இப்போ நாம அப்படி தான் ரொம்ப சீரியஸா ஒரு கதைக்குள்ள போக போறோம்...
இது ஒரு ஓநாயின் கதை
.........................................................
அது ஒரு அடர்ந்த காடு. எங்க பாத்தாலும் சில்வண்டுகளோட ரீங்காரம் கேட்டுகிட்டே இருக்கும். கூடவே புலியோட உறுமலும், சிங்கத்தோட கர்ஜனையும், நம்மள எல்லாம் மிரள வைக்கும். அந்த அடர்ந்த காட்டுக்குள்ள தான் ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு. அந்த ஓநாயோட வேலையே எங்கயாவது சிறுத்தையோ, புலியோ அடிச்சி சாப்ட்டுட்டு மிச்சம் போடுற இரையை தன்னோடதுன்னு மத்த விலங்குகள்கிட்ட இருந்து சண்டை போட்டு பறிச்சு சாப்டுறது தான்.
உங்கள்ல பல பேரு “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் பாத்துருப்பீங்க. அதுல வர்ற ஓநாய் திருந்தி வாழணும்னு ரொம்ப ஆசை படுது, அதுக்காக ரொம்ப போராடி, கடைசியில உயிரையும் விடுது.
ஆனா இந்த ஓநாய் அப்படி இல்ல. இது, அடுத்தவங்க சாப்பாட அடிச்சு புடிச்சி திங்குறதோட இல்லாம நரி மாதிரி தந்திரம் செய்து, புதுசா சின்னஞ்சிறுசா இருக்குற மான் குட்டிகளையும் சேர்த்து வேட்டையாடும். அதுக்கப்புறமா பெரிய மான்கள் கிட்ட போய், தான் வலிய போய் வேட்டையாடலன்னும், அந்த மான்குட்டிளே தன்னோட வீர தீர ப்ரதாபங்கள பாத்து தன்னை தேடி வந்து வலைல விழும்ன்னும் பெருமையா சொல்லிக்குமாம்.
அப்படி தான் ஒருநாள் அந்த ஓநாய்கிட்ட மாட்டிகிட்ட மான்குட்டி ஒண்ணு எப்படியோ தப்பிச்சு இனி இந்த பக்கமே வர கூடாதுன்னு ஓடி போயிடுச்சாம். அந்த ஓநாய் அத விடவே இல்லையாம். தொரத்தி தொரத்தி எப்படியாவது அந்த மான்குட்டிய வேட்டையாடியே தீரணும்னு முடிவு பண்ணி வெறியோட அது சுத்திகிட்டு இருந்துச்சாம்.
தப்பிச்சு போன மான் குட்டி அப்புறமா அதோட குடும்பத்தோட போய் சேர்ந்துகிச்சாம். குடும்பத்தோட சேர்ந்த மான் குட்டி தைரியசாலி ஆகி அந்த ஓநாயை பாத்து பயப்படவே இல்லையாம். ஆனாலும் அந்த ஓநாயை பாத்தா அந்த மான் குட்டிக்கு ஒரே அருவருப்பாம். காரணம், அந்த ஓநாய்க்கு பன்றியோட குணாதிசயமும் உண்டாம். அது உடம்பு முழுக்க சாக்கடை சகதியோட தான் சுத்துமாம் அது. எங்க அந்த ஓநாய் போற பாதைல தானும் போனா, அந்த சாக்கடை சகதி தன் மேல பட்டுடுமோன்னு அருவருப்புலயே அந்த மான் குட்டி ஓநாய பாக்குறத கூட தவிர்த்துட்டு அது பாதைல போயிடுச்சாம். ஆனா அந்த ஓநாய், சாரி, பன்றி நினச்சுக்குமாம், நம்மள பாத்து பயந்து தான் மான் குட்டி ஒதுங்கி போகுதுன்னு.... அது கடைசி வரை உணரப் போறதே இல்ல, அது ரொம்ப அசிங்கம் புடிச்சதுன்னு...
இன்னொரு குட்டி கதை
........................................................................
ஒரு பூனை இருக்கு.... அது ஒரு வீட்டுக்குள்ள போகுது. அது அங்க போகும் போது, மியாவ், மியாவ்ன்னு எல்லாரையும் பாத்து கத்திகிட்டே போகுது. இல்லனா கண்டிப்பா யாருமே அத கவனிக்க மாட்டாங்க. இது கத்துறதால தொல்ல தாங்க முடியாம சில பேரு அத திரும்பி பாக்குறாங்க. அப்படி திரும்பி பாக்குறவங்கள இது கெட்டியா புடிச்சுட்டு அவங்க காலையே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கும். இப்போ அந்த பூனை நினச்சுக்குமாம், எல்லோரும் நம்மள தான் கவனிக்குறாங்க, அதனால நாம பெரிய ஆள்ன்னு......
இப்போ தத்துவம்
........................................
1. இப்போ நாட்டுல அந்த மாதிரி நிறைய ஓநாய்ங்க இருக்கு. இது பின்னாடி நாம தொரத்திட்டு போனா சேறு நம்ம மேலயும் தான் படும். ஆனா அதுக்காக எப்பவுமே அதோட அட்டகாசத்த பொறுத்துகிட்டும் இருக்க முடியாது தானே. கண்டிப்பா இந்த மாதிரியான ஓநாய்களோட முடிவு நல்ல படியா இருக்காது. நாமளும், ஓநாய்ங்கன்னு ஆரம்பத்துலயே அடையாளம் கண்டுக்க தெரிஞ்சுக்கணும். எப்பவுமே ஒரு பாதுக்காப்பான தூரத்துல நின்னுக்கிட்டே நம்மோட சுதந்திரத்த அனுபவிக்குறது நல்லது.
2. மனுசங்கல சில பேரு இந்த பூனை மாதிரி தான். அவங்கள யாருமே கவனிக்கலனா உடனே எதையாவது செய்து மத்தவங்கள கவர பாப்பாங்க... விஷயம் ஒண்ணுமே இருக்காது, ஆனாலும் அத கத்தி கத்தி சொல்லி, மத்தவங்க கால்ல எல்லாம் விழுந்து அவங்க பக்கம் சில பேர இழுத்து வச்சுப்பாங்க. அப்புறம் அவங்க நினச்சுப்பாங்களாம், நாம தான் இந்த குரூப்க்கே டான்-ன்னு. ஆனா உண்மை வேற மாதிரி இருக்கும். இப்படி விடாம அடுத்தவங்கள தொல்லப்படுத்தி தொல்லப்படுத்தி, திரும்பி பாக்க வைக்குறது ரொம்ப நாள் நிலைக்காது. கண்டிப்பா ஒரு நாளு அதோட தொல்ல தாங்காம தூக்கி எறிஞ்சுடுவாங்க....
லொள்ளு ஆப் தி டே..
............................................
என்னைய எல்லாம் இந்த பேஸ் புக்லயோ, வலைப்பூலயோ யாருமே கவனிக்காம விட்டுருந்தா எப்பவோ உருபட்டுருப்பேன். இப்படி கதை எல்லாம் யோசிச்சு சுவத்துல முட்டிகிட்டு இருந்துருக்க மாட்டேன்..
மார்னிங் ரெப்ரெஷ்மென்ட்
............................................................
எல்லாருக்கும் ஒரு புத்துணர்வு குட் மார்னிங்...
தத்துவத்தோடு ஒப்பிட்டது அருமை... பாராட்டுக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா...
Delete2 kadhaiyum athodu ninga opittu sona vithamum super akka.. puna visayam onay vidavum pidichu irunthichu..
ReplyDeleteதேங்க்ஸ் மகேஷ்
Deleteதப்பிச்சு போன ஆட்டுக்குட்டி அப்புறமா அதோட குடும்பத்தோட போய் சேர்ந்துகிச்சாம். குடும்பத்தோட சேர்ந்த மான் குட்டி தைரியசாலி ஆகி அந்த ஓநாயை பாத்து பயப்படவே இல்லையாம். ஆனாலும் அந்த ஓநாயை பாத்தா அந்த மான் குட்டிக்கு ஒரே அருவருப்பாம். காரணம், அந்த ஓநாய்க்கு பன்றியோட குணாதிசயமும் உண்டாம். அது உடம்பு முழுக்க சாக்கடை சகதியோட தான் சுத்துமாம் அது. எங்க அந்த ஓநாய் போற பாதைல தானும் போனா, அந்த சாக்கடை சகதி தன் மேல பட்டுடுமோன்னு அருவருப்புலயே அந்த மான் குட்டி ஓநாய பாக்குறத கூட தவிர்த்துட்டு அது பாதைல போயிடுச்சாம். ஆனா அந்த ஓநாய், சாரி, பன்றி நினச்சுக்குமாம், நம்மள பாத்து பயந்து தான் மான் குட்டி ஒதுங்கி போகுதுன்னு....////
ReplyDeleteஏங்க... குழப்புறதுக்கு ஒரு அளவு வேணாம்?.... இப்புடியா?... கதையை சுவாரசியமா எடுத்துட்டுப்போயி கடைசி பேராவுல என்ன சொல்லியிருக்கிறீங்கன்னு புரியாதமாதிரியே ஆட்டுக்குட்டி, மான்குட்டின்னும்.... ஓநாய் பன்னின்னும் மாத்திமாத்தி ஏதோ மெஜேஜ் சொல்லியிருக்கீங்க.... என்ன மாதிரி சாமான்யர்களுக்கும் எப்படிங்க புரியும்?...!!!!
ஆனாலும் பரவாயில்ல.... கடைசியில தத்துவமெல்லாம் நல்லாத்தான் சொல்லியிருக்கீக...
ஹஹா அதுவா, நான் இது rough ஆ எழுதி வச்சது. முழுசும் எடிட் பண்ணி என்னோட பேஸ் புக் ல வச்சிருந்தேன். அந்த அக்கௌன்ட் லாக் ஆகிடுச்சு. மறுபடியும் rough லயே correction போட்டு இங்க போஸ்ட் பண்ணும் போது, மான் குட்டி தெரியாம ஆட்டுக்குட்டி ஆகிடுச்சு. ஓநாய்ய நான் வேணும்னே தான் பன்றின்னு சொன்னேன். அது ஒரு ஒப்பீடு... சரியா படிச்சா புரியும்
Deleteஅடங்கொககமக்கா...! ரெண்டு கதைகளைச் சொல்லி எங்க என் மரமண்டைக்குப் புரியாமப் போயிடுமோன்னு அதை தத்துவத்தோட ஒப்பிட்டு வாழ்க்கைன்னா என்னான்னு புரிய வெச்சுட்டீங்க. ஹா... ஹா...! நல்லா இருந்துச்சு உங்களின் கதைகளும், மார்ஜிங் ரெஃப்ரெஷ்மெண்ட்டும்! தொடருங்க...!
ReplyDeleteதேங்க்ஸ்.... நானே புரியாம உளறிட்டு இருக்கேனோன்னு தான் நினச்சேன், உங்களுக்கு புரிஞ்சுதா, நான் தப்பிச்சுட்டேன்
Deleteவாத்தியாரே... வாழ்கையின் தத்துவத்த புரிய வைக்க என்கிட்டே கூட கொஞ்சம் கத இருக்கு... உங்களுக்காகவும் ஆவிக்காகவும் அத எல்லாம் டெடிகேட் பன்றேன் இருங்க....
Deleteஅப்படினா நானும் அந்த கதைய படிக்கணுமே
Deleteம்ம்ம் இந்த லொள்ளு ஆப் தி டே எனக்கும் பொருந்தும்... ஆனா இந்த ஓநாய் அன்ட் பூனை கதையில ஏன் அந்த பாப்பா படம்.. பார்க்கவே பரிதாபமா இருக்கு..
ReplyDeleteபத்து நாள் முன்னாடி இந்த பாப்பா படம் பாத்து தான் இந்த கதையவே நான் எழுதினேன். நான் இந்த கதைல ரொம்ப டீடைலா சொல்லல, ஆனா இந்த மாதிரி ஓநாய்ங்க கிட்ட சிக்கி சீரழியுற எத்தனையோ மான் குட்டிங்களும், ஆட்டுக்குட்டிகளும் இருக்க தானே செய்யுது
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅண்ஸ்... அமைதியா வந்து எதோ ஆட்டம் பாம் தூக்கி போட்டுட்டு போயிருக்கீங்கன்னு நினைக்குறேன், என்னமோ நடக்க போகுதோ? அப்படி என்ன கமன்ட் போட்டீங்க, நீங்களே ரிமூவ் பண்ற அளவு? தெரியலனா மண்ட வெடிச்சுடுமே
Deleteஇத்தனை நால் நீங்க எங்கப்பா இருந்தீங்க கதையோடு தத்துவம் எல்லாம் அருமையோ அருமை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோ.. தங்களது தளத்தில் இணைந்தும் விட்டேன். தொடர்வேன் இனி...
ReplyDeleteஇத்தன நாளும் இங்கயே தாங்க இருந்தேன், நீங்க இப்போ தான் கண்டுபுடிச்சிருக்கீங்க
Deleteஏனுங்க இந்த கதை சொல்லும் பாட்டிங்க குறையை தீர்க்கறதுக்குன்னே அவதரிச்ச அவதாரபுருஷி நீங்கதானுங்களாங்,,....
ReplyDeleteஅவ்வ்வ்வ்... அதுக்குள்ள பாட்டியாக்கிடாதீங்க, அதுக்கு இன்னும் அம்பது வருஷம் இருக்கு
Deleteவணக்கம்
ReplyDeleteகதை அருமை ......தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்க்ஸ் :) தொடருறேன் தொடருறேன்
Deleteநல்ல ஒரு பதிவு... நல்ல கருத்து..
ReplyDeleteதேங்க்ஸ் :)
Delete" யாருமே கவனிக்காம விட்டுருந்தா எப்பவோ உருபட்டுருப்பேன். இப்படி கதை எல்லாம் யோசிச்சு சுவத்துல முட்டிகிட்டு இருந்துருக்க மாட்டேன்."
ReplyDeleteஅப்படியெல்லாம் உருப்பட விட்டுவிடுவோமா என்ன?. ''சுவத்துல முட்டிக்கிட்டு இருக்கீங்களா'' அது என்னங்க ? ஆனா நல்லாவே கதை அளக்கிறீங்க இல்ல இல்ல சொல்றீங்க.
அவ்வ்வ்வ் கதை அளக்குறேனா? இப்படி எல்லாம் சொன்னா அப்புறம் நாலு நாளு சாப்பாடு கிடைக்காதாம்
Deleteஎனக்கு பாராட்டல்லாம் வராது....ஆனா நல்லா எழுத வரும் உனக்குன்னு சொல்லிருக்கேன். அத நிரூபிச்சிட்டு இருக்கன்னு தோணுது. எழுது எழுதுன்னு கத்தினதுக்கு கிடைச்ச பரிசா வேணும்னா எடுத்துக்கிறேன் நீ எழுதுறத... உன்னோட எழுத்து வேலைய தொடர்ந்து செய்...அப்டியே இன்னொரு வேலையும் சொல்லிருக்கேன்...அதையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணு...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா.... கண்டிப்பா கன்சிடர் பண்றேன்... அவ்வ்வ்வ் அது என்ன வேலை அண்ணா?
Deleteகதை அருமை .வாழ்த்துக்கள்..
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com