முந்தா நேத்து என் பிரெண்ட் ஒருத்திக்கு பெண் குழந்தை பிறந்துச்சு. அவ வாழ்க்கைல ஒரு பெரிய திருப்புமுனையே அவ கல்யாணம் தான். எங்க ஏரியால பதினெட்டு வயசானாலே யாருக்காவது கல்யாணம் பண்ணி குடுத்துடுவாங்க. ஆனா ஒரு நல்ல விஷயம் என்னன்னா கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டாலும் இங்க எல்லாம் பொண்ணுங்க தொடர்ந்து படிக்கலாம். புள்ள குட்டிங்கள வீட்ல மாமியார் பாத்துப்பாங்க.
அப்படி தான் இருபத்தோர் வயசுல அவள பொண்ணு பாக்க ஒருத்தர் வந்தார். அவர்கிட்ட இவ போய் நான் ஒரு பையன மூணு வருசமா லவ் பண்ணினேன், ஆனா அவன் என்னை சந்தேகப்பட்டுட்டான், அதனால அவன வேணாம்னு சொல்லிட்டேன். நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கா... அவரோ பரவால, கல்யாணம் பண்ணிட்டு என்னை முதல்ல இருந்து லவ் பண்ணுங்கன்னு கூலா சொல்லிட்டு போயிட்டாராம். அப்புறம் எல்லோரும் இவள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க..
போன மாசம் ஒரு நாள் என்னை பாக்க வீட்டுக்கு வந்திருந்தா. அவ ஹஸ்பன்ட் இவ மேல பழி போட, இவ அவர் மேல பழி போட, ஒரே கலாட்டா... எனக்கு அவங்க கம்ப்ளைன்ட்ஸ் பாத்துட்டு சிரிக்குறதா அழுறதானே தெரியல.
அப்படி என்ன தான் கம்ப்ளைன்ட்ஸ்னு கேக்குறீங்களா?
அவர்: ஒண்ணுமே சாப்பிட மாட்டேங்குறா, சொல் பேச்சு கேக்குறதே இல்ல
அவ: ஒரு ஆப்பிள் சாப்பிட சொன்னா சாப்பிடலாம், ஒரு கிலோ ஆப்பிள ஒரு மணி நேரத்துல சாப்பிட சொன்னா?
அவர்: ஒரு இடத்துல இருக்கவே மாட்டேங்குறா, எப்ப பாரு எங்கயாவது குடு குடுன்னு ஓடிட்டு இருக்கா, வழுக்கி விழுந்தா என்ன ஆகும்?
அவ: தண்ணி குடிக்க கிச்சன் போறது ஒரு தப்பா? தோட்டம் பக்கம் காத்து வாங்குறது தப்பா? டீ.வி கூட பெட் ரூம்லயே வச்சிருக்காரு, இம்ச இம்ச, வாந்தி வந்தா கூட எழுந்து வாஸ் பேசின் பக்கம் போக விட மாட்டாரு, பக்கத்துலயே கைய நீட்டிட்டு நிப்பாரு.
அவர்: எல்லாம் அவ கஷ்டப்படுவாளேனு தான். புரிஞ்சுக்கவே மாட்டேங்குறா
அவர் இப்படி சொல்லும் போது அவர் மூஞ்சிய பாக்கணுமே அவ்வ்வ்வ் கொஞ்சம் ப்ரீயா விடுங்க சார்னு சொன்னேன். அப்பவே அவ சொன்னா, குழந்தை பிறக்கட்டும், ஒரு வருஷம் நான் அம்மா வீட்ல தான் இருப்பேன், உங்க கூட பெஹ்ரயின் வரமாட்டேன்னு...
இந்தா, இப்போ குழந்தையும் பிறந்தாச்சு. அவளையே அசைய விடல, இனி குழந்தை என்ன பாடு பட போகுதோ?
இருந்தாலும் ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சுருக்காங்க அந்த செல்லக் குட்டிக்கு... வாழ்த்துகள். நீங்களும் வாங்க, வந்து வாழ்த்திட்டு போங்க....
அன்பானவங்க எது செய்தாலும் ஒரு வகையில் இம்சையாகவும் தெரிய வாய்ப்பு இருக்கு.. தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமா சிஸ்டர், அவங்க சண்டைய பாத்து நான் விழுந்து விழுந்து சிரிச்சேன்
Deleteபல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கு
Deleteஇருபத்தோர் வயசுல அவள பொண்ணு பாக்க ஒருத்தர் வந்தார். அவர்கிட்ட இவ போய் நான் ஒரு பையன மூணு வருசமா லவ் பண்ணினேன், ஆனா அவன் என்னை சந்தேகப்பட்டுட்டான், அதனால அவன வேணாம்னு சொல்லிட்டேன். நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கா... அவரோ பரவால, கல்யாணம் பண்ணிட்டு என்னை முதல்ல இருந்து லவ் பண்ணுங்கன்னு கூலா சொல்லிட்டு போயிட்டாராம். அப்புறம் எல்லோரும் இவள கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க..////
ReplyDeletesuper. kadaisi varai 2 perum santhoshama irukka valthukal..
kulanthai kum wishes sollikkuren..
நானும் அவங்க கிட்ட சொல்லிடுறேன் மகேஷ்... அவகிட்ட கேட்டு அவ கதைய கூட எழுத போறேன்... சில விஷயங்கள் தெரிஞ்சுக்கட்டும் எல்லோரும்
Deleteவாழ்த்துகள் எல்லோருக்கும்
ReplyDelete