Monday, 11 November 2013

ஓநாயும் மான் குட்டியும் -2


எனக்கே ரொம்ப ஆச்சர்யம், சில நேரம் நாம எழுதுறது நமக்கே புரியுமான்னு. ஆனாலும் இந்த ஓநாயும் மான்குட்டியும் எழுதினேனோ இல்லியோ, அது தான் நான் எழுதினதுலயே பயங்கர ஹிட்டாம். இந்த மாதிரி கதையோட சேர்த்து தத்துவம் சொன்னா நல்லா தானே இருக்குன்னு நான் இன்னொரு ஓநாயும் மான்குட்டியும் கதை ஒண்ணு சொல்லலாம்னு நினைக்குறேன்.


அதுக்கு முன்னாடி இந்த கதைய வாசிக்க போற எல்லோருக்கும் வணக்கத்த தெரிவிச்சுக்குறேன். வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்கல. அப்படியே எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னா இந்த கதைய படிச்சுட்டு இப்படி ஏதாவது ஓநாய் உங்க லைப்ல இருக்கான்னு அலசி ஆராய்ஞ்சு பாத்துக்கோங்க. அப்படி இருந்தா முதல் வேலையா தைரியமா அத உங்க வாழ்க்கைல இருந்து விரட்டி விட்டுருங்க. ஏன்னா, பயந்துகிட்டே இருந்தா இந்த மாதிரி ஓநாய்கள் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வாழ்க்கைய சூனியமாக்கிடும்.

இனி கதைக்குள்ள போகலாம்...

இது இன்னொரு ஓநாயின் கதை
.........................................................................
நான் இப்போ சொல்லப் போற இந்த ஓநாய் காட்டுக்குள்ள வாழ்ந்துட்டு இருந்துச்சாம். காட்டுக்குள்ள வாழ்ந்துகிட்டு இருந்த அந்த ஓநாய் அடுத்தவங்க வீட்டுக்குள்ள எல்லாம் அத்துமீறி நுழைய நினைக்க, அதோட அயோக்கியத் தனம் தாங்காம எல்லா மிருகங்களும் சேர்ந்து காட்டுக்குள்ள ஒரு பஞ்சாயத்த கூட்டி, அந்த ஓநாய காட்டை விட்டு தள்ளி வச்சுட்டாங்களாம்.

காட்ட விட்டு தொரத்தப்பட்ட ஓநாய் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி தூர தேசத்துக்கு ஓடி போயிடுச்சாம். தூர தேசம் போன ஓநாய் எப்படிடா ஏமாத்தி பொழைக்கன்னு வழி தெரியாம கொஞ்ச நாள் திணறிட்டு இருந்துச்சாம். அப்புறம் ஒரு நாள், அதுக்கு இந்த இன்டர்நெட் அறிமுகம் ஆச்சாம்.

இன்டர்நெட் பாத்த உடனே ஓநாய்க்கு மறுபடியும் எல்லோரையும் ஏமாத்த ஒரு சான்ஸ் கிடைச்சுச்சாம். இந்த தடவ அது ரொம்ப நல்லா மேக் அப் எல்லாம் போட்டுட்டு, ஒரு வீட்டு செல்ல நாய் மாதிரி வாலை ஆட்டிகிட்டே இன்டர்நெட்ல உலாவிச்சாம். நம்ம ஊர்ல தான் இந்த பப்பிங்கனா எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குமே, எல்லோருக்கும் அந்த நாய் வேஷம் போட்ட ஒநாய பிடிச்சு போச்சு.

அதுலயும் அந்த ஓநாய் கொஞ்சம் மேச்சுர்ட் ஆன லேடீஸ தான் குறி வச்சுச்சாம். அவங்க கிட்ட போய் தன்னோட குடும்பத்துல பெண் பப்பி சரி இல்ல, அதனால தான் நான் ஊர விட்டு வந்துட்டேன்னு கண்ணீர் விட்டு கதறி அழுமாம். நம்ம ஆளுங்களுக்கு தான் ரொம்ப இறங்குன மனசாச்சே, கதறி அழுற பப்பிய பாத்து அழாத பப்பி, அழாத பப்பின்னு ஆறுதல் சொன்னாங்களாம். அப்புறமா அந்த ஓநாய், தன்னோட குடும்பத்துல தனக்கு ரொம்ப கஷ்டம், காசே இல்ல, வீட்ல எல்லோரும் ஜெயிலுக்கு போக வேண்டி வரும்னு ஓ.....னு ஊளையிட்டு அழுதுச்சாம்.

அதோட ஊளை சத்தத்த தாங்க முடியாத நம்மாளுங்க ஆளுக்கு கொஞ்சம் காசு கடனா தரோம்னு சொல்லி காசு குடுத்தாங்களாம். காச வாங்கிட்டு போன ஓநாய் அப்புறம் தன்னோட சுயரூபத்த காட்ட ஆரம்பிச்சுடுச்சாம். காசை திருப்பி கேட்டா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதை சொல்லி எஸ்கேப் ஆகிடுமாம்.

சரி, சனியன் தொலைஞ்சா போதும்னு விலக நினைக்குறவங்களுக்கு அங்க இருந்தே போன் போட்டு, நீங்க ஏன் என்ன வெறுக்குறீங்கன்னு அவங்கவங்க குடும்பத்து ஆம்பளைங்க இருக்குறப்பவே கேக்குமாம். இவங்களுக்கு மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம, விலகவும் முடியாம அந்த ஓநாய் கிட்ட மாட்டிகிட்டு முழி முழின்னு முழிக்குறாங்களாம். ஆனா அந்த ஓநாய் அடுத்தடுத்து தன்னோட வேட்டைய அப்பாவி மக்கள் மேல நடத்திகிட்டு தான் இருக்காம்.

ஆமா, இந்த கதைல மான் குட்டி எங்க வருதுன்னு கேள்வி கேக்காதீங்க, அது தான் நிறைய பெரிய மான்கள் வருதே, அதெல்லாமே முன்னாள் மான்குட்டிங்க தான்.

இப்போ மாரல் ஆப் தி ஸ்டோரி
........................................................................
ஓநாய், ஓநாயாவே உலவினா பயம் இல்ல. ஆனா மாறுவேசத்துல உலவுற ஓநாய்ங்கள கண்டுப்பிடிக்க ரொம்ப கஷ்டம். அதுலயும் இந்த இன்டர்நெட் யுகத்துல எந்த விலங்கு எந்த ரூபத்துல நடமாடும்ன்னே சொல்ல முடியாது. அதனால கூடுமானவர யாரா இருந்தாலும் யார் கூடவும் பெர்சனல்ஸ் ஷேர் பண்ணவே கூடாது, அதுலயும் லேடீஸ் தெரியாத ஆட்கள், தங்கச்சி, நட்பே, உயிரேன்னு உருகினாலும் போன் நம்பர் குடுத்துடக் கூடாது. அப்படி போன் நம்பர் குடுக்குறதா முடிவு பண்ணினா, பின்னாடி பிரச்சனை வந்தா சமாளிச்சுக்கலாம்னு தைரியம் இருந்தா மட்டும் தான் குடுக்கணும். இல்லனா விலக நினச்சாலும் இந்த ஓநாய்ங்க வாழ்க்க முழுக்க தொரத்திட்டே தான் வரும்ங்க...

இனி ஒரு குட்டிக் கதையும் கூடவே தத்துவமும்
............................................................................................................
ஒரு கண்ணாடி கல்லு இருக்கு, அந்த கல்லு, தன்னையே ஒரு வைரக் கல்லா நினச்சு எல்லோர் கிட்டயும் பெருமையா பேசிக்குமாம். அப்படியே யாரும் கிடைக்கலனா அவங்கள கூவி கூவி கூப்பிட்டு நான் ஒரு வைரக் கல், நான் ஒரு வைரக் கல்னு தனக்கு தானே தம்பட்டம் அடிச்சுக்குமாம். இத பாத்து ஏமாந்து போற சில ஆளுங்க, அத ரொம்ப ஆச்சர்யமா பாத்து, அது உண்மைனு நம்பிடுவாங்களாம்.

இப்படி தான் சில பேரு கண்ணாடி கல்ல பாத்து வைரம்னு நம்பிடுறாங்க. அப்புறமா நஷ்டம் அந்த கண்ணாடி கல்லுக்கு இல்ல, நம்பி ஏமாந்தவங்களுக்கு தான். சூதானமா இருக்கணும் மக்கா...

இன்னொரு தத்துவம்
...............................................
அதாவது மக்கா, சொந்த புத்தி இல்லாத சிலபேரு, கற்பனையிலயே எதையாவது கன்னாபின்னான்னு நினச்சுகிட்டு அது தான் நிஜம்ன்னு நம்பிட்டு இருப்பாங்களாம்... ஆனா அவங்களுக்கு தெரியாதாம், அப்படி நினச்சுட்டே இருந்தா எப்பவுமே அவங்க உருப்பட போறதில்லன்னு...

அடுத்தது இன்னொரு நாள் இன்னொரு ஓநாயோட கதையோட வரேன், அது வரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் பட்டாம்பூச்சி காயு....

22 comments:

  1. thathuvam ellam super akka athaiya vidavum onaya puppy nayoda oppittu eluthiyathu rasichen. niraiya per appaditan nadikkuranga.. mothathil intha pathivum hit aka valthukkal akka.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்.... எனக்கு தெரிஞ்ச, கேள்வி பட்ட இந்த மாதிரி விசயங்கள தொடர்ந்து எழுதுவேன்

      Delete
  2. நல்ல தத்துவங்கள்...ஓனாய் கதை சூப்பர்... தொடருங்கள்...

    ReplyDelete
  3. அட, தத்துவம்லாம் சொல்லுது இந்த புள்ள!! இனி பட்டாம்பூச்சி காயுன்ற பேரை மாத்திட்டு பாட்டி காயுன்னு மாத்திக்க புள்ள!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் பாட்டி காயுன்னு சொன்னா அந்த பெயரும் புகழும் என் பாட்டிக்கு போயிடாதா?

      Delete
  4. "கூடுமானவர யாரா இருந்தாலும் யார் கூடவும் பெர்சனல்ஸ் ஷேர் பண்ணவே கூடாது, அதுலயும் லேடீஸ் தெரியாத ஆட்கள், தங்கச்சி, நட்பே, உயிரேன்னு உருகினாலும் போன் நம்பர் குடுத்துடக் கூடாது"
    எல்லோரும் குறிப்பா பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, பெண்கள்ல நிறைய பேர் இளகின மனசோட இருக்காங்க, அது இந்த மாதிரி ஆட்களுக்கு சாதகமா போயிடுது

      Delete
  5. தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

    தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

    வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் இதெல்லாம் செய்யணும்னா நான் இன்னும் நிறைய கத்துக்கணும். இப்போதைக்கு நான் கத்துக்குட்டி தான். தேங்க்ஸ்

      Delete
  6. அருமையான அறிவுரையினை கதை மூலம் பகிர்ந்தமை வெகு சிறப்பு! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  7. கலத்க்கு தேவையான நீதிகதைதான். வித்தியாசமான் சிந்தனைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு ரொம்ப தேங்க்ஸ்..

      Delete
  8. காலத்திற்கு தேவையான உண்மையை அழகாச் சொன்ன காயத்ரிக்கு என்ன கொடுக்கலாம் ம்... இப்போதைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா பாராட்ட பரிசா குடுத்துட்டீங்க, வேறென்ன வேணும், தேங்க்ஸ்மா

      Delete
  9. வணக்கம்
    அருமையான சிந்தனையுள்ள கதை.. மேலும் தொடர வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வலையில நாய் வேடமிட்டு உலவுற ஓநாய்களைப் பத்தி எச்சரிக்கையாச் சொன்ன கதை ரொம்ப ஜோர்! இரண்டாவதாச் சொல்லியிருக்கற தத்துவம் பல சிந்தனைகளை எழுப்புது! பட்டாம்பூச்சி ரொம்பவே உயரத்துல பறக்க ஆரம்பிச்சிடுச்சு! வாழ்த்துக்கள்பா!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி. சில சம்பவங்கள நானே பார்த்து தெரிஞ்சுகிட்ட விஷயங்கள்னால தான் இதெல்லாம் எழுத தோணுது

      Delete
  11. இப்படி நிறைய நடக்கிறது என்று நினைக்குறேன். பெரிய மனிதர் என்று நினைத்து இரக்கத்தில் காசு கொடுப்பது சில நேரங்களில் நடந்து விடுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமா மேடம். ஆனா எப்பவுமே எல்லோரும் ஏமாளியா இருந்துட முடியாதில்லையா

      Delete