Thursday, 3 October 2013

பவளமல்லி வாசம்....

சில்வண்டின் ரீங்காரமும்
தலையாட்டும் கொடிகளும்
அப்படியே நின்று விட்டதாய்
ஒரு உணர்வு...

நீ வருவாயென
அசைக்காமல் வெறித்திருக்கும்
பார்வைகளின் திரையில்
உன் பிம்பம் மட்டுமே நிலாடுகிறது...


பவளமல்லி வாசம்
காற்றில் கலந்து வீசுகிறது...
என் தவிப்பறியாமல்
மேலும் அது மோகம் தூண்டி செல்கிறது...

ஏறி இறங்கும் பெருமூச்சுக்களின் வெப்பத்தில்
பால்நிலவே சூடாகி போகும் போது
சிணுங்கிடும் வளையல்கள் எம்மாத்திரம்?
அவசரமாய் அவை
உருவிழந்து கொண்டிருக்கின்றன...

செந்தீக் காட்டில்
நீருக்காய் அலையும் சிறு பறவையாய்
என் தாகம் தீர்க்க
வழி தெரியாது தவிக்கிறேன்...

என் வெளிறிய உதடுகளை
கைப்பற்ற நீ வேண்டும்...
அவசரமாய் என் குறிப்பறிந்து
விரைந்திட மாட்டாயா?

உன் அகண்ட மார்பின்
இருள் காடுகளை பற்றியிழுத்து
உன்னோடு புதைய துடிக்கும் என்னை
மாரோடு சேர்த்தணைக்க வந்து விடேன்...

கொஞ்சம் பொறு... நீ வந்தவுடன்
நிம்மதியாய் ஒரு தூக்கத்தில்
ஆழ்ந்துக் கொள்கிறேன்...

அதன்பின்னோ உன் மூச்சின் ஸ்பரிசத்தில்
இமை திறக்க மறந்து லயித்துப் போவேன்...

23 comments:

  1. காதலின் ஏக்கம் தெரிகிறது. //கொஞ்சம் பொறு... நீ வந்தவுடன்
    நிம்மதியாய் ஒரு தூக்கத்தில் ஆழ்ந்துக் கொள்கிறேன்...// இதை விட நிம்மதி வேறு என்ன வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஹஹா ஆமா, அத விட நிம்மதி வேற என்ன வேணும்?

      Delete
  2. அருமையான கவிதை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் 1 (முந்தைய பதிவின் கருத்துரையை வாசிக்கவும்)

      Delete
    2. தேங்க்ஸ் அண்ணா

      Delete
    3. நான் அங்கயே பதிலும் குடுத்துட்டேன் அண்ணா... கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன்

      Delete
  3. அருமை அம்மணி. தொடர்ந்து எழுதுக.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... தொடர்ந்து நிறைய எழுதி களைசுட்டேன் அவ்வ்வ்வ்

      Delete
  4. இந்த படத்திற்கு பதிலாக பவள மல்லி இருந்திருந்தால் பகிர்ந்திருக்கலாம். பார்க்க வேண்டும் என்கிற என் ஆசை தான்.
    கவிதை வரிகள் காதலின் ஏக்கத்தை படம் பிடித்து காட்டின. ஏக்கத்தின் நடுவே தூக்கம் எங்கே வரப்போகிறது ?

    ReplyDelete
    Replies
    1. இந்த படம் இதுக்கு பொருத்தமா இருக்கும்னு போட்டேன்... ஏக்கத்தின் நடுவில் தூக்கம் வராது தான், அது தான் வந்த உடன் தூங்கணும்னு சொன்னேன் , என்னமோ எனக்கு அப்படி தோணிச்சு

      Delete
  5. உணர்வு பூர்வமாய் எழுதி இருக்கிறீர்கள்.அருமை தோழி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

      Delete
  6. நல்லா இருந்தது கவிதை

    Typed with Panini Keypad

    ReplyDelete
    Replies
    1. உங்க ரசிப்புக்கு தேங்க்ஸ்

      Delete
  7. என் முதல் வருகை என்றாலும் முத்தான கவிதை கண்டேன் நன்று நன்று என, மகிழ்வுற விண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி... அப்படியே labels ல கவிதை பக்கம் கிளிக் பண்ணினா நிறைய இருக்கும்

      Delete
  8. "பவளமல்லி வாசம் காற்றில் கலந்து வீசுகிறது...
    என் தவிப்பறியாமல் மேலும் அது மோகம் தூண்டி செல்கிறது.."

    ரசித்துப்படிக்கும் படியான வரிகளில் அழகிய கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. கவிதை அருமையா இருக்கு வாழ்த்துக்கள் எனது முதல் வருகை இது

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்.. அடிக்கடி வாங்க

      Delete
  10. தகவலுக்கு நன்றி

    தமிழ்மொழி.வலை

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
    Replies
    1. என்ன தகவல்னு புரியல, ஆனாலும் வருகைக்கு நன்றி

      Delete