும் போது கூட தமிழ்லயே எழுதி பாஸ் ஆகிட்டு பி.ஜி வந்துடுவாங்க. இங்க வந்ததுக்கப்புறம் தான் அவங்க இங்கிலீஷ்னா என்னன்னே பாப்பாங்க. முதல் வருஷம் முழுக்க அவங்களுக்கு சின்ன சின்ன இங்கிலீஷ் வார்த்தைகள் கத்துக் குடுத்து, அவங்கள ட்டியூன் பண்ணி கொண்டு வரணும். இங்க தீசிஸ் முழுக்க முழுக்க இங்கிலீஷ்ல இருக்கும். இத அவங்கள விட்டு எழுத சொல்றது கொடுமைன்னு நீங்க நினைக்குறது கண்டிப்பா எனக்கு புரியுது.

ஆனாலும் வேற வழி இல்லையே, ரொம்பவே பொறுமையா தான் சொல்லிக் குடுக்கணும். நிறைய ரெபரன்ஸ் வாசிக்க வைக்கணும், அதுல அவசியமான பாயிண்ட்ஸ் எதுன்னு அவங்கள புரிஞ்சுக்க வைக்கணும். இப்படி தான் நான் எனக்குன்னு ஒதுக்குன ஆறு பேருக்கும் சொல்லிக் குடுத்தேன்.

நாம ஒரு ப்ராஜெக்ட் தனியா எழுதணும்னா ரொம்ப ஈசி, ஆனா அவங்கள எழுத வச்சு, அவங்க எழுதிட்டு வர விசயங்கள வாசிச்சு பாத்தா நமக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. ஏதாவது ஒரு செண்டென்ஸ்ல இருந்து துண்டு துண்டா எடுத்து போட்டுருப்பாங்க. இது என்னது, எங்க இருந்து பாத்து எழுதினன்னு கேட்டா அவங்களுக்கும் தெரியாது. அப்புறம் அவங்கள உக்கார வச்சு, மறுபடியும் அவங்க கைல இருக்குற ரெபரன்ஸ்ல நாம முழுசா வாசிச்சு, அந்த செண்டென்ஸ் கண்டுபிடிச்சு, இத இப்படி எடுக்க கூடாது, இப்படி எடுக்கணும்னு சொல்லி நிமிர்ரதுக்குள்ள முதுகு வளைஞ்சுடும்.

இது தான் மெண்டல் ப்ரெஸர்னு சொல்லுவாங்க. ஆனா நான் சில சமயம் ரொம்ப கடுமையா அந்த பிள்ளைங்கள எல்லாம் திட்டியிருக்கேன். அவங்கள பாத்தா எனக்கே பாவமா தான் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னேனே, ஒரு பொண்ணு மட்டும் ரொம்ப புத்திசாலின்னு அவ கூட ஒரு சோம்பேறி தான். அவளும் கடைசி நிமிசத்துல தான் எழுதவே உக்கார்ந்தா. அவளை நான் முடிச்சு விடவே ஒரு நாள் ஆச்சு. மீதி ஆறு நாள்ல அஞ்சு தீசிஸ் ரெடி பண்ணனும். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல. நானே எழுதி குடுத்துடலாம் தான், ஆனா அப்புறம் யார் அந்த பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுப்பா? வாழ்க்கைல இப்போ அவங்க கஷ்ட்டப்பட்டாலும் நாளைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வரும் போது கண்டிப்பா நம்ம பெயர நினச்சு பாப்பாங்க.

அந்த ஒரு ஸ்டுடென்ட் பிரிலிமினரி வொர்க்ஸ் எல்லாம் பாத்துகிட்டா. நான் அப்புறமா வர கரெக்சன் எல்லாம் பாத்துக்கிட்டோம். அந்த ஒரு வாரமும் எல்லா பிள்ளைங்களும் என் வீட்ல தான் ராத்திரி தங்கினாங்க. தூக்கம் கூட யாருக்கும் கிடையாது. எனக்கு இருந்த மெண்டல் ப்ரெஸர்க்கு வடிகால் இந்த பேஸ் புக் தான். அப்பப்போ எட்டிப் பாப்பேன். பத்து நிமிஷம் பிரேக் எடுத்துப்பேன். அப்புறம் பேக் டு வொர்க்.

சாப்டுற சாப்பாட கூட மறந்து, அப்படியே நான் மட்டும் உக்காரல, அந்த பிள்ளைங்களும் தான். முதல்ல முரண்டு பிடிச்சாலும், அப்புறம் நான் சொல்லிக் குடுத்தத புரிஞ்சுகிட்டு, சரியா செய்யலைனா நான் சப்மிட் பண்ண விட மாட்டேங்குரதையும் புரிஞ்சுகிட்டு அவங்க என் வழில வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தேகங்கள்னு வரும் போதெல்லாம் என்கிட்டயோ இல்ல, அந்த இன்னொரு ஸ்டுடென்ட்கிட்டயோ கேட்டு கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. அந்த பொண்ணும் அவ வேலை முடிஞ்சுதுன்னு வீட்டுக்கு போகாம, எங்க கூடவே தங்கிட்டா.

இந்த நேரத்துல தான் வலைசரத்துல இருந்து எனக்கு ஆசிரியரா இருக்கீங்களான்னு அழைப்பு. அக்டோபர் 31-க்கு அப்புறம் நான் ப்ரீ தான், வேணும்னா அப்போ இருக்கவான்னு கேக்கலாம்னு ஒரு நிமிஷம் நினச்சேன், அப்புறம்,ச்சே ச்சே, வேணாம் வேணாம், நம்மள நம்பி கேக்குறாங்க, நம்ம கஷ்டம் நம்மோட, அதோட பயங்கர மெண்டல் ப்ரெஸ்ஸர்ல இருக்குறப்போ இது நமக்கு கண்டிப்பா நல்ல ரிலீப். கிடைக்குற கேப்ல எழுதிடலாம்னு நினச்சு தான் சரின்னு தலையாட்டிட்டேன். அப்படி நான் எழுதின பதிவுகள கண்டிப்பா நான் நியாபகார்த்தமா வச்சிருக்கணுமில்லையா?
அதெல்லாம் இது தான்...
   
இந்த நேரத்துல தீபாவளி வேற வந்ததால என்னோட பதிவுகள் நிறைய பேர போய் சேரலன்னு ஒரு சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் எதோ என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்ங்குற திருப்தியும் கூடவே இருக்கு.

இத்தன களேபரத்துக்கு நடுவுல வெற்றிகரமா ஆறு பேரையும் தீசிஸ் சப்மிட் பண்ணவும் வச்சுட்டேன். அதுவரைக்கும் என்னை பற்றி அவங்க என்ன நினச்சாங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா எல்லாம் சப்மிட் பண்ணிட்டு, பெருசா ஒரு பெருமூச்சோட சிரிச்சுகிட்டே, ரொம்ப தேங்க்ஸ் மேடம்ன்னு சொன்னாங்க பாருங்க, நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்சிடுச்சு.  

இதோ, இப்போ வேற ஒரு கைடோட ஸ்டுடென்ட், அவ எழுதினத ரீ-சப்மிட் பண்ண சொல்லிட்டாராம் அவளோட கைட். அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு என் கைட் கேட்டாங்க... நாம எப்போ இந்த விசயத்துல முடியாதுன்னு சொல்லியிருக்கோம், சரின்னு சொல்லிட்டேன். இதோ, அவ வந்துட்டா. அவளுக்கு சொல்லி குடுக்க வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு, அவள எழுத வச்சுட்டு, நான் இத எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்.


இப்போ வேலைய பாக்கணும், வர்ட்டா.... 

24 comments:

  1. உண்மையிலே ரொம்ப பிஸி நீங்க....

    ReplyDelete
    Replies
    1. ஹஹா தேங்க்ஸ் அண்ணா :)

      Delete
  2. பிசியான நாட்கள் தான் அவை...

    பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா, நிஜமாவே பிசியான நாட்கள் தான் அவை... பாராட்டுக்கு நன்றி

      Delete
  3. ரொம்ப பிசி தான் தாயி! போய் அந்த புள்ளையையும் உருப்படாம பண்ணு!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அந்த புள்ள நாளையோட உருப்பட்டுரும்... கொஞ்சம் தான் வேலை பாக்கி இருக்கு

      Delete
  4. எனக்கு தெரியும் இதுல உள்ள கஷ்ட்டங்கள். ஆனா உண்மையான உழைப்புக்கு பின்னாடி அந்த மாணவர்களின் புன்னகை நல்ல பதிலை சொல்லும். எங்கள் கல்லூரியிலும் மாணவர்களை வெளியில் அனுப்புவதில்லை. ஒரு முதுகலை மாணவர் கல்லூரியில் தான் அதிகம் கற்றுக் கொள்வார். வெளியில் சென்று எதுவுமே தெரியாமல் ஒரு பலனும் இல்லாத ரிபோர்ட்களை வைக்கும் மாணவர்களை நான் பிற கல்லூரிகளுக்கு எக்ஸ்டெர்னல்லாக போகும் போது பார்த்திருக்கிறேன். கேட்டால் இருபதாயிரம், முப்பதாயிரம் கொடுத்தேன் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் மேடம், சரி தான். நிஜமாவே அந்த பொண்ணுங்க வந்து தேங்க்ஸ் சொன்னப்போ மனசு அப்படியே ஜிவ்வுனு சந்தோசமாகிடுச்சு

      Delete
  5. வணக்கம்

    உண்மையில் நீங்கள் ரொம்ப பிசிதான்... பார்க்க புரிகிறது பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹஹா அதெல்லாம் அந்த நேரத்து பிசி... இனி கொஞ்ச நாள் ப்ரீயா இருப்பேன்

      Delete
  6. சிறப்பான பணிக்கு எனது பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மலையை கெல்லி எலியைப் பிடித்து வலையில் ஓடவைத்த சாதனை ... பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ப்ராஜெக்ட் பொறுத்தவரை அதை எழுதுறது எனக்கு எப்பவும் கஷ்டமா இருக்காது, ஆனா இந்த தடவை முதல் முதலா ஸ்டுடென்ட்ஸ வேலை வாங்குற work. அது தான் ரொம்ப சிரமமா இருந்துச்சு.

      உங்க பாராட்டுக்கு நன்றி...

      Delete
  8. வலைச்சரத்தில் கலக்கியதற்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. நிஜமா எனக்கு இன்னும் நான் சரியா தான் அங்க செயல்பட்டேனான்னு டவுட்.. ஆனாலும் வாழ்த்தியதுக்கு தேங்க்ஸ்

      Delete
  9. வலைச்சரம் பற்றித்தான் விரிவாய் கூறப்போகிறீர்கள் என்றுதான் வந்தேன். ஆனால், ப்ராஜக்ட் பற்றி விளக்கமாய் எழுதிட்டு வலைசாரம் பற்றி சுருக்கமாய் முடுச்சுட்டீங்க...
    அப்புறம்... வலைச்சரத்தில் சிறப்பாக பணி செய்தீர்கள். வாழ்த்துக்கள்.

    [வந்தேன்...
    கைகுலுக்க வந்தேன்...
    அழகிய சிறுமி வரவேற்கிறாள் என்னை!!!
    யாருங்க காயத்ரி அந்தப் பாப்பா?]

    ReplyDelete
    Replies
    1. ஹஹா வலைச்சரம் பத்தி தான் பதினோரு போஸ்ட் இருக்குல, அதான் சுருக்கமா முடிச்சுட்டேன்.

      அப்புறம் அந்த பாப்பா தான் பட்டாம்பூச்சி

      Delete
  10. அடடா.... இத்தனை பரபரப்பான வேலைகளுக்கு நடுவுலயா வலைச்சரத்துல பட்டாம்பூச்சி அழகா சிறகை விரிச்சுப் பறந்தது?!! குட்! வலச்சரத்துல நல்லாவே செயல்பட்டிருந்தீங்க!

    ReplyDelete
    Replies
    1. :) தேங்க்ஸ்... இனி இந்த பக்கம் அடிக்கடி வாங்க

      Delete
  11. hi akka. 5 nal apparam innaikku athikalai tan computer pakkam vanthu ungaloda ella valaicharam pathivukala padichu mudichen. unga blog la potta pathivukal kuda padichen. rompa acharyama iruku ungaloda busy yana nerathilum poruppu etru oru nalaikku 2 pathivukal vitham eluthiyathu enakku rompa aacharyam + makilchiya irukku akka. athe udchakathudan unga valaipuvil eluthavum. intha murai varathil oru nal kadhai allathu thodarkadhai elutha muyarchi edukkavum . akka. kattayam illai mudinthal mattume.

    ReplyDelete
    Replies
    1. நான் கண்டிப்பா முயற்சி பண்றேன் மகேஷ்

      Delete